Temple info -2202 Pandavarmalai Bhairaweswarar Temple, Sakleshpur பைரவேஸ்வரர் கோயில்,பாண்டவர்மலை,சக்லாஸ்பூர்
Temple info -2202
கோயில் தகவல் -2202
*Pandavar Malai Bhairaveswarar*
Bhairaveshwara temple at Meghnagatte near Sakleshpur in Karnataka is the oldest temple.
Legend has it that this temple was built by the Pandavas. It is situated on the edge of the Western Ghats at an altitude of about 3100 feet above sea level. Two rivers, Kembuhole and Kumaradhara, originate from here.
The two rivers merge into Netravati river. Located in the Western Ghats, this temple is surrounded by many hills like a hill on a hill and can be reached by a 2.5 km trek.
Abhisheka Puja is performed once a year in January.
A large number of people from nearby villages flock here. The Pandavas were exiled for 12 years after losing a game of dice with Duryodanan.
They lived for a year in Angnatha Vasa, living in secret. In that final year the Pandavas stayed here for some time. Then they built a temple here to worship Lord Shiva.
Darkness surrounds this temple and wild animals roam here.
Therefore, those who go to worship the temple are advised to return by 5 pm.
Adi Shankarar is worshiped here.
*பாண்டவர் மலை பைரவேசுவரர்*
கர்நாடகாவில் சக்லேஷ்பூர் அருகே உள்ள மேகனகட்டேவில் உள்ள பைரவேஸ்வரா கோவில் பழமையான கோவில்.
இந்த கோவில் பாண்டவர் களால் கட்டப் பட்டது என்று புராண கதைகள் கூறுகின்றன. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் விளிம்பில் கடல் மட்டத் திலிருந்து சுமார் 3100 அடி உயரத்தில் அமைந் துள்ளது. கெம்புஹோல் மற்றும் குமாரதாரா என்ற இரண்டு ஆறுகள் இங்கிருந்து தோன்று கின்றன.
இரண்டு ஆறுகளும் நேத்ராவதி ஆற்றில் இணை கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவில் மலை மீது உள்ள மலை என பல மலைகளால் சூழப் பட்டுள்ளது 2.5 கிமீ மலையேற்றம் மூலம் கோயிலை அடையலாம்.
வருடத்திற்கு ஒரு முறை ஜனவரி மாதம் அபிஷேக பூஜை செய்யப் படுகிறது.
அப்போது அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு கூடு கிறார்கள். துரியோ தனனுடனான பகடை விளையாட்டில் தோற்ற பிறகு பாண்டவர்கள் 12 ஆண்டுகள் நாடு கடத்தப் பட்டனர்.
தலை மறைவாக வாழும் அங்ஞாத வாசத்தில் ஒரு வருடம் வாழ்ந்தார்கள். அந்த இறுதி ஆண்டில் பாண்டவர்கள் இங்கு சில காலம் தங்கி யிருந்தார்கள். அப்போது சிவபெருமானை வழிபடுவ தற்காக இங்கு ஒரு கோவிலைக் கட்டினார்கள்.
இந்த கோவிலை சுற்றிலும் இருள் சூழ்ந்ததும் காட்டு விலங்குகள் இங்கு சுற்றித் திரிகின்றன.
ஆகையால் கோவிலில் வழிபட செல்பவர்கள் மாலை 5 மணிக்குள் திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
ஆதிசங்கரர் இங்கு வழிபட்டிருக் கிறார்.
Comments
Post a Comment