Temple info -3146. Swarna Akarshana Bhairavar temple, Raattaisutripalayam,Erode. ஸ்வர்ணாகர்ஷண பைரவர்கோயில், ராட்டைசுற்றிபாளையம்,ஈரோடு
- Get link
- X
- Other Apps
Temple info -3146
கோயில் தகவல்-3146
Om sri Swarna Akarshana Bhairavaya Namaha"
Welcome to the world's largest Bhairava temple, a sacred haven where devotion meets grandeur.
Nestled in a tranquil setting, this monumental temple is a beacon of spiritual reverence and architectural brilliance.
Experience a profound connection with Lord Bhairava, celebrated here with unparalleled devotion and splendor.
Join us in a journey of faith and discovery at this extraordinary spiritual landmark.

Swarna Akarshana Bhairavar / Swarnalingam
" !". !
The world's largest Bhairava temple is situated in Raataisutripalayam, a village next to Aval Poonthurai on the road from Erode to Kangeyam in Erode District, Tamilnadu - India
Located in a scenic village, this temple holds a special significance. The awe-inspiring 39-feet tall Bhairava statue at the entrance draws visitors. People light lamps in coconut, pray for peace, and enter the temple to dispel evil spirits, diseases, and debt problems, seeking increased happiness and wealth in life.
The temple is open daily from 8 am to 8 pm, offering various abhishekam (sprinkling) rituals and pujas. Tens of thousands of devotees gather for Bhairava's blessings on auspicious days, especially during New Moon, Full Moon, and Ashtami Pujas. The mud l
ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக, ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு to காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அடுத்த ராட்டை சுற்றி பாளையம் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய ஸ்ரீ ஸ்வர்ணாகர்சன பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த சிலை கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள்.கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோயிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.
கோயில் என்றாலே, ராஜகோபுரம் தான் பிரமாண்டமாக இருக்கும். இங்கு ராஜகோபுரத்துக்குப்பதில், 33 அடி உயரத்தில், பிறந்த மேனியாக கால பைரவர் சிலை அமைந்துள்ளது.
இதற்காக 34 அடி உயரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 39 அடி உயரத்தில் பிரமாண்ட காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 4 கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தியவாறு நாயுடன் காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவு வாயில் மற்றும் காலபைரவர் சிலை மொத்தம் 73அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மட்டும் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காலபைரவர் சிலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஸ்வர்ண ஹர்சன பைரவர் உள்ளார். அது தவிர சிவனின் 64 வகையான பைரவ அவதாரங்களில் 62 வகையான பைரவர் சிலை கோவிலின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம் என்ற இடத்தில் ஸ்வர்ண பைரவ பீடம் சார்பில் கடந்த 2014-ம்ஆண்டு காலபைரவர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கி,கடந்த 2023-ம்ஆண்டு மார்ச் மாதம் 13ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தென்னக காசி:
பொதுவாக சிவாலயங்களில் தெற்குப் புறமாக சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு கால பைரவர் சிலை இருக்கும். ஆனால் பைரவருக்கு முதன்மையாக இவ்வளவு பெரிய ஆலயமும் மிகப்பெரிய சிலையும் உருவாகி உள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்.
இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன.
கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருக்கும் பைரவர் சிலையினை பொதுமக்கள் தொட்டு வணங்கலாம். தாங்களே எல்லா விதமான அர்ச்சனைகளையும் அபிஷேகங்களையும் மக்கள் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.
குறிப்பாக செவ்வாய் தோறும் மண் விளக்கு பூஜை, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் சிறப்பு யாகம் மற்றும் ஸ்வர்ணலிங்க சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெறுகிறார்கள். திருக்கோயில், ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களின் வழிகாட்டுதல் படி ஸ்ரீ பைரவா அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்
தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பைரவ பீடம் ( பைரவர் கோவில் )
ஈரோடு - காங்கேயம் மெயின் ரோடு,
இராட்டைசுற்றிபாளையம்,
அவல்பூந்துறை
ஈரோடு- 638115.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment