Temple info -1871. Kamala Varadaraja Perumal temple, Arasar Koil, Chengalpattu கமல வரதராஜ பெருமாள் கோயில், அரசர் கோயில், செங்கல்பட்டு
Temple info -1871
கோயில் தகவல் -1871
Kamala Varadaraja Perumal Temple, Arasar Koil, Chengalpattu
Kamala Varadaraja Perumal Temple is a Hindu Temple dedicated to Lord Vishnu located in Arasar Koil Village in Madurantakam Taluk in Chengalpattu District of Tamil Nadu. Presiding Deity is called as Kamala Varadaraja Perumal and Mother is called as Sundara Mahalakshmi. The temple is famously called as Sundara Maha Lakshmi Temple. This temple is said to be older than the Kancheepuram Varadaraja temple. The temple is considered as Shukra Parihara Sthalam. The temple is situated on the southern banks of Palar river.
Legends
Kamala Varadaraja Perumal:
As per legend, Lord Brahma sought the advice of several sages for relief from a curse. They informed him that his curse would be relieved where Lord Vishnu, ruler of the heavenly world and a king ruling over the earth appear together in earth for your worship. As per their advice, Lord Brahma came to earth searching for the place where his curse would be relieved. Lord Vishnu already decided to provide relief to Lord Brahma at this place and appeared in this place.
Meanwhile, King Janaka Maharaja, who was on pilgrimage all over the world, was passing through this place. He heard about the presence of Lord Vishnu and came to this place for darshan. Brahma heard the news of Lord Vishnu and Janaka together at this place and not wanting to miss the opportunity, rushed to this place and worshipped Lord Vishnu & King Janaka and got relief from his curse.
As Lord Brahma worshipped Lord Vishnu, ruler of the heavenly world and King Janaka, ruling over the earth, the place came to be called as Arasar Koil (King’s Temple). It is also said that this temple was the first time constructed by King Janaka. Janaka decided to stay in this place for some time for worshipping Lord Vishnu. During his stay, he used to visit the temple daily for worship.
One day, Janaka didn’t visit the temple due to his official duty. Lord Vishnu himself went to the residence of Janaka. Lord Vishnu found Janaka was not at residence. Lord Vishnu went and sat on the throne of Janaka and performed the poojas as Janaka did to himself. Lord Vishnu informed the guards that the poojas which need to be performed today by Janaka had been completed. After a while, Janaka returned and astonished to hear that Lord Vishnu himself did the poojas in place of him.
Mother Lakshmi was upset over Lord Vishnu behaviour of visiting the residence of Janaka. Lord Vishnu pacified her and informed that the first right would be given to her in this temple. Pleased with Lord Vishnu assurance, Mother Lakshmi requested him to appear with lotus (Lotus represents Lakshmi) in his hand at this place. Lord Vishnu accepted and appeared as per her wish. Hence, Lord Vishnu came to be called as Kamala Varadaraja Perumal.
Older than Varadaraja Perumal Temple of Kanchipuram:
As per legend, Lord Brahma was in the process of collecting sand from Palar river at this place to make the sacrificial altar at Kanchipuram. He unearthed the idols of Kamala Varadaraja Perumal and his consorts Sridevi & Bhudevi during the process and installed these idols in this temple and worshipped them. Hence, this temple is considered as older than Varadaraja Perumal Temple of Kanchipuram.
Navagrahas worshipped Sundara Maha Lakshmi here:
It is believed that each of the nine Navagrahas along with their consorts worshiped Mother Sundara Maha Lakshmi at this temple in nine different Lakshmi forms.
Kubera worshipped Sundara Maha Lakshmi here:
As per legend, Lord Kubera got back his lost wealth by praying to Sundara Maha Lakshmi here.
Aadhi Lakshmi Thayar:
It is believed that she is considered as the earliest Thayar formed in the world. Hence, she came to be called as Aadhi Lakshmi Thayar.
History
The temple was believed to be built by Cholas in 12th century and received extensive patronage from Pandyas and Vijayanagara Kings. The Temple was in dilapidated condition in 14th century and was renovated by the Sambuvarayar King Rajanarayana Sambuvarayar III. The Temple was renovated in 2006 CE by the noble efforts of Sadguru Venkataraman. There are several inscriptions found on the walls of the temple. Inscriptions are dated to the reigns of Rajaraja Chola III (1216-1246 CE), Jadavarman Sundara Pandyan (1259 CE), Sundara Pandyan II (1291 CE), Rajanarayana Sambuvarayar III (1352 CE) and latter Vijayanagara Kings. The inscriptions records the gifts and grants made for burning perpetual lamps & poojas and taxes levied for the maintenance of the temple. Lord Vishnu was called as Tiruvarasur Emberuman as per the inscriptions.
