Temple info -1874. Moolanathaswamy Temple, Bahour, Pondicherry மூல நாத சுவாமி கோயில், பஹோர், பாண்டிச்சேரி

 Temple info -1874

கோயில் தகவல் -1874



Moolanathaswamy Temple, Bahour, Puducherry


Moolanathaswamy Temple is a Hindu Temple dedicated to Lord Shiva located in Bahour Commune in Union Territory of Puducherry, India. It is situated in the heart of Bahour Town. Presiding Deity is called as Moolanatha Swamy / Thiru Moolasthanam Udaiyar and Mother is called as Vedhambigai. The Temple was believed to be built during 6th – 7th Century A.D. by Pallavas and later got converted to granite construction during Chola Period. This Temple is one of the protected monuments in Puducherry declared by Archaeological Survey of India and is maintained by ASI.


Legends

Once, Chola King Parantaka Chola I wife was suffering from skin disease. She prayed to Moolanathar for relief from skin disease. Lord Moolanathar appeared in her dreams and instructed her to install and Thirushobanamudaiyar on the left side of the sanctum. Further, Lord Shiva instructed her to worship Thirushobanamudaiyar continuously to get rid of the disease. She followed the instruction without fail. As a result, she got relieved from the disease. Parantaka Chola 1 converted the brick structure to granite structure as a gratitude on insistence of the queen.


History


Names of the Village & Deity:


The ancient name of this village as given in the inscriptions was Vagur, located in the territorial division called Vahur Nadu and the deity enshrined in the main sanctum now worshipped as Moolanathaswamy was once known as Moolasthanam Udaiya Perumanadigal and Parameswara. The village was called as Azhagiya Chola Chathur Vedhi Mangalam during Chola Period.

Pallavas:

The Temple was believed to be built during 6th – 7th Century A.D. by Pallavas. Narasimha Pallava, Nandi Varma Pallava, Nripatunga Varma Pallava and other Pallava Kings also contributed towards the renovation of the Temple.

Copper Plate Inscriptions:

One of the greatest discoveries at Bahour was a copper-plate inscription, close to this temple in the middle of a structure of bricks in 1879. It belongs to the eighth year of the reign of Nripatunga Varman, one the last Pallava emperors of Kanchipuram. This bilingual record, dated 877 A.D., consists of two portions, the first in Sanskrit etched in the Grantha script and the second in Tamil and in the Tamil script of the Pallava times.

This interesting inscription mentions an educational endowment made to a college of learning called Vidyasthana in Vahur. The donation, made by the king’s Minister called Marthandan or Nilaithangi, consisted of three villages, the income from which was to be enjoyed by the residents of the seat of learning at Vahur.


The copper plates record that this exceptional centre of education had as its curriculum, the fourteen branches of learning (chaturdashavidya) which included the four Vedas, six Vedangas, Mimamsa, Nyaya, Dharma Sastra and Puranas. This very detailed inscription mentions that the poet Nagaya who composed the Sanskrit verses was an employee of the Bahour college and the person who wrote it on copper sheets was a goldsmith named Nripatunga after the Pallava emperor.

Rashtrakuta King Krishna III


 Inscriptions:

There are six inscriptions belonged to Rashtrakuta King Krishna III, also known as Kannaradeva of the 10th Century A.D., one of greatest monarch of the Rashtrakuta Dynasty of Manyakheta. This king invaded the Chola territory and defeated the Chola army decisively in the 10th century and thus his inscriptions are seen in many temples in Tamil Nadu. All the inscriptions were dated from his 22nd to his 27th years (three of his inscriptions belonged to 22nd regnal year, one of his inscriptions belonged to 26th year and two of his inscriptions belonged to 27th year).

One of his 26th year inscription mentions a gift of four stone-slabs towards the construction of a tier of this temple by one Naminakkan Sankaran. It may be concluded that the temple converted into granite temple and was nearing completion about this time. Hence it should be considered a temple built in the latter part of the 10th century, the period of Parantaka I and Krishna III.

Chola Inscriptions:

The Temple contains inscriptions dated Parantaka Chola I (9th Century A.D.). This inscription records about the renovation works carried out by Parantaka Chola I. The Temple was extensively supported by successive Chola monarchs like Sundara Chola, Rajaraja Chola I and Rajendra Chola I. The name Vahur got changed to Sri Alagiya Chola Chaturvedimangalam, from the 25th year of Rajaraja Chola I.

