Temple info -1825 iravatheeswarar temple, Abhishekapuram, Tiruppur. இரவதீஸ்வரர் கோயில், அபிஷேகபுரம், திருப்பூர்
Temple info -1825
கோயில் தகவல் -1825
*Arulmiku Sri Abhishek Valli Udanurai* *Irvatheeswarar Temple*
*Abhishek Puram*, *Kunnathur, Tirupur District*
Built in South Indian architecture, this Shiva sthalam is a 900 to 1600 year old Shiva sthala, the temple is entirely dedicated to Lord Shiva.
🛕Deity-
Airavatheeswarar
🛕Mother:-
Abhisheka Valli
🛕Tala Vritsha:-
Makizha, bow tree
🛕Town:- Abhishekapuram
🛕District:- Tiruppur
🛕State:- Tamil Nadu
🛕 Festival:-
Pradosha Puja, Anna Bishekam on Aipasi Pournami Day, Karthikai, Shivratri and special pujas are performed on Shiva Ratri.
🛕Specialty of the deity:-
Iravadeeswarar in the form of linga towards the east.
🛕 The history of the temple is carved in relief on the gate of Artha Mandapa.
🛕Mulavar Iravatheeswarar graces the sanctum in the form of a linga towards the east.
🛕The history of the temple is carved in relief sculpture on the gate of Artha Mandapa.
🛕The Maha Mandapam is filled with wonderful artistic features. Pattiswarar on the pillars of the hall.
🛕The sub sanctum of the Maha Mandapam also has a statue of Dwara Vinayagar in Danda style.
🛕 Nandi is beautiful and the Thirukka and Dwara Balakars are majestic. In Vasantha Mandapam there is a shrine of Sun, Moon and four nayanars besidesSekkizhar. Lord Shani has a separate sannidhi.
🛕 The Navagraha Sannidhi and the Sannidhi of Kala Bhairava are very well built.
🛕 In the Thiruk Koil complex, the Azhagu Raja Perumal is there with Sridevi-Boodevi. In front of him there is a statue of Garuda, four feet high, with the Dwara Palakars Jaya and Vijaya facing the Moolavar.
🛕 Although the temples are in the same complex, a separate Deepasthambam has been built for Airavatesh Varar and a separate Deepasthambam for the beautiful Raja Perumal.
🛕 Valli-Deivanai is located on the north side of the Subramaniyar Sanniti Temple.
🛕 This shrine was established during the Vijayanagara Empire period. Makizha tree and Vilva tree are the main plants.
🛕The mighty Hanuman is seen in a separate shrine with arms folded towards the north.
🛕Prayer
If you pray to Eesan and Ambikai, who will show you here, all your problems will be solved; The belief is that all good things will happen. Also people who are affected by Kala Sarpa dosha are also worship here and gets blessed.
🛕Meethi kadan:
Childless couples come to this place and pray to Irravadesvarar to put Vilva garlands on him and be blessed with children.
🛕 Ambal Abhishekah Valli stands on the beautiful Padma Peedam in the private sanctum with four arms facing east. With the Padmans in her upper arms and the Abhayavarata mudras in her lower arms, she gives darshan as a mother who bestows blessings.
🛕There are Ganesha sculptures in Dwara. There are sculptures of a crocodile devouring a child, a dragon anointing the Irrawadeeswarar, and a peacock. Also the sculpture of Lord Rama in Artha Mandapam is amazing. There are also forms of Andals and Rishis. On the canopy is seen the Thirukolam of Ambika doing Shiva Puja.
🛕On Fridays a large crowd of women come here to ask for poovakku. Abhishek Valli's Koshta Varagi. There are Mahalakshmi and Chamundi. In the western prakaram, Saptha Kanniyar is seen as a beautiful creative sculpture.
🛕The Dasavathara sculptures found in this temple are artistically beautiful. If you come around the Prakaram, there is Mangala Ganesha.
🛕History:-
The deity being sada abhisheka priyar, the town is appropriately named Abhishekapuram.
🛕Abhisheka Puram is where Kongu Chola architecture was created.
🛕Airavathees Varar Temple. It was built by Veerarajendra Chola who lived in the thirteenth century. It can be seen here in a kalvettu. It is known from two inscriptions.
🛕The Lord of this temple is called Airavathees because he removed the curse of Airavata, the elephant of Indra.
🛕Once the sage's penance was disturbed by Airavata, the vehicle of Indra, who was traveling in the forest area. The wise sage cursed the elephant to turn into a cat and again went into penance. Indra, who learned about the incident through Narada, was sorry, and Airavatham, who had turned into a cat,
prayed Ambikai to turn back elephant as before, and worshiped mother Umamakaswari asking for forgiveness.
