Temple info -2248 Yamadarmaraja Temple, Thiruchitrambalam,Thanjavur யமதர்மராஜர் கோயில், திருச்சிற்றம்பலம்,தஞ்சாவூர்

 Temple info -2248

கோயில் தகவல் -2248



Yama Dharmaraja Temple, Thiruchitrambalam, Thanjavur


Yama Dharmaraja Temple is a Hindu temple located at Thiruchitrambalam in the Thanjavur district of Tamilnadu, India. The temple is dedicated to Yama.


Legends


According to Hindu mythology, Manmatha the Hindu Cupid provoked the ire of Shiva and was burnt to death. The Puradhana Vaneswarar Temple in neighbouring Pattukkottai lies on the spot where the alleged incident took place. However, on Yama's request, Manmatha was restored to life. The Yama Dharmaraja Temple is believed to have been built at the spot where he was restored to life.

Once, the Devas of the celestial world came to Kailash to have the darshan of Lord Shiva.  As he was in deep meditation, they used Manmatha to disturb His meditation-Nishta.  Opening his eyes in all fury, the sparks burnt Manmatha reducing him to ashes.  Responding to the prayers of his wife Rathi, he was restored to life at a spot near this place.  Yama prayed to Lord Shiva to permit him the destruction job assigned to him and was granted permission.  The temple for Yama is built according to this story.


Lord Shiva blessing Yama to carry on his job has a separate temple nearby.


Greatness of Temple


The God of Death is the presiding deity of the temple appearing with a royal look with his twisted moustache in a sitting form on his buffalo vehicle.  He holds in his hands a rope, palm leaves and a club.  Seated under him are Chitra Gupta and his messenger named Kalan. Pambatti Siddhar and Aiyanar with his consorts Poorana and Pushkala are also in the shrine.  Raw rice pudding is offered as Nivedhana. Yama is dressed as a king during the 10 day Aadi festival as if he is going for hunting.

In order to reduce the degree of his fury, Lord Raja Ganapathy is installed in front of the shrine and Lord Baladhandayuthapani behind.  As Yama is the form of Justice, any one committing a sin would be suitably punished. Women do not bathe in the Theertha of the temple in the fear that they may have to be subjected to the fury of Yama.


The Temple


This is the place where Manmatha – Cupid – was restored to life after he was burnt by the fury of Lord Shiva.  The spot is called Kaman Pottal.  There are also guardian deities in the temple complex Veeranar, Rakkachi, Muthumani, Karuppanasami, Kombukkaran and Vaduvachi.

The presiding deity is Yama, the Hindu god of death. There are also idols of Chitragupta, Pambatti Siddhar, Ayyanar and his consorts Purna and Pushkala.


Significance

The temple is one of the few dedicated to Yama. God of Death-Ema Dharmaraja is the presiding deity of the temple.


Temple Opening Time

The temple is open from 6.00 a.m. to 6.00 p.m.


Festivals

10 day Aadi Vizha in July-August and Manmatha Vizha (cupid festival) in Masi (February-March are the festivals celebrated in the temple.


Prayers

People pray here for longevity.  As Yama is the head of Justice, people who were cheated and had lost their belongings also pray here.  They write their grievance in a paper and tie the prayer in the trident.  It is believed that the lost property would be recovered within a few days.  This is called Padi Kattudhal.  

During the Ema Kanda time (time attributed to Yama, 1.30 p.m. to 3.00 p.m.) Ayul Vruddhi Homa (a prayer puja for longevity) is performed in the temple on Saturdays.  As Saturn is the authority for longevity according to astrology, the puja is conducted on Saturdays. Devotees perform Abishek to the deity and offer vastras.


Contact

Yama Dharmaraja Temple,

Thiruchitrambalam, Pattukkottai Taluk

Thanjavur District

Phone: +91- 98943 24430


Connectivity


The Yama temple is 36 km from Thanjavur on the Pattukkottai route. Nearest Railway Station is located at Pattukkottai and Thanjavur. Nearest Airport is located at Trichy.


Ilamurugan's blog


*ஆயுள் பலத்தை அதிகரிக்கும் திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா ஆலயம்*🌹


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில், ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு,   ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதி மக்களுக்கு இவர்தான்  இஷ்ட தெய்வம்.


எமதர்மராஜா ஆலய முகப்பு


சாதாரண மண் கோயிலாக இருந்த இந்தக் கோயில், பலதரப்பட்ட மக்களின் உதவியோடு மூன்று கோடி ரூபாய் செலவில், தற்போதுள்ள வகையில் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. சில கோயில்களில் எமதர்மருக்கென்று தனிச் சன்னதிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், எமனுக்காக மட்டுமே எனத் தனிக் கோயிலே  இருப்பது இங்கு மட்டுமே.


