Temple info -1923 Gangadeeswara Temple, Thakkolam, Arakkonam கங்காதீஸ்வரர் கோயில் , தக்கோலம், அரக்கோணம்
Temple info -1923
கோயில் தகவல் -1923
**Gangatheeswara comes to remove the hardships*
There is a 1300 year old ``Arulmiku Mohana Valli Sametha Gangathees Varar'' temple at Thakolam Perur, Arakkonam District, Ranippet District. Among the 32 Sivasthalams in Thondai Mandalam, it is the 12th shrine to have been chanted by Thirugnana Sambandha Peruman.
In this town, north of JalanatheeswararTemple, which is a famous healing place of Guru Bhagavan, this temple is situated on the bank of the river. It is a wonderful temple with a wonderful architectural structure that falls on the bank of the lake.
Historians say that this temple is the reason for naming the town as 'Thiruvural', the original name of the town. The temple has a wonderful structure that leads to the sanctum sanctorum, past the tirtha pool and the southern entrance which is only in Parikara Sthala. Therefore, spiritual experts say that this temple is a powerful healing place that removes Pitru Dosha and cures the curses of many diseases.
Located in this temple is the Gangathees Varar, a square-shaped Audaiyar, and a Shiva Lingam consecrated by the sage. Ambal is Chaturpuja, who appears on the right hand side of the Lord, prayed for the grace of Lord Shiva and she married the Lord after doing penance.
Another special feature of this temple is that it is a place of water, i.e. ``Apu Sthala'' among Panchaboothangals. At present, the work of worship is going on in this temple. Very soon, the Shivanadiyars and the common people of the village are going to conduct the Kudamuzku Nannieratu festival together. All the devotees participate in this and receive Lord Shiva.
*கஷ்டங்களை போக்கி அருளும் கங்காதீஸ் வரர்*
ராணிப் பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலம் பேரூர் என்னும் இடத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான `அருள்மிகு மோகன வல்லி சமேத கங்காதீஸ் வரர்’ ஆலயம் உள்ளது. தொண்டை மண்டலத்தில் பாடல் பெற்ற 32 சிவஸ்தலங் களில், 12-வது திருத்தலமாக, திருஞான சம்பந்த பெருமானால் பாடல் பெற்ற திருத்தலம்.
இந்த ஊரில், பிரசித்தி பெற்ற குருபகவான் பரிகார ஸ்தலமான, ஜலநாதீஸ்வர் ஆலயத்தின் வடக்கே, ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் தானாக நீர்ஊற் றெடுத்து நந்தி வாயில் அந்நீர் பெருக் கெடுத்து, சிவபெரு மானை வழிபட்டு, குளக்கரையில் விழுகின்ற அற்புத கட்டிட கலை அமைப்பு கொண்ட அதிசய கோயிலாகும்.
இந்த ஊரின் இயற் பெயரான `திருவூறல்’ என பெயரிட இக்கோயிலே காரணமாகும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர். பரிகார ஸ்தலத்தில் மட்டுமே உள்ள தெற்கு நுழைவாயில், தீர்த்த குளத்தை தாண்டி கருவறைக்கு செல்லுகின்ற அற்புத அமைப்பு இக் கோயிலில் உள்ளது. அதனால், இந்த கோயில் பித்ரு தோஷம் நீக்குகின்ற, பெருநோய் சாபங்கள் நிவர்த்தி செய்கின்ற சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம் என ஆன்மிக சான்றோர்கள் தெரிவிக் கின்றனர்.
இந்த கோயிலில் அமைந்துள்ள கங்காதீஸ் வரர், சதுர வடிவான ஆவுடையார் என்பதும், முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் எனவும் கூறுவர். அம்பாள், இறைவனின் வலது புறத்தில் சதுர்புஜ அன்னையாக காட்சியளித்து, சிவபெரு மானின் அருள் வேண்டி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்துக் கொண்ட இடமாக இருப்பது மேலும் இங்கு விசேஷமாகும்.
பஞ்சபூதங் களில் நீர் ஸ்தலமாக, அதாவது `அப்பு ஸ்தலமாக’ இந்த கோயில் இருப்பது மற்றுமொரு விசேஷமாகும். தற்போது இந்த ஆலயத்தில், திருப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிக விரைவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை சிவனடியார் களும், கிராம பொது மக்களும் ஒன்று சேர்ந்து நடத்திட உள்ளார்கள். பக்தர்கள் அனைவரும் இதில் கலந்துக் கொண்டு, சிவனருள் பெறுங்கள்.
Comments
Post a Comment