Temple info -2599. Sivakozhundeeswarar Temple, Thiruchendur, Thoothukudi. சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி
Temple info -2599
கோயில் தகவல் -2599
Sivakoglundiswarar Temple, Tiruchendur, Thoothukudi District, Tamil Nadu
Deity: Sivakoglundeeswarar
Amman: Anandavalli
Specialty:
Lord Muruga, who set out to kill Suran, was blessed by Eason and Devi.
Mythological Name: Thirucheeralaiwai, Thiruseyanthipuram
Modern aliases: Upper Temple, Town Temple.
Travel Guide:
It is about 600 meters away from the famous Tiruchendur Murugan temple.
History:
Prajapati Dakshan married Prasuti and Panchajani and fathered 24 daughters. Among them, he married 13 women namely Aditi, Didi, Katru, Vinita, Danu, Muni, Arittai, Surasa, Surabi, Tamra, Kurodavasai, Ira and Visva to one of the Sapta Rishis, Kashyapa Maharishi. Born to Kashyapa Maharishi and Surasa were Soorapadman, Tarakan, and Singamukan. Soorapadman, the eldest, married a woman named Padumakomalai and had a son named Bhanugopan. He had severe penance towards Lord Shiva. He received the boon that none but the progeny of Lord Shiva should destroy him.
Sati, the youngest daughter of Prajapati Daksha, married Lord Shiva against her father's wishes and attained Kailai. Dakshan, who was very angry with Lord Shiva, organized a sacrifice. He had invited everyone except Lord Shiva. Out of affection for her father, she went to the Sati yagna without stopping Lord Shiva. Dakshan ignored Sati, never looking at his girl. Also, he refused to give the Avirbhaga to Lord Shiva. Vekunda Sati fell into Kundama. Knowing the news, Lord Shiva beheaded Dakshan. Carrying Sati's body burnt in the fire in his arms, he danced. Sati's body, scattered in the Dandavam, fell on 51 places. These are the 51 Shakti Peethas. Lord Shiva, who was in agony after being separated from Sati, was immersed in penance. Soorapadman received the boon keeping in mind that Lord Shiva had no chance of having offspring. He did not know that Manda Sati was born as Parvati in Yagagundam to the Malayathuvajan Mainavathi couple.
The blessed Soorapadman conquered the earthly world and reached the celestial world. He conquered the gods and celebrated the victory. The gods were unable to dissolve Lord Shiva's penance. They sought the help of Cupid to rectify the situation. They decided to reunite Parvati and Lord Shiva, who had been worshiping Lord Shiva every day. According to the request of the gods, Cupid touched Lord Shiva with his malarambu. Cupid turned to ashes in Lord Shiva's Kopakini with his eyes blossoming. Pursuant to the request of the gods, Lord Shiva and Parvati got married and became a couple. Lord Shiva and Parvati heeded the request of Rathidevi, the wife of Manmad, and brought him back to life. They also gave him the boon that he would be visible only to Rathi Devi's eyes.
After everything was fulfilled by Shiva, the Devas appealed to Lord Shiva regarding Soorapadman and his boon. Lord Muruga incarnated from the 6 sparks that emerged from Lord Shiva's forehead. He assumed responsibility as the commander of the army of the gods and set out to kill Suran. Today we find the Sivakoluntheeswarar temple in the temple where Lord Shiva and Parvati blessed him by giving him work as a weapon. This is the history of this temple.
Highlights:
1. Quiet temple without noise.
2. The entire hall is resplendent with sculptures of the period.
சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
மூலவர்: சிவக்கொழுந்தீஸ்வரர்
அம்மன்: ஆனந்தவல்லி
சிறப்பு:
சூரனை வதம் செய்ய புறப்பட்ட முருகபெருமானுக்கு, ஈசனும் தேவியும் வேல் கொடுத்து ஆசிர்வதித்த திருத்தலம்.
புராணப்பெயர்: திருச்சீரலைவாய், திருசெயந்திபுரம்
தற்கால பிறபெயர்கள்: மேலக்கோயில், டவுன் கோயில்.
பயண வழிகாட்டல்:
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது.