தல வரலாறு


எமதர்ம ராஜாவிடம், பிரகதாம்பாளை சிறு குழந்தையாகக் கையளித்து பூலோகத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார் சிவபெருமான், அந்தப் பெண்  குழந்தை பெரியவளான பின்னர் சிவபெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. திருச்சிற்றம்பலத்தில் உள்ள  கண்ணாங்குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் போது, திருமணத்துக்கு உரிய பருவத்தை அடைகிறார் பிரகாதாம்பாள். முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும்  ஒன்றுகூடி, பிரகதாம்பாளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். அந்நேரம், சிவபெருமான் நிஷ்டையில் இருக்கவே, மன்மதனை  வைத்து சிவபெருமானின் நிஷ்டையைக் கலைக்க முடிவு செய்கின்றனர். 


அதன்படி திருச்சிற்றம்பலத்திலிருந்து மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரிலிருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார் மன்மதன். கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான் தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார். பின்னர், மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம்  வேண்டினார் ரதிதேவி. ஆனால், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றும், வேண்டுமானால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத்  திருவிழா நடைபெறும்போது மட்டும் ரதியின் கண்ணுக்குத் தெரியும்படி செய்வதாகவும் கூறி அருளினார் சிவபெருமான். 


மன்மதனின் உயிரைப் பறிக்க, மேலோகத்திலிருந்து பூலோகத்தில் எமதர்மராஜா வந்திறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம். அதன் காரணமாகவே இங்கே  கோயில் அமைத்து வழிபடப்படுகிறது என்கிறது தல வரலாறு. வாயு மூலையில் சிவனும், அக்னி மூலையில் எமனும் காட்சியளிக்கிறார்கள். கோவில் அருகே  எமதீர்த்த குளம் உள்ளது. இங்குள்ள குளத்தில் பெண்கள் யாரும் நீராடுவது கிடையாது. துக்க நிகழ்ச்சி போன்ற வற்றில் கலந்துகொண்ட  ஆண்களும் இந்தக் குளத்தில் நீராடுவது கிடையாது.


கதை, வாளுடன் கம்பீரமாகக் காட்சிதரும்  முனிகதை, வாளுடன் கம்பீரமாகக் காட்சிதரும்  முனி

வழிபாட்டு முறைகள்


ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். நேருக்கு நேராக நின்றுதான் வணங்க வேண்டும். அந்த நேரத்தில் எமனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை ஐயாவின் காலடியில் வைத்து வழிபடுவது வழக்கம். பணத்தை வாங்கிக்கொண்டு யாரேனும் ஏமாற்றியிருந்தால் அவர்களின் பெயரை ஒரு தாளில் எழுதி அதைப் பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கமும் இங்கே உண்டு. இதற்குப் ‘படி கட்டுதல்’ என்று பெயர். படி கட்டிய சில நாள்களிலேயே கொடுத்த பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. 


எமதீர்த்த குளம்எமதீர்த்த குளம்

எமபயத்தைப் போக்கிக்கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை நீங்கவும் இங்கே பலர் வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் நவக்கிரக  தோஷம், பெண்பாவ தோஷம், நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் இவற்றிற்கு பரிகார தெய்வமாகவும் இந்த கோவில் விளங்கி வருகிறது.


நாளுக்கு நாள்  கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதனுக்குத்  திருவிழாவும் நடக்கும். எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்.


கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.


கோயிலுக்குச் செல்லும் வழி


பட்டுக்கோட்டை - அறந்தாங்கி செல்லும் சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்குதான் எமதர்மராஜா  கோயில் உள்ளது. மேலும் பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை (ஆவணம் வழியாக) செல்லும் பேருந்துகளில் சென்றால் திருச்சிற்றம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம். 


ரயில் வழிப் பயணம் என்றால் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருச்சிற்றம்பலம் செல்ல வேண்டும். அல்லது பேராவூரணி ரயில் நிலையத்திலிருந்தும் திருச்சிற்றம்பலம் செல்லலாம். 


முகவரி


அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில்,


திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை வட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் - 614 628🌹

Comments

Popular posts from this blog

Temple info -1891 Korukonda Lakshminarasimha Swamy Temple. கோருகொண்டா லக்ஷ்மி நரசிம்மர் கோயில்

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி