Temple info -1720. Rajagopalaswamy Temple, Kumbakonam. ராஜகோபால சுவாமி கோயில், கும்பகோணம்

 Temple info -1720

கோயில் தகவல் -1720












Rajagopala Swami Temple, Kumbakonam


This Temple is facing towards east with three tiered Rajagopuram. Presiding Deity is called as Rajagopala Swamy. He is gracing from the sanctum with his consorts Rukmini and Sathyabama. His posture is similar to Mannargudi Rajagopala Swamy. Mother is called as Sengamalavalli. She is housed in a separate shrine. Her Shrine is situated to the right side of the sanctum.


There is a shrine for Srinivasa Perumal to the left side of the sanctum. He is gracing the devotees with four hands holding Shanga and Chakram. There are shrines for Anjaneya and Garuda in the Temple premises. Theertham associated with this Temple are Potraamarai Tank, Cauvery River and Arasalaru.


Festivals

Aadi Pooram, Navaratri, Masi Brahmotsavam, Akshaya Tritiya, Garuda Sevai and monthly Rohini Star days are the festivals celebrated here.


Religious Significance


Maha Maham Festival:

Shiva Temples:

Twelve famous Shiva temples in and around Kumbakonam participate in the famous Maha Maham festival during which Theerthavari happens in the Mahamaha Tank. This festival is celebrated once in 12 years in Kumbakonam.


These 12 Shiva temples are:

1. Kasi Viswanathar Temple, Kumbakonam

2. Aadhi Kumbeswarar Temple, Kumbakonam

3. Someswarar Temple, Kumbakonam

4. Nageswarar (Vilvavaneswarar) Temple, Kumbakonam

5. Kalahasteeswarar Temple, Kumbakonam

6. Gauthameswarar (Upaveethanathar) Temple, Kumbakonam

7. Koteeswarar Temple, Kottaiyur

8. Sakkottai Amirthakalasa Nathar Temple, Kalayanallur

9. Banapureeswarar Temple, Kumbakonam

10. Abhimukeswarar Temple, Kumbakonam

11. Aadhi Kambatta Visvanathar Temple, Kumbakonam 

12. Ekambareswarar Temple, Kumbakonam

Of them 10 temples are in Kumbakonam. The processional deities of these temples come to this tank during festival days.

Vishnu Temples:

Also, 5 Vaishnava temples from Kumbakonam also participate in this festival. However, the Theerthavari happens in the river Kaveri instead of the Theerthavari in Mahamaha tank.

These Vaishnava temples are:

1.    Saarangapani Temple, Kumbakonam

2.    Chakrapani Temple, Kumbakonam

3.    Ramaswamy Temple, Kumbakonam

4.    Rajagopalaswamy Temple, Kumbakonam

5.    Aadhi Varaha Perumal Temple, Kumbakonam


Connectivity


The Temple is located at about 2 Kms from Kumbakonam Bus Stand and 3 Kms from Kumbakonam Railway Station. Kumbakonam is well-connected by road and rail with the rest of India. Kumbakonam is located at about 6 Kms from Thirunageswaram, 8 Kms from Patteeswaram, 9 Kms from Thiruvidaimarudur, 9 Kms from Nachiyar Koil, 15 Kms from Papanasam, 34 Kms from Mayiladuthurai, 35 Kms from Thiruvaiyaru, 40 Kms from Thanjavur, 42 Kms from Thiruvarur, 88 Kms from Trichy, 101 Kms from Trichy Airport and 283 Kms from Chennai.

By Road:

There are regular government and private bus services to Chennai, Thanjavur, Mannargudi, Trichy, Chidambaram, Tiruppur, Mayiladuthurai, Nagapattinam, Coimbatore, Palani, Thoothukudi, Madurai, Sivagangai, Puducherry and Tirunelveli. The Karnataka State Road Transport Corporation (KSRTC) operates daily services from Bengaluru and Mysuru to Kumbakonam. 

By Train:

Kumbakonam is connected by rail with most important towns and cities in South India. The Mysuru – Mayiladuthurai Express connects Kumbakonam with Mysuru and Bengaluru. There are regular express trains that connect Kumbakonam with major cities in the state like Chennai, Coimbatore, Madurai and Trichy. There are passenger trains that connect Kumbakonam with Thanjavur, Trichy, Chidambaram and Mayiladuthurai.

