Temple info -2056 Pandamangalam viswanathar temple,Uraiyur,Tiruchy பண்டமங்கலம் விஸ்வநாதர் கோயில்,உறையூர், திருச்சி

 Temple info -2056

கோயில் தகவல் -2056


🙏Pandamangalam Viswanathar Temple🙏

 

 Located at Pandamangalam next to Uraiyur in Trichy, the Vishwanathar Temple is one of the most blessed places for children.


 This very ancient temple is four kilometers away from Trichy Central Bus Stand.  Located towards the east, there is a small mandapam upon entering the temple.  After crossing it Nandikeswarar blesses.


 Inside the sanctum sanctorum, Kasi Viswanathar is worshiped towards the east and Ambalkasi Visalakshi towards the south.  The shrine goddess idol here is very small.  The height of Ambal is one and a quarter feet.


 Dakshinamurthy is worshiped in the south koshta of the sanctum and Durga is in the north.  The prakaram has Ganesha, Mahalakshmi, Murugan, Adi Visalakshi in the west, Chandikeshuvar in the north and Thirumeni of Navagraha in the north-east corner.


 The main tree of the temple is the Arasa maram.  The Arasa maram in front of the temple is said to be 300 years old.  The temple is 450 years old.


 During festivals, it is customary everywhere to entertain the Lord and Goddess by decorating them with various clothes.  But in this temple, on the last Friday of the month of Aadi, they decorate the Sagambari with vegetables in a wonderful way for Utsava Amman.  Devotees throng to see the scene.


 The tirtha of the temple is the river Kashi.  Special pujas are performed for Swami and Ambal on Navratri, Anniversary, Pradosha and other days.  On Shivratri, Swami and Amman are walking on the streets.


 It is the unshakable belief of the devotees here that if they go around the royal tree and pray to Ambal and Swami here, children will be born to the childless.


The temple is located at Pandamangalam, next to Varayur, 4 km from Trichy Central Bus Stand.  City bus facility and auto facilities are available.


 🌹*Lord Shani appearing in the form of a machine*🌹


 Appears in the form of Shivalinga.

 The name *Enthra Saneeswarar* came from being with Enthras.

 You will have seen Lord Shani, one of the Navgrahas, in the form of an idol.  He is depicted in the form of an engraved Shivlinga at Eerikuppam near Tiruvannamalai.  Many years ago, a small king who ruled the region wanted to build a temple for Saneeswarar here.


 On the basis of Lord Shani having the title of Ishvara, he consecrated the instruments, erected an idol in the pana form of Shivalingam, and erected a temple.  After many years the temple was destroyed and only the idol of Swami remained in the open.  Later, the devotees built a temple here where the Swami was.


 He got the name Enthra Saneeswarar because of his presence with Enthras.  Saneeswarar is depicted in a 2.5 feet wide and 6.5 feet high Shivlinga structure on a lotus pedestal in Moolasthan.  At the top of the idol are the sun and the moon like Shiva.  In the middle is the crow.


 At the center of the linga pan is a 'hexagonal device' in a hexagonal arrangement.  Namasivaya Shiva Mantra, Bijatshara Mantra and Lakshmi Kataksha Mantra are also engraved on this image.


🙏*பாண்டமங்கலம் விசுவநாதர் ஆலயம்*🙏


திருச்சியில் உள்ள உறையூரை அடுத்த பாண்டமங்கலத்தில் அமைந்திருக்கும் விசுவநாதர் ஆலயம் குழந்தை பாக்கியத்தை அருளும் தலங்களில் ஒன்றாகும்.


மிகவும் பழமையான இந்த ஆலயம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் சிறு மண்டபம் உள்ளது. அதைத் தாண்டியதும் நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.


உள்ளே கருவறையில் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கியும், அம்பாள்காசி விசாலாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள கருவறை அம்மன் சிலை மிகவும் சிறியது. அம்பாளின் உயரம் ஒன்றேகால் அடி என்பது இங்கு குறிப்பிடக் கூடிய விசேஷம்.


கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் மேற்கில் விநாயகர், மகாலட்சுமி, முருகன், ஆதி விசாலாட்சியும், வடக்கில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு மூலையில்       நவக்கிரகங்களின் திருமேனிகளும் உள்ளன.


கோவிலின் தலவிருட்சம் அரசமரம். கோவிலின் முன் உள்ள அரசமரம் 300 ஆண்டுகளைத் தாண்டியமரம் என்று சொல்கின்றனர். கோவில் 450 ஆண்டுகள் பழமையானது. 


திருவிழாக்காலங்களில் இறைவனையும், இறைவியையும் விதவிதமான உடைகளால் அலங்காரம் செய்து மகிழ்வது எங்கும் பழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் உற்சவ அம்மனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று காய்கறிகளால் அற்புதமாக சாகம்பரி அலங்காரம் செய்வார்கள். அந்த காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.


கோவிலின் தீர்த்தம் காசி விளங்கி நதி. நவராத்திரி, ஆண்டுப் பிறப்பு, பிரதோஷம் மற்றும் ஏனைய நாட்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவதுண்டு.


அரச மரத்தை சுற்றி வந்து, இங்குள்ள அம்பாளையும் சுவாமியையும் விளக்கேற்றி வேண்டினால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு  குழந்தை பிறக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.


திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். நகரப்பேருந்து வசதி மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.


🌹*எந்திர வடிவில் காட்சி தரும் சனி பகவான்*🌹


சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.

எந்திரங்களுடன் இருப்பதால் *எந்திர சனீஸ்வரர்* என்ற பெயர் ஏற்பட்டது.

நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் எந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோவில் எழுப்ப விரும்பினார்.


சனிபகவான், ஈஸ்வர பட்டம் பெற்றவர் என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோவில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோவில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோவில் எழுப்பினர்.


எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது.


லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள `ஷட்கோண எந்திரம்' உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்ஷர மந்திரம், லட்சுமி கடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி