Temple info -2293. Karaneeswarar Temple, Kakkalur. காரணீஸ்வரர் கோயில், காக்களூர்

Temple info -2293

கோயில் தகவல் -2293



Karaneeswarar temple where Hanuman was worshipped!

 Here we will see about the special features of Arulmiku Senbhagavalli Udanurai Karaneeswarar Temple.

 On the way from Chennai to Thiruvallur, Arulmiku Senpakavalli Udanurai Karaneeswarar Temple is located in Kakalur village.

 It is said that in ancient times, the area known as Kaka Surana Pattanam was ruled by the demon Kaka Suran, and when Hanuman took Sanjeevi Hill to protect Lakshmana during Ramayana, Ravana's friend Kaka Suran tried to worship Hanuman by consecrating 108 Shiv Lingams here and there.  It is said to have saved.

 In order to prove this even today, Shivalingas can be found at various places around Kakalore.  Also in this temple, Veera Hanuman worships Lord Ishvara towards the north and it is unique.

 This temple has Karaneeswarar as the moolah and Senpaka Valli Thayar as the ambal.  Fig tree is the main tree of this temple.  Marriage ban will be removed for devotees who worship in this temple.  It is the belief of the devotees that the request for a child will bring the blessing of a son.

 This place is also known as Rahu and Ketu parikara place because Lord Shiva is worshiped in this temple as Swayambulingam.  By Bus from Chennai Coimbatore to Tiruvallur Kakalore Senpakavalli Udanurai Karaneeswarar Temple


Karaneeswarar Temple: அனுமன் வழிபட்ட காரணீஸ்வரர் கோயில்!

அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் வழியில் காக்களூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் ஆலயம்.

பழங்காலத்தில் காக்கா சூரண பட்டணம் என அழைக்கப்பட்ட இப்பகுதியைக் காக்கா சூரன் என்ற அசுரன் ஆட்சி புரிந்து வந்ததாகவும், ராமாயண காலத்தில் லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு சென்ற போது அவரை தடுப்பதற்காகவே இராவணனின் நண்பரான காக்கா சூரன் 108 சிவலிங்கங்களை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து அனுமனை வழிபட முயற்சி மேற்கொண்டதாகவும், இருப்பினும் காக்கலூரில் உள்ள காரணீஸ்வரரை மட்டுமே அனுமன் வழிபட்டுச் சென்று லக்ஷ்மணனைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகின்றது.


இதனை இன்றளவும் மெய்ப்பிக்கும் வகையில் காக்களூரை சுற்றி பல்வேறு இடங்களில் சிவலிங்கங்கள் இடம்பெற்ற உள்ளது காணலாம். மேலும் இக்கோயிலில் ஈஸ்வரனை வீர அனுமன் வடக்கு நோக்கி வணங்குவது போல அமைந்துள்ளதும் தனிச் சிறப்பாகும்.


இக்கோயிலில் மூலவராக காரணீஸ்வரரும், அம்பாளாக செண்பக வல்லி தாயாரும் உள்ளன. இக்கோயிலின் தல விருட்சமாக அத்திமரம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழிபடும் பக்தர்களுக்குத் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு வேண்டுகோளுக்குப் புத்திர பாக்கியமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இவ்வாலயத்தில் உள்ள சுயம்புலிங்கமாக உள்ள சிவனை நாகம் வழிபட்டதால் ராகு, கேது பரிகார தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவள்ளூர் செல்லும் பேருந்து மூலம் காக்களூர் செண்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது

Comments

Popular posts from this blog

Temple info -1891 Korukonda Lakshminarasimha Swamy Temple. கோருகொண்டா லக்ஷ்மி நரசிம்மர் கோயில்

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி