Temple info -2053 Sornabhairava Swamy Temple,Trichy சொர்ணபைரவ ஸ்வாமி கோயில்,திருச்சி

 Temple info -2053

கோயில் தகவல் -2053



🌹Sri Sornabhairavanatha Swami (Trichy):-🌹


 The century-old Sri Sorna Bairavanatha Swamy Temple is located on Trichy's Periya Kadaiveedi.  As Kalabhairava resides in this temple, it has been a special place for Kalabhairava.  People worship this temple as the Kashi of Trichy as it is believed to be as powerful as Kalabhairava, who sits overlooking the Ganga at Kashi, the holy place in the north.


 Earlier this temple was worshiped only by the devotees of this area and the surrounding areas of Trichy, but now the temple is thronged by celebrities.  It is believed that if you come to this temple on theypirai ashtami days and worship Bhairava by lighting a pepper lamp, perform special pujas and homams, your fear will be removed, your life will be prolonged, your enemies will disappear, and those in power and authority will regain their lost position.


 Recently the temple has attracted the attention of celebrities from the political and ruling class as it is believed to retain its status.


 Devotees of Shri Sornabhairava say that the reason for the specialness of this temple is that the political celebrities who lost their positions have regained their positions after coming to this temple and performing puja on the Teipirai Ashtami days.


🌹ஶ்ரீ சொர்ணபைரவநாத ஸ்வாமி (திருச்சி):-🌹


திருச்சி பெரிய கடைவீதியில் நூற்றாண்டு பழமைமிக்க ஸ்ரீ சொர்ண பைரவநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக காலபைரவர் வீற்றிருப்பதால் இது காலபைரவருக்கான தனி ஸ்தலமாக இருந்து வருகிறது. வடக்கே புனித ஸ்தலமான காசியில் கங்கையைப் பார்த்தபடி வீற்றிருக்கும் காலபைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக நம்பப்படுவதால் இந்த கோவிலை மக்கள் திருச்சியின்−காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள்.


முன்பெல்லாம் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் திருச்சியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வந்த இந்த கோவில் தற்போது பிரபலங்களின் வருகையால் திக்குமுக்காடி வருகிறது. #தேய்பிறை_அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்திற்கு வந்து பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலும், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தி வழிபட்டாலும் எம பயம் நீங்கும், ஆயுள் நீடிக்கும், எதிரிகள் துவம்சம் ஆகி விடுவார்கள், ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கையாய் இருக்கிறது.


இருக்கும் பதவியை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ளலாம் என நம்பப்படுவதால் சமீபத்தில் இந்த கோவிலுக்கு அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள பிரபலங்களின் பார்வை இந்த கோவிலின் பக்கம் திரும்பியுள்ளது. 


தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து பூஜை நடத்தியதால் பதவியை இழந்த அரசியல் பிரபலங்கள் மீண்டும் பதவியைப் பெற்றிருப்பதே இந்த கோவிலின் சிறப்புக்கு காரணம் என்கிறார்கள் ஶ்ரீ சொர்ணபைரவரின் பக்தர்கள்.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி