Temple info -3297. Kashi Viswanathan Temple, Kuzhikkarai,Thiruvarur. காசி விஸ்வநாதர் கோயில், குழிக்கரை, திருவாரூர்
Temple info -3297
கோயில் தகவல்-3297
Kuzhikarai Kasiviswanathar Temple: Kuzhikarai is a small town 6 kms west of Tiruvarur. The Carnatic music lovers would remember the name of Kuzhikarai Shri Pichappa, who was one of the leading Nadaswara Vidwans of the last century. The temple is kept open from 9 am to noon and from 4 to 9 pm. The contact number for this temple is 099525 38193 .
We are going to visit Shri Visalakshi sametha Shri Kasiviswanathar temple. This temple is nearly 800 years old. The original village was developed by Chozha King Kulothungan II and he also constructed this temple. His son Rajendra Chozhan II made further improvements to the temple in the 13th century. This place is at a relatively lower level compared to the nearby villages and hence water used to get collected in the deep ponds. As the village was developed on the banks of the ponds, it came to be called Kuzhikarai (Kuzhi in Tamil refers to pits).
One of the Musical trinities of Carnatic Music Shri Muthuswamy Deekshitar visited this temple. He was suffering from some skin ailments and was advised to pray here. He took bath in the temple tank and offered prayers with Panneer Pushpam and his skin problem disappeared. He sang a krithi in praise of the Lord. Generally people suffering from skin problems visit this temple.
The main shrine is that of Shri Kasi Viswanathar and He faces East. There is an unique thing about the Moolasthanam. The Lingam is installed below a Rudraksha Mandapam which is a rarity. Ambal Visalakshi is in a separate shrine facing south. There are number of shrines for the other deities. One of the interesting shrines is that of Adikara Nandi. He sits with His head facing one direction. There is a shrine for Perumal with Sridevi and Boodevi. There is a shrine for Hanuman in front of this Perumal and Hanuman is shown as peeling a banana! Another rare shrine is the two Chandikeswarars in a single shrine- one bigger than the other one.
Like Tiruvarur Thyagarajaswamy temple, here also the Navagrahas are in a straight line, facing one direction (west) which is unusual. In the Mahamandapam, there is an interesting painting on evolution, which depicts the various stages/forms of beings, starting from plants to insects to animals to humans and finally becoming one with the Lord! This painting is done using only herbal paints and it retains its lustre even after a long time!
*அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,*
*குழிக்கரை மற்றும் அஞ்சல்,*
*குடவாசல் தாலுகா,*
*திருவாரூர் - 613704.*
*மூலவர் :- காசிவிஸ்வநாதர்.*
*உற்சவர் :- நடராஜர் உடனுறை சிவகாமியம்மாள்.*
*அம்மன்/தாயார் :- விசாலாட்சி.*
*தல விருட்சம் :- பன்னீர் புஷ்பம், மாவிலங்கம், கஸ்தூரி, அரளி, மற்றும் வில்வம்.*
*தீர்த்தம் :- பூசபுஷ்கரணி.*
*ஆகமம்/பூஜை :- சிவ ஆகமப்படி பூஜை.*
*புராண பெயர் :- முற்காலத்தில் மிகவும் தாழ்வான பகுதியாக இருந்து சுற்றுப் பகுதியில் தேங்கிய வெள்ளம் மற்றும் மழை நீர் வழிந் தோடிய நிலையில் அப்பகுதியில் விவசாயம் செய்ய சென்ற தொழிலாளிகள் கரைப் பகுதியில் வசித்ததால் பிற்காலத்தில் குழிக்கரை என மருவியுள்ள தாக கூறப் படுகிறது.*
*ஊர் :- குழிக்கரை.*
*மாவட்டம் :- திருவாரூர்.*
*மாநிலம் :- தமிழ்நாடு.*
*காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரை திறந் திருக்கும்.*
*+91 9952538193.*
*தல சிறப்பு :- திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக் கிரகங்கள் ஒரே நேர்க் கோட்டில் மேற்கு பக்கம் பார்த் துள்ளன என்பது சிறப்புக் குரியவை யாகும்.*
*பொது தகவல் :-
