Temple info -1704. Kailasanathar Temple, Thidianmalai, Thiruvannamalai. கைலாசநாதர் கோயில், திடியன்மலை, திருவண்ணாமலை

 Temple info -1704

கோயில் தகவல் -1704



Then Thiruvannamalai 

is the place where the Siddhas reside and cure diseases.


Thitian malai

 Temples


 After killing Ravana, Ramabiran returned to Ayodhya and performed Ashvamedha Yagya.  A horse with a flag is sent across the country before the Ashvamedha Yaga.  Wherever the horse stopped and rested, Sri Rama later consecrated Shiva Lingams and worshiped them.  This is one  such place where Rama's Ashwamedha yaga-khita rested and rested.


 Thus, the temple built by Rama after consecrating a lingam on the banks of Thithianmalai Pottamarai pond called Kailasanathar Thirukoil.  Worshiping at this shrine, which is hailed as ``South Thiruvannamalai'', is equivalent to worshiping at Tiruvannamalai.


 Thidian village is situated near Usilambatti in Madurai district.  It is here that the Arulmiku Periyanayake Udanurai Sri Kailasanathar Temple is located in a beautiful natural environment.  Some rascals who got cursed by speaking bold words took the pebbles from the Pottamarai pond here and put them in their mouths and crawled up the hill to get rid of their curse.  It is said to be the place where the curse of the Thidians was fulfilled and hence it is known as 'Thidian Hill'


  Main history.


 Moolavar Kailasanathar gives darshan towards the east in the form of lingam.  Goddess  Periyanayaki Amman graces the temple towards the south.  Ganesha on the right and Muruga on the left outside the moolavar sannidhi.  Nandi Deva appears in front of Swami.


 The 'Pradosha Nandi' located here is displayed in the mandapam near the flagpole along with the big thirumeni.  Bala Dandayuthapani, Mukkuruni Vinayagar, Kannimula Ganapathi, Lingotbhavar, Valli Deivanai along with Subrahmaniyar, Chandikeswarar, Durgai, Navagrahagan and Kalabhairava have arisen as prakara deities.


 This place has many mythological features.  This place is one of the most important places where sage Dakshinamurthy, who gave the original form to the Gayatri Mantra, blesses the devotees.   Usually, Dakshinamurthy is seen with the sages of Sanakadi.  But at this place he gives darshan with 14 siddhas in Nandivaganam with Virasana (yoga).  Dakshinamurthy is also known as the place of guruparikara sthalam  as it is the place where Dakshinamurthy sits as the loka guru and preaches to the siddhas.


 When Sage Agasthiya came to South from Kailasam in the North, he stayed in this temple and continued his pilgrimage after worshiping Kailasanathar.  Murugan worshiped this Thala Lord before marrying Deivanai.  Sahadeva, one of the Pandavas, is said to have learned the art of Vana Shastra here.


 Inscriptions of many Pandyan kings have been found in this temple.  During the time of King Thirumalai Nayaka, the lotus pond here was maintained and the boat festival was held.


 Goddess Durga here carries conch wheels with eight hands and stands on  Mahisha.  Devotees say that if you light a ghee lamp and pray at this shrine for seven weeks on Fridays and Tuesdays, marriage obstacles will be removed.


Worship the Dakshinamurthy here for 14 weeks by lighting a lamp and get rid of evil deeds and progress in business.  The head tree of Tidian Hill is the coconut tree.  If you go to Krivalam and sit under this tree for meditation, clarity of thought will come.  It is believed to cure physical and mental ailments.


 It is said that to pray to Kailasanatha for his peace, children's voice-related problems will be solved.  Those who pray for the blessing of children and those who pray for auspiciousness will soon gather if they worship Swami with the Vilva Leaves.


 The villagers believe that the Siddhas live in this mountain.  They also say that the grace of Rama rests on this mountain, and when they _have problems, they say to the mountain, 'Rama... take care of yourself_ '.

நோய்கள் தீர்க்கும், சித்தர்கள் வாசம் செய்யும் தென்திருவண்ணாமலை 


திடியன் மலை

கோயில்கள்


ராமபிரான் ராவண வதம் முடித்து, அயோத்தி திரும்பியதும் அசுவமேத யாகம் செய்தார். அசுவமேத யாகத்துக்கு முன் குதிரையொன்றை கொடியுடன் நாடுமுழுவதும் அனுப்புவர். அவ்வாறு சென்ற குதிரை எங்கெல்லாம் தங்கி நின்று ஓய்வெடுத்ததோ அங்கெல்லாம் ஶ்ரீராமன் பிற்காலத்தில் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்துவழிபாடு செய்தார். அவ்வாறு ராமனின் அசுவமேத யாகக்குதிரை தங்கி இளைப்பாறிய இடம் திடியன்மலை.