By Air:

The nearest domestic and international airport is located at Trichy.


Thanks

Ilamurugan's blog



கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயில்


சுமார் 500 வருடங்கள் பழைமையான கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயில் தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் மையப் பகுதியான பெரியகடைத்தெருவில் அமைந்துள்ளது. கும்பகோணம் தோப்புத்தெருவில் இன்னொரு ராஜகோபாலசுவாமி கோயில்உள்ளது.


தல வரலாறு


கோயில் சிறியதாயினும் மிகவும் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. இறைவன் திருமேனியும், தாயார் திருமேனியும் அழகே உருவாக அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள கடைத்தெருவாக இருப்பதால் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இக்கோயிலின் முக்கிய திருவிழா 12 கருடசேவையாகும்


மூலவர், தாயார்


இக்கோயிலில் உள்ள மூலவர் ராஜகோபாலர் ஆவார். தாயார் செங்கமலவல்லி, ருக்மணி, சத்தியபாமா. மூலவராக மட்டுமன்றி உற்சவராகவும் ராஜகோபாலர் அழகு வடிவாக உள்ளார்.

'கோ' என்றால் பசு. 'பாலன்' என்றால் சிறுவன். ஏழை, எளியவர்களுக்கு அருள் வழங்கும் கோபாலனாக, ராஜகோபாலசுவாமி இங்கு இருக்கிறார். துணைவியரோடு என்றும் அலங்காரப் பிரியனாக ராஜ கம்பீரம் பொருந்தியவராக எண்ணற்ற அணிகலன்களுடன் இருப்பதைப் பார்ப்பதற்கு மனம் நிறைவாக இருக்கும்.


தீர்த்தம்


பெற்றாமரை, காவிரி அரசலாறு.


கோயில் சிறப்பு


மன்னார்குடி இராஜகோபாலசாமி எந்தக் கோலத்தில் அருள் பாலித்து வருகிறாரோ அதே நின்ற கோலத்தில் ருக்மணி-சத்யபாமா சமேதராக இராஜகோபால ஸ்வாமி கையில் மூன்று வளைவு கொண்ட சாட்டை கயிற்றுடன் கூடிய பொற்கோலை ஏந்தியும் இடக்கையை சத்தியபாமாவின் தோள் மீது வைத்தும் அழகுடன் காட்சி தருகிறார். மூலவரின் அமைப்பைப் போன்றே உற்சவ மூர்த்தியும் அமைந்துள்ளது. இராஜகோபால ஸ்வாமிக்கு வலப்புறம் செங்கமலவல்லி தாயார் தனி சன்னிதி கொண்டு அருள்கிறார். ஸ்வாமி சன்னிதிக்கு இடப்புறம் சங்கு சக்கரத்துடன் நான்கு கரங்களுடன் ஸ்ரீநிவாசப்பெருமாள் தனி சன்னிதி கொண்டுள்ளார். கருடாழ்வார் மற்றும் ஆஞ்சனேயர் தனி சன்னிதி கொண்டு அருள்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீசந்தானகிருஷ்ணர் விக்கிரகத்தை மடியில் வைத்து பிரார்த்தித்து குழந்தைப் பேறு பெறுகின்றனர்.


விழாக்கள்


12 கருட சேவை

தொகு

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, [கு 1] வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.


பிற விழாக்கள்


மாத ரோகிணி நட்சத்திரம், சித்திரை அட்சயதிருதியை, ஆடிபூர திருக்கல்யாணம், ஸ்ரீஜெயந்தி, நவராத்திரி, மாசிபிரம்மோற்சவம் ஆகிய திருவிழாகள் சிறப்பாக நடைபெறுகிறது.


குடமுழுக்கு


இக்கோயிலில் புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, 16.6.2015 அன்று குடமுழுக்கிற்கான பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை புனித கும்பங்கள் புறப்பட்டு, விமானத்தை அடைந்தன. அங்கு கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு, 19.6.2015 வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.


பிற கோயில்கள்


பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்