Temple info -2232 Jakhoo Hanuman temple,Shimla ஜாக்கூ ஹனுமான் கோயில், சிம்லா

 Temple info -2232

கோயில் தகவல் -2232





Jakhoo Hanuman temple,Shimla


Hanuman Mandir is a world-famous temple located in Jakhu, Shimla. It is only 1.5 kilometers (7 minutes) away from Shimla. A large number of people from all over the country and abroad come to visit here. It is believed that when Lakshman Ji fainted during the war between Shri Ram and Ravana then Hanuman Ji was going through the flying in the sky towards the Himalayas to take Sanjeevani Booti, ​​Hanuman Ji saw Yaksha Rishi doing penance here (Later it was named after the sage Yaksha. Yaksha means yak, yak became Yaku and changed from yaku to jakhu). After taking a rest and getting the exact introduction of Sanjeevani Booti, ​​before leaving this place, Hanuman Ji promised to Yaksha Sage that at the time of return from Dronacharya Mountain after bringing Sanjeevani Booti Hanuman Ji will meet to Yaksha Sage again. Due to being trapped in the embranglement of a demon named Kalnemi on the way, Hanuman Ji went through a short route to Ayodhya due to lack of time. When Hanuman Ji did not return to Yaksha Rishi, the sage Yaksha became distraught. After this Hanuman Ji appeared to him, and the self-styled idol of Hanuman Ji appeared at this place. With which the Yaksha Rishi built a beautiful temple of Hanuman Ji here. Even today this idol is installed in the temple and people from far and wide come to see him.

The devotees who come here say that they get peace by coming here and their wishes are also fulfilled. Those who come here with a sincere heart, Hanuman Ji does not send them empty-handed, their wishes are definitely fulfilled.

A huge 108 feet high statue of Hanuman Ji has also been installed in the courtyard of Jakhu temple, which you can see from anywhere in Shimla.


ஜக்கு ஆஞ்சநேயர் கோயில்,சிம்லா



இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 8850 அடி உயரத்தில், ஜக்கு மலைச் சிகரத்தில் இருக்கிறது. இங்கு 108 அடி உயரமான ஆஞ்சநேயர் சிலை சிம்லா நகரத்தை நோக்கியபடி அமைந்திருக்கிறது.  


உலகின் உயரமான ஆஞ்சநேயர் சிலை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. நிஜமாகவே விஸ்வரூபம் எடுத்து நின்றிருக்கிறார் இராமதூதன்!


கோவிலை அடைய மலைப்பாதையும், வின்ச் வசதியும் உண்டு. கோவில்வரை வாகனம் செல்ல சாலையும் அமைத்திருக்கிறார்கள்.  இந்த அனுமன் தேவதாரு மரக்கூட்டங்களுக்கிடையேயும் மேகப் பொதிகைகளை சுவாசித்துக் கொண்டும் சிம்லா நகரின் பல பாகங்களிலிருந்தும் தென்படுகிறார். சிந்தூர வண்ணம் மிளிர கண்கொள்ளாமல் காட்சி தருகிறார் கபிராஜ வல்லபன்.


அனுமனுக்கு ஏன் சிந்தூர வண்ணம் என்று அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. அசோக வனத்தில் முதல்முதலாக சீதையை அனுமார் சந்தித்தார் அல்லவா? அப்போது சீதை ஆபரணங்களேதுமின்றி நெற்றியில் சிந்தூரத் திலகம் மட்டும் இட்டிருந்தாராம். 

‘நெற்றியில் என்ன தாயே?’ என்று வினவினாராம் அனுமன். 


“எனது பர்த்தாவான இராமச் சந்திரமூர்த்திக்கு சகல சௌக்கியமும் ஆயுராரோக்கியமும் இருக்க வேண்டியே நெற்றியில் சிந்தூரம் இட்டிருக்கிறேன்” என்றாளாம் சீதை. 


“என் மூர்த்தியின் நலனுக்கு நெற்றியில் துளியூண்டு சிந்தூரம் மட்டும் இட்டுக் கொண்டால் போதுமா….  கொண்டாடா சிந்தூரம்.. அப்புடா உடம்பெங்கும்!” என்று பாதாதிகேசம் பூசிக் கொண்டு அனுமனும் சிந்தூர மயமாகக் காட்சியளிக்கிறாராம்.


இந்த ஜக்கு ஆஞ்சநேயர் சிலை அண்மையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நிறுவப் பட்டது. அங்கு சிறியதாக ஒரு பழைய கோவிலும் அனுமனுக்கு உண்டு. அதற்கு ஸ்தலபுராணமும் உண்டு. 


இராம இராவண யுத்தத்தின் போது, அடிபட்டு மூர்ச்சையான இலக்குவனைக் காக்க சஞ்சீவி மூலிகை வேண்டியிருந்தது. அதைக் கொண்டுவர ஆகாயமார்க்கமாக அனுமன் இமயமலைக்குப் பறந்தார்.

வழியில் இந்த ஜக்கு மலையுச்சியில் தவத்திலிருந்த யக்‌ஷ ரிஷியைக் கண்டு அங்கு இறங்கினார்.  சஞ்ஜீவி மூலிகை துரோண மலையில் இருப்பதை அவரிடம் கேட்டறிந்து கொண்டு, மீண்டும் வருவதாகச் சொல்லி அனுமன் பயணப்பட்டார் . சஞ்ஜிவி இருந்த மலையையே பெயர்த்துக் கொண்டு யுத்தக் களம் சென்றார்.

இலக்குவனும் உயிர்ப்பிக்கப் பட்டார். 


ஆனாலும் மீண்டும் யக்‌ஷ ரிஷிக்கு வாக்களித்தபடி அவரிருந்த மலைக்கு அனுமனால் செல்ல இயலவில்லை. அதனால் வருத்தம் கொண்ட யக்‌ஷ ரிஷிக்கு ஆறுதல் சொல்லும் வண்ணம் தானே அங்கு சிலாரூபத்தில் இருப்பதாக ரிஷிக்கு அசரீரியாகச் சொல்லி அவ்வண்ணமே சிறு சிலையுமானார். 


அந்த சிலையை யக்‌ஷ ரிஷியும் சிறு கோவிலமைத்து வழிபட்டு மோட்சமெய்தினார். அந்த மலையுச்சியும் அந்த யக்‌ஷ ரிஷியின் பெயராலே அழைக்கப் பெற்றது. 


‘யக்‌ஷ’ என்ற பெயர் ‘யக்கு’ வாகி இன்னாளில் ஜக்கு என வழங்கப் பெறுகிறது. 


கோவில் வளாகத்தில் லங்கூர் குரங்குகள் நிறையவே திரிகின்றன. 

பக்தர்கள் தரும் தின்பண்டங்களை ருசிக்கின்றன. ஓரொரு சமயம் பெண்களின் கைப்பையையும் கவர்ந்து கொண்டு ‘ஆபீஸ் போகவா?’ என்கின்றன.


சிம்லா போகும் வாய்ப்பமைந்தால் கண்டிப்பாக ஜக்கு அனுமனைப் பார்த்து ஒரு கும்பிடு போடுங்கள்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்