தலவரலாறு:
பிரஜாபதி தக்ஷன் ப்ரஸூதி மற்றும் பஞ்சஜனியை மணந்து 24 பெண்குழந்தைகளுக்கு தந்தை ஆனார். இவர்களுள், அதிதி, திதி, கத்ரு, வினிதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா மற்றும் விஸ்வா ஆகிய 13 பெண்களை சப்த ரிஷிகளுள் ஒருவரான காஷ்யப மகரிஷிக்கு மணமுடித்துக் கொடுத்தார். காஷ்யப மகரிஷிக்கும் சுரசைக்கும் பிறந்தவர்களே சூரபத்மன், தாரகன், மற்றும் சிங்கமுகன். மூத்தவனான சூரபத்மன் பதுமகோமளை என்ற பெண்ணை மணந்து, பாநுகோபன் என்ற மகனை பெற்றான். சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். சிவபெருமானின் சந்ததியைத் தவிர வேறு எவருமே தன்னை அழிக்கக் கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.
பிரஜாபதி தக்ஷனின் இளைய மகளான சதி, தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானை மணந்து கயிலையை அடைந்தாள். சிவபெருமானின் மேல் பெரும் கோபம் கொண்ட தக்ஷன், யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தான். சிவபெருமானை தவிர அனைவரையும் அழைத்திருந்தான். தந்தை மீது கொண்ட பாசத்தால், சிவபெருமான் தடுத்தும் கேளாமல் சதி யாகத்திற்கு சென்றாள். தன்னுடைய பெண் என்றும் பாராமல் சதியை அலட்சியம் செய்தான் தக்ஷன். மேலும், சிவபெருமானுக்கு அளிக்கவேண்டிய அவிர்பாகத்தை தர மறுத்தான். வெகுண்ட சதி யாக குண்டத்தில் விழுந்து மாண்டாள். செய்தி அறிந்த சிவபெருமான், தக்ஷனை சிரசேதம் செய்தார். அக்னியில் எரிந்து போன சதியின் உடலை கரங்களில் ஏந்தி தாண்டவம் ஆடினார். தாண்டவத்தில் சிதறிய சதியின் உடல், 51 தலங்களில் விழுந்தது. இவையே, 51 சக்தி பீடங்கள் ஆகும். சதியைப் பிரிந்த வேதனையில் இருந்த சிவபெருமான் தவத்தில் மூழ்கி போனார். சிவபெருமானுக்கு சந்ததி இருக்க வாய்ப்பில்லை என்பதை மனதில் கொண்டே வரம் பெற்றான் சூரபத்மன். யாககுண்டத்தில் மாண்ட சதி, மலையத்துவஜன் மைனாவதி தம்பதியருக்கு மகளாக, பார்வதியாக பிறந்துவிட்டதை அவன் அறிந்திருக்கவில்லை.
வரம் பெற்ற சூரபத்மன் பூவுலகை வென்று, தேவலோகம் அடைந்தான். தேவர்களையும் வென்று வெற்றிவாகை சூடினான். சிவபெருமானின் தவத்தைக் கலைக்க இயலாமல் தேவர்கள் தவித்தனர். நிலைமையை சரிசெய்ய மன்மதனின் உதவியை நாடினர். அனுதினமும் சிவபெருமானை ஆராதனை செய்து வந்த பார்வதியையும் சிவபெருமானையும் மீண்டும் இணைக்க முடிவுசெய்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சிவபெருமானின் மீது மலரம்பு தொடுத்தான் மன்மதன். திருக்கண் மலர்ந்த சிவபெருமானின் கோபாக்கினியில் மன்மதன் சாம்பல் ஆனான். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி சிவபெருமானும் பார்வதியும் திருமணம் முடித்து தம்பதியர் ஆனார்கள். மன்மதனின் மனைவி ரதிதேவியின் கோரிக்கைக்கு செவிமடுத்த சிவபெருமானும் பார்வதியும் மன்மதனை உயிர்ப்பித்தனர். ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்ற வரத்தையும் வழங்கினர்.
அனைத்தும் செவ்வனே நிறைவேறிய பிறகு, சூரபத்மன் மற்றும் அவனது வரம் குறித்து தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட 6 தீப்பொறிகளிலிருந்து முருகப்பெருமான் அவதரித்தார். தேவர்களின் சேனாதிபதியாக பொறுப்பேற்று சூரனை வதம் செய்ய புறப்பட்டார். அன்று அவருக்கு வேலை ஆயுதமாகக் கொடுத்து, சிவபெருமானும் பார்வதியும் ஆசிர்வதித்த திருத்தலத்தில், இன்று நாம் சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலைக் காண்கிறோம். இதுவே இக்கோயிலின் தலவரலாறு.
தலபெருமைகள்:
1. ஆரவாரமற்ற அமைதியான திருக்கோயில்.
2. மண்டபம் முழுவதும் அக்கால சிற்பங்களால் மிளிர்கிறது.
Comments
Post a Comment