Temple info -1824. Kuberan Temple, thirunelveli. குபேரன் கோயில், திருநெல்வேலி

 Temple info -1824

கோயில் தகவல் -1824



Ancient Temple for Lord of Wealth Kubera in Tirunelveli (India)

Tirunelveli, Tamil Nadu (India)


How to reach

The only ancient temple for the Lord of wealth - Kubera can found in Harikesavanallur -A small village located on the banks of the holy Tamaraparani river in the Tirunelveli district of TamilNadu, South India. It was also known as Kuberapuri.


The Lord Shiva here is known by the name of Ariyanathar and the Goddess is known by the name of Periyanayaki. As seen from the inscriptions, this temple is around 1400 years old.


Specialties:

• There is a separate shrine dedicated to Lord Kubera. Devotees offer prayers in this temple for getting rid of financial difficulties and acquire wealth.

• The Lord is said to have been worshipped by Kubera, the lord of wealth. There are two shiva lingas here – Ariyanathar and Kubera Linga. Hence this village gets another name – Kuberapuri.

• This is probably the one temple which has a shrine dedicated to Jyeshta Devi. She is seen with the Manthi , the son of Lord Shani. She helps one get rid of all negative influences of planet Chevvai or Mangal.

• Lord Dakshinamoorthy appears here are Medha Dakshinamoorthy (Medha meaning exceptional knowledge). One of the very few temples to have this shrine.

• There is a shrine dedicated to Lord Ruru Bhairvara (one of the eight forms of the bhairava

• Unlike other temples, there are two shrines for Lord Nataraja.


Temple History


This temple has been built by Nindraseer nedumaran, a pandiyan king .He was also called as Arikesavan or Koon pandiyan and the village thus derives its name. The temple was built around 1500+ years ago. Subsequently the temple was renovated and rebuilt by First Sadayawarman Kulasekara Pandian during 12-13th Century.                                                           


Temple Deities


Lord Shiva


Lord Shiva is known by the name of Ariyanathar, meaning rare to be found Lord. There is also Another shiva linga which has been worshipped by Kubera, the lord of wealth. It is called as Kubera Linga.


Goddess


Goddess here is known by the name of Bruhan Nayaki or Periya Nayaki ( Bruhan or Periya means Big – Here it signifies the enormous compassion of the divine mother).


Medha Dakshinamoorthy


Lord Dhakshinamoorthy in this temple is one of the five guru stalangal. The other four are in Thiruvidaimaruthur, Attalanallur, Thenthirubhuvanam, Idaikkaal. In our temple, Lord Dhakshinamoorthy poses like blessing his devotee with his left hand and right hand with a small sign in it.


Jyeshta Devi


Lord jeshtadevi in this temple is believed to cure the maanthi (sevvaai thosham). Recently, hundreds of families visited ourtemple to do the respective poojas


. The other deities are


• Lord Mukkurni Vinayaka (Like in Madurai Meenakshi Temple)

• Jura devar – This form of Lord Shiva is with 3 legs and is worshipped to get rid of all illness.

• Saptha kanya – Bramhi, Mahaswari, Vaishnavi, Kaumari, Varahi, Narasimhi,Chamundi

• Seperate shrine for Shani bhagavan

• Temple's thala virusham- Nelli maram (Amla, Gooseberry) is located behind the Shiva shrine.


For more details contact

Prakash - 9944326688

Sivaya Namaha - 9884126417




*🛕 குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் 🙏*


நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள ஹரிகேசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத அரியநாதர் திருக்கோயில். சுமார் 1,500+ ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், குபேரனே இத்தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார். இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் ஹரிகேசநல்லூர் என்றழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


ஆலயத்தின் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி. அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகமக் கோயிலுக்குரிய சூரியன், சந்திரன் ஜுரதேவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலது காலின் மீது மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியிருக்கிறார். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


இவை அனைத்தையும் விட முக்கியமானது, ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது அவர் ஹரிகேசநல்லூரில்தான் வந்து விழுந்தாராம். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் ஹரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த ஹரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.


வெளிச் சுற்றுப்பிராகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவி  தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்துக்கொண்டு சன்னிதி கொண்டிருக்கிறாள்.  சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சன்னிதியை சிவாலயங்களில் காண முடியாது.  ஆனால், இக்கோயிலில் பெரிய திருவுருவத்துடன் சன்னிதி கொண்டிருக்கிறாள். ஜேஷ்டா தேவி இங்கே சன்னிதி கொண்டு அருள்பாலிப்பதால்  இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் வழிபடப்படுகிறது.


அதேபோல, வடக்குச் சுற்றில் இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசநல்லூர் அமைந்துள்ளது.


மிகத்தொன்மையான இந்தக் கோயிலின் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு *அடுத்த மாதம், அதாவது ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.* *ஜூலை 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.*


மிகச் சிறப்பு வாய்ந்த, தொன்மையான குபேரன் வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்த இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று குபேரன் வழிபட்ட சிவனையும், குபேரனையும் வழிபட்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்