Temple info -1919. Ilangudi Sivan koil, Sivagangai. இலங்குடி சிவன் கோயில், சிவகங்கை
Temple info -1919
கோயில் தகவல் -1919
Ilangudi Sivan Koil
Liquid flowing like blood.... Miraculous Nandi!
🔔Generally we have seen Nandi in every Shiva temple. But the Shiva temple in the Sivagangai Ilangudi village has a miraculous Nandi statue with a slightly different specialty.
🔔Yes, what is so special is that a strange blood-like liquid has been flowing from the mouth of this Nandi for hundreds of years.
🔔A village called 'Ilangudi' is on the way to Tiruppathur from Alangudi in Sivagangai district and Karaikudi circle. A liquid is always oozing from the mouth of the Nandi idol erected outside a Shiva temple in this village many years ago.
🔔This liquid looks rich like oil. The fragrance is also oil-like. The silk robe worn by the idol is also soaked with this continuous flow of liquid. Devotees hold this liquid on their foreheads as an offering.
🔔The scholars who researched this Nandi statue were shocked as to how this was possible. Even if the Nandi statue was moved a step away from that place, it was still bleeding.
🔔The people of that town say that they farm by trusting the liquid secretion of the idol as their time clock. It is believed that if the idol oozes a lot of liquid, agriculture will be prosperous.
🔔Even though there are so many stone idols, no one has been able to find out how the liquid flows from that particular Nandi idol only.
ரத்தம் போல் வழியும் திரவம்.... அதிசய நந்தி !
🔔பொதுவாக எல்லா சிவன் கோவிலிலும் நந்தி இருப்பதை பார்த்திருப்போம். ஆனால்இ சிவகங்கை இலங்குடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் சற்றே வித்தியாசமான சிறப்பு வாய்ந்த ஒரு அதிசய நந்தி சிலை உள்ளது.
🔔ஆம்இ அப்படி என்ன சிறப்பு என்றால்இ பல நூறு ஆண்டுகளாக இந்த நந்தியின் வாயில் இருந்து வித்தியாசமான ரத்தம் போன்ற திரவம் வழிந்தபடியே உள்ளது.
🔔சிவகங்கை மாவட்டம்இ காரைக்குடி வட்டம்இ ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி' என்ற கிராமம். பல ஆண்டு காலத்திற்கு முன்பாக இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நந்தி சிலையின் வாய்பகுதியில் இருந்து ஒரு திரவம் எப்பொழுதுமே சுரந்து கொண்டே இருக்கிறது.
🔔இந்த திரவம் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று வளவளப்பாக உள்ளது. நறுமணமும் எண்ணெய் போன்றே உள்ளது. தொடர்ந்து வழிந்து கொண்டே இருக்கும் இந்த திரவத்தால் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பட்டு ஆடையும் நனைந்தபடியே உள்ளது. பக்தர்கள் இந்த திரவத்தை பிரசாதமாக நெற்றியில் இட்டுக்கொள்கின்றனர்.
🔔இந்த நந்தி சிலையை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தனர். அந்த நந்தி சிலையை அந்த இடத்தில் இருந்து ஒரு அடி நகர்த்தி வைத்தும் ரத்தம் வடிந்தே படியே தான் இருந்தது.
🔔அந்த ஊர் மக்கள்இ சிலையின் திரவ சுரப்பையே தங்கள் கால கடிகாரமாக நம்பி விவசாயம் செய்வதாக கூறுகிறார்கள். சிலையில் திரவம் அதிகமாக சுரந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர்.
🔔அங்கு எத்தனையோ கற்சிலைகள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட நந்தி சிலையில் இருந்து மட்டும் எப்படி அந்த திரவம் வழிகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
Comments
Post a Comment