Temple info -1858 Neelakandeswarar Temple, Gerumbakkam, Chennai. நீலகண்டேஸ்வரர் கோயில், கெருகம்பக்கம், சென்னை

 Temple info -1858

கோயில் தகவல் -1858



Gerugambaakkam Shiva Temple

Chennai Gerugambaakkam Sri Neelakandeswarar Temple

Neelakanteswarar Temple, is a Hindu temple located in Chennai suburb Kerungambakkam Near Porur in Chennai city, Tamil Nadu, India.

Chennai Navagraha Temples For Kethu

Gerugambaakkam Siva Temple

The main deity Sri Neelakandeswarar is situated in a small and beautiful sanctum. The Lord got His name Neelakandeswarar, as he swallowed the Aala Kaala Poison which evolved during the churning of the ocean, after which His neck turned blue. In Thamizh ‘Neela’ means blue and ‘Kanda’ means neck. It is said that the Nandhi in front of the Lord is so powerful, as he absorbs the poisonous breath of the Lord after He consumed poison.

Gerugambakkam Neelakandeswarar Temple 

Neelakandeswarar Temple Chennai Near Porur

Gerugambaakkam Shiva Temple

Sri Aadhi Kamakshi is present just outside the main sanctum, facing south. Sri Aadhi Kamakshi is tall and looks very beautiful. She is said to be the first among 5 forms of Kamakshi.

Chennai Gerugambakkam  - Sri Neelakandeswarar Temple

சென்னை கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர்  திருக்கோவில்


Main Deity

Lord Shiva


Name

Sri Neelakandeswarar


Goddess Name

Sri  Adi Kamakshi


Location

Gerugambakkam Near Porur  (Kovur - Kundrathur Road)


Significance

Kethu Pharikara Sthalam, Chennai Navagraha Sthalam for Kethu,

Kethu Dosha Nivarthi poojas are done in this temple


Ancient

500 - 1000 Years Old


Travel Base

Chennai


 This temple is one of the Navagraha temples in Chennai region (Thondai Mandalam) devoted to Sri Kethu Bhagavan. There is a separate shrine for Kethu Bhagavan on the southern side of the sanctum. Special Poojas and Homams are performed to Sri Kethu Bhagavan during Raahu Kethu Peyarchi. This is also a Parihaara Sthalam for people having ill effects in their lives because of Kethu’s position in their Horoscope.

Chennai Navagraha Sthalam for Kethu

Kethu Pharikara Sthalam Chennai

Navagraham is present at the north east side corner of the temple. There are carvings of image of snake on the ceiling of Navagraha shrine, which indicates that this temple is a Parihaara Sthalam. The temple is believed to have been built during Chola Kings period.


How To Reach : Gerugambaakkam village is located about 20 kms west of Chennai. While going from Porur towards Kunrathur, one should take left to reach Gerugambaakkam. 

Address: Gerugambakkam Sivan Kovil, Gangaiamman Koil St, Balakrishnan Nagar, Balaji Nagar, Tharapakkam, Chennai, Tamil Nadu 600122, India.


Chennai Navagraha Temples : There are 9 temples at the outskirts of Chennai dedicated to the Navagrahams. Similar to Kumbakonam navagraha temples.


Navagraha Temples in Chennai

Location

Planet

Temple Name

Kolapakkkam

Suryan

Agatheeswarar Temple

Somangalam

Chandran

Somanaadheeswarar Temple

Poondhamalli

Angaragan

Vaidheeswaran Temple

Kovur

Budhan

Sundareswarar Temple

Porur

Guru

Ramanaadheeswarar Temple

Mangadu

Sukran

Velleeswarar Temple

Pozhichalur

Shaneeswaran

Agatheeswarar Temple

Gerugambakkam

Kethu

Neelakandeswarar Temple

Kundrathur

Rahu

Nageshwarar Temple

 These are similar Navagraha temples in Chennai in and around Kundrathur.


Thanks

Vel Murugan's blog 


கேடுகள் நீக்குவார் கேது பகவான்


நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற, எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள், கேதுவின் அருளால் சட்டென்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள். கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிப்பர். ஆனால் கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர், அத்தகையவர்களை அரவணைத்து ஆதரவளிக்கிறார்.


இக்கோயிலில் கேது பகவானை தனி சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில், நடுவில் காளிங்கநர்த்தன கண்ணன் வடிவில் இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட நேரம் கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்ட நேர பூஜைகள் விசேஷம்.


கோயிலில் முதலில் தரிசனம் தருகிறார், ஆதி காமாட்சி. ஐந்தரை அடி உயரத்தில் அன்பே வடிவாய் திருக்காட்சி அளிக்கிறாள் அன்னை. மூலக் கருவறையில் ஈசன், நீலகண்டேஸ்வரராக அருள்கிறார். அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வலி தாங்காமல் வாசுகி நஞ்சைக் கக்கியது. பாற்கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. இரண்டும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய விஷமாய் மாறின. யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நஞ்சை சட்டென விழுங்கினார் ஈசன். அதைக் கண்டு பதைபதைத்த பார்வதி, அந்த நஞ்சு தொண்டையை விட்டுக் கீழே இறங்காதபடி அதை ஈசனின் கண்டத்திலேயே நிறுத்தினாள். ஈசன் அன்று முதல் நீலகண்டேஸ்வரர் ஆனார். அந்த நீலகண்டேஸ்வரர் தன் தேவி ஆதி காமாட்சியோடு அருளும் அற்புதத் தலம் இது.


ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில் சூரியனை கேது விழுங்குவது போல ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகின்றன. நவகிரக நாயகர்களின் சந்நதியின் மேல் விதானத்திலும் சூரியனை கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.


ஆலயம் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


சென்னை போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது இத்தலம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9443107809


நன்றி

 ந.பரணிகுமார்

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்