Temple info -3000. Nimishamba Temple, Sowcarpet, Chennai. நிமிஷாம்பாள் கோயில், சௌகார்பேட்டை,சென்னை
Temple info -3000
கோயில் தகவல்-3000
Little known Nimishamba Temple of Chennai
Site Type: Hindu Temple
Location: Kasi Chetty Street, Sowcarpet, Chennai city, Tamil Nadu state, India
Highlights: A rare temple of Nimishamba in Chennai city
Nearest Railway Station: Chennai - well connected from the cities/towns all over India
How to reach: Easily reachable by road as this is centrally located in the city
Hotel: Many star hotels, luxury hotels/resorts, and budget hotels are available in Chennai
Restaurants: All options - vegetarian, non-vegetarian, Chinese, South Indian, Gujarati, North Indian, Punjabi,....- you can find everything in Chennai city
நிமிஷாம்பாள் கோயில், சென்னை
நிமிடங்களில் நம் கஷ்டத்தை போக்கும் நிமிஷாம்பாள் ஆலயம் சென்னை பிராட்வேயில் காசிச்செட்டி தெருவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் சிறப்பு விழாக்களும், அலங்காரங்களும் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டு அமைந்துள்ள இக்கோவிலில் ஸ்ரீநிமிஷாம்பாள் மூலவராக அருளாட்சி புரிகிறாள்.
கருவறை வெளிப்பிரகாரத்தில் முக்தீஸ்வரர் என்ற சிவலிங்கம், விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள், ஆஞ்சநேயர், சுப்ரமணியர் போன்ற உபசன்னதிகளும் உள்ளன. நிமிஷாம்பாள் கருவறையின் பின்புறம் நவகிரக சந்நிதி உள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இக்கோவிலில் காமிகாகம முறைப்படி இரண்டு கால பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. துர்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகு காலம், அஷ்டமி நாட்களில் பாலபிஷேகம் செய்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
நிமிஷாம்பா என்பது பார்வதி தேவியின் மற்றொரு பெயர். இவள் பக்தர்களின் பிரச்னைகளை ஒரு நிமிடத்தில் நீக்கி விடுவதால் 'நிமிஷாம்பா' என்று அழைக்கப்படுகிறாள். நிமிஷா என்றால் நிமிடம் என்று பொருள்.
சென்னையில் சவுகார்பேட்டை பகுதியில் நெரிசல் மிகுந்த காசிச்செட்டி தெருவில் இக்கோவில் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியான சௌகார் பேட்டையில் தெருக்களில் நடப்பது கூட சிரமமாக இருக்கும். இவ்வளவு பரபரப்பான பகுதியில் இந்த அமைதி தரும் மிகவும் பழமையான கோவில் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.
பிரதான சன்னிதியில் நிமிஷாம்பாள் நின்ற கோலத்தில் அருள் புரிகிறாள். இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியின் சிலைகள் பிரதான சன்னிதியின் சுவர்களில் அமைந்துள்ளன. மிகச் சிறிய கோவில் தான்; ஆனால் அவள் தரும் வரமோ மிகப்பெரியது.

இவளுக்கு 5 நெய் தீபம் ஏற்றி, மரிக்கொழுந்து மலர் சாற்றி வழிபட்டு வர திருமண தடைகள் நீங்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இக்கோவிலில் நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று 108 கலச அபிஷேகமும், துர்கா ஹோமமும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. நிமிஷாம்பாள் ஜெயந்தி ஆண்டு தோறும் வைகாசி மாதம் வளர்பிறை தசமி நாளில் கொண்டாடப்படுகின்றன.
நிமிஷத்தில் வரம் அருளும் இந்த நிமிஷாம்பாளை வணங்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெறுவோம்!
Comments
Post a Comment