Temple info -1915. Kalyana Varadaraja Perumal temple, Thiruvottiyur, Chennai. கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், திருவொற்றியூர், சென்னை
Temple info -1915
கோயில் தகவல் -1915
Kalyana Varadaraja Perumal Temple,Thiruvottiyur
Overview
The Kalyana Varadaraja Perumal Temple is located in Kaladipettai and is dedicated to God Kalyaana Varadaraja Perumal.
About the temple
Kalyanavaradarajaperumal Temple
The Prime God here is believed to grant wedding boons to and hence the name Kalyaana Vardaraja Perumal. Devotees here believe that offering of unstrapped coconuts to the God during the wedding festival and then taking it home to offer pooja would immediately remove any hindrance from their wedding proposals. The shrine on the left of the God is graced by Mother Perundevi.
The vehicle of the God's shrine is of Tridala design. God Sri Rama, Mother Sri Andal, Sri Anjaneya and Sri Chakarathalwar grace from different shrines.
About the Deity
Kalyanavaradarajaperumal Temple
Mother Perundevi graces from a shrine left that of the Lord. There is a separate shrine for Navagrahas-nine planets. All the planets are installed on a stage designed as lotus petal.
Legend and stories
Legend has it that Vijayaraghavachariar, a staunch Vishnu devotee was working for an English administrative officer, Colat Durai, of this region. He would begin his everyday work only after praying to God Pavalavanna Perumal in Kancheepuram. As he had to travel a long distance every day the officer erected a temple for him. But Vijayaraghavachariar continued his trip to Kancheepuram. When Colat asked him the reason for this Vijayaraghavachariar said that he was attracted by the beauty of the procession deity there. Colat at once ordered for the deity to be brought to this temple. The God then told his devotee that He did not differ in appearance and he lived in the hearts of His devotees. From then on, Vijayaraghavachariar offered his services to the God throughout his life. The Vimana of the God's shrine is of the Tridala design. Gopuja – cow puja is perfomed daily before the shrine of the God. God Sri Rama, Mother Sri Andal, Sri Anjaneya and Sri Chakarathalwar- the deity of the discus of the God, all grace the temple from separate shrines in the temple.
Festivals
Kalyanavaradarajaperumal Temple
Theerthavari festival is celebrated in Vaikasi-May-June. The temple is situated so centrally that the devotees can also conveniently visit the Thyagaraja temple, North faced God Dakshinamurthy temple and Pattinathar temple. A devotee cannot afford to miss these temples. Procession deity Pavalavanna Perumal of the temple enjoys special reputation in the temple with a staff in His left hand. The wedding festival is celebrated on the Panguni Uthiram day. He comes to the Mandap with Mothers Sridevi and Bhoodevi before the Mother Perundevi shrine where the festival is celebrated. Throughout the day Perumal grants darshan with Mother. After special Tirumanjanam, He returns to the sanctum sanctorum. During the wedding festival, those facing wedding problems offer UN-stripped coconut as nivedhana, take it home and do pujas in the faith that their wedding would soon happen. As Perumal grants wedding boon, He is praised as Kalyana Varadaraja Perumal – Wedding Boon Perumal. A 9-day festival in connection with Sri Rama Navami (God Sri Rama's birth day) is celebrated in the temple. As this is celebrated after the birth of Sri Rama, this is called Janana Utsav. In this temple, this festival begins 9 days earlier and ends on Navami the birth day of the God, hence called Garpa Utsav – Utsav when the God was in Mother Kausalya's womb. The coronation of Sri Rama is celebrated on this day. Earlier, it was an 18 day Garba and Birth Utsav covering both the periods. Now, only the Garba Utsav only is celebrated.
The Kumbabhishekam of the temple took place on 20.08.2023
Accessibility
Nearest Major Town/City
Chennai - 17 Km from Chennai to Thiruvottiyur.
Rail
Thiruvottriyur has two railway stations one at thiruvottriyur and the other at wimco nagar.
Air
The nearest airport is Chennai International Airport.
Address
Sri Kalyana Varadaraja Perumal Temple,
Kaladipettai,
Chennai – 600 019.
Significance
Devotees visit this temple to seek fulfillment of the following:-
Family prosperity and happiness Hindrance in wedding proposals is removed
Shlokas
Achutham Keyshavam Rama Narayanam Krishna Damodaram Vasudevam Harim Shridharam Madhavam Gopika Vallabham Janaki Nayakam Ramachandram Bhajey
Meaning -Oh Lord who cannot be perished, who also has names like Keshava, Rama, Damodara, Narayana, Sridhara, Madhava, Krishna, Ramachandra the beloved of Janaki, let me say your name regularly.
Vasudeva Sutham Devam Kamsa Chanoora Mardhanam Devaki Paramanandham Krishnam Vande Jagathgurum
Meaning -I bow to you O Krishna, the ultimate guru, Devaki and Vasudeva's son, and the destroyer of Kamsa and Chanur.
Adharam Madhuram Vadanam Madhuram Nayanam Madhuram Hasitam Madhuram Hridayam Madhuram Gamanam Madhuram Mathuraa Dhipate Rakhilam Madhuram
Meaning -Meaning - Sweet are Your lips, sweet is Your face, sweet are Your eyes, sweet is Your smile, sweet is Your heart, sweet is Your gait, O Lord of Mathura, everything about You is sweet.
Alokya Mathur Mukha Madarena Sthanyam Pibantham Saraseeruhaksham Sachinmayam Devam Anantha Roopam Balam Mukundam Manasa Smarami
Meaning -I think of this Balamukundan as the one who looks lovingly at his mother's face while taking milk from her, who has eyes similar to the red lotus, who is the embodiment of truth and intelligence and other forms.
