Temple info -1957 Thenparakundram Cave Temple, Madurai தென்பரக்குன்றம் குடவரை கோயில், மதுரை
Temple info -1957
கோயில் தகவல் -1957
Ardhanareeswarar, Thenparankundram, Madurai
Basic information about the temple
Moolavar: Ardhanaresswarar Ambal / Thayar: x
Temple Group
Cave temples
City / town: Tiruparankundram District: Madurai
Current location Sivaganga (5 km) Madurai (8 km)
Virudhunagar (42 km) Dindigul (67 km)
Location
This temple is located on the southern side of the Tiruparankundram hill, which is referred to as Thenparankundram. Tiruparankundram is the site of the Satya Gireeswarar temple (a Paadal Petra Sthalam), and is equally famous as one of six Arupadai Veedu temples of Murugan. In addition, the hillock has another temple on the south-eastern side (Palsunai Sivan) as well as a Kasi Viswanathar shrine on top.
Originally a Jain temple site, this place was converted into a cave temple for Siva during the time of Maravarman Sundara Pandyan, around 1250 CE. However, soon after – in the early 14th century – this place was destroyed by the Islamic forces of Alauddin Khilji, led by Malik Kafur. In 1910, the Archaeological Survey of India took up this temple for maintenance, and the temple has been under ASI control since that time.
In the garbhagriham inside the cave temple, Siva is depicted as Ardhanareeswarar, with Parvati occupying the left side of Siva’s body. There are also bas reliefs and murtis of other deities, including Natarajar and Sivakami Amman, and Murugan with Valli and Deivanai. Beside Natarajar is a small murti of Karaikal Ammaiyar. Vinayakar is depicted as Heramba Ganapati. There are also images and murtis of the Tevaram moovar (Appar, Sambandar and Sundarar) as well as Manikkavasagar. On the western rock slope is a bas relief of Vinayakar and a sage, while on the east, is a sculpture of Bhairavar.
There are also inscriptions here, from the time of Sundara Pandian, referring to him as Cholanaadu Vazhangiya Sundara Pandiyan (referring to his gift of the Chola kingdom back to Rajadhiraja Chola, the son of Kulothunga Chola III whom he had conquered). Another inscription refers to this place as a tax office (Puravu Varithinaikalam).
The original Jain heritage of this place is evident from the lotus medallion inscribed on the pillars, which depicts the universe / cosmos in Jain philosophy.
##தென்பரங்குன்றம் கோயில் /
உமையாண்டார் கோயில்/ சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில்##
முற்கால பாண்டியர் கால குடைவரை கோயில் .கிட்டத்தட்ட 1400 வருடங்கள் பழமையான கோயில். 15 முதல் 20 அடி உயர நீள அகலம் கொண்ட குடைவரைக் கோயிலாகும்.
*கோயில் அமைப்பு*
கிழக்கு பார்த்த சதுர கருவறையுடன் செவ்வக வடிவ முக மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அரைத்தூண்கள் மற்றும் இரண்டு முழு தூண்கள் ,சதுரம், 8பட்டை சதுரம் என்ற அமைப்புடன் சதுரத்தில் மலர்ந்த தாமரை வடிவ பொறிப்புடன் காணப்படுகிறது. குடைவரையின் முன்புற வெளிப்புறத்தில் உருளைவடிவான அதிஷ்டானப்பகுதி வெட்டப்பட்டுள்ளது. மேலும் முக மண்டபத்தில் இரண்டு தூண்கள் இருந்ததற்கான தடயங்கள் சிதைந்த நிலை தரங்கப் போதிகைகளுடன் தெரிகின்றது.
*சிற்பங்கள்*
கிழக்கு பார்த்த கருவறையில் புடைப்பு சிற்பமாக அர்த்தநாரீஸ்வரர் நின்ற நிலையில் காளை வாகனத்துடன் தலைக்குமேல் கொடிகருக்குடன் வடிவமைக்கப்பட்டு உள்ளார். முகமண்டபத்தின் மையத்தில் தெற்கு பார்த்து நடராஜர் சிற்பமானது அதன் இடுப்பிற்கு கீழ் பாகம் முழுவதும் இல்லாமல் காணப்படுகிறது. அவரின் வலது புறத்தில் தலையின் பக்கவாட்டில் ஐந்து தலைகள், பத்து கரங்கள் கொண்ட விநாயகர் சிம்ம வாகனத்தில் அரை அடி உயரத்தில் அமர்ந்தவாறு காட்டப்பட்டுள்ளார். இவரை சுற்றி ஏழு சிறு விநாயகர்கள் இருக்குமாறு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது .
நடராஜர் தலையின் இடது பக்கவாட்டில் மயில் மீது அமர்ந்த அரையடி உயர ஆறுமுகக் கடவுளும் உள்ளார். நடராஜரின் அருகே நின்ற நிலையில் ஆண் சிற்பம் ஒன்றும் இரண்டு பக்கங்களிலும் பெண் சிற்பங்கள் கொண்ட சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து சிற்பங்களும் புடைப்பு சிற்பமாக காணப்படுகின்றன. வெளிப்புறச் சுவரின் ஒரு பக்கத்தில் புடைப்பு சிற்பமாக அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், பைரவரும் மறுபக்கத்தில் விநாயகர், ரெண்டு முனிவர்களின் சிற்பமும் உள்ளன. வெளிப்புற மேல் முகப்பு பக்கத்தில் மழைநீர் புகாத வண்ணம் புருவவரி போன்று வெட்டப்பட்டுள்ளது.
*கல்வெட்டுக்கள்*
குடைவரைக் கோயிலின் முக மண்டபத்தில் கிழக்குப் பக்கத்து சுவரானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பத்தியில் 52 வரிகளும் இரண்டாவது பத்தியில் எழுபத்தி ஏழு வரிகளும் கொண்ட தமிழ் கல்வெட்டு என மொத்தம் 129 வரிகள் உள்ளன . அதிலுள்ள செய்தியின் சுருக்கம்
கிபி 1216 -1232 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பிரசன்னா தேவர் என்ற சைவத் துறவி இந்த கோயிலை சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் எனவும் இக்கோயிலை பராமரிப்பதற்காக புளிங்குன்றூர் என்னும் கிராமம் தானம் செய்யப்பட்டதாகவும், பாண்டியர் சோழரை வென்று எல்லையை விரிவுபடுத்தப்பட்ட செய்தியும் காணப்படுகிறது.
இக்குடைவரை கோயிலானது 1958 முதல் இந்திய தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ் உள்ளது. குடைவரைக் கோயிலில் உள்ள கல்வெட்டு செய்தியானது தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 4ல் காணப்படுகிறது.
கோயில் கட்டடக்கலை அமைப்பை வைத்துப் பார்க்கும் பொழுது இக்குடைவரை கோயிலானது, முற்காலப் பாண்டியர்கள், குடைவரைக் கோயிலை எடுக்கும் முன்பாக, இந்த குடைவரையை சோதனை முறையில் கட்டிப்பார்த்தார்கள் என கட்டடக்கலை கூறுகள் காட்டுகிறது
*இருப்பிடம்*
மதுரை அறுபடைவீடு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் பின்பக்கத்தில் தென்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது.
Comments
Post a Comment