Temple info -1472 Thirunokiya Azhagianathar Temple, Thirupachethi, Sivagangai திருநோக்கிய அழகிய நாதர் கோயில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை

 Temple info -1472

Toகோயில் தகவல் -1472










The famous Shiva temple in Sivagangai district, the place where Lord Shiva created Tulsi, the place where Lord Shiva was worshiped with Lakshmi Devi Tirumal.


 Thirupachetty

Trunokiya_Alaghiyanathar temple


 History of #Marunokkum_Poonguzhali Amman Temple:


 Tirunokya Ajyagnathar Temple is a Shiva temple located in Tiruppachetty village in Sivagangai district of Tamil Nadu. It was formerly known as Vaduganathapuram.


 Diety: Thirunokhya Azagiaya Nathar


 Amman: Marunokkum Poonguzhali amman


 Sthala vriksham: Parijatham


 Theertham: Lakshmi Theertham


 Town: Tirupachetthi


 District: Sivagangai


 State: Tamil Nadu


 Sthala puranam:


 Shiva was angry and burnt manmadhan with fire from forehead.  Manmadhan was burnt to  ashes for awaking shiva for a good cause.  As the world could not bear the heat Brahma gathered Shiva's anger into heat and poured it into the ocean.  A  child was born in the ocean. Brahman named the child Jalandran.


 Jalandran gave a lot of trouble to sages and devas.  The gods told this to Thirumal.  Thirumal felt that in order to destroy him, his wife Brinda's Padivrata must be destroyed.  Thirumal went to Brindai in the guise of Jalandran.  Knowing that Thirumal has come and that he has come to test her Padi Vrat, Brindai throws herself into the fire and dies.  As soon as Brinda died, Jalandran lost his strength and lost to Shiva.


 Realizing this, Shiva drew a circle on the earth and told Jalandharan to lift it.  When the powerless Jalandran lifted the circle, it turned into a giant wheel and destroyed it.  After this Thirumal mixed in the ashes of the Brindai.  Vaikundam became dark due to this.  Lakshmi lwas sorry.


Knowing this, Parvati said to Mahalakshmi, "You can attain your husband if you worship Putridang Kondar who resides as Swayambu Murti in Parijata Forest, staying in Unnatapuri called Tirupachetti on earth."  Lord Shiva was pleased to come in front of  Thirumal and lakshmi as they  stayed for a mandala in Tirupapasethi and did penance.  Then both of them went to the nearby Vegavati (Vaikai) river and bathed and worshiped Lord Shiva.


 Shiva gives some seeds to Thirumal and asks him to sprinkle them on the ashes of the Brindai.  Tulsi appeared from it.  Thirumal took the tulsi and consecrated it to Lord Shiva and wore the rest as a garland around his neck.  Such an event took place on a Monday.  So even today, Tulsi is offered to Lord Shiva on Mondays in this temple.


 Once upon a time Emperor Nala was in exile suffering from the loss of his country and family.  Then he came to this shrine and immersed himself in the tirtha  created by Mahalakshmi here and rested on a nearby mound.

 At her Lakshmipuram, where she saw her thirumal again, a king came to the earthen mound she had made, and when she came to know that he was saddened, Thiruma also tried to relieve the king's grief.

 Mahalakshmi also appeared in Nalachakaravarthy's dream along with her husband Tirumal and told Nalachakaravarthy that she had regained her husband and her wealth by coming to this shrine and asked Nalamaharaj to worship in the same way.

 And since you have sani dosha, she advised him to go to Thirunallar and bathe in the theertha there and worship the Shivalinga there.


As per Mahalakshmi's blessing, Nalamaharajan also went to Tirunallaru, bathed in the theertha there, removed his clothes and dressed in new clothes and worshiped the Shiva lingam.  Thus he got back his wife and country.

 Having regained his wife and country, Nalamakarasa reached Ilakshumipuram and built a temple there to worship the Shivalinga.


 To the west of that temple, Bhudevi Sridevi Samade built and worshiped the Srinivasa Perumal temple at the place where he stood and blessed Thirumal and Thirumagal.

 He worshiped these two temples by donating the lands surrounding the temple.


 The scripts left by the Jains in the Vaigai river came to this Lakshmipuram.


 Tirugyanasambandar advocated with the Jains to restore Saivism in Madurai.

 The scripts placed by Tirugnanasambandar in his debate with jains remained alive untouched by the fire.  But the scripts built by the Jains were reduced to ashes in the fire.

 Seeing this, the Jains invited Tirungnasambandar to Punalavada.

 At Punalvada, the Samanas left their and the inscriptions of Tirunnasambandar in the Vaigai river.

 Thirunnasambandar's Pathikam braved the river flood and went to a place called Thiruvedakam.

