Temple info -2249 Kidathalaimedu Durgapureeswarar Temple, Mayiladuthurai கிடாய்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோயில்,மயிலாடுதுறை

 Temple info -2249

கோயில் தகவல் -2249


Kidathalaimedu Durgapureeswarar Temple


Kidathalaimedu Durgapureeswarar Temple:  This place is around 15 Kms from Mayiladuthurai on the Manalur Road.  Though Kumbabhishekam was performed in 1988, there were not many devotees visiting this place-mainly due to poor road condition- and the temple was in a pitiable condition.  Thanks to the initiative taken by a religious trust, another kumbabhishekam was performed in 2011 and the temple is definitely in better shape now.  Transportation continues to be a bottle neck.


There are several interesting legends associated with this little known temple.  It is on the Northern banks of Kaveri river and it is neither a Paadal Petra Sthalam ( Thevaram sung ) nor a Vaippu Thalam ( reference made about the temple).  Still, it finds a mention in Agni Puranam.  Though it is a Shiva Temple- Shri Kaamukambal Sametha Sri Durgapureeswarar Temple), prominence in this temple is for Mother Durga.   She is having a separate shrine on the prakara.


As per Hindu Puranas, the demon Mahishasuran with the head of a buffalo was slained by Mother Durga/Chamundeswari/Mahishasuramardini.  Though several temples were associated with this legend, it is believed that when the demon was killed, his buffalo head (Kida Thalai in Tamil) fell here and hence the name as Kidathalai Medu.  Unlike the other Mahishasuramardhini temples, here the Mother is giving darshan with eight hands and in a calm posture.  


When the Durga idol was almost ready, the Mother appeared in the dream of the sculptor that she wanted a small Nasi Dwara ( hole in the nose) on the left nostril.  When the sculptor hesitated due to the fear that it might disfigure the Vigraham, Durga assured him that he only had to keep his chisle on Her left nostril and She would take care of the rest.  The next day, when the sculptor kept the chisle on Durga’s left nostril, without even the first strike of the hammer, a small and neat hole appeared on the idol.  Hence it is customary in this temple to offer nose stud to this Ambal for fulfilling the devotee’s wishes.


Another miracle associated with this Durga happened in 1990.  Normally on every full moon day, 9 sumangalis used to be invited and offered the traditional Sumangali Pooja. This practice started in 1988.   In August 2000, they decided to conduct it on a grand scale and invited 300 sumangalis.  On the appointed date, only 299 sumangalis turned up and as the 300th person did not come, the priests kept the items meant for her, on the feet of Durga and completed the poojas.  After all the sumangalis were fed, the priests went home and were about to take food.  At that time, an old lady came there and introduced herself as the 300th person.  She explained that as she had to go to several places, she could not come in time.  The pleased priests took her to the temple and gave her all the honours befitting her status.  The old lady then requested for food and after eating,  took their permission to rest in the temple before leaving.  The priests left her in the temple, went home and had their lunch.  When they returned to the temple, despite their best efforts, they could not find the old lady anywhere,  When they resumed the evening pooja, Ambal revealed ( through the Arul on one of the devotees) that it was She who came as the 300th Sumangali!


Since Durga killed the demon, in order to get Herself relieved of the dosha, She did prayers to Lord Shiva here.  Hence the Shiva in the main shrine is called Durga Pureeswarar.  He faces East.  Before entering the Lord’s shrine, one could have darshan of Sri Kaamukambal who faces west.  There is an interesting sthala puranam associated with this name.  Readers might be familiar with the burning of Madan/Kaaman (God of Love) by the third eye of Lord Shiva, when His meditation was interrupted by the former.  When Rathi, wife of Kaaman, prayed to the Lord and the Mother here to restore her husband, she was granted the prayers.  While Shiva restored the physical form,  Ambal on Her part, gave back the traditional sugarcane bow and flower arrow to Kaaman.   As Kaaman was blessed by Her, She is called Kaamukambal.


