Temple info -2240 Vathalai Nachyamman Temple, Kandamangalam,Thanjavur வத்தலை நாச்சியம்மன் கோயில்,கண்டமங்கலம்,தஞ்சாவூர்

 Temple info -2240

கோயில் தகவல் -2240


Arulmiku Vathalai Nachyamman Temple, Kandamangalam...


 Kandamangalam is a town in Thanjavur along the Kudamurutti River.  Located near Thirukkattupalli.   Due to the prosperity and life of this prosperous town, the people of this place mention the grace of Sri Vathalai Nachiyamman for their prosperity.


 The story of Amman coming in  the history of this city is very amazing.  Before knowing it, let's have a look at the structure of the temple!. The temple is built with a simple circular wall.  In the lofty front hall, Sri Varahi Devi graces the devotees.  There, one can visit Sri Ganapati and Sri Balasubramaniyar.  After that, the sanctum sanctorum of Mother..


 Ambikai graces the Thirukolam with four arms, folded the left leg and the right leg down. This position in which most of the village deities sit is called 'Sukasanam'.  Amman, in her four hands, holds soolam, Ankusam, Pasam, Annakinnam, etc.


 Neem tree is the sthala vruksham of the temple.  This is a very amazing neem tree. It has knots growing here and there.  From one or two of them, something shiny is visible.  The detail about this is amazing!.. In this temple, it is customary for the devotees to make offerings of beads when it is fulfilled.  It is said that over time, the bell that is struck on the Sthala tree is slowly absorbed by the tree and hidden within itself.  A closer look at the tree reveals that this is true.  Most of the bells have the bottom outside the wood and the top hidden inside the wood!!!!.  


 Madurai Veeran, Muthu vazhiyan, Mamundi Karupu, and Mutthalu Rauthar grace the small shrines along the circular wall.


Among the family deities, a deity's name may seem slightly different.  Mutthalu Raudha lived many years ago.  Once, he became a devotee, mounted on a horse, and tried to enter the temple.  Despite the warnings of the temple staff, when he tried to enter, unexpectedly, the horse spooked.  Mutthalu Rauthar fell down.  As he fell, he was hit hard.  On the verge of death, he understood the greatness of mass power of the amman everywhere and bowed down.  Amman graciously accepted him as one of her parivara thevadais.


 A separate sanctum was built for him in the temple and worship started.  In the festival, he is also one of the processions that go before the Goddess.


 Although there is a separate temple for the goddess, the utsava murthy of the goddess is in the Kailasanathar temple in the same place.  For only ten days in a year, the Utsava Murthy of the Mother remains in the temple of Vathalai Nachyamman.  On other days only the Utsava Murthy can be visited at Kailasanathar Temple.  On the backside of Utsavar's thirumudi (crown), the Sakthi Chakra is said to be well written.


 History of Sri Vathalai Nachyamman:


 In this city, once there was heavy rain.  The river overflowed its banks.  When the rain subsided and the flood receded, a sculpture was found on the bank of the flood.. It was the goddess's image!.. It is said that the goddess manifested herself in this way to relieve the longing of the people of the village who had been lamenting that there was no guardian deity for the village for a long time.


 The found goddess was adopted as their guardian deity by the people of Kandamangalam.  Although originally worshiped as Trisuli and Lokeswari, the name 'Vathalai Nachiyamman' stuck to the Mother.  The history of this renaming is not known.


People who used to celebrate Nitya Pujas and once in a year, the festival of building a bridge, forgot to take the festival with the passage of time.  Taking the ceremony involves various spiritual reasons.  The good of the town is included in it.  Mother wanted to point out to them the mistake of her people who did not know it and forgot to take the ceremony.   The neem tree, which was a tall tree, started to fall.  Fires broke out everywhere in the town.   Even then, the goddess showed her grace in front of the people who did not realize their mistake.


 One day, inside the temple, the priest's prayer plate flew off without any reason.. The mother pointed out this through   a woman devotee who had come to worship and pointed out the consequences of not taking the ceremony.  .. The ignorance of the people is vast.  They promised to perform the ceremony before the goddess.  If he did so, the goddess promised that the tree would sprout in eight days.  She made arrangements for the ceremony and fulfilled her promise.  The tree sprouted in eight days!!!!


 Festival!..


 This important festival of Goddess is celebrated once a year in the month of Panguni.   On the first Tuesday of the month of Panguni, the Goddess is worshiped.  Beginning on the second Tuesday, the festival lasts for ten days.   The utsava murti of Mother is taken from the Kailasanathar temple.  During the ten days of the festival, the Utsava Murthy is worshiped at Vathalai Nachyamman Temple itself....