The Temple
This temple is facing towards west with an entrance arch. Balipeedam, Dhwaja Sthambam and Garudazhwar can be seen immediately after the entrance arch, facing towards the sanctum. Only the base of the Dhwaja Sthambam exists. The sanctum sanctorum consists of sanctum, antarala, maha mandapam and pillared mukha mandapam. The sanctum enshrines an image of Kamala Varadaraja Perumal with his consorts Sridevi and Bhoodevi.
The image is believed to be of Salagrama. He is seen in a standing pose and holds a lotus in his right hand which is rare. The vimana over the sanctum is called as Pranava Kodi Vimanam and is of two tiers. The Utsava (processional) idols is also called as Kamala Varadaraja Perumal. He is four armed and in standing posture. His upper arms holds the conch and discus, his lower right hand holds a lotus and lower left hand rests on a mace.
Mother is called as Sundara Mahalakshmi / Perundevi Thayar. She is housed in a separate east facing shrine. Sundara Maha Lakshmi enjoys the prime importance in this temple. The temple is also famously called as Sundara Maha Lakshmi Temple. It is a general practice in this temple to worship her first and then proceed to the Vishnu shrine. Her shrine consists of sanctum and mukha mandapam. She is four armed.
Her upper hands holds lotus and lower hands show abhaya & varada hastha. She is seated in the padmasana pose. It is unique to notice six toes in her right foot. She is seen in everlasting smile with chubby cheeks. The pillars of the mukha mandapam are intricately carved and made of resonant stone as they emit musical notes when tapped. Hence, these pillars are called as musical pillars.
The corbels of these pillars bear the plantain flower motif very characteristic of the architectural style of the Vijayanagara Empire. There is a hole at the top of the pillars. If anyone passes a thin stick through this hole, the stick comes out cut into four pieces. The vimana over her shrine is called as Shukra vimana.
There is a sculpture of Palapazha Siddhar carrying Jack fruit on his head can be seen in one of the pillars. It is said that Mother Sundara Maha Lakshmi has a preference over Jack fruit and the Siddhar used to offer jack fruit to Mother daily as nivedhana. Yoga Narasimha, Kubera, Kalinga Nardana, Paramapathanathar, and Trivikrama are the koshta idols located around the walls of her shrine.
There is an east facing shrine for Andal in the temple premises. The vimana over her shrine is called as Vasthu vimana. Shrines of Thumbikai Azhwar, Vishwakasena, Vedanta Desikar, Manavala Mamuni and Anjaneya can be seen in the temple premises. Sthala Vriksham is Peepal tree. Theertham associated with this temple is Palar River.
Temple Opening Time
The temple remains open from 07.30 AM to 12.00 Noon and 04.00 PM to 07.30 PM.
Festivals
Chitra Pournami is celebrated in this temple with much fanfare. During Chitra Pournami, Lord Kamala Varadaraja Perumal along with his consorts Sridevi & Bhoodevi visits Esoor for Theerthavari on the banks of the Palar river in Esoor. Thirumanjanam is performed to Perumal at the river bank. Varalakshmi Vrata days, Akshaya Tritiya, Aadi and Thai Fridays are considered very special here.
Prayers
Devotees worship Mother Sundara Mahalakshmi on Varalakshmi Vrata days and Fridays especially during Sukra Hora for wealth. People pray to Mother Sundara Mahalakshmi for relief from poverty, debts, losses in business, court cases and other litigation problems. Devotees also worships Gomukh considering as Kubera Gomukh by applying turmeric paste and Kungumam. The number six belongs to Shukra and Mother Sundara Maha Lakshmi has six toes. Hence, this temple is considered as Shukra Parihara Sthalam.
Contact
Kamala Varadaraja Perumal Temple,
Arasar Koil, Madurantakam Taluk,
Chengalpattu District – 603 308
Mobile: +91 96985 10956 / 93817 44615
Connectivity
The Temple is located at 200 metres from Arasar Koil Bus Stop, 2 Kms from Pulipurakoil, 4 Kms from Padalam, 4 Kms from Padalam Railway Station, 14 Kms from Madurantakam, 14 Kms from Madurantakam Railway Station, 20 Kms from Chengalpattu, 22 Kms from Chengalpattu Junction Railway Station, 60 Kms from Chennai Airport and 81 Kms from Chennai. Devotees travelling on GST road from Chennai need to take a left turn at Padalam Koot Road after Chengalpattu and travel for 7.5 Kms to reach this temple. Share Autos and Autos are available from Padalam Koot Road on GST Road.
