Temple info -3300. Makaliamman Temple,Vedavalli,Coimbatore. மாகாளியம்மன் கோயில்,வடவள்ளி,கோயம்புத்தூர்

 Temple info -3300

கோயில் தகவல்-3300



Moonjuru and Nandi Vahan.. Arulmigu Magali Amman Temple.!


*Where is this temple located?* 


Arulmigu Magali Amman Temple is located in Vadavalli, a town in Coimbatore district.


*How to reach this temple?* 


This temple is located about 2 km from Vadavalli. There are auto and mini bus facilities to reach this temple.


*What are the special features of this temple?* 


There is a statue of Pillayar under the royal tree. In front of it, the Moonjuru and Nandi Vahan are in the same place and the sun's light falls on the Amman for only one day in the month of Chithirai.


 The new sanctum sanctorum and the artha mandapam are stone carvings for the goddess, and the idols of deities including Vimana, Munmandapam, Vinayaka, Murugan, Karupparayan, and Kannimar are special.


*What else is special?* 


When you enter the temple, which faces east, you will find the goddess Magali and the west-facing Simha Vahan.


A neem tree is placed as a sacred tree at the front of the temple.


The temple has a north and east gate.


*What festivals are celebrated?* 


The Chithirai festival, Vaikasi Visakha, and Pongal festival are celebrated in this temple.


The festival, which is held once every 5 years, is celebrated with great enthusiasm.


*What are the prayers offered for?* 


People pray to this temple to get rid of illness, to remove obstacles to marriage, and to get married soon.


They pray to the goddess of this temple to fulfill their dreams in business.


 *What kind of auspicious offerings are made at this temple?* 


Once the wishes are fulfilled in this temple, the auspicious offerings are made to the goddess and a flower pot is taken to pay the auspicious offerings.



மூஞ்சுறு மற்றும் நந்தி வாகனம்.. அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில்.!


 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி என்னும் ஊரில் அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.


 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 


வடவள்ளியிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ மற்றும் மினி பேருந்து வசதிகள் உள்ளன.


 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 


அரச மரத்தடியில் பிள்ளையார் சிலை உள்ளது. அதன் முன்பு மூஞ்சுறு மற்றும் நந்தி வாகனங்கள் ஒரே இடத்தில் இருப்பதும், சித்திரை மாதத்தில் ஒரு நாள் மட்டும் சூரியனின் ஒளி அம்மன் மீது படுவதும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.


அம்மனுக்கு புதியதாக கருவறை, அர்த்த மண்டபம் கல்திருப்பணியாகவும், விமானம், முன்மண்டபம், விநாயகர், முருகன், கருப்பராயன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் சிறப்புமிக்கவையாக விளங்குகின்றன.


 *வேறென்ன சிறப்பு?* 


கிழக்கு திசை நோக்கியுள்ள கோயிலின் உள்ளே சென்றதும் மாகாளி அம்மன் மற்றும் மேற்கு பார்த்த சிம்ம வாகனம் ஆகியவை அமைந்துள்ளது.


கோயிலின் முகப்பில் தலவிருட்சமாக வேப்பமரம் அமைந்துள்ளது.


கோயிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு வாசல் இருக்கிறது.


 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 


சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், பொங்கல் விழா ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.


5 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 


நோய் நொடி நீங்க, திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.


தொழிலில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும் இக்கோயிலின் அம்மனை வேண்டி கொள்கின்றனர்.


 *இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?* 


இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு மாங்கல்ய காணிக்கை செலுத்தியும், பூச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.





Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்