Temple info -2198 Krupakupareswarar Temple, Komal,Nagapattinam கிருபாகுபரேஸ்வரர் கோயில்,கோமல்,நாகபட்டினம்

 Temple info -2198

கோயில் தகவல் -2198




A Hastha Nakshathira Temple – Komal Sri Krupakupareswarar Temple !!


Hastha Nakshathira is the 13th one in the list of Nakshatras. Those belonging to Hastha Nakshathira seemed to be fond of dresses and ornaments. They show great interest in education, enjoy music, dance and other fine arts. They are normally talkative and humorous in nature. But they tend to have a confused mind and they wish for peaceful life. Sri Annapoorani Sametha Krupakupareswarar Temple in a village called Komal in Nagapattinam District is considered as Parihara Temple for the people who are born on Hastham star.


The main deity of this temple is Lord Shiva and He is a Suyambu Linga. He is known by the name Krupakupareswarar. As per the Sthala Purana, once Goddess Parvathi wanted to know how Lord Shiva manages to conduct all the affairs of the world and so she enquired the Lord about it. That time, Lord Shiva got an idea!! He wished to play a Divine Game (Thiruvilaiadal) with the Goddess. So He made the Goddess Parvathi to close His eyes with Her hand in a playful mood. For a moment, all the activities of the world came to a halt. Goddess got shocked and she begged pardon of the Lord. Then Lord Shiva said that since she made the Universe dark by covering His eyes, He would disappear in the Hasthavarna Jyothi (A form of Light from His Hands) that emerged from His hands. He also told that she should go to earth in the form of a cow, find out the light and join Him again. So Goddess Parvathi went to Earth in the form of a Cow and she started searching for the light with the help of Her brother Lord Vishnu. On a Hastha Nakshathira Day, the Jyothi (Light) appeared before the Goddess. This light is known as Komaleeya Jyothi. Then Goddess Parvathi joined the Jyothi. Since Lord Shiva offered His Blessings (Krupa) to Parvathi, He is known by the name Krupakupareswarar. Since this holy incident happened on a Hastha star day, this temple is considered as a Parihara Temple for Hastha Nakshathira.


TK000022The Goddess Parvathi is known as Annapoorni. Since the Goddess took the form of a cow and performed Pooja to the Lord, this place is known as ‘Komal’ or ‘Kopuri’ (Ko means Cow). The Sthala Vriksha of this temple is Vilwa Tree. In the temple, we could also find separate shrines for Lord Vinayaka, Muruga, Lingodhbava, Dakshinamurthy, Brahmma, and Chandikeshwar.


As the name suggests, Krupakupareswarar is a God who is full of mercy to His devotees. It is strongly believed that the Lord protects His devotees from any sort of difficulties when He was prayed wholeheartedly. People who are born on Hastha Nakshathira are advised to visit this temple as often as they could since that would help them in getting relieved from the adverse effects of the planetary positions. They are advised to offer Pooja to the Lord and the Goddess with Nivedhanas of Laddu, Vada, and Payasam. People who seek happy wedding life and Child Boon come to this temple with a Cow and Calf and go round the Prakara. It is said that by doing so, they get their wishes fulfilled and they would get a peaceful life.


*கிருபாகூபாரேஸ்வரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டம்*


நாகப்பட்டினம் மாவட்டம் கோமல் என்ற ஊரில் உள்ளது கிருபாகூபாரேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக கிருபாகூபாரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தாயார், அன்னபூரணி. இந்தக் கோயிலில் மூலவரான கிருபாகூபாரேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


பார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும், கோமல் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.


அஸ்தம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது தோஷங்கள் நீங்க கிருபாகூபாரேச்வரரை வழிபாடு செய்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். பசு மற்றும் கன்றுடன் இந்தக் கோயிலுக்கு வந்து பக்தர்கள் வலம் வருகின்றனர்.


அஸ்தம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள், அஸ்தம் நட்சத்திர நாளில் அல்லது தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது சிறப்பு. எந்த வகையான தவறாக இருந்தாலும் அதற்கு மன்னிப்பு தரக்கூடியவர் கிருபா கூபாரேசுவரர். சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் அரூப வடிவில் இத்தல இறைவனை வழிபாடு

 செய்துள்ளனர்.


சிவபெருமானின் திருவிளையாடல் பற்றி அறிந்து கொள்ள பார்வதி தேதி விரும்பினார். அதோடு, எப்படி இந்த உலகை இயக்குகிறார் என்பது குறித்தும் அவரிடமே கேட்டார். அப்போது, சிவபெருமான் தனது திருவிளையாடலை பார்வதி தேதியிடம் காண்பித்தார். அதுதான், பார்வதி தேவி,தனது கண்ணை கட்டும்படி செய்தார். அந்த நொடியே, உலகம் இருண்டு போனது.


இதனால், அதிர்ந்து போன பார்வதி தேதி, தனது தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்பு கோரினார். எனினும்,  சிவபெருமான், என் கரத்திலிருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப் போகிறேன். நீ பசுவாக மாறி நான் இருக்கும் இடமான இந்த ஜோதியைக் கண்டுபிடித்து அங்கு வந்து சேர்வாய் என்று கூறி மறைந்தார்.


சிவன் கூறியதைப் போன்று பசுவாக மாறி தனது சகோதரரான திருமாலுடன் சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தார். அப்போது ஒரு நாள் அஸ்தம் நட்சத்திர நாளில் சிவஜோதி தோன்றியது. இதைக் கண்ட பார்வதி தேவி மனமகிழ்ந்து சிவஜோதியுடன் ஐக்கியமானார். பார்வதி        மீது கிருபை காட்டியதால் சிவபெருமான் கிருபா கூபாரேஸ்வரர் என்று பெயர் வந்தது.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்