There are Chola inscriptions here dates back to the period of Aditya Chola II, the elder brother of Rajaraja I of the 10th century A.D. It is dated back to fifth regnal year of Kop-Parakesari “who took the head of the Pandya” i.e. Aditya II. It records the gift of a perpetual lamp by Nambi Damodaran. Most of the inscriptions record various gifts to this temple and one donation was earmarked for annual repairs to be carried out in the tank at Vahur.


The Temple


The Temple is east facing with a 4 pillared Mandapam as the front entrance. The Temple has single prakaram. Nandi, Dwajastambam and Balipeedam can be found immediately after the entrance.


Sanctum:

The Sanctum Sanctorum consists of Maha Mandapam, Artha Mandapam and Sanctum. Presiding Deity is called as Moolanatha Swamy / Thiru Moolasthanam Udaiyar and is facing east. He is housed in the sanctum in the form of big Lingam. Sculptures of uniquely carved Yalis can be found in the Artha Mandapam.


The pilasters have a square shaft with Kalasam, Kumbham and Palagai. The brackets are angular in profile. The cornice has Kudus semicircular in shape with a human head in the center and a Simha head at the top. There is a Bhootaganas frieze below the cornice. Sacred bulls adorn the four corners of the floor of the griva.

Koshta Idols:

Nritta Ganesha, Dakshinamoorthy, Vishnu, Brahma and Vishnu Durga are the Koshta idols located around the sanctum walls. All the Koshta Idols are dated to 10th Century AD. The temple had undergone modifications in later times; but the walls of the sanctum and the devakoshta figures can be considered parts of the original temple.


Below the Devakoshtam, there are exquisite carvings in a row of dancers in different poses and musicians playing different instruments are found. These carvings run around the sanctum walls. There is a sculpture of a mother monkey sitting behind a baby monkey.


Vinayaga Shrine:

There is a sub shrine for Vinayaga on the right side of the Maha Mandapam.


Thirugnana Sambandar Shrine:

There is a sub shrine for Thirugnana Sambandar on the left side of the Maha Mandapam.


Chandikeswarar Shrine:

Chandikeswarar Shrine can be found in his usual location.


Mother Shrine:

Mother is called as Vedhambigai. She is housed in a separate south facing shrine. Her shrine is situated in Maha Mandapam to the left side of the sanctum.


Suryan Shrine:

There is a west facing shrine for Lord Suryan on the left side immediately after the entrance on the compound wall.


Bhairavar Shrine:

There is a west facing shrine for Lord Bhairavar on the right side immediately after the entrance on the compound wall.


Vimochanamudaiyar Shrine:

There is a separate shrine for Vimochanamudaiyar to the right side of the sanctum in the outer courtyard. He is facing west. Nandi can be found facing this shrine. The Linga is big and might have been brought from some other place as the temple doesn’t have any records about this Lingam.


Varasiddhi Vinayaga Shrine:

There is a shrine for Varasiddhi Vinayaga facing east in the outer courtyard behind the sanctum.


Subrahmanya Shrine:

There is also another east facing shrine for Lord Murugan with his consorts Valli & Deivanai in the outer courtyard behind the sanctum.


Thirushobanamudaiyar Shrine:

There is a separate shrine for Thirushobanamudaiyar to the left side of the sanctum in the outer courtyard. He is facing east. There is no Nandi in front of his shrine. The Linga is big and might have been brought from some other place as the temple doesn’t have any records about this Lingam.


Navagraha Shrine:

Navagraha shrine can be found opposite to Thirushobanamudaiyar Shrine.


Pongu Saneeswarar Shrine:

There is a west facing shrine for Pongu Saneeswarar to the left side of the sanctum in the outer courtyard. It is located near to Navagraha Shrine.


Nataraja Sabha:

Nataraja Sabha housing bronze idol of Nataraja and his consort Shivagami can be found in the north east corner of the Temple premises.


Sthala Vriksham:

Sthala Vriksham is Vanni Tree. It is situated to the left side of Thirushobanamudaiyar Shrine.


Temple Opening Time

The Temple remains open from 06.00 AM to 10.30 AM and 04.30 PM to 09.00 PM.


Festivals

Masi Magam, Aatru Thiruvizha (River Festival), Brahmotsavam, Shivaratri and Monthly Pradoshams are celebrated here with much fanfare.