 On the ninth day there will be an important event called 'Border Circuit (ellai sutru)'.  On that day, Ambikai, accompanied by her retinue of deities, touches and circumambulates her guard boundaries.


 At that time, it is an auspicious event to wipe the Sweat on the forehead of Utsava Murthy. People come in droves just to see this!


After ten days of Utsavam and the kaapu is removed, the Utsavamurti is brought back to the Kailasanathar temple.  It is believed that at that time the goddess was seen very angry.  Therefore, when Utsavari is being taken from Vathali Nachiyamman Temple to Kailasanathar Temple, there is a restriction that no woman should come in front...


 The Utsava Murthy is dressed in white and  is taken from the Nachiyamman temple to the Kailasanathar temple.  On hearing that sound, the village women would go inside their houses.  On reaching the Kailasanathar temple, there the village women worship Mavlakku before the Goddess as a way to alleviate Ukram.


 If you want to go to Kandamangalam to visit Sri Vathalai Nachyamman, you can go from Tanjore via Kandiyur via Tirukkatupalli.  This temple is located at Kandiyur, 25 kms from Thanjavur on Thokur highway.   All the transportation facilities like buses, autos etc. are well located in this town.


 Parvati Ramachandran


கிராம தேவதைகள்


Friday, June 26, 2015

அருள்மிகு வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயில், கண்டமங்கலம்...


படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

தஞ்சையில், குடமுருட்டி ஆற்றை ஒட்டிய ஊரே கண்டமங்கலம். திருக்காட்டுப்பள்ளியின் அருகில் அமைந்திருக்கிறது. இது.. வளமான இந்த ஊரின் வளமைக்கும் வாழ்வுக்கும் காரணமாக, அவ்வூர் மக்கள், ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மனின் அருளையே குறிப்பிடுகின்றனர்.


அம்மன், இவ்வூரில் எழுந்தருளிய வரலாறு மிக அதிசயமானது. அதை அறியும் முன்பாக,  திருக்கோயில் அமைப்பை ஒரு முறை பார்த்து விடலாம்!.. திருக்கோயில், எளிமையான சுற்றுச் சுவருடன் கூடியதாக அமைந்திருக்கிறது. உயரமான முன் மண்டபத்தில், ஸ்ரீ வாராஹி தேவி அருளுகின்றாள். அங்கு, ஸ்ரீ கணபதியையும், ஸ்ரீபாலசுப்பிரமணியரையும் தரிசிக்கலாம். அதை அடுத்து, அன்னை அருளாட்சி செய்யும் கருவறை..


நான்கு திருக்கரங்களுடன், இடது திருக்காலை மடித்து, வலது திருவடி கீழிருக்குமாறு அமர்ந்த திருக்கோலத்தில் அருளுகிறாள் அம்பிகை.. பெரும்பாலான கிராம தேவதைகள் அமர்ந்திருக்கும் இந்த நிலையினை, 'சுகாசனம்' என்பது வழக்கம். அம்மன், தன் நான்கு திருக்கரங்களில்  முறையே சூலம்,  அங்குசம், பாசம், அன்னக்கிண்ணம் முதலியவற்றைத் தாங்கி அருளுகின்றாள்.


கோயிலின் திருச்சுற்றில், ஸ்தல விருட்சமான வேப்ப மரம். மிக அதிசயமானதொரு வேப்ப‌ மரம் இது.. இதில் ஆங்காங்கே முண்டும் முடிச்சுமாக இருக்கிறது. அவற்றில், ஒன்றிரண்டிலிருந்து, பளபளவென எதுவோ தெரிகிறது. இதைப் பற்றிய விவரம் அதிசயமானது!.. இத்திருக்கோயிலில் வேண்டுதல் செய்பவர்கள், அது நிறைவேறியதும், மணிகளைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கமிருக்கிறது. ஸ்தல விருட்சத்தில் அடிக்கப்பட்ட மணியை, காலப்போக்கில் மரமே மெல்ல உள்வாங்கி, தன்னுள் மறைத்துக் கொள்கிறது என்கிறார்கள். மரத்தை நெருங்கிப் பார்த்தால், இது உண்மை என்றே புலனாகிறது. பெரும்பாலான மணிகளின் கீழ்ப்புறம் மரத்துக்கு வெளியேயும், மேற்புறம் மரத்துக்குள் மறைந்தும் இருக்கிறது!!!!.  


