Temple info -2205 Valavanatheeswarar Temple, Valayathur,Vellore. வளவநாதீஸ்வரர் கோயில், வளையத்தூர்,வேலூர்

 Temple info -2205

கோயில் தகவல் -2205


Valavanatheeswarar Temple*

 Valayathur, Vellore District.


 *eyebrow furrow*


 Ambal with forehead eye can be visited at Valavanathis Varar Temple in ValaYathur, Vellore District.


 The king who lived in this area was an ardent devotee of Shiva.  He wanted to build a Shiva temple in the area under his rule, praying that the people would live better and agriculture would flourish.  But, he did not know where to build the temple.  Once Shiva appeared in his dream and mentioned a place.


 Accordingly, the king built a temple at Valayathur.  Agriculture flourished and people lived prosperously.  Hence he named Shiva as 'Valavanathis Varar'. 


 Graha Dosha Nivarti:- It is believed that Valavanathis varar is shown as a navamsa murti on a square shaped peedam, slightly bent to the left.  These nine stages are also said to indicate Navagraha.  Thus, those affected by planets dosha pray for relief.


  *Netrikkan Ambigai* Periyanayaki Ambal is seen with a forehead eye.


 Therefore, they worship her at night on Shivaratri, considering her to be Shiva.  She wears rings on her four little fingers.  Chandrasekhar here wears rings on both his little fingers.  There is no front door to the Shiva shrine.  There is only a stone window. 


On entering the temple, Ambal is the first to have darshan.


 Shanmukhar with Ganesha and Valli Deivanai standing in front of the Shiva shrine.  This Murugan is showing the symbol of Lord Shiva in his hand which is a special structure.  The Goshta includes Dakshinamurthy, Lingoth Pavar, Brahma and Durga.  Prakara contains Sun, Bhairava, Ganesha, Sandikeswarar and Navak planets.  Lakshdeepam is lit in the temple on Karthikai.


 The pedestal of Sabta Kanniya here has their respective vehicles carved in an excellent arrangement.


 24 km on the Vellore-Chennai road, you can go to the distant Arcot and 17 km on the branch road from there, you can reach Valayathur.


*🙏வளவநாதீஸ்வரர் திருக்கோயில்*

 வளையாத்தூர், வேலூர் மாவட்டம்.


*நெற்றிக்கண் அம்பிகை*


நெற்றிக் கண்ணுடன் கூடிய அம்பாளை வேலூர் மாவட்டம் வளை யாத்தூரிலுள்ள வளவநாதீஸ் வரர் கோயிலில் தரிசிக்கலாம்.


இப்பகுதியில் வசித்த மன்னர் தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி, தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவன்கோயில் கட்ட வேண்டு மென விரும்பினார். ஆனால், அவருக்கு எந்த இடத்தில் கோயில் அமைப்ப தெனத் தெரிய வில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு இடத்தைக் குறிப்பிட்டார்.


அதன்படி, மன்னர் வளையாத்தூரில் கோயில் எழுப்பினார். விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்தனர். எனவே சிவனுக்கு 'வளவநாதீஸ் வரர்' என்று பெயர் சூட்டினார். கிரகதோஷ நிவர்த்தி:- வளவநாதீஸ் வரர் சதுர வடிவ பீடத்தில், இடப் புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தி யாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங் களைக் குறிப்ப தாகவும் சொல்வர். இதனால், கிரக தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் நிவர்த்திக்காக வேண்டிக் கொள் கிறார்கள்.


 *நெற்றிக்கண் அம்பிகை* பெரியநாயகி அம்பாள் நெற்றிக் கண்ணுடன் காட்சியளிக் கிறாள்.


எனவே, இவளை சிவனாகவே கருதி சிவராத்திரி யன்று இரவில் பூஜை செய்வர். இவளது நான்கு கை களிலுள்ள சுண்டுவிரல்களிலும் மோதிரம் அணிந் திருக்கிறாள். இங்குள்ள சந்திரசேகரர் சுண்டுவிரல்கள் இரண்டில் மோதிரம் அணிந் துள்ளார். சிவன் சன்னதி எதிரே வாசல் கிடையாது. கல் ஜன்னல் மட்டுமே உள்ளது. கோயிலில் நுழைந்ததும் முதலில் அம்பாளைத் தான் தரிசனம் செய் கின்றனர்.


சிவன் சன்னதி முகப்பில் நின்ற விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை யுடன் சண்முகர் உள்ளனர். இந்த முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் சூரியன், பைரவர், விநாயகர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக் கிரகங்கள் உள்ளனர். கார்த்திகையன்று கோயிலில் லட்சதீபம் ஏற்றுவர். 


இங்குள்ள சப்த கன்னியரின் பீடத்தில் அவர்களுக் குரிய வாகனங்கள் வடிக்கப் பட்டுள்ளது சிறப்பான அமைப்பு.


வேலூர்- சென்னை ரோட்டில் 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 17 கி.மீ., சென்றால் வளையாத்தூரை அடையலாம்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்