அவ்வாறு, திடியன்மலை பொற்றாமரைக் குளத்தின் கரையில் லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமன் எழுப்பிய கோயிலே கயிலாசநாதர் திருக்கோயில். `தென் திருவண்ணாமலை' எனப் போற்றப்படும் இந்தத் திருத்தலத்தில் கிரிவலம் செய்வது திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய இணையானது.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது திடியன் கிராமம். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில். தடித்த வார்த்தைகளைப் பேசி சாபம் பெற்ற சில முரடர்கள், தங்களின் சாபம் தீர இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் இருந்த கூழாங்கற்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மலையை வலம் வந்து சாபம் தீர்ந்தனர். தடியர்கள் சாபம் தீர்ந்த தலம் ஆதலால் அது 'திடியன் மலை' என்று பெயர் பெற்றது என்கிறது

 தல வரலாறு.


மூலவர் கயிலாசநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி தரிசனம் கொடுக்கிறார். அம்மாள் பெரியநாயகி கோயில் தெற்கு நோக்கி அருள்கிறாள். மூலவர் சந்நிதிக்கு வெளியே வலது புறம் விநாயகரும் இடதுபுறம் முருகனும் அருள்கின்றனர். சுவாமிக்கு எதிரே நந்திதேவர் காட்சிகொடுக்கிறார்.


இங்கு அமைந்திருக்கும் 'பிரதோஷ நந்தி' பெரிய திருமேனியோடு கொடிமரத்தின் அருகே இருக்கும் மண்டபத்தில் விளங்குகிறது. பால தண்டாயுதபாணி, முக்குருணி விநாயகர், கன்னிமூல கணபதி, லிங்கோத்பவர், வள்ளி தெய்வானையுடனும் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், துர்கை, நவகிரகங்கள், காலபைரவர் ஆகியோர் பிராகார தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர்.


இந்தத் தலம் பல புராணச் சிறப்புகளை உடையது. காயத்ரி மந்திரத்துக்கு மூல வடிவம் கொடுத்த ஞானகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கும் தலங்களில் முக்கியமான தலமாக இத்தலம் திகழ்கிறது. பொதுவாக தட்சிணாமூர்த்தி, சனகாதிமுனிவர்களுடன் காட்சிகொடுப்பார். ஆனால், இந்தத் தலத்தில் 14 சித்தர்களுடன் நந்திவாகனத்தில் வீராசனத்துடன் (யோகம்) தரிசனம் கொடுக்கிறார். தட்சிணாமூர்த்தி லோக குருவாக அமர்ந்து சித்தர்களுக்கு உபதேசிக்கும் தலமாதலால் இது குருபரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.


அகத்திய முனிவர் வடக்கே கயிலாசத்தில் இருந்து தென்னகத்துக்கு வந்தபோது இந்தத் திருக்கோயிலில் தங்கி கயிலாசநாதரை வழிபட்ட பிறகு தன் யாத்திரையைத் தொடர்ந்தார். முருகன், தெய்வானையைத் திருமணம் செய்துகொள்ளும் முன்பாக இந்தத் தல இறைவனை வணங்கி வழிபட்டாராம். பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன், வான சாஸ்திரக் கலையை இங்கு வந்து கற்றதாகச் சொல்லப்படுகிறது.


பாண்டிய மன்னர்கள் பலர் இந்தக் கோயிலில் திருப்பணி செய்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருமலை நாயக்க மன்னர் காலத்தில் இங்குள்ள தாமரைக்குளம் பராமரிக்கப்பட்டுத் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டது.


இங்குள்ள துர்கை அம்மன் எட்டுக்கரங்களுடன் சங்குச் சக்கரங்கள் ஏந்தி, மகிஷன்மீது கால் பதித்து நின்றருளுகிறாள். இந்தச் சந்நிதியில் ஏழு வாரங்கள் வெள்ளி, செவ்வாய் ஆகிய தினங்களில் நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.


இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 14 வாரங்கள் விளக்கு ஏற்றி வழிபட தோஷங்கள் விலகித் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திடியன் மலையின் தலவிருட்சம் நெய்க்கொட்டான் மரம். கிரிவலம் சென்றுவந்து இந்த மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் சிந்தனையில் தெளிவு பிறக்கும். உடல் மற்றும் மனம் சம்பந்தமான நோய்கள் தீரும் என்று நம்பப்படுகிறது.


கயிலாசநாதரை மனமுருக வேண்டிக்கொள்ள, குழந்தைகளுக்கு உண்டாகும் குரல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுபகாரியங்கள் நடக்கப் பிரார்த்திப்பவர்கள் சுவாமிக்கு வில்வ இலை சாத்தி வழிபட்டால் விரைவில் கைகூடும்.


இந்த மலையில் சித்தர்கள் வாழ்வதாக நம்புகிறார்கள் ஊர்மக்கள். மேலும், இந்த மலையின்மீது ராமனின் அருள் வாசம் செய்வதாகவும், தங்களுக்குப் பிரச்னை ஏற்படும்போது, மலையை நோக்கி, 'ராமா... நீயே பார்த்துக்கோ' என்று சொல்வது வழக்கம் என்றும் சொல்கின்றனர்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்