Temple info -2278 Vettudaiyar Kaliamman Temple, Kollangudi, Sivagangai வேட்டுடையர் காளியம்மமன் கோயில், கொல்லங்குடி, சிவகங்கை
Temple info -2278
கோயில் தகவல் -2278
Arulmigu Vettudaiyar Kaliamman Temple, Kollangudi, Sivaganga, Tamil Nadu
Kollangudi is a small village which is located on the Madurai - Thondi National Highway close to Kalaiyaar Kovil. This Temple is supposed to have been built in the 18th Century and is located admist a paddy field. The Presiding Deity is Vettudayar Kaali Amman. It is believed that Queen Velu Nachiyar hid here in this place when escaping from the Britishers. That time a small girl called Udayal saved Queen Velu Nachiyar and did not reveal the truth to the British soliders. Hence the small girl Udayal was maimed and cut to pieces by the savage British soliders. She lost her life but saved her Queen Velu Nachiyar from the evil hands of the British Rulers. Hence this Temple was built in remembrance of the small girl Udayal and named after Vettudayar Kaliamman. In recent days a Welcome Arch has been erected and leading to the Temple. There is a huge metallic Dwajasthambam facing the Sanctum Sanctorum. There are Sub Shrines for Vinayakar and Murugan. There is a Shrine for Ayyanar and His Consorts Poorna and Pushkala. This Temple underwent several changes at several points of time. A huge tinned roofing has come up now where Annadhanam is done regularly on all important days
The Temple has a huge Sacred Tank or Pushkarani which is known as Kollangudi Kaali Theertham and several Devotees make it a habit to have a holy dip here since it is believed to get rid of their past sins. The Sthala Viruksham is a Eacha Maram. There is a firm belief in and around this place that the Presiding Deity is merciless and ruthless when it comes to punishing the evil and sinners. Therefore many local Devotees and also few others from distant places visit this Temple and offer money and Pray to Her to punish the evil who had cheated them. Panguni festival and Aadi Perukku are celebrated in a grand manner attracting lots of Devotees.
Contact Details: 93633 34311, 98436 75356, 04575 - 232236, 04575 - 240427, 04575 - 202120 and 04575 - 240301
Temple Timing: 6 AM to 8 PM
Distance from Chennai to Kollangudi is 472 Kms
தன் உயிரை விட தன் நாட்டு அரசியின் உயிரே மேலானது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அரசிக்கு வந்த ஆபத்தை தன் தலையில் சுமந்த கன்னிப்பெண். தனக்காக உயிர்விட்ட பெண்ணுக்காக ஆலயம் அமைத்து வழிபட்ட அரசி. எங்கே நடந்தது இப்படி ஓர் அற்புதம். எங்கே இருக்கிறது அந்த ஆலயம். சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அரியாக்குறிச்சி என்னும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் ஆலயம்தான் அது. ஆலயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்னதாக,கோயில் உருவான வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
வெள்ளையர்களை எதிர்த்து, முதலில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது தென்னகத்தில்தான். அப்போது இந்தப் பகுதியே போர்க்கோலம் பூண்டிருந்தது. அப்போது சிவகங்கைச் சீமையை முத்துவடுகநாதர் என்பவர் ஆண்டு வந்தார். அவர் எதிரிகளால் கொல்லப்படவே, அவருடைய மனைவி வேலு நாச்சியார் தனது படைத்தளபதிகளான மருது சகோதரர்களின் உதவியோடு அரியாக்குறிச்சி வழியாக தப்பிச் சென்றார். வெள்ளையர் படை அவர்களைத் தேடி அலைந்து திரிந்தது
வெட்டுடையாளாக மாறி இன்றளவுக்கும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள் என்று மெய்சிலிர்க்கிறார்கள் காளியின் பக்தர்கள்.
தீர்க்கமான கண்களுடன் கருணை பொங்கும் முகத்தோடு தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறை தீர்க்கிறாள் அம்மன். வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறாள் காளி. நம் கண்களுக்கு தெய்வீக ஒளியாகக் காட்சி அளிக்கும் காளியம்மன், நம்மைப் பாதுகாக்க எட்டுக் கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் மாங்கல்யத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிச் செல்கின்றனர். கணவன் -மனைவி, உறவினர்கள், இப்படி யாரிடமாவது சண்டை போட்டு வெகுநாட்கள் பிரிந்து இருப்பவர்கள், இங்கு வந்து திருநீறு பூசி ஒன்று சேரும் இடமாகவும் இக்கோயில் திகழ்கின்றது.
குழந்தை வரம் வேண்டுவோர் கோயிலில் உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்வர்.பக்தர்கள் நினைத்தது நடப்பதால், நாளுக்கு நாள் பக்தர்களின் வருகையானது பெருகி வருகின்றது.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
நடைபெறும் திருவிழாக்கள்:
பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நாட்களில் அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.
இந்நாட்களில் காளி கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக் குதிரை ஆகிய வாகனங்கங்களில் பவனி வருவது உண்டு. விழாவின் 9-ம் நாளில் தேர் பவனியும் நடைபெறும். இக்கோயிலில் ஆடிப்பெருக்கு அன்று சந்நிதி முழுவதையும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும். கோயிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதை! துடிப்பான தெய்வம்! அம்மனை வேண்டிக்கொண்டால், துன்பங்கள் பறந்தோடும்; வாழ்க்கை சிறந்தோங்கும்!
Comments
Post a Comment