Temple info -3137. Bodinayakanur Paramasivan Temple, Theni. போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், தேனி

 Temple info -3137

கோயில் தகவல்-3137

Bodinayakanur Paramasivan Temple, Theni

Address 

Bodinayakanur Paramasivan Temple,

7/1, Pankajam Nagar,

Bodinayakanur,

Theni District – 625513.

Telephone No. : 04546246242

Moolavar

Paramasivan

Introduction 

Bodinayakanur Paramasivan Temple is a Shiva temple located in the suburban area of Bodinayakanur in Theni district, Tamil Nadu. The presiding deity (Moolavar) of the temple is Paramasivan.

The sacred tree (Sthala Vriksham) of this temple is the Neem tree, and the temple’s Theertham is known as Viswabrahmana Theertham. Pujas are performed here in accordance with Shaiva Agama traditions.

Deities worshipped in this temple include Parameswaran, Lakshmi Narasimha, Selva Vinayakar, and Subramanya along with Valli and Deivanai.

Puranic Significance 

About 75 years ago, a devoted Shiva follower named Balagurusamy, who lived in this region, undertook pilgrimages to several sacred places such as Kashi and Rameswaram. As a divine blessing from those pilgrimages, he was blessed with a male child, whom he named Balabhishekan and raised with great care and devotion.

His son, who held Shiva devotion as his very life, unfortunately passed away. Stricken with grief, Balagurusamy became disheartened and began to doubt the existence of God. In despair, he decided to discard all the pooja items from his house into the nearby river.

That night, he had a dream. In it, he saw a sage seated on the hill located to the west of the village—the same hill where the present temple stands. Near the sage, he saw his son lying down. Rushing to the hill the next day, he called out to his son, who refused to come back with him.

The sage then spoke, saying, “Let him remain with me and serve me here. You will be blessed with another son.” When Balagurusamy asked the sage who he was, the sage vanished and appeared instead as Lord Shiva along with Goddess Parvati. Moreover, they appeared in a form of Jyoti on the southwestern side of the hill.

At the very spot where Lord Shiva and Parvati revealed themselves, he built the present-day temple. It is believed that, through Shiva’s grace, he was later blessed with five sons.

Century/Period

75 Years Old

Nearest Bus Station

Bodinayakanur

Nearest Railway Station

Bodinayakanur

Nearest Airport is


Madurai


போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், தேனி

முகவரி :

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்,

7/1, பங்கஜம் நகர்,

போடிநாயக்கனூர்,

தேனி மாவட்டம் – 625513.

தொலைபேசி எண் : 04546246242

இறைவன்:

பரமசிவன்

அறிவுமுகம்:

போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் பரமசிவன் மற்றும் உற்சவர் பரமேசுவரன் அவர்கள். இக்கோயிலின் தலவிருட்சம் வேம்பு மரம்; தீர்த்தம் விசுவபிராமண தீர்த்தம் ஆகும். சிவாகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகின்றன. பரமசிவன், பரமேசுவரன், இலட்சுமி நரசிம்மர், செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

புராண முக்கியத்துவம்:

இத்திருக்கோயில் பாலகுருசாமி என்ற சிவபக்தர் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு காசி, இராமேஸ்வரம் போன்ற புண்ணியதலங்களுக்கு சென்றதன் பயனாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு பாலாபிஷேகன் என பெயரிட்டு சிறப்புடன் வளர்த்து வந்தார். சிவ தொண்டையே உயிராக இருந்த தனது மகன் இறந்ததை கண்டு மனம் நொந்து கடவுள் இல்லை என்று தனது வீட்டிலிருந்த பூஜை சாமான்களை ஆற்றினார் விட முடிவு செய்தார். இந்நிலையில் இரவில் ஒரு கனவு கண்டார்.ஊருக்கு மேற்கே தற்போது திருக்கோயில் அமைந்துள்ள குன்றில் துறவி ஒருவர் இருப்பது போலவும், அவரது அருகில் தன மகன் படுத்திருப்பது போலவும் தெரியவர உடனே அக்குன்றுக்கு சென்று தன் மகனை அழைத்த போது அவன் வர மறுத்துவிடுகிறான். அத்துறவி இவண் என்னிடமே இருந்து எனக்கு சேவை செய்யட்டும் உனக்கு வேறு மகன் பிறப்பான் என்கிறார். அதற்கு நீங்கள் யார் என கேட்க அத்துறவி மறைந்து சிவன் .பார்வதி சமேதராக காட்சி தந்தார். மேலும் மலையின் தென்மேற்கு பகுதியில் ஜோதி வடிவமாக காட்சியளித்தார். சிவனும் பார்வதியும் காட்சி கொடுத்த இடத்தில் இத்திருக்கோயிலை கட்டினார். அதன் பின்பு சிவன் அருளால் அவருக்கு ஐந்து ஆண்குழந்தைகள் பிறந்ததாக தெரியவருகிறது.

நம்பிக்கைகள்:

இத்திருக்கோயிலில் ஆண் குழந்தை வேண்டுபவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேண்டி கொண்டால் வரம் கிடைக்கின்றது. குழந்தை வரம் கிடைத்தது, இவ்வாலயம் சென்று அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தங்கள் குழந்தையை போட்டு வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.ஆண் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம் ஆகும் 


காலம்

75 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

போடிநாயக்கனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

போடிநாயக்கனூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை



Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்