Temple info -2148 Maruduvancheri Manunatheswarar Temple,Thiruvarur மருதுவாஞ்சேரி மனுநாதேஸ்வரர் கோயில்,திருவாரூர்

 Temple info -2148

கோயில் தகவல் -2148


Maruduvancheri Manunatheswarar Temple


Marudavancheri Manunatheswarar temple:  This place is around  5 Kms from Poonthottam and 4 Kms west of Koothanur Saraswathi temple.  It is around 24 Kms from Tiruvarur and one could cover this temple when a trip is made to Koothanur.  Since the number of visitors is less, the temple is kept open only between 9 and 10 am and 7 and 8 pm.  The contact numbers are 094439 73346, 099432 28987 and 096774 86180.  This is one of the Vaipu Sthalams - mentioned in Thevarams without any specific song on the Lord.  The Murugan of this temple was praised by Arunagirinathar in Tirupugazh.


We are visiting the Shri Manikka Sivakama Sundari sametha Shri Manunatheswarar temple.  This is another rare west facing temple.  Ambal faces South and Kumarasubramanyan (Murugan) faces east.  There is a belief that worshipping a west facing Shiva is equivalent to having darshan of 1000 east facing Lords.  There is no gopuram nor Navagrahams in this temple.  However, Saneeswaran and Surya are having separate shrines. 


It is believed that Shiva Himself explained the significance of Shivarathri to Nandi in this place.  Though we are familiar with the Maha Shivarathri in the month of Masi (Feb-Mar), there are monthly Shivarathris in every month.  This kshetram is a special temple for worshipping the Lord on the various monthly Shivarathris as various Gods and Devas come for worship in this temple for the different months. The following is the schedule of monthly Shivarathris and devotees can accordingly plan their trip to this temple:


Month              Paksham             Thithi          Deity                    


Chithirai  Krishna             Ashtami     Parvathi


Vaikasi  Sukhla             Ashtami      Surya


Aani           Sukhla              Chaturdasi       Shiva


Aadi                  Krishna             Panchami        Murugan


Avani                Sukhla                Ashtami         Chandran


Puratasi              Sukhla            Trayodasi        Adiseshan


Aipasi          Sukhla              Dwadasi          Indra


Karthigai  Both        Sapthami,Ashtami     Saraswathi


Margazhi         Both                        Chaturdasi    Lakshmi                   


Thai                Shukla                     Trithiya          Nandi


Masi  Krishna                    Chaturdasi    Devas


Panguni          Shukla                     Trithiya          Kubera


The sthala puranam is connected with one of the Chozha Kings, Manu Needhi.  He was so famous that most of the old literature like Silapadikaram, Periapuranam, Pazhamozhi Nanooru, Rajarajachozhan Ula etc praise this king.  He was ruling from Tiruvarur.  Once when his son Veedhividangan took out the chariot, he accidentally killed a calf.  The aggrieved cow, rang the Justice Bell (Aaraychi Mani in Tamil) tied outside the palace.  When the King came to know about the incident, he asked his minister to ride the chariot over Veedhividangan.  When the Minister refused to kill the prince, the king committed the act himself.


Though he had done justice to the cow, he had incurred the Brahmahathi dosham for having killed a human being.  He visited Thiruveezhimizhlai to get rid of this sin.  There he was advised to approach this village and do penance and make gifts to eligible Brahmins.  The king constructed this Shiva temple and also performed a Yagna to propitiate the Lord.  He also took a vow to give gifts to 100 Vedic Scholars.  However, when the actual count was taken, only 98 were present.


The King was feeling miserable and prayed to the Lord again.  Vinayakar, on his behalf, requested the Lord of Thiruveezhimizhalai and Varadarajaperumal, to help the king.  The next day, Vinayakar in the form of a young boy,  holding their hands, accompanied both the Lords in the form of Brahmins to make up the number.  The pleased king gave away the Dhanams and the Lords, after accepting the dhanam, blessed him and disappeared.  Hence in this temple we find the Bala Vinyakar ( who brought Shiva and Vishnu from Thiruveezhimizhalai) apart from the Sthala Vinayakar and Perumal is present in an adjoining temple.  As the problem of Manuneedhi was resolved, the Lord is called Manunatheswarar.


Bhairavar also occupies an important role in this temple.  During Krishna Paksha Ashtami (waning moon period), performing Abhishekam to him with sugarcane juice, removes the misunderstandings within the family.  A special kind of deepam-pepper in pomegranate- is lit in this temple during the evening pooja on Tuesdays.  This helps in redeeming/reclaiming lost items.  


Thanks Saikrishnan


அருள்மிகு மனுநாதேஸ்வரர் திருக்கோயில், மருதவஞ்சேரி, பூந்தோட்டம் (வழி), நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.


இங்கு மகாசிவராத்திரி மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.


மேற்கு நோக்கிய சிவன் கோயில். இத்தலத்தை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு பார்த்த சிவாலயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.   


கருவறையில் மேற்கு நோக்கிய நிலையில் மகிழ்ச்சியை அருள்கின்ற மநுநாதேஸ்வரர் உள்ளார். கருவறைக்கு வெளியே தெற்குநோக்கி அம்பாள் மாணிக்க சிவகாம சுந்தரி அருள்புரிகிறாள்.