 The goats of the Jains who were swept away by the river went to Laksumipuram.

 As it was the place where Tiruppas lived, Ilakshumipuram came to be known as Tirupachetthy.


 Sthala Specialties:


 Vilvam is the flower in Shivalayam for archana but in Marunokum Boonguzhali Sametha Thirunokya Acharya Nathar Temple in Tiruppachetty, Sivagangai district, they offer tulsi to Lord Shiva on Mondays.  Nataraja, lord of music, is here in the form of music as Nataraja.  An emerald lingam is located here.


Here, special pujas are performed for Kalabhairava on Teipirai Varipirai Ashtami days.

 Visiting him on this day will bring wealth in life.

 Here there is  double dog vehicle for Kalabhairava.

 Thus those who worship him will get great protection and a grateful relatives and friends.


 General Information:


 It is believed that visiting this 1300-year-old temple built and worshiped by Nalachakaravarthy will increase wealth.


 Prayer:


 If there is a difference of opinion between husband and wife when they are married, it is enough to worship the Azhagiya Nathar.  Nalamagarajan worshiped this Lord and got back his estranged wife and child.  Mahalakshmi itself is a place of worship, so those who visit here get married.  Those who wish for child birth, Shani dosha removal, Kali dosha removal, Brahmakati dosha removal come and visit this place for best results.


 Courtesy:


 It is believed that wealth will increase if you come to this ancient place.  When the prayer is completed, they anoint the Lord and do what they can by giving material aid and alms.


 Based on science:


 Nataraja, lord of music, is here in the form of music as Nataraja.  An emerald lingam is located here.


 Opening Hours:


 Open from 7 AM to 12 PM and 5 PM to 8 PM.


Directions:


 This town is in Sivagangai district which is famous for Veechuaruval.

 It is 30 km from Madurai on the south bank of Vaigai River on the National Highway from Madurai to Rameshwaram.

 All buses from Madurai Mattuthavani Bus Station to Manamadurai, Paramakkudy, Ramanathpuram, Mandapam, Rameshwaram pass through Thirupachetty.

 A large number of city buses ply from Madurai Periyar Bus Stand.

 Trains from Madurai to Rameshwaram halt at Tirupachetty.

 If you are traveling by train from Chennai to Rameshwaram, you can get down at Manamadurai and take a train or bus to Tiruppachetty.


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவத்தலமான , 

சிவபெருமான் துளசியை உருவாக்கிய தலமான, லட்சுமி தேவியார் திருமாலுடன் இணைய சிவனை வழிபட்ட தலமான

#திருப்பாச்சேத்தி

#திருநோக்கிய_அழகியநாதர்

#மருநோக்கும்_பூங்குழலி அம்மன் திருக்கோயில் வரலாறு:


திருநோக்கிய அழகியநாதர் கோயில், தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி கிராமத்தில் அமைந்த சிவன் கோயிலாகும்.இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது.


மூலவர்:திருநோக்கிய அழகிய நாதர்


அம்மன்:மருநோக்கும் பூங்குழலி


தல விருட்சம்:பாரிஜாதம்


தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம்


ஊர்: திருப்பாச்சேத்தி


மாவட்டம்: சிவகங்கை


மாநிலம்: தமிழ்நாடு


தல வரலாறு:


சிவன் நெற்றிக்கண் கொண்ட கோபக்காரர். மன்மதன் ஒரு நல்ல காரியத்திற்காக சிவனை எழுப்பப்போக, அவனையே எரித்து சாம்பலாக்கி விட்டவர். இவர் அடிக்கடி கோபப்பட்டால் உலகம் தாங்காது என்பதால், பிரம்மா சிவனின் கோபத்தை அனலாக திரட்டி கடலுக்குள் சென்று புகுத்தி விட்டார். அந்த கோப அனல் சிறு குழந்தையாக ஜலத்தில் பிறந்தது. பிரமன் அந்த குழந்தைக்கு ஜலந்திரன் என பெயரிட்டார்.


ஜலந்திரன் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் மிகவும் தொந்தரவு கொடுத்தான். இதை தேவர்கள் திருமாலிடம் தெரிவித்தனர். இவனை அழிக்க வேண்டுமானால் இவனது மனைவி பிருந்தையின் பதி விரதத்தை முதலில் அழிக்க வேண்டும் என திருமால் உணர்ந்தார். (பிருந்தை என்றால் துளசி என்று பொருள்). திருமாலே ஜலந்திரன் உருவெடுத்து பிருந்தையிடம் சென்றார். வந்திருப்பது திருமால் என்பதையும், தனது பதி விரதத்தை சோதிக்க அவர் வந்திருப்பதையும் அறிந்த பிருந்தை தீயில் புகுந்து உயிரை விட்டாள். பிருந்தை இறந்தவுடனேயே ஜலந்திரன் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்று போனான்.