Thanks
Ilamurugan's blog
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம், படாளம் அரசரக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த அரசர் பெருமாள்
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் அருகே பலாற்றங்கரை அரசர் கோவில்
ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் வாழும் கோவில், திருஊரல் திருவிழாவிற்கு புகழ்பெற்ற ஆலயம், குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான கோவில் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசர்கோவில். இந்த ஆலயத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் அருள்பாலித்து வருகிறார். கோயிலின் தலம் அரசமரம். இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமாள் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரன், இத்தல தாயாரை வழிபடுவதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது. மேலும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாலாறு, அரசர் கோயில் தலத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அதிசயம் கொண்டதாக அமைந்துள்ளது. இது தட்சிண பிரவாகம் என்று அழைக்கப்படுகிறது.
கருவறையில் மூலவர் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கின்றார். இறை திருமேனிகள் அனைத்தும் சிற்பக் கலைநயத்துடன் நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த தாயாரின் வலது காலில் காணப்படும் ஆறுவிரல்கள் ஒரு அதிசய அமைப்பாகும். ஆறு என்ற எண்ணிக்கை சுக்ரனுக்குரியதாகும். சுக்ரன் இந்தத் தாயாரிடம் ஐக்கியமானதாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தின் மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருஊரல் விழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி மூன்றாம் சனி, பங்குனி உத்திரம் என விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. வார நாட்களில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பெருந்தேவி தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின் தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண் ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன. மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான துளை ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு சிறு ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது. இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மற்றொரு தனிச்சிறப்பு, சித்ரா பவுர்ணமியில் பாலாற்றில் நடைபெறும் திருஊரல் திருவிழாவாகும்.
சித்திரையின் வெப்பத்தைத் தணிக்க, பாலாறு தன்னையும், தன்னைச் சார்ந்த மக்களையும் குளிர்விப்பதாக இவ்விழா அமைந்துள்ளது. சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். பாலாற்றில் சுமார் 100 சதுர மீட்டர் மணல் திட்டு உருவாக்கப்பட்டு, அதைச் சுற்றி 2 மீட்டர் அகலத்தில் மணலை அகழ்ந்து எடுத்து நீர் சுரக்கச் செய்வார்கள். பெருமாள் மணல் திட்டில் வீற்றிருக்க, சக்கரத்தாழ்வார் அந்த நீரில் சுற்றி வந்தபின், தீப ஆராதனைகள் காட்டப்படும். பிறகு நிலவொளியில் விழா முடியும் வரை, விடியும் வரை அங்கேயே காட்சி தருவார். விடியலில் மீண்டும் சக்கரத்தாழ்வார் நீரில் சுற்றி வருவார். அதன்பின் தீபாராதனைகள் முடிந்து பழையபடியே, அரசர் கோவில் வந்து சேர்வார். இவ்விழாவே திருஊரல் விழா என்று அழைக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரயிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
யாத்ரா விபரம் - ஆறுவிரல் மஹாலக்ஷ்மி :
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் அருகே பலாற்றங்கரையில் ஒரு அமைதியான கிராமம். அதன் பெயர் வேடிக்கையானது. அரசர் கோவில்.
சென்னையிலிருந்து தென்மேற்கே 67 கி.மீ, செங்கல்பட்டிற்குத் தென்மேற்கே 27 கி.மீ, காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் இந்த அரசர் கோவில் இருக்கிறது.
இந்த கோவிலில் அதிசயம் என்னவென்றால் இங்கே ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருள்பாலிக்கிறார். குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான ஸ்தலம் பெருமாள் கமல வரதராஜப் பெருமாள்.
இந்தக் கோயிலில் முதலில்
தாயாரைத்தான் வணங்க வேண்டும்.
செல்வங்களை வேண்டியவர்க்கு வாரி வழங்குபவள் மஹாலக்ஷ்மி. மொத்தமாக 64 லட்சுமிகள் உண்டு. அவர்கள் அனைவரிலும் பிரதானமானவள் தாயார் சுந்தர மகாலட்சுமி. ஆதி மூல லட்சுமி . பெயருக்கேற்றபடி சுந்தரமஹாலக்ஷ்மி அதி சுந்தர ரூபவதி. குபேர சம்பத் சக்தி. வாரி வழங்குபவள். சிறு குழந்தை போல ' புசு புசு' கன்னம். சிரித்த முகம். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி தரும் தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரை. பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். சுக்ரன் ஆறு எனும் எண் சம்பந்தப்பட்டவர். அவரை தனது ஆணைக்குட்பட்டு செயல் பட வைக்கும் சக்தி கொண்டவள் இந்த தாயார்.