Contact

Moolanathaswamy Temple,

Bahour, Puducherry – 607 402

Mobile: +91 98658 48461 / 94432 87111 / 94863 61135

Mobile: +91 97876 66137 / 94884 94784

Mobile: +91 86820 73800 / 85082 47310


Connectivity

The Temple is located at about 50 meters from Bahour Bus Stop, 4 Kms from Kanniyakoil Bus Stop, 9 Kms from Cuddalore, 9 Kms from Cuddalore Bus Stand, 13 Kms from Cuddalore Port Junction Railway Station, 14 Kms from Ariyankuppam, 20 Kms from Puducherry Main Bus Stand, 20 Kms from Puducherry Railway Station, 23 Kms from Puducherry Airport, 163 Kms from Chennai Airport and 171 Kms from Chennai.

The Temple is situated on Pondicherry to Cuddalore Bus Route. Devotees can get down at Kanniyakoil Bus Stop. The Temple is located at about 4 Kms from this Bus Stop. Share Autos and local buses connecting Pondicherry to Bahour can be taken from this bus stop to reach this temple.


PRTC Bus 8 A is plying between Pondicherry Bus Stand to Bahour will stop at Bahour Bus Stop. All the other private buses running in this route also stops here. Taxis and Autos are also available to reach this Temple from any part of Puducherry. Nearest Railway Station is located at Puducherry. Nearest Airport is located at Puducherry and Chennai.


Thanks

Ilamurugan's blog


சுமார் 1400 ஆண்டுகள் பழமையான, சரும நோய்களை குணமாக்கும் பாகூர் மூலநாதசுவாமி (திருமூலஸ்தானமுடையார்)


புதுச்சேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாகூர் என்ற ஊரில் பழமையான பிரசித்திபெற்ற வேதாம்பிகாசமேத  மூலநாதர் கோயில் உள்ளது. 


மூலவர்: மூலநாத சுவாமி (திருமூலஸ்தானமுடையார்)


அம்மன்: வேதாம்பிகை


தல விருட்சம்: வன்னி மரம்


ஊர்: 

பாகூர் 


மாநிலம்: புதுச்சேரி 


பல்லவர், இராஷ்டிரக்கூடர், பிற்காலச் சோழர் முதலானோரின் காலம் முதல் இன்றளவும் பெருஞ்சிறப்புடன் ‘உடையார் ஸ்ரீ மூலஸ்தானத்து பெருமாள்’ கோயில் விளங்கி வருகிறது. சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானும், திருப்பழுவூர்ச் சிவபெருமானும், திருப்பாற்றுரை சிவபெருமானும் “திருமூலநாதர்” என்று குறிக்கப் பெறுதல் போல, வாகூர்(பாகூர்) கோவில் சிவபெருமானும் ஸ்ரீ மூலநாதர் என்று அழைக்கப்படும் சிறப்பு குறிப்பிடத்தக்கது.இக்கோவில் இந்தியத் தொல்லியல் துறையின்(ASI)கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


புதுச்சேரியின் பாகூர்.. தொன்மையும் சிறப்பும்..


புதுச்சேரியிலிருந்து தெற்கே 20 கி. மீ தூரத்தில் பாகூர் அமைந்துள்ளது. .250 ஆண்டுகள் முன்புவரை அழகிய (வாகு) ஊர் என்னும் பொருள்படும் வாகூர் என்றே பாகூர் அழைக்கப்பட்டு வந்துள்ளது (இன்றளவும் பாகூர் பேச்சளவில் மக்களால் வாவூர் என்றே அழைக்கப்படுகின்றது ).


இன்று பல ஊர்களை ஒன்றிணைத்து கொம்யூன் ஆக விளங்கும் பாகூர் கொம்யூன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல ஊர்களை உள்ளடக்கிய வாகூர் நாடாக இருந்துள்ளது.கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தப் பல்லவ மன்னன் நிருபதுங்கனின் வாகூர்ப்  பட்டயம் “ அருவா நாட்டுக் கீழ்வரி வாகூர் நாட்டு வாகூர்” என்று வாகூர் நாட்டைக் குறிப்பிடுகின்றது.


பல்லவர் காலத்திலிருந்தே வாகூரில் வடமொழிக் கல்லூரி மிகச் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. மாணவர்கள் கல்லூரியிலேயே உணவு பெற்று பயின்று வந்துள்ளனர். இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் மறையவர்களாகவே இருந்துள்ளனர்.பதினான்கு கலைகள், நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தருமசாத்திரப் புராணம், மருத்துவம், வில்வித்தை, இசை, பொருள் நூல் முதலியவைக் கற்பிக்கப்பட்டுள்ளன. 