இதனை உணர்ந்த சிவன் பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து அதை ஜலந்திரனிடம் எடுக்க கூறினார். வலிமையில்லாத ஜலந்திரன் அந்த வட்டத்தை தூக்கிய போது அது மாபெரும் சக்கரமாக மாறி அழித்து விட்டது. இதன் பின் பிருந்தையின் சாம்பலில் கலந்தார் திருமால். இதனால் வைகுண்டம் இருண்டது. திருமகள் வருந்தினாள்.


இதனை அறிந்த பார்வதி, மகாலட்சுமியிடம், “பூமியில் திருப்பாச்சேத்தி எனப்படும் உன்னதபுரியில் தங்கி பாரிஜாத வனத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் புற்றிடங் கொண்டாரை சிவ தீர்த்தத்தால் வழிபட்டால் உன் கணவனை அடையலாம்,” என்றாள். திருமகளும் திருப்பாசேத்தியில் ஒரு மண்டலம் தங்கியிருந்து அப்படியே செய்ய சிவன் மகிழ்ந்து திருமகளுக்கும் திருமாலுக்கும் காட்சி தந்தார். பின் இருவரும் அருகிலுள்ள வேகவதி (வைகை) ஆற்றுக்கு சென்று நீராடி சிவனை பூஜை செய்து வழிபட்டனர்.


சிவன் சில விதைகளை திருமாலிடம் கொடுத்து பிருந்தையின் சாம்பலில் தூவ சொல்கிறார். அதன்படியே செய்ய அதிலிருந்து துளசி தோன்றியது. திருமால் அந்த துளசியை எடுத்து சிவனை அர்ச்சித்து விட்டு மீதியை மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது ஒரு சோமவார நாளில் தான். எனவே இன்றைக்கும் இந்த சிவாலயத்தில் சோமவாரத்தில் சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.


ஒரு முறை நளச் சக்கரவர்த்தி தனது நாட்டையும் குடும்பத்தையும் இழந்து தவித்து வனவாசத்தில் இருந்தான். அப்போது அவன் இந்தத் திருத்தலத்திற்கு வந்து இங்குள்ள மகாலெட்சுமியில் உருவாக்கப் பெற்ற தீர்த்தத்தில் மூழ்கி அருகில் இருந்த மண்மேட்டில் தங்கியிருந்தான்.

தனது லெட்சுமிபுரத்தில், தான் தனது திருமாலை மீண்டும் கண்ட இடத்தில்,தான் உருவாக்கிய மண்மேட்டில்  மன்னன் ஒருவன் வந்து மனவருத்தத்துடன் இருப்பதை அறிந்த திருமகளும் மன்னனது வருத்தத்தைப் போக்கத் திருவுள்ளம் கொண்டாள்.

மகாலெட்சுமியும் தனது பதியான திருமாலுடன் இணைந்து நளச்சக்கரவர்த்தியின் கனவில் தோன்றி, இத் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்ததால் தான் தனது கணவனையும் தனது செல்வத்தையும் மீண்டும் பெற்றது பற்றி எடுத்துக் கூறி,நளமகாராசனையும் அவ்வாறே வழிபடச் சொன்னாள்.

மேலும் உனக்குச் சனிதோஷம் உள்ளதால் அதனைப் போக்கத் திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சிவலிங்கதை வழிபடும் படியும் அறிவுறுத்தினாள்.


மகாலெட்சுமி அருளிச் செய்தபடியே, நளமகாராசனும் திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி உடுத்திய உடையை நீக்கிப் புத்தாடையணிந்து சிவலிங்கத்தை வழிபட்டான்.  இதனால் தனது மனைவியையும் நாட்டையும் திரும்பப் பெற்றான்.

மனைவியையும் நாட்டையும் மீண்டும் பெற்ற நளமகாராசன் இலட்சுமிபுரத்தை அடைந்து, அங்குள்ள சிவலிங்கத்திற்குக் கோயில் கட்டி வழிபட்டான்.


அக் கோயிலின் மேற்கே திருமாலுக்கும் திருமகளுக்கும் நின்று அருள் செய்த இடத்தில் பூதேவி ஸ்ரீதேவி சமதே மலைமண்டல ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலைக் கட்டி வழிபட்டான்.

இந்த இரண்டு கோயில்களுக்கும் சுற்றிலும் இருக்கும் வயல்களைத் தானமாக வழங்கி வழிபட்டான்.


இவ்வாறாகச் சிறப்புப் பெற்றிருந்த இந்த இலட்சுமிபுரத்திற்கு வைகை ஆற்றில் சமணர்கள் விட்ட ஏடுகள் வந்து சேர்ந்தன.