சுற்றுச் சுவரை ஒட்டிய சிறு சந்நிதிகளில் அம்மனின் பரிவார தேவதைகளான மதுரை வீரன், முத்து வழியான், மாமுண்டிக் கருப்பு, முத்தாளு இராவுத்தர் ஆகியோர் அருளுகிறார்கள்..


பரிவார தெய்வங்களில், ஒரு தெய்வத்தின் பெயர் சற்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றலாம். பல்லாண்டுகள் முன்பு வாழ்ந்தவரே முத்தாளு இராவுத்தர். ஒரு முறை, அவர் செருப்பணிந்து, குதிரை மேல் ஏறிக் கொண்டு, திருக்கோயிலில் நுழைய முயன்றார். திருக்கோயில் பணியாளர்களின் எச்சரிக்கையையும் மீறி, அவர்  உள் நுழைய முயன்ற போது, எதிர்பாரா விதமாக, குதிரை மிரண்டது. முத்தாளு இராவுத்தர், நிலை குலைந்து விழுந்தார். விழுந்த வேகத்தில், அவருக்கு பலமான அடிபட்டது. உயிர் விடும் தருவாயில், எங்கும் நிறை சக்தியின் மகத்துவம் புரிந்து பணிந்தார். அம்மன் அருள் புரிந்து அவரை, தன் பரிவார தேவதைகளில் ஒருவராக ஏற்றாள்.


அவருக்கு திருக்கோயிலினுள் தனி சந்நிதி அமைத்து வழிபாடு துவங்கியது. திருவிழாவில், அம்மன் முன்பாகச் செல்லும் பரிவாரங்களில் ஒருவராகவும் இடம் பெறுகிறார் அவர்.


அம்மனுக்கென தனிக்கோயில் இருந்த போதிலும், அம்மனின் உற்சவ மூர்த்தி, அவ்வூரிலேயே இருக்கும் கைலாசநாதர் திருக்கோயிலிலேயே இருக்கிறது. வருடத்துக்கு பத்து நாட்கள் மட்டுமே, அன்னையின் உற்சவ மூர்த்தி, வாத்தலை நாச்சியம்மனின் திருக்கோயிலில் இருக்கும். மற்ற நாட்களில் கைலாசநாதர் திருக்கோயில் மட்டுமே உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம். உற்சவரின் திருமுடி (கிரீடம்) பின்புறம், சக்திச் சக்கரம் எழுதப்பட்டுள்ளதை சிறப்பாகக் கூறுகின்றார்கள்.


ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மன், கோயில் கொண்டருளிய வரலாறு:


இவ்வூரில், ஒரு முறை பெருமழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டது. மழை ஓய்ந்து, வெள்ளம் வடிந்ததும், வெள்ளத்தில் கரை ஒதுங்கியது ஒரு சிற்பம்.. அம்மனின் திருவுருவமே அது!.. வெகு காலமாக, கிராமத்துக்கென காவல் தெய்வமில்லையே என்று வருந்தியிருந்த அவ்வூர் மக்களின் ஏக்கம் போக்கவே, தன்னை இவ்வாறு வெளிப்படுத்தினாள் அம்மன் என்று சொல்கிறார்கள்.


கண்டெடுக்கப்பட்ட அந்த அம்மனை, தங்கள் காவல் தெய்வமாக ஏற்றார்கள் கண்டமங்கலம் ஊரினர்.. ஊரில் முன்பு வாராஹியை வழிபட்டு வந்த இடத்திலேயே, இந்த அம்மனுக்குக் கோயில் எழுப்பப்பட்டது. முதலில் திரிசூலி என்றும் லோகேஸ்வரி என்றும் வழிபடப்பட்டாலும், அன்னைக்கு 'வாத்தலை நாச்சியம்மன்' என்ற திருநாமமே நிலைத்தது. இந்த  திருநாமம் ஏற்பட்ட வரலாறு தெரியவில்லை.


விமரிசையாக நித்ய பூஜைகளையும், வருடத்திற்கொரு முறை, காப்பு கட்டி திருவிழாவும் கொண்டாடி வந்த மக்கள், காலப் போக்கில் விழா எடுக்க மறந்தார்கள். விழா எடுப்பது, பல்வேறு ஆகம காரணங்களை உள்ளடக்கியது. ஊரின் நன்மையே அதில் அடங்கியுள்ளது. அதை அறியாமல், விழா எடுக்க மறந்த‌ தன் மக்கள் செய்த தவறை அவர்களுக்கு எடுத்துக் காட்ட விரும்பினாள் அன்னை.  தல விருட்சமாயிருந்த வேப்பமரம் பட்டுப் போகத் துவங்கியது. ஊரில் ஆங்காங்கே நெருப்பு பற்றத் துவங்கியது.  அப்போதும், தம் தவறை உணராத‌  மக்களின் முன்பாக, தன் அருளாடலை வெளிப்படுத்தினாள் அம்மன்.


