Temple info -3219. Agastheeswarar temple, Ullavur,Kanchipuram. அகஸ்தீஸ்வரர் கோயில்,உள்ளாவூர்,காஞ்சிபுரம்
Temple info -3219
கோயில் தகவல் -3219
*அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், உள்ளாவூர் கிராமம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்- 631503.*
*மூலவர் : அகத்தீஸ்வரர்.*
*உற்சவர் : சந்திரசேகர், பார்வதி தேவி.*
*அம்மன்/தாயார் : அகிலாண்டேஸ்வரி.*
*தல விருட்சம் : சரங்கொண்றை.*
*தீர்த்தம் : தாமரை குளம்.*
*ஆகமம்/பூஜை : வைதீகம்.*
*புராண பெயர் : அகத்தீஸ்வரபுரம்.*
*ஊர் : உள்ளாவூர்.*
*மாவட்டம் : காஞ்சிபுரம்.*
*மாநிலம் : தமிழ்நாடு.*
*காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 9003856887.*
*தல சிறப்பு :*
*அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.*
*பொது தகவல் :*
*கோயிலுக்கு முன்னால் தாமரை தீரத்தம் அமைந்துள்ளது. கோயிலின் முகப்பில், சித்தி விநாயகர் வீற்றிருக்கிறார் மூலவர் விமானத்தில் பின்னால், சண்டிகேஸ்வரர் உள்ளார். மூலவர் சன்னதியின் இருபுறமும், துவரா பாலகர்கள், வலதுபுறத்தில் முருகபெருமான் 12 கைக்களுடன் காட்சியளிக்கிறார். இடது புறத்தில் அம்மன் சன்னதி அமைந்துள்ளது. மூலவருக்கு நேர் எதிரில் நந்தி பெருமான் காட்சியளிக்கிறார். நந்தியின் வலது புறத்தில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.*
*பிரார்த்தனை :*
*திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.*
*நேர்த்திக்கடன் :*
*சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.*
*தலபெருமை :*
*800 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. போரில், பல்லவர்களை வென்ற பாண்டியர்கள், தங்களது வெற்றியை குறிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோயில்களை புதுப்பித்து, தங்களது ஆட்சியை பறை சாட்டும் வகையில் அதில், மீன் சின்னங்களை பொறித்துள்ளனர். இதேபோல், இந்த கோயிலிலும் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இறைவன் திருவடி பட்ட பூமி என்பதால், பல்வேறு கால நிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்திலும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், வறட்சி இன்றி நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது.*
*தல வரலாறு :*
*அகத்தீஸ்வரர் இறைவனை நேரில் காண்பதற்காக, இங்கு அமர்ந்த நிலையில் தவம் புரிந்துள்ளார். இவருக்கு, சிவ பெருமான் நேரில் காட்யளித்து, வர அளித்ததாக வரலாறு கூறுகிறது.*
*திருவிழா :*
*பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம்.*
*சிறப்பம்சம் :*
*அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம். பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.*
*இருப்பிடம் :*
*காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்திலிருந்து சீவரம் வழியாக செல்லலாம்.*
*காஞ்சிபுரத்தில் இருந்து, ரயில் மற்றும் பகுதி நேர பேருந்துகள் உள்ளன.*
*அருகிலுள்ள ரயில் நிலையம் : பழைய சீவரம் ரயில் நிலையம்.*
*அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை.*
*தங்கும் வசதி : காஞ்சிபுரம்.*
🌺
பகிர்வு
Sri Agastheeswarar Temple, Ulavoor, Kanchipuram
Comments
Post a Comment