There are other shrines for the various deities- Ganesa, Murugan, Dakshinamurthy etc on the Prakaram.  Special mention must be made about Sri Punugeeswarar.  He is a big Lingam and perhaps in the distant past this Lord might have been worshipped with Civet (Punugu) and hence the name.  


*கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோயில்*


மயிலாடுதுறை மாவட்டம், கிடாத்தலைமேடு என்னும் தலத்தில் உள்ளது துர்காபுரீஸ்வரர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோயில். மகிஷாசுரனை வதம் செய்த பிறகு தனக்கேற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள ஸ்ரீ துர்கை அம்மன் இந்தத் தலத்திலுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தாராம். ஸ்ரீ துர்கைக்கு அனுக்கிரஹம் செய்து அம்மனின் தோஷத்தைப் போக்கியதால் இந்தத் தலத்து ஈஸ்வரனுக்கு துர்காபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டதாம்.


இத்தலத்தில் கிடா வடிவிலுள்ள மகிஷனின் தலை மீது நின்ற திருக் கோலத்தில் சிம்ம வாகனத்தில் எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறாள் துர்கா தேவி. இரண்டு கரங்களில் வரத அபய முத்திரையும், ஐந்து கரங்களில் சக்கரம், பானம், கத்தி உள்ளிட்டவற்றை கேடயமாக தரித்தும் ஓர் இடது கரத்தை தொடையில் பதித்த ரூபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் ஸ்ரீ துர்கையம்மன்.


துர்கைக்கு பாவ விமோசனம் அளித்ததுடன் இதே ஆலயத்தில் தனி சன்னிதியில் எழுந்தருளுமாறு ஸ்ரீ துர்கா தேவியை ஈஸ்வரன் கேட்டுக்கொள்ள, அவ்வாறே ஸ்ரீ துர்கையும் இங்கே எழுந்தருளினார். இங்கே அம்பாள் ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமத்துடன் விளங்குகிறாள். அம்பாளுக்கு இந்தப் பெயர் வந்ததற்கு புராணத்தில் ஒரு சம்பவம் கூறப்படுகிறது.


ஒரு சமயம் கயிலாயத்தில் தவத்திலிருந்த சிவபெருமானின் கவனத்தை பார்வதி தேவியின் பக்கம் திருப்புவதற்காக சிவபெருமான் மீது காமதேவனாகிய மன்மதன் மலர்க்கணையை ஏவினான். இதனால் தவம் கலைந்து கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை அங்கேயே எரித்து சாம்பலாக் கினார். தனது கணவனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து வருந்திய ரதி தேவி, பொன்னூர் என்னும் இடத்தில் ஒரு தவச்சாலை அமைத்து தவமிருந்தார். பிறகு சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் திருமணஞ்சேரிக்கு வந்து அவரை தரிசித்த ரதி தேவி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டி சிவபெருமானிடம் மன்றாடினாள்.


ரதி தேவியின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பிக் கிறார். சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் இந்த துர்காபுரீஸ்வரர் தலத்தில் உறையும் ஈசனை கண்டு வணங்கி பார்வதி தேவியையும் வழிபடுகிறான். மன்மதனின் பக்தியைக் கண்டு மனம் இரங்கிய பார்வதி தேவி, அவனுக்குக் கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் மீண்டும் வழங்குகிறார். காமனாகிய மன்மதனுக்கு அருள்பாலித்த தால் இந்தத் தலத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. மன்மதனுக்கு அருள்பாலித்த தலமாதலால் இது கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக்கொள்ளும் தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.


இங்கே ஈஸ்வரன், அம்பாள் சன்னிதிகள் தவிர, துர்கைக்கு தனிச் சன்னதி, விநாயகர், கெஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. சூல வடிவத்தில் காணப்படும் சாமுண்டி சன்னிதி  வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள் வணங்கி வழிபடும் சன்னிதியாக உள்ளது. தங்கள் கால்நடைகள் பல்கிப் பெருகவும் பக்தர்கள் இங்கே பக்தியுடன் வழிபாடு செய்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்