🛕 By staying in Abhishek Puram and worshiping the Lord with fresh water every day before sunrise, Ambal says that Airavatam attains its old form.
🛕Highlight:-
Moolavrar Iravadeeswarar in the form of linga towards the east. The history of the temple is carved in kalvettu on the gate of Artha Mandapa.
🛕 Thiruk Koil Address
Arulmiku Shri
Airavatheeswara Swamy Temple Abhishekhapuram, Merku Pathi PO Gunnathur Road, Tirupur District - 638 103.
🙏🏻கோபுர தரிசனம் , கோடி புண்ணியம் இன்றைய கோபுர தரிசனம்🙏🏻
*அருள்மிகு ஶ்ரீ அபிஷேக வல்லி உடனுறை* *ஐராவதீஸ் வரர் கோயில்*
*அபிஷேக புரம்*, *குன்னத்தூர்,திருப்பூர் மாவட்டம்*
தென்னிந்திய கட்டடக் கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 900 ஆண்டுகள் முதல் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தல மாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .
🛕மூலவர்:-
ஐராவதீஸ்வரர்
🛕அம்மன்/தாயார்:-
அபிஷேக வல்லி
🛕தல விருட்சம்:-
மகிழ, வில்வ மரம்
🛕ஊர்:- அபிஷேகபுரம்
🛕மாவட்டம்:- திருப்பூர்
🛕மாநிலம்:- தமிழ்நாடு
🛕திருவிழா:-
பிரதோஷ பூஜை, ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னா பிஷேகம், கார்த்திகை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
🛕தல சிறப்பு:-
மூலவர் ஐராவதீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள்கிறார்.
🛕 அர்த்த மண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் தலவரலாறு செதுக்கப் பட்டுள்ளது.
🛕மூலவர் ஐராவதீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள்கிறார்.
🛕அர்த்த மண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் தலவரலாறு செதுக்கப் பட்டுள்ளது.
🛕மகா மண்டபம் அற்புதமான கலை அம்சங் களோடு திகழ்கிறது. மண்டபத் தூண்களில் பட்டீஸ்வரர்.
🛕துவார விநாயகர் சிற்பங்கள் உள்ளன. குழந்தையை விழுங்கும் முதலை, ஐராவதீஸ் வரருக்கு அபிஷேகம் செய்யும் நாகம், மயிலின் சிற்பமும் உள்ளன. மேலும் அர்த்த மண்டபத்தில் உள்ள ராமரின் சிற்பம் அற்புதமாக உள்ளவை. ஆண்டாள், ரிஷிகளின் வடிவங்களும் இருக்கின்றன. விதானத்தில் சிவபூஜை செய்யும் அம்பிகையின் திருக்கோலம் காணப் படுகிறது.
🛕மகா மண்டபத்தின் துணை சன்னிதியில் துவார விநாயகர் தண்ட பாணியின் திருவுருவமும் வடிக்கப் பட்டுள்ளன.
🛕நந்தி அழகுற அமைந் திருக்க, துவார பாலகர்கள் கம்பீரமாக உள்ளனர். வசந்த மண்டபத்தில் சூரியன், சந்திரன், நால்வரோடு சேக்கிழாருக் கும் சன்னிதி உள்ளது. சனி பகவானுக்கு தனி சன்னிதி இருக்கிறது.
🛕 நவகிரக சன்னிதியும் கால பைரவரின் சன்னிதியும் வெகுநேர்த்தியாக அமைந் துள்ளன.
🛕 திருக் கோயில் வளாகத்தில் அழகு ராஜப் பெருமாள் ஸ்ரீதேவி -பூதேவியுடன் வீற்றிருக் கிறார். அவருக்கு முன் புறம் நான்கு அடி உயரத்தில் துவார பாலகர்கள் ஜெயன், விஜயன் உள்ளார்கள் மூலவரை நோக்கி கருடனின் சிலை உள்ளது.
🛕 ஒரே வளாகத்தில் கோயில்கள் இருப்பினும் ஐராவதேஸ் வரருக்கு தனி தீபஸ்தம்பம், அழகு ராஜப் பெருமாளுக்கு தனி தீபஸ் தம்பமும் கட்டப் பட்டுள்ளது.
🛕 வள்ளி – தெய்வானை யுடன் வீற்றிருக்கும் சுப்ரமணியர் சன்னிதி கோயிலின் வடபுறத்தில் அமைந் துள்ளது.
🛕 இச்சன்னிதி விஜய நகரப் பேரரசு காலத்தில் ஏற்படுத்தப் பட்டது. மகிழ மரமும் வில்வ மரமும் தல விருட்சங் களாக உள்ளன.
