Thiruchendurai Chandrasekaran temple, Jeeyapuram திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில், ஜீயபுரம்.
திருச்செந்துறை மானேந்தியவல்லி சமேத சந்திரசேகர சுவாமி திருக்கோயில் ஜீயபுரம் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். அமைவிடம் திருச்சி-கரூர் சாலையில் முத்தரசநல்லுர், அல்லூர், ஜீயபுரத்தை அடுத்து அமைந்துள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. இறைவன்,இறைவி இக்கோயிலில் உள்ள இறைவன் சந்திரசேகரர் ஆவார். இறைவி மானேந்தியவல்லி ஆவார். பிற சன்னதிகள் திருச்சுற்றில் சுப்பிரமணியர், துர்க்கையம்மன் சன்னதிகள் உள்ளன. வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. தொடர்புக்கு: 8754422764 சரும நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி கோவில் சந்திரசேகர சுவாமி கோவிலுக்கு வந்து வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியம், தீராதநோய் தீர்க்கும் வல்லமை, இழந்த செல்வத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உள்ளிட்ட கிடைக்கும் என்று புராண நூல்களில் குறிக்கப்பட்டு்ள்ளன. சரும நோய் தீர்க்கும் சந்திரசேகர சுவாமி கோவில் தமிழகத்தின் முதுகெலும்பாக விளங்கும் காவிரி ஆற்றின் தென் பகுதியில் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது, திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள சந்திரகேரர் ஆலயம். சும...