கருவறையில் மேற்கு நோக்கிய நிலையில் மகிழ்ச்சியை அருள்கின்ற மநுநாதேஸ்வரர் உள்ளார். கருவறைக்கு வெளியே தெற்குநோக்கி அம்பாள் மாணிக்க சிவகாம சுந்தரி அருள்புரி கிறாள். கிழக்கு நோக்கி தனிச்சன்னிதி கொண்டு பாலசுப்ரமணியர் (குமார சுப்ரமணியர்) அருள்புகிறார். கோஷ்டத்தில் துர்க்கை அருள்புரிகிறாள். ஈசான்யத்தில் சூரியன், பைரவர் சிலைகள் உள்ளன. சனீஸ்வரர் சன்னிதி உண்டு. நவகிரகங்கள் கிடையாது. அந்தணர் வேடத்தில் வரதராஜ பெருமாளும் யாகத்திற்கு வந்ததால், அதை நினைவு படுத்தும் வண்ணம் ஊரில் ஒரு பெருமாள் கோயிலும் உண்டு.  ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும்.


ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரி பெருமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்ன தாகவும், அவர் மற்றவர்களுக்குச் சொன்ன தாகவும் புராணக் குறிப்பு உண்டு அவை: சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி- உமாதேவியால் வழிபடப் பட்டது. வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி- சூரியனால் வழிபடப் பட்டது. ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி- ஈசனால் வழிபடப்பட்டது. ஆடி மாத தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி- முருகனால் வழிபடப் பட்டது. ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி- சந்திரனால் வழிபடப் பட்டது. புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரி- ஆதிசேஷனால் வழிபடப் பட்டது.ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி- இந்திரனால் வழிபடப் பட்டது.


கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி என இரண்டு சிவராத்திரிகள்- சரஸ்வதியால் வழிபடப் பட்டவை. மார்கழி மாதத்தின் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரிகள்- லட்சுமியால் வழிபடப் பட்டவை. தை மாத வளர்பிறை திரிதியை சிவராத்திரி- நந்திதேவர் வழிபட்டது. மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரி- தேவர்கள் வழிபட்டது. பங்குனி மாத வளர்பிறை திரிதியை சிவராத்திரி- குபேரனால் வழிபடப் பட்டது. திருவீழிமிழலை யிலிருந்து இறைவனைக் கைப்பிடித்து அழைத்து வந்த பிள்ளையார் நின்றகோலத்தில் காட்சி தருவதை கோயில் மகா மண்டபத்தில்  இன்றும் காணலாம்.


சேந்தனாராலும், திருப்புகழ்தந்த அருணகிரி நாதராலும் பாடல்பெற்ற தலம்- திருவீழிமிழலை தலபுராணத் தோடு நெருங்கிய தொடர்புடைய தலம்தான் மருதவஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி யிருக்கும் மநுநாதேஸ்வரர் திருக்கோயில். நீதிநெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாகக் கூறப் படுபவன் மநுநீதி சோழ மன்னன்.


மநுநீதி சோழனுக்கு வீதிவிடங்கன் என்ற அழகான ஒரு மகன் இருந்தான். தேரேறி வீதியுலா கிளம்பினான். அப்பொழுது அவனையே அறியாது அவனது தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்து விட்டது. இதைக்கண்ட தாய்ப்பசு அரண்மனை சென்று, ஆராய்ச்சி மணியின் கயிற்றை தனது வாயால் அடித்து நீதி கேட்டது. மன்னனும் பசுவின் பின்னால் சென்று பார்த்தபோது, வீதிவிடங்கன் வந்த பாதையில் பசுவின் கன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தான். 


பசுவின் துயரறிந்த மன்னன், தானும் தன் மகனை இழத்தலே தகுமென்று, மந்திரியிடம் இளவரசனைத் தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்திற்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் மகனைத் தானே தேரேற்றிக் கொன்றான் அவ்வாறு தன் மகனைத் தேரேற்றிக் கொன்ற பாவத்தால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அதிலிருந்து விடுபட சோழமன்னன் தென்திசை நாடி திருவீழிமிழலையை அடைந்து, அரிசில் நதியிலும் தீர்த்தப் புஷ்கரணியிலும் நீராடி, விதிப்படி இறைவனைப் பூஜித்தான்.


திருவீழிமிழலை யிலிருந்து ஈசன் வீழிநாதப் பெருமானும், வரதராஜபெருமாளும் அந்தணர் வடிவில் வந்தனர், சிறுவனாக வந்த விநாயகரும் மநுநீதி சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கி, குறைதீர்த்து மறைந் தருளினர்.


மநுநீதிசோழன் ஸ்தாபித்த லிங்கத்தை வைத்து பின்னாளில் கோயில் எழுப்பப் பட்டது. அதன்பின் பிற்காலச் சோழர்கள் வழிபட்டதாக ஸ்தலபுராணம் சொல்கிறது.


இக்கோயில் கும்பகோணத் திலிருந்து 30 கி.மீ தூரத்திலும், பூந்தோட்டத் திலிருந்து 5 கி.மீ தூரத்திலும், கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலுக்கு மேற்கே 4 கி.மீ தொலைவிலும் அமைந் துள்ளது.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி