Temple info -1579 Shenbagavalli Poovannanathar Temple, Kovilpatti, Thoothukudi. செண்பகவல்லி பூவண்ணநாதர் கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி
Temple info -1579
கோயில் தகவல் -1579
Shenbagavalli Poovananathar Temple, Kovilpatti, Thoothukudi
Shenbagavalli Amman Temple situated at the backside of Gandhi Stadium is the famous temple in Kovilpatti. The town was developed around this temple only. King Shenbaga Vendhan built the temple. Poovanathaswamy, a form of Lord Shiva is also an important deity along with Shenbagavalli Amman. This temple was patronized by several kings who ruled these areas.
Kala tree is the Thala Virutcham or holy tree of this temple and its theertham is Agasthiya Theertham. As the old name of Kovilpatti was Kovipuri, this temple was earlier also known as Kovipuri Temple. Shenbagavalli Poovananathar temple in Kovilpatti is located at 9°10'22.4"N 77°52'09.0"E or 9.172899, 77.869161.
Mother is named Shenbagavalli. Later, the temple was renovated by Ullamudayan belonging the 10th century. Mother Shenbagavalli Ambal is 7 feet tall gracing her devotees. Though Mother-goddess is in standing form, Alankarams (dressing) is done as if in a sitting form.
Legends
Sage Agasthya killing the demons:
Lord Shiva married Goddess Parvathi in a Grand ceremony which happened in the Himalayas. As there were many who attended the balance in the earth was getting affected due to which the Earth was tilting sinking in the Northern side. To set the balance Right Sage Agasthya travelled towards South. On his journey south, the sage destroyed Vilvalan and Vadhabi who were demons who were torturing the people. The sage had worshiped Lord Shiva here too to get relived of the sin of killing the demons. Agasthya spring was created by him as requested by Sages who resided on the hills of Ponmalai.
Builder of this Temple:
One Vamanan belonging to Shivakuzhu was born as the king of Vembakkottai in the name of Shenbagan as ordered by Nandhi, the bull vehicle of Lord Shiva. He built the temple as advised by the Lord. As the temple is built by king Shenbagan, Mother is named Shenbagavalli. Later, the temple was renovated by Ullamudayan belonging the 10th century.
People worshipped Shiva in this Temple:
The name, Poovananathar was derived from the worship of two snake leaders Thungan and Padhuman. It is said that Lord Vishnu had worshipped Lord Shiva at this temple.
Greatness of Temple
As in Madurai, the importance goes to Goddess Shenbagavalli in this temple. There are two women securities (Dwarapalakis) in the shrine. While the Alankara (dressing) is done in accordance with form (standing or sitting) of the deity in all temples, in this temple the Alankara is done in a sitting form to the Goddess, though the original form is of a standing one. The place has the reputation that Lord Rama worshipped Lord Shiva here. As two snake leaders Chadugan and Paduman worshipped Lord Shiva here with Poovana flowers, the Lord is named Poovananathar.
The Temple
The presiding Deities of this temple are Goddess Parvathi and Lord Shiva. Greater importance is given to the Goddess at this temple. Goddess Parvathi and Lord Shiva are worshiped here as Shenbagavalli and Poovananathar here. The Goddess is 7 feet tall and presents a majestic sight to her devotees. Though the Goddess is in Standing Form she is given Alankara as if she is in sitting position.
Lord Shiva is worshiped as Poovanathar as he was worshiped by Paduman and Chadugan who were snake leaders by offering Poovana flowers. This temple had been constructed by Shenbagan a Vembakkottai King upon the advice of Lord Shiva and his friend Nandhi (bull). As the king has built and worshiped the Goddess here, the Goddess is called as Shenbagavalli or Goddess of Shenbagan.
Festivals
10 day Vasantha Utsavam (summer festival) during May – June, Goddess Bangle festival – Aadi Pooram in July-August, 10 day Purattasi Navarathri in September – October, 12day Wedding festival, Chithirai – theertham Tamil New Year festival in April – May; Thiru Karthikai will be celebrated for 10 days, Thiruppalli celebration during Margazhi, Thai Poosam, Maha Shivarathri during Maasi are the important and main festivals in the temple, besides Deepavali, Pongal and Tamil and English new year days. The crowd in the temple would be huge on new moon, full moon days and on Pradosham days.