ஒருவன் நன்றாக சுபிக்ஷமாக இருந்தால் ''அவனுக்கு என்னப்பா சுக்ர தசை. கொழிக்கிறான்'' என்கிறோம். இங்கே மஹாலக்ஷ்மி சுக்ரனையே தனது வசம் கொண்டு தன ஆகர்ஷண லக்ஷ்மியாக அருள் பாலிக்கிறாள். பிரதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் இங்கே வந்து தாயாரை வழிபடுகிறார். பெருமாள் ‘கமல’ வரதராஜ பெருமாள். இவரை காஞ்சி வரதருக்கும் மூத்தவர், அண்ணா,
என்பார்கள் .
ஒரு கதை :
பிரம்மா பாப விமோசனம் தேடும்போது நிறைய ரிஷிகளை, முனிவர்களை கேட்கிறார். ராஜாவும், விஷ்ணுவும் சேர்ந்து இருக்கும் ஒரு க்ஷேத்திரத்துக்கு சென்று தரிசித்தால் பாப விமோச்சனம் நிச்சயம்'' என அவர்கள் சொல்ல இங்கே வருகிறார். நாராயணன் பாலாற்றங்கரையில் இங்கே வாசம் செயகிறார். ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். இருவரும் இங்கே இருப்பதை அறிந்து தரிசித்து ப்ரம்மா, பாப விமோசனம் பெறுகிறார். அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயர்.
ஜனக மஹாராஜா முதலில்கட்டிய கோவில் எனவே இதற்கு அரசர் கோவில் என்று பெயர் வந்தது என்கிறார்கள்.
தாயார் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. பாற்கடலில் உருவானவள் பாலாற்றை பார்த்தபடியிருக்கிறாள். அழகிய கல் மண்டபம் .காதுகளில் பத்தி, குண்டங்கள், கைகளில் அணிகலன்கள், சங்குக் கழுத்தில் மூன்று துளசி மணி மாலைகள், துளசி மணி மாலையின் முடிவில் துளசிப் பத்திரம் போன்றவையும், நெற்றியில் சூரிய –சந்திர பிரபைகள் .
மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ‘சுந்தர’மாக ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.
வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்க ளையும் கொடுப்பாள் மகாலட்சுமி. தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள்.
தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.
அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள்.
பெருமாள் கமல வரதராஜர் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்ததால் ‘கமல’ வரதராஜர். பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர்கள்.. கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவர்.
விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வதால் மிக பழைய கால கோவில்.
கோயிலின் தல விருக்ஷம் அரசமரம். இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமாள் என கல்வெட்டு சொல்கிறது.
இங்கே பாலாறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வழக்கமாக ஓடாமல் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வது அதிசயம். ஆகவே இது தட்சிண பிரவாகம்..
கருடாழ்வார் சன்னிதியின் எதிரே 24 தூண்கள் கொண்ட அழகிய கல் மண்டபம் உள்ளது.
பெருந்தேவி தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின் தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண் ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன.
மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான துளை ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு சிறு ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது. இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.
ளிர்விப்பதாக இவ்விழா அமைந்துள்ளது.
சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். (காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பாகவும், காஞ்சிக்கு அருகே ஓடும் பாலாற்றில் சித்திரா பவுர்ணமி அன்று திருஊரல்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது)
கோவிலின் வடமேற்கே தென்புறச் சுவரில் காணப்படும் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு (கி.பி.1237), வடச்சுவரில் காணப்படும் கல்வெட்டு, தென்புறச் சுவரில் காணப்படும் முதலாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1259) கல்வெட்டு, வடமேற்குச் சுவரில் அமைந்துள்ள இரண்டாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1291) கல்வெட்டு, படைவீடைத் தலைநகராகக் கொண்ட ராஜ நாராயண சம்புவராயர் (கி.பி. 1352) கல்வெட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள விஜயநகர பேரரசர் கல்வெட்டு போன்றவை இத்தலத்தின் தொன்மையை பறைசாற்றுகின்றன.
இந்தக் கல்வெட்டுகளின் வாயிலாக நிலக்கொடை, பசுதானம், வரிவிலக்கு என பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இதன்மூலம் இந்தத் திருக்கோவில், மன்னர்கள் காலத்திலேயே முக்கியத்துவம் பெற்ற திருக்கோவிலாகத் திகழ்ந்ததையும் அறிய முடிகிறது. மூன்றாம் ராஜராஜன் காலத்தில் சிறப்புற்று இருந்த இந்த ஆலயம், பின்னர் பழுதடைந்து மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயனின் ஆட்சி காலத்தில் திருப்பணி மேற்கொண்டு புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு அதிசயமாக ஒரு விஷயம்
'இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் வர முடியாது. தாயார் அனுக்கிரஹம் இருந்து அழைத்தால் தான்
வர முடியும்.
Comments
Post a Comment