பாகூர் சிவன் கோவிலில் கிடைத்த கி. பி. 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நிருபதுங்கவர்மனின் பட்டயமும், கோவில் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள  இருபத்தொரு கல்வெட்டுகளும் பாகூரின் தொன்மையையும் சிறப்பையும் தெரிவிக்கின்றன.


தலவரலாறு:


முதல் பராந்தக சோழனின் மனைவிக்கு சரும நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய மூலநாதப் பெருமானை வேண்டிக் கொண்டார். ஒரு நாள் இரவு இராணியின் கனவில் சுவாமி தோன்றி எனது இடது பக்கத்தில் திருச்சோபனமுடைய லிங்கத்தை தொற்றுவித்து அதற்கு பூஜை செய்து வந்தால் என்னுடைய நோய் தீரும் என்று கூறினார்.


இராணியும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதாக உறுதி செய்தார். அதன்பிறகு இராணியின் சரும நோய் விலகியது.


நோயிலிருந்து விடுபட்டதால் இராணி மூலநாதரின் வலது பக்கத்தில் விசுவநாதருடைய லிங்கத்தைத் தோற்றுவித்து வழிபட்டு வந்தா இப்படி ராணியின் வேண்டுதல் நிறைவேற்றியதன் காரணமாக செங்கல் கோயிலாக இருந்த இக்கோயிலை முதற் பராந்தகன் கற்றளியாக மாற்றினான் 


கோவில் அமைப்பும் வரலாறும்:


உடையார் ஸ்ரீ மூலநாதர் கோவில் பழமையான அமைப்புகளைக் கொண்ட கற்றளியாகும். கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுவது கற்றளி எனப்படும். கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ மன்னனான இரண்டாம் மகேந்திரவர்மன் காலத்தில் தான் தமிழகத்தில் கற்றளி அமைக்கும் வழக்கம் உண்டாயிற்று. அதற்கு முன்னர் மரம், செங்கல், சுண்ணாம்பு முதலிய பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மண்தளிகளே (மண்டளி) அமைக்கப்பட்டன. 


அம்மன் கோயில்:


இன்று இக்கோயிலில் காணப்படும் வேதநாயகி அல்லது வேதாம்பிகை அம்மனின் கோயில் கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டது. ஏனெனில் இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வம்மனைப் பற்றிய குறிப்புகள் காணப்பெறவில்லை. 


மகாமண்டபத்தை ஒட்டித் தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலம் வரை சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனி ஆலயம் அமைக்கப்பட்டதில்லை. 


கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் தான் சிவன் கோயிலுக்குள் அம்மன் கோயிலை அமைக்கும் வழக்கம் உண்டாயிற்று.அதே போன்று கருப்பக்கிரகத்தைச் சூழ்ந்துள்ள வெளிப்புறச் சுவர்களில் கோஷ்ட பஞ்சரத்தில் திருமேனி உருவங்கள் அமைக்கும் வழக்கமும் உண்டாயிற்று.எனினும் பொற்சாலை நங்கை என்று ஒரு அம்மனைப் பற்றி முதல் இராசராசன் கல்வெட்டு(கி. பி. 997) கூறுவதால், கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தனித்திருந்த பொற்சாலை நங்கை என்ற அம்மன் கோயில் வேதாம்பிகை என்னும் பெயரால் மூலட்டானத்து சிவபெருமான்  கோயிலோடு சேர்க்கப்பட்டது எனலாம். 


சிற்ப வேலைப்பாடுகள்:


கருவறை சுவர்களின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள வேலைப்பாடுகள் அழகானவை.ஆடல் அழகிகள் ( இக்கோயில் கல்வெட்டில் காணப்படும் தேவரடியார் உருவங்களாக இருக்கலாம்), ஒரே நிலையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மனித உருவங்கள், கணபதியின் உருவம், துதிக்கை நிலந்தவழும் வேழம்(யானை), குட்டியின் தலை பார்க்கும் குரங்கு ஆகிய சிற்பங்கள் இக்கோயிலுக்கு அணி சேர்க்கின்றன. அர்த்தமண்டபத் தூண்களும் அரிய அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டுள்ளன.


செல்லும் வழி:


பாகூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலும், கன்னியகோயில் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும், கடலூரிலிருந்து 9 கிமீ தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவிலும், அரியாங்குப்பத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 20 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்