Prayers
For total cure of prolonged illness, for wedlock of imagination, children, progress in business, high farm yields, and people place their prayers at the feet of the Lord and Mother and it is firmly believed that prayers do not go in vain.
Besides usual abishek and pujas, devotees light lamps in Ambal shrine, offer vastras and perform milk and sandal abishek to the Lord with dhotis. They also feed the visitors to the temple.
Contact
Sri Shenbagavalli Poovananathar Temple,
Kovilpatti, Tuticorin district,
Tamilnadu – 628 501
Phone: 04632 - 220248 / 225258 / 2520248
Mobile: +91 98656 73929 / 94431 14765
Email: shenpoovanam@gmail.com
Connectivity
Kovilpatti is 96 km from Madurai, 59 from Tirunelveli and 60 km from Thoothukudi. As the place is on the Madurai-Tirunelveli road, plenty of buses are available from both ends. Nearest Bus Stand is Kovilpatti Old Bus Stand, V.O.C. Nagar (only 1.0 km).This will connect all the places to Kovilpatti, Tuticorin etc. Nearest Railway Station is Kovilpatti Junction, Railway pedestrian Cross way (only 4.0 km).This will connect all the places to India. Nearest Airport is located at Thoothukudi and Madurai.
Thanks
Ilamurugan's blog
*கோவில்பட்டி*
*செண்பக வல்லி அம்மன் கோவில் வரலாறு*....!
சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில் சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பக வல்லியம்மன் கோவில் திருத்தலத்தை சுற்றிலும் அமைந் துள்ளது தனிச் சிறப்பான ஒன்றாகும்.
சுமார் 20 கி.மீ. தொலைவில் இருக்கின்ற வெம்பக் கோட்டையை அரசாண்ட செண்பக மன்னன், களாக் காட்டினை வெட்டித் திருத்தி கோயிலும், ஊரும் எழுப்பித்தான் என்று இக்கோயில் தல வரலாறு சொல்கிறது. இவ்வூரி லிருந்து சுமார் 5கி.மீ. தொலைவில் இருக்கின்ற மந்தித்தோப்புசங்கராபதி திருமடத்தில் உள்ள செப்புப் பட்டையம் மூலமாக இவ்வூரானது கலி 4131க்கு முற்பட்டது என்று அறியமுடி கிறது. அதேபோல் இத்திருக் கோயிலை உள்ள முடையான் என்னும் அரசன் புதுப்பித்த ஆண்டை சகனாண்டு 1100 என்று கோயில்புரி புராணத்தின்மூலமாக அறிய முடிகிறது.
புராணச் சிறப்பு...
ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்து மூன்று முப்பத்து நாலாம் (1934) ஆண்டுகளில் இத் திருக்கோயில் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் ஆகியவை பிரதிஷ்டை செய்யப் பட்டதற்கான கல்வெட்டுக் கள், தூண்கள் மற்றும் வாயில்கள் நிறுவப் பட்டதற்கான கல்வெட்டுக் களும் ஆங்காங்கே காணப் படுகின்றன. இத்திருக் கோயில் முழுவதும் கல்வெட்டுக் களினால் கட்டப் பட்டுள்ளதால் இரண்டாம் நரசிம்ம வர்மன் (கி.பி.700) காலத்திற்கு பிற்ப்பட்ட தாகவும் கருதப் படுகிறது.
மேலும் சிவஞான யோகிகள் இயற்றிய கோயில்புரி புராணத்தில் இப்புராண வரலாறுகள் தொகுத்துக் கூறப் படுகின்றன. 18படலங்கள் கொண்ட இந்நூலில் முதல் 16 படலங்களில் இவ் வரலாறுகள் கூறப் பட்டுள்ளன.
அகத்தியர் வந்த வரலாறு:-
சிவனாரின் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணை யில்லா ஈசன் திருமணம் காண யாவரும் வந்து ஒருங்கே கையிலை மலையில் கூடியதால் உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. செண்பக வல்லியம்மன் திருக்கோயில் தலவரலாறு:- அகத்தியரை இறைவன் பணித்தார். அவ்வண்ணம் தென்புலத் திசையில் உள்ள பொன்மலை என்னும் இவ்விடத்தில் களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந் தருளியுள்ள ஈசன்பூவன நாதரை வழிபட்டு விட்டு தவமியற்றி வந்த முனிவர் களைக் கண்டார்.