🛕வடதிசை நோக்கி கூப்பிய கரங்களோடு தனிச் சன்னதியில் காட்சி தரும் வீர அனுமனின் கம்பீரத் தோற்றத்தில் உள்ளார்.
🛕பிரார்த் தனை
இங்கு அருட்காட்சி தரும் ஈசனையும் அம்பிகை யையும் வேண்டினால் சகல பிணிகளும் தீரும்; சர்வ மங்களங் களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிப்பு குள்ளான வர்களும் வணங்கி நற்பேறு அடைந்திருக் கிறார்கள்.
🛕நேர்த்திக் கடன்:-
வாரிசு இல்லாத தம்பதியர் இத்தலம் வந்து வில்வ மாலையை ஐராவதேஸ் வரருக்கு அணிவித்து வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றிருக் கிறார்கள்.
🛕அம்பாள் அபிஷேக வல்லி தனிச் சன்னதியில் அழகிய பத்மபீடத்தின் மீது நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றாள். மேலிரு கரங்களில் பத்மங் களையும், கீழிரு கரங்கள் அபயவரத முத்திரைகளையும் கொண்டு, வேண்டும் வரங்களை அருளும் தாயாக தரிசனம் தருகிறாள்.
🛕அம்பிகை, வெள்ளிக் கிழமைகளில் பூவாக்கு கேட்க வரும் பெண்களின் கூட்டம் அதிகம் வருகின்றனர். அபிஷேக வல்லியின் கோஷ்டத்தில் வராகி. மகாலட்சுமி, சாமுண்டி உள்ளனர். மேற்கு பிராகாரத்தில் சப்த கன்னியர் அழகிய படைப்புச் சிற்பங்களாக காணப்படு கின்றனர்.
🛕இக் கோயிலில் காணப்படும் தசாவதாரச் சிற்பங்கள் கலை அழகு மிக்கவை. பிராகாரத்தைச் சுற்றி வந்தால் மங்கள விநாயகர் உள்ளார்.
🛕தல வரலாறு:-
சதா அபிஷேகப் பிரியரான ஈசனுக்கு கோயில் அமைந்த ஊரின் பெயரிலேயே அபிஷேகம் அமைந்தது.
🛕அபிஷேக புரம் என்ற அந்தத் தலத்தில் கொங்கு சோழர்கால கட்டடக் கலையில் உருவானது.
🛕ஐராவதீஸ் வரர் கோயில். பதின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரராஜேந்திர சோழனால் இது கட்டப்பட்டது. என்பதை இங்கு காணப்படும். இரண்டு கல்வெட்டு களால் அறிய முடிகிறது.
🛕இந்திரனின் யானையான ஐராவதத்தின் சாபத்தை நீக்கியவர் என்பதால் இக்கோயில் இறைவன் ஐராவதீஸ் வரர்.
🛕ஒரு சமயம் வனப் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திரனின் வாகனமான ஐராவதத்தால் அங்கிருந்த முனிவரின் தவம் கலைந்து போனது வெகுண் டெழுந்த முனிவர் யானையை பூனையாக மாற சாப மிட்டு, மீண்டும் தவத்தில் ஆழ்ந்து போனார். நடந்த விவரத்தை நாரதர் மூலம் அறிந்து வருந்திய இந்திரன், பூனையாக உருவமாறிய ஐராவதம் பழையபடி யானையாக மாற, பாவ விமோசனம் கேட்டு அன்னை உமாமகேஸ் வரியை வணங்கினார்.
🛕 அபிஷேக புரத்தில் ஒரு மண்டலம் தங்கியிருந்து தினந்தோறும் சூரிய உதயத் திற்கு முன் இறைவனை நன்னீராட்டி ஆராதித்து வர, பழைய உருவை ஐராவதம் அடையும், என்று அம்பாள் கூற, ஐராவதம் அதன்படியே செய்து தனது பழைய உருவை அடைந்தது என்பது தலவரலாறு.
🛕சிறப்பம்சம்:-
மூலவர் ஐராவதீஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் அருள்கிறார். அர்த்த மண்டப வாயிலில் புடைப்புச் சிற்பமாக கோயிலின் தலவரலாறு செதுக்கப் பட்டுள்ளது .
🛕 திருக் கோயில் முகவரி
அருள்மிகு ஶ்ரீ
ஐராவதீஸ்வர சுவாமி திருக்கோவில் அபிஷேகபுரம், மேற்குப்பதி அஞ்சல் குன்னத்தூர் வழி, திருப்பூர் மாவட்டம் - 638 103.
நன்றி மாலதி முரளி
Comments
Post a Comment