Temple info -2223 Sri Annamma Devi temple,Bangalore ஸ்ரீ அன்னம்மா தேவி கோயில்,பெங்களூரு

 Temple info -2223

கோயில் தகவல் -2223




Sri Annamma Devi temple,  Bangalore


Sri Annamma Devi Temple in Majestic area was considered to be the guardian goddess of Bendakalooru in the times of Nadaprabhu Kempegowda. People from the Chickpet, Balepet and Thigalarapet also visit the Sri Dharmaraya Swamy Temple which is known for the world famous Bengaluru Karaga festival.


The temple is located in a busy street of commercial bazaars and is revered by people of Bengaluru. Even today, when people get married, they make their way to Annamma Devi temple even before they proceed with their wedding rituals. Annamma temple is also a place where newborns are brought, as legends believe it is the child of the goddess and seek her blessings. Not just that, even if someone buys a car, two-wheeler or any motorable vehicle, they bring it to the temple for ‘sanctification’.


The sanctum sanctorum of the temple is a very small place and the goddess is etched on a boulder which exists at the place. This monolithic goddess has been revered ever since the idol was brought here. Some even claim that the goddess was born in this place.


During those days and even today, one can see people with any sickness or pox brought to the temple for blessings. This religious place in the city is worshipped by thousands of people on Tuesdays and Fridays. People believe that this goddess was a saviour during the times of pox and other attacks on people.


The annual fair of this temple is mostly celebrated in all parts of the city by a group of people in each area. The temple has idols of Annamma Devi and are rented out to worshippers so they can take it to their area for a certain number of days. The idols are also taken around the city and worshipped and then brought back to the temple. This way, close to 10 idols do the rounds on rotation. They are called Utsava murtis.


This temple is also part of the Karaga Jaatre, the festival which happens in the city during Chitra Poornima. The Karaga comes inside the temple each year. Colourful decorations on all occasions prove that Sri Annamma Devi Temple is an icon in the city which should not be missed.


ஸ்ரீ அன்னம்மா


கர்னாடக மாநிலம் பெங்களூரு காந்தி நகர் சுபேதார் சத்திரம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ அன்னம்மா தேவி ஆலயம். பெங்களூரு சிட்டி மெஜஸ்டிக் என்று அழைக்கப்படும் மத்திய பேருந்து நிலையம் ரயில் நிலையம் ஆகியவற்றை அடக்கிய சுறுசுறுப்பான பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.


விஜய நகர மன்னர்களின் கீழ் சிற்றரசராக விளங்கிய கெம்பே கௌடா 1537 ஆம் ஆண்டு தன் அரசாட்சியின் தலை நகராக பெங்களூருவை ஸ்தாபித்த காலத்திலேயே இந்த ஸ்ரீ அன்னம்மா தேவி ஆலயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில் பெண்டகளூரு என்று அழைக்கப்பட்ட பெயரே மருவி பெங்களூரு ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.


ஒரு காலத்தில் பெங்களூரு நகரில் 1500க்கும் மேற்பட்ட குளங்களும் ஏரிகளும் இருந்தன என்றும் தற்போது அவற்றில் ஒரு சிலவே உள்ளன என்றும் கூறப்படுகிறது. அக்காலத்தில் பரந்து விரிந்து எப்போதும் தண்ணீர் நிறைந்திருந்த தர்மம்புத்தி என்ற ஏரி இருந்த இடத்தில்தான் தற்போதுள்ள மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அந்த ஏரி வெட்டப்படும்போதுதான் ஸ்ரீ அன்னம்மா தேவியின் விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக பரிகேபிட்டனஹள்ளி என்று அழைக்கப்பட்ட மாரமுள்ள கிராமத்தில் ஸ்ரீ அன்னம்மா தேவி கோயில் கொண்டிருந்தாள்  அக்காலத்தில் தினசரி பூஜைகள் மற்றும் பராமரிப்பின்றி ஆலயம் இருந்தது. தேவி ஒரு பக்தரின் கனவில் தோன்றி தன்னை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிரதிஷ்டை செய்தால் தான் பக்தர்களை அனுக்கிரகிப்பேன் என்று ஆணையிட தேவியை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்ததாக இன்னொரு செவிவழிச் செய்தி கூறப்படுகிறது.


அக்காலத்தில் அம்புஜாட்சி என்று அழைக்கப்பட்ட தேவி பின்னர் ஹன்னம்மா என அழைக்கப்பட்டு அப்பெயரே அன்னம்மா தேவியாக மருவியதாக தெரிவிக்கின்றனர். ஆலயம் சிறியதாக இருப்பினும் இப்பகுதியில் ஸ்ரீ அன்னம்மா தேவி மிகப் பிரபலமாகப் பேசப்படுகிறாள்.  முகப்பை சிறிய கோபுரம் அலங்கரிக்க மகாமண்டபத்தில் அம்பிகையின் உருவங்கள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தொட்டி போன்ற அமைப்பில் ஆறு சுயம்பு திருமேனிகள் காணப்படுகின்றன. அவை ஸ்ரீ அன்னம்மா தேவியின் சகோதரிகள் தொட்டம்மா தேவி  ஜஜ்ஜேரம்மா தேவி  சாமுண்டேஸ்வரி தேவி ஆத்தலாத்தம்மா தேவி மாரியம்மா தேவி எனக் கூறப்படுகிறது. இவர்களை சப்த மாதர்கள் என்றும் இந்த ஆலயத்தி சப்த மாத்ருகா க்ஷேத்திரம் என்றும் கூறுகின்றனர். பக்தர்கள் இந்த தேவியருக்கு தயிர் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.


கருவறை முன்பு துவாரபாலகிகள் உள்ளனர். மூலஸ்தானத்தில் ஸ்ரீ அன்னம்மா தேவி அபய வரத ஹஸ்த முத்திரைகளோடு அருள்பாலிக்கிறாள். ஏராளமான ஆபரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஸ்ரீ அன்னம்மா தேவியின் தரிசனம் காண்போருக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது.  பக்தி சிரத்தையோடு ஸ்ரீ அன்னம்மா தேவியை தரிசிக்க மரண பயம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தூக்கத்தில் பயந்து அழும் குழந்தைகளை இக்கோயிலுக்குக் கூட்டி வருகின்றனர்  இத்தேவியை தரிசிக்க மனோதைரியம் கிட்டும் என்பது ஐதீகம்.  


தங்கள் வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களின் போதும் விசேஷ நாட்களிலும் ஸ்ரீ அன்னம்மா தேவியின் உற்சவ மூர்த்தியை ஊர்வலமாக தங்கள் பகுதிக்கு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு செய்வது இப்பகுதி மக்களிடையே ஒரு வழக்கமாக உள்ளது. வழிபாடுகள் முடிந்த பின்னர் மீண்டும் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்.


செல்லும் வழி  கெம்பே கவுடா சர்க்கிள் என்று அழைக்கப்படும் மெஜஸ்டிக் பகுதியில் சுபேதார் சத்திரம் சாலையில் அமைந்துள்ளது


நன்றி மாலதி ஜெயராமன்

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்