அம்முனி வர்களின் வேண்டு கோளுக் கிணங்க சிவலிங் கத்திற்கு வடகிழக்கில் பொன் மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடிவரலா யிற்று .அதுவே அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப் பட்டு பின்னர் அதுவே இத்திருக் கோயிலின் திருக் குளமாகவும் காட்சியளிக் கின்றது.
சங்கன் , பதுமன் சந்தேகம் தீர்த்தது:-
முன்னொரு காலத்தில் சங்கன், பதுமன் என்னும் இரு பாம்புத் தலைவர் களுக்கு சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்றஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்கவடிவில் எழுந்தருளிஇருந்த ஈசனைப் பூ வனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்களுக்கு முன் தோன்றிய இறைவன் இன்றுமுதல் இச்சிவலிங் கம் பூவனநாதர் என்று அழைக்கப் படுவார். புன்னைக் காவலில் (சங்கரன் கோவில்) உங்கள் ஐயம்தீர்க்க சிவன் பெரியவன், திருமால் பெரியவளாகி (எம் மனைவி) காட்சியளிப்போம் என்றுரைத் தார்.
செண்பக வேந்தன் வரலாறு...
வெள்ளிமலை சிவக்குழுவில் சிறந்தவனான வாமனன் பெண்மயக்கமுற்று தன்நிலை தாழ்ந்து நந்திதேவரின் சபத்திற்கு ஆளாகி வெம்பக் கோட்டையில் செண்பக மன்னன் என்னும் பெயர்பெற்றுவிளங்கி னான். இவரின் கனவில் இறைவன் தோன்றிய கூறியவாறு பொன்மலைக் காட்டிலிருந்து களாக் காட்டினை வெட்டி லிங்கமாக காட்சியளித்த பூவன நாதருக்குத் தனித்திருக்கோயில் அமைத்தான். அருவிக்கு மேற்கே பிள்ளையார் கோவிலும், அருவிக்குளம், அருவிக்கு தென்மேற்கே வடக்குப் பார்த்தப் பிள்ளையார், அதன் தென்மேற்கே அம்பாளுக்குத் தனிக் கோயிலும் காமிகா ஆகம முறைப்படி அமைத்தான். செண்பக மன்னன் அமைத்ததால் அவன் பெயரையே தனது பெயராகக் கொண்டு அம்பாள் செண்பக வல்லி அருள்பாலித்து வருகிறாள்.
மூர்த்தியின் சிறப்பு...
இத்திருக் கோவிலில் வீற்றிருக்கும் அன்னை செண்பக வல்லி 7அடி உயரத்தில் நின்ற நிலையில் எழில் கொஞ்சும் வடிவில் காட்சித் தருகின்றாள். இப்பகுதி வாழ் மக்கள் வேண்டியதை அருள்கின்ற வேண்டுதல் தெய்வமாக காட்சி தருகிறாள். தன்னை சரணடைந்த மக்கள் துயர்நீக்கும் தெய்வ மாகவும், அவர்களின் வேண்டுதல் களை எல்லாம் வாரி வழங்கும் வள்ளலாகவும் காட்சித் தருகிறாள்.
அம்பாளின் பெயரையே தங்கள் குழந்தை களுக்குச்சூட்டி வாழ்கின்ற நிலையும் இப்பகுதியில் அதிகமாக காணப் படுகின்றது. எல்லாருக்கும்அருள் பாலிக்கின்ற செண்பக வல்லியம்மன் மீது கோவில்பட்டி நீலமணியும் இன்னும் பாடல்கள் பாடியுள்ளனர். கோவில்பட்டி நீலமணியோசெண்பக வல்லி அருள்மாலை, செண்பக வல்லி நூற்றந்தாதி என்னும் இரண்டு நுல்களை எழுதியுள்ளார். இதில் செண்பக வல்லி அருள்மாலை 5ம் பதிப்பு வரை வெளி வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
*முடிசார்ந்த மன்னரும் முடிவில்*
*பிடிசாம்பல்" என்பதை மறவாதிரு மனமே*..!
Comments
Post a Comment