Temple info -2419 Kandaleeswarar Temple, Sikkarayapuram, Kundrathur,Chennai கந்தலீஸ்வரர் கோயில், சிக்கராயபுரம், குன்றத்தூர், சென்னை

 Temple info -2419

கோயில் தகவல் -2419



After worshiping the Gods on the banks of the Vaigai River, visiting the Gods on the banks of the Cauvery River, and praying to the deities who grace the banks of the Palaantangari, Sekkizhar, who blessed the great book called the History of the Kandahiswarar Temple: Periya Puranam, approached the town where the Kusasthalai River flows. On the way, he saw a magnificent temple. It is a temple built by the Chola king. It is a land where bananas and coconuts are cultivated. It is a region where mountains and cold go hand in hand. That Shivanati decided to visit the Lord at the foot of the mountain and stay there for some time to do penance. He lost himself in the presence of the colossal Shivalingamurtha. He concentrated all his thoughts in Shivapada and submitted them. He surrendered himself to Shiva. This is called surrender.


🛕 One day Lord Shiva gave a wonderful vision to that servant. At that very moment, the slave realized that all his pride had been lost, and he was mesmerized. He prostrated and bowed down as if it was Kandahiswara who destroyed my pride and arrogance. Drenched in ecstasy. "Khandula" means "attachment". As he got rid of his attachments to fame and name, he was happy to name Shiva as “Kandahiswarar”.



🛕 AD In the year 1241, during the reign of Tribhuvana Emperor Srirajarajan, the inscription details the restoration work done to this temple. Even the Pallava king and Srikrishna Devaraya have done tiurpanis for this temple. Nardhana Vinayagar, Dakshinamurthy, Durgai, Rishabarudar etc. are present in Prakaram. On the wall of the prakara there is a painting of Kannappa Nayanar in Golam plucking out his eye with his leg raised on the lingam.


Kandhazheeswarar Temple Special

🛕 Hallmark: It is special to be graced with a grand lingathirmaniyar in a square-shaped audaiyar. This temple was built by the Cholas.


🛕 Thalaperumai: Near this temple there is a separate temple for Sekizha. If you go from Chennai Pallavaram via Pammal, Anagaputhur, you can reach the beautiful town of Kunradthur. Lord Muruga has a temple on a small hill. Kandan's father-in-law Tirumal has a temple with the name Urakaperumal near the foothills. Next to that is the Kandahiswarar Temple of Lord Shiva.


Kandhazheeswarar Temple Nerthikadan & Prarthana

🛕 Neatness loan: They offer Abhishekam to the Swami and Amman here, wear new clothes and pay neatness loan.


🛕 Prayer: Devotees believe that if they worship the goddess here, all their prayers will be fulfilled.


Kandhazheeswarar Temple Festival

Festival: Shivratri, Pradosham.


Kandhazheeswarar Temple Timings

🛕 Kandahiswarar temple is open from 6 am to 10 am and from 5 pm to 8 pm.


Kandhazheeswarar Temple Address

Kundrathur Kandhazheeswarar Temple,

Sikkarayapuram, Tamil Nadu 600069


கந்தழீஸ்வரர் கோவில் வரலாறு:  பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை தரிசித்துவிட்டு, பாலாற்றங்கரையில் அருளும் இறைமூர்த்தங்களையும் பிரார்த்தித்துவிட்டு, குசஸ்தலை நதி பாயும் ஊரை நெருங்கினார். வழியில், அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். அது சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவில். வாழையும் தென்னையும் அதிகம் பயிராகும் பூமி அது. மலையும், குளிரும் கைகோர்த்த மண்டலம் அது. மலையின் அடிவாரத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து, அங்கேயே சில காலம் தங்கி தவம் செய்வது என்று முடிவு செய்தார் அந்தச் சிவனடியார். பிரமாண்டமான சிவலிங்கமூர்த்தத்தின் சாந்நித்தியத்தில் தன்னை இழந்தார். தனது சிந்தனைகள் முழுவதையும் சிவபாதத்துள் குவித்து சமர்ப்பித்தார். தன்னையே சிவனாரிடம் ஒப்படைத்தார். இதைத்தான் சரணாகதி என்கின்றனர்.


🛕 ஒரு நாள் அந்த அடியாருக்கு அற்புத தரிசனம் அளித்தார் சிவபெருமான். அந்தக் கணமே தனது மொத்த கர்வமும் தொலைந்ததை உணர்ந்த அடியவர், மெய்சிலிர்த்துப் போனார். என் கர்வத்தையும் செருக்கையும் அழித்த கந்தழீஸ்வரா என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். பரவசத்தில் திளைத்தார். “கந்துதல்” என்றால் “பற்றுதல்” என்று அர்த்தம். புகழையும் பெயரையும் பற்றிக்கொண்டிருந்த தனது பற்றுகளை நீக்கியதால், சிவனாருக்கு “கந்தழீஸ்வரர்” எனத் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.



🛕 கி.பி. 1241-ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர் போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது.


Kandhazheeswarar Temple Special

🛕 தலச்சிறப்பு: சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்கதிருமேனியராக அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.


🛕 தலபெருமை: இக்கோவில் அருகே சேக்கிழாருக்கென தனிக்கோவில் உள்ளது. சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாகச் சென்றால், குன்றத்தூர் எனும் அழகிய ஊரை அடையலாம். சிறிய மலை மீது கோவில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள் என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.


Kandhazheeswarar Temple Nerthikadan & Prarthana

🛕 நேர்த்திக்கடன்: இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


🛕 பிரார்த்தனை: இங்குள்ள அம்மனை வழிபட்டால் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Kandhazheeswarar Temple Festival

திருவிழா: சிவராத்திரி, பிரதோஷம்.


Kandhazheeswarar Temple Timings

🛕 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கந்தழீஸ்வரர் கோவில் திறந்திருக்கும்.


Kandhazheeswarar Temple Address

Kundrathur Kandhazheeswarar Temple,

Sikkarayapuram, Tamil Nadu 600069

Comments

Popular posts from this blog

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -1891 Korukonda Lakshminarasimha Swamy Temple. கோருகொண்டா லக்ஷ்மி நரசிம்மர் கோயில்