ஒரு நாள், திருக்கோயிலின் உள்ளே, பூசாரியின் ஆராதனைத் தட்டு, காரணம் ஏதுமின்றி பறந்து விழுந்தது.. வழிபட வந்திருந்த பெண்ணொருத்தியினுள்ளே அருட்சக்தியாகப் புகுந்து, விழா எடுக்காததன் விளைவுகளை சுட்டிக் காட்டினாள் அன்னை. .. மக்களின் அறியாமை அகன்றது. விழா எடுப்பதாக, அம்மனின் திருமுன்பு உறுதி கூறினர். அவ்வாறு செய்தால், எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர்க்கும் என்று அருள் வாக்களித்தாள் அம்மன். விழாவுக்குக் காப்பு கட்டியதும், கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் செய்தருளினாள். எட்டு நாட்களில் பட்ட மரம் துளிர் விட்டது!!!!...


திருவிழா!..


இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த, அம்மனின் திருவிழா, வருடத்திற்கொரு முறை, பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது.  பங்குனி மாதம், முதல் செவ்வாய், அம்மனுக்குக் காப்புக் கட்டுகிறார்கள். இரண்டாவது செவ்வாய் தொடங்கி, பத்து நாட்கள் விழா நடைபெறுகிறது.  அன்னையின் உற்சவ மூர்த்தி, கைலாசநாதர் திருக்கோயிலில் இருந்து எடுத்து வரப்படுகிறது. விழா  நடைபெறும் பத்து நாட்களும், வாத்தலை நாச்சியம்மன் கோயிலிலேயே உறசவ மூர்த்தியை வைத்து வழிபடுகிறார்கள்....


ஒன்பதாம் நாள் 'எல்லைச் சுற்று' என்னும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெறும். அன்று, அம்பிகை, தன் பரிவார தெய்வங்களுடன், தன் காவல் எல்லைகளைத் தொட்டு, சுற்றி வருகிறாள்.


அந்த சமயத்தில், உற்சவ மூர்த்தியின் திருநெற்றியில் துடைக்கத் துடைக்க வியர்வை பொங்குவது பேரதிசயமான ஒரு நிகழ்வாகும். இதைப் பார்க்கவென்றே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்!.


பத்து நாட்கள் உற்சவம் முடிந்து, காப்பு கழட்டப்பட்டதும், உற்சவமூர்த்தி, மீண்டும் கைலாசநாதர் கோயிலுக்குக் கொண்டு வரப்படும். அப்போது அம்மன், மிகுந்த உக்ரமாகக் காணப்படுவதாக ஐதீகம். ஆகவே, உற்சவரை, வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயிலில் இருந்து, கைலாசநாதர் திருக்கோயிலுக்கு எடுத்து வரும் போது, எதிரே எந்தப் பெண்ணும் வரக் கூடாது என்று கட்டுப்பாடு...


உற்சவ மூர்த்திக்கு வெள்ளை உடுத்தி, தப்படித்தவாறே வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயிலில் இருந்து, கைலாசநாதர் திருக்கோயிலுக்கு எடுத்துச் செல்வர். அந்த ஒலி கேட்டதும், ஊர்ப் பெண்கள் தத்தம் வீடுகளுக்குள்ளே சென்று விடுவர். கைலாசநாதர் திருக்கோயில் வந்ததும், அங்கு ஊர்ப்பெண்கள், அம்மனுக்கு முன்பு, உக்ரத்தை தணிக்கும் விதமாக மாவிளக்கு வழிபாடு செய்கிறார்கள்.


இத்தனை சிறப்பு மிக்க, ஸ்ரீ வாத்தலை நாச்சியம்மனை தரிசிக்க வேண்டி கண்டமங்கலம் செல்ல வேண்டுமானால், தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியே திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியாக‌ செல்லலாம். இந்தத் திருக்கோயில், கண்டியூர், தோகூர் நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இவ்வூர் வந்து செல்ல, பேருந்துகள், ஆட்டோ முதலான வாகன வசதிகள் யாவும் நல்ல முறையில் அமைந்திருக்கின்றன.


நன்றி

பார்வதி இராமச்சந்திரன்

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்