Timings
The temple is open from 7.00 a.m. to 11.00 a.m. and from 5.00 p.m. to 8.30 p.m
அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.
+91- 99401 73559
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்
கல்யாண வரதராஜர்
உற்சவர்
பவளவண்ணர்
தாயார்
பெருந்தேவி
தல விருட்சம்
மகிழம்
ஆகமம்
வைகானசம்
பழமை
500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்
பத்மபுரம்
ஊர்
காலடிப்பேட்டை
மாவட்டம்
சென்னை
மாநிலம்
தமிழ்நாடு
முற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கோலட்துரை என்பவர் இப்பகுதியை நிர்வகித்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்னும் பெருமாள் பக்தர் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார். தினமும் காஞ்சிபுரத்திலுள்ள பவளவண்ணப்பெருமாளைத் தரிசிப்பது இவரதுவழக்கம். பவளவண்ணரை வணங்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டார். இவ்வாறு விஜயராகவர் தொடர்ந்து காஞ்சிபுரம் சென்றுவரவே, அவருக்காக கோலட்துரை இங்கு ஒரு பெருமாள் கட்டித் தந்தார். விஜயராகவர் இந்த பெருமாளை வணங்கி வந்தார். ஆனாலும், அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. மீண்டும் அவர் காஞ்சிபுரம் சென்றார். பவளவண்ணரை தரிசித்து இருப்பிடம் திரும்பினார். கோலட்துரை விசாரித்தபோது, விஜயராகவர் பவளவண்ணர் கோயிலின் உற்சவர் அழகில் மயங்கி, தினமும் காஞ்சிபுரம் செல்வதை அறிந்தார். எனவே, அத்தலத்திலுள்ள உற்சவரை இங்கு கொண்டு வந்தார். விஜயராகவர் சுவாமியை வணங்கினார். சுவாமி அவருக்கு காட்சி தந்து, “எனக்கு, திருமேனியில் எந்த வித்தியாசமும் கிடையாது. என்னை நினைக்கும் பக்தர்களின் உள்ளங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்” என்றார். உண்மை உணர்ந்த விஜயராகவாச்சாரியார் தன் வாழ்நாள் முழுதும் இத்தலப் பெருமாளுக்கு சேவை செய்தார். இவ்வாறு பக்தருக்காக, பெருமாள் காட்சி தந்த தலம் இது. இங்கு சுவாமி வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள உற்சவர் பவளவண்ணப்பெருமாள் பிரசித்தி பெற்றவர். இவர் இடது கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் உற்சவர் பவளவண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அப்போது பவளவண்ணருக்கும், பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று முழுதும் பெருமாள், தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கும். மறுநாள் காலையில் இவர் மீண்டும் மூலஸ்தானம் திரும்புகிறார். திருக்கல்யாணத் தின்போது திருமணமாகாதவர்கள் சுவாமிக்கு மட்டைத்தேங்காய் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். பின்பு இந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து வணங்குகிறார்கள். இவ்வாறு செய்வதால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. திருமண வரம் அருளும் பெருமாள் என்பதால் இவருக்கு, “கல்யாண வரதராஜப்பெருமாள்” என்ற பெயரும் உண்டு.
இராமநவமியை ஒட்டி இங்கு 9 நாட்கள் விழா நடக்கிறது. பெரும்பாலான கோயில்களில் இவ்விழா, நவமியில் துவங்கி 9 நாட்கள் வரையில் நடக்கும். இராமர் பிறந்த பின்பு கொண்டாடப்படும் விழா என்பதால் இதனை, “ஜனன உற்சவம்” என்பர். ஆனால் இத்தலத்தில், இராமர் பிறந்த தினத்திற்கு முன்பாக விழா துவங்கி, நவமியன்று விழா முடிகிறது. இதனை இராமர் பிறக்கும் முன்பு கர்ப்பத்தில் இருக்கும்போது, எடுக்கப்படும் விழாவாக கருதுவதால், “கர்ப்ப உற்சவம்” என்றே அழைக்கப் படுகிறது. நவமியன்று, இராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் நடக்கிறது. முற்காலத்தில் இங்கு “கர்ப்ப உற்சவம், ஜனன உற்சவம்” என மொத்தம் 18 நாட்கள் விழா நடந்தது. தற்போது கர்ப்ப உற்சவம் மட்டும் 9 நாட்கள் நடக்கிறது.
இக்கோயிலின் கும்பாபிஷேகம் 20.08.2023 அன்று நடை பெற்றது.
இங்கு திரிதள விமானம் உள்ளது. தினமும் காலையில் சுவாமி சன்னதி முன்பு கோமாதா பூஜை நடக்கிறது. இராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். வைகாசியில் தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. அப்போது சக்கரத்தாழ்வார் தீர்த்த நீராடுகிறார். இத்தலத்திற்கு செல்பவர்கள் இங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமியையும் தரிசித்து திரும்பலாம். வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி கோயில், சிவனருள் பெற்று முக்தியடைந்த பட்டினத்தார் கோயிலும் இவ்வூரில் பார்க்க வேண்டிய தலங்களாகும்.
தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலதுபுறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஒரு தாமரையின் மீதுள்ள பீடத்தின் மீது அனைத்து கிரகங்களும் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
திருவிழா:
சித்திரையில் ராமானுஜர் விழா 10 நாள், வைகாசியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, மாசிமகம், பங்குனி உத்ரம், ராமநவமி.
கோரிக்கைகள்:
கல்யாண வரதராஜரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
Comments
Post a Comment