*இத்திருக் கோயில் ராஜகோபுரத்தின் கிழக்குப் பக்கம் வழியில் அமைக்கப் பட்டுள்ளது. மணி மண்டபத்தில் அதிகார நந்தி தலையை சாய்த்த வண்ணம் படுத் துள்ளது. 20 தூண்கள் அமைக்கப் பட்டுள்ளது. தெற்கு பக்கம் பார்த்த வகையில் நடராஜரும் சிவகாமி யம்மாளும் அருள்பாலிக் கின்றனர். மூலவர் காசி விஸ்வநாதர் உத்திராட்சை பந்தலின் கீழ் கிழக்கு பக்கமும், அன்ன பூரணி என்கிற விசாலாட்சி அம்மன் தெற்கு பக்கம் பார்த்த வகையில் அருள் பாலிக் கின்றனர். மகா மண்டபத்தில் நந்தி பலி பீடமும், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி யுடனும் எதிரில் அனுமன் வாழைப் பழத்தை உரிக்கும் வகையில் சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது. விநாயகர், நால்வர் மற்றும் அர்த்நாரீஸ்வரர், சேக்கிழார், சுப்ரமணியர் வள்ளி தெய்வானை யுடனும், தொந்தி விநாயகர், குருபகவான், லிங்கோத்பவர், இராகு கால துர்க்கை, சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரி யுடனும், கஜலட்சுமி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, ரின, மாண விபோச லிங்கம், கார்த்திகை தீப அண்ணா மலையார், கால பைரவர் தனித் தனியாக அமர்ந்து அருள் பாலிக் கின்றனர்.*
*பிரார்த்தனை :-
*தோல் நோய்க் கான பரிகார ஸ்தலம். சகல ஐஸ்வர்யங் களுக்கும் திருமணத் தடை மற்றும் புத்திர பாக்கியத் திற்கு பிரார்த்தனை செய்யும் ஸ்தலமாதலால் பக்தர்கள் வந்து பிரார்த்திக் கின்றனர்.*
*நேர்த்திக் கடன் :-
*வேண்டுதல் நிறை வேறிய பக்தர்கள் கோயிலில் நடை பெறும் அன்னாபிஷேகத்தில் பங்கேற்று அதற்கு தேவையான பொருட் களை வாங்கி கொடுக் கின்றனர்.*
*தலபெருமை :-
*சோழ மன்னர்கள் வம்சத் தினர்கள் கட்டிய 108 சிவலத் தலங் களில் இதுவும் ஒன்று முத்துசாமி தீட்சிதரால் பாடல் பெற்ற ஸ்தலம் தற்போது இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக் கிரகங்கள் ஒரே நேர்க் கோட்டில் மேற்கு பக்கம் பார்த் துள்ளன. தோல் நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலம் மகா மண்டபத்தில் பிரதோஷம் செய்யும் இடத்தில் மேல் தளத்தில் மனித பிறவி எத்தனை இருக்கும் என்பதை செடி, கொடி, புழு மற்றும் பூச்சி பிற பிறவிகள் பின்னே மனிதப் பிறவி அதில் சிறப்பாக இருந்தால் இறைவனுடன் கலப்பதை விளக்கும் மூலிகை படம் கடந்த பல ஆண்டு களாக அழியாமல் உள்ளது குறிப்பிடத் தக்கது.*
*தல வரலாறு :-
*சோழ வளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே ஆறு கி.மீ., தொலைவில் குழிக்கரை கிராமம் உள்ளது. இப்பகுதியில் இரண்டாம் குலோத்துங்க சோழன் திருப்ணி செய்து அருள் பொழித் தேவ வளநாடு என்று இவ்வூருக்கு தன் விருது பெயரான எதிரிலி சோழன் என்பதை எதிரிலி சோழபுரம் என இந்த ஊருக்கு சூட்டி மகிழ்ந் துள்ளான். அதன் பின் கி.பி. 1246-ல் ஆட்சி செய்த மூன்றாம் இராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து தன் பெயரை சேர்த்து ஒட்டக்குடி இராஜேந்திர சோழபுரம் என பெயர் மாற்றம் செய்ததாக வரலாற்று செய்தி கூறுகிறது. இப்பகுதியில் இக்கோயிலும் இருப்பதால் சோழ வம்சத் தினர்கள் காலத்தில் கட்டப் பட்டுள்ளது. அப்பகுதி சொக்கப்ப முதலியார் (செல்வந்தர்) மூலம் பராமரிக்கப் பட்டு வருகிறது. தோல் நோயால் பாதிக்கப் பட்ட முத்துசாமி தீட்சிதர் கடை காலத்தில் இங்குள்ள திருக் குளத்தில் குளித்து பன்னீர் புஷ்பம் கொண்டு வழிபாடு நடத்திய தால் தோல் நோய் நீங்கி குண மடைந்ததால் இக்கோயில் குறித்து பாடல் பாடி யுள்ளார். தோல் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகளவில் வந்து செல் கின்றனர். மேலும் அப் பகுதியில் அறு சிவத் தலங்கள் இருப்பது இக்கோயிலுக்கும் சிறப்பு சேர்க் கிறது.*
*திருவிழா :- பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.*
*சிறப்பம்சம் :- திருவாரூர் தியாகராஜர் கோயில் போன்று நவக் கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் மேற்கு பக்கம் பார்த் துள்ளன என்பது சிறப்புக் குரியவை யாகும்.*
*இருப்பிடம் :-
*திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆறு கி.மீ., தொலை விலும், குழிக்கரை ரயில் நிலையத்தில் இருந்து மெற்கே அரை கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் ஏரி குழிக்ரையில் இறங்கி வடக்குப் பக்கம் ஒரு கி.மீ. உள்ளே செல்ல வேண்டும்.*
*அருகிலுள்ள ரயில் நிலையம் :- குழிக்கரை.*
*அருகிலுள்ள விமான நிலையம் :- திருச்சி.*
*தங்கும் வசதி :- திருவாரூர்.*
Comments
Post a Comment