மதுரையில் சைவத்தை மீட்டு எடுப்பதற்காகத் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் வாது செய்தார்.

அனல்வாதத்தில் திருஞானசம்பந்தர் இட்ட ஏடுகள் தீயினால் தீண்டப்பெறாமல் உயிருடன் இருந்தன. ஆனால் சமணர்கள் இட்ட ஏடுகள் தீயில் சாம்பலாகின.

இதைக் கண்ட சமணர்கள் புனல்வாதத்திற்குத் திருஞானசம்பந்தரை அழைத்தனர்.

புனல்வாதத்தில் சமணர்களது ஏடுகளையும் திருஞானசம்பந்தரின் பதிகங்களையும் வைகை ஆற்றில் விட்டனர்.

திருஞானசம்பந்தரின் பதிகம் ஆற்று வெள்ளத்தைத் எதிர்த்துச் சென்று திருவேடகம் என்ற இடத்தைச் சென்று சேர்ந்தன.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சமணர்களது ஏடுகள் இலட்சுமிபுரத்தைச் சென்று சேர்ந்தன.

திருப்பாக்கள் சேர்ந்த இடமானதால் இலட்சுமிபுரமானது திருப்பாச்சேத்தி எனப் பெயர் பெற்று விளங்குவதாயிற்று.


தல சிறப்பு:


சிவாலயம் என்றாலே அர்ச்சனைக்கு வில்வம் தான். ஆனால், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியிலுள்ள மருநோக்கும் பூங்குழலி சமேத திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் சிவனுக்கு சோமவாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். இசைக்கு அதிபதியான நடராஜர் இங்கு ஒலிவடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். மரகதத்தால் ஆன லிங்கம் இங்கு அமைந்துள்ளது.


சுயம்பு லிங்கம் - மகாலெட்சுமியால் பூசிக்கப் பெற்றது.

நளமகாராசனால் கோயில் கட்டப் பெற்று பூசிக்கப் பெற்றது.

நன்றிக்கடனாக நளமகாராசனால் கட்டப்பெற்ற விமானத்திற்குப் "புண்ணியவிமானம்' என்று பெயர். இந்த விமானத்தைத் தரிசித்தவர்களது பாவங்கள் நீங்கி, புண்ணியம் சேரும்.


தலபெருமை:


இசைக்கு அதிபதியான நடராஜர் இங்கு ஒலிவடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். சிவாலயம் என்றாலே அர்ச்சனைக்கு வில்வம் தான். ஆனால், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியிலுள்ள மருநோக்கும் பூங்குழலி சமேத திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் சிவனுக்கு சோம வாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். மரகத்தால் ஆன லிங்கம் இங்கு அமைந்துள்ளது.


இங்கு,காலபைரவருக்கு தேய்பிறை வளர்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

இந்நாளில், இவரைத் தரிசித்தால் வாழ்வில் செல்வவளம் கொழிக்கும்.

இங்கு காலபைரவருக்கு இரட்டை நாய் வாகனம்.

இதனால் இவரை வணங்குவோருக்குச் சிறந்த பாதுகாப்பும், நன்றி மிகுந்த உறவினரும் நண்பரும் கிடைப்பர்.


பொது தகவல்:


நளச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டு பூஜிக்கப்பட்ட 1300 ஆண்டு பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.


பிரார்த்தனை:


திருமணமாகி கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அழகிய நாதரை வழிபட்டால் போதும். பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். நளமகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்தான். மகாலட்சுமியே வழிபட்ட தலம் ஆதலால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், சனி தோஷம் நிவர்த்தி, கலி தோஷ நிவர்த்தி, பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி வேண்டுபவர்களும் இத்தலம் வந்து தரிசனம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும்


நேர்த்திக்கடன்:


பழமையான இத்தலத்திற்கு வந்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.


விஞ்ஞானம் அடிப்படையில்:


இசைக்கு அதிபதியான நடராஜர் இங்கு ஒலிவடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். மரகதத்தால் ஆன லிங்கம் இங்கு அமைந்துள்ளது.


திறக்கும் நேரம்:


காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


செல்லும் வழி :


வீச்சுஅருவாளுக்குப் பெயர்பெற்ற இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

மதுரையிலிருந்து இராமேச்சுரம் செல்லும் தேசியநெடுஞ்சாலையில், வைகை ஆற்றின் தென்கரையில், மதுரையிலிருந்து 30கி.மீ.தூரத்தில் உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை, பரமக்குடி,இராமநாதபுரம், மண்டபம், இராமேச்சுரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருப்பாச்சேத்தி வழியாகச் செல்லும்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அதிகமான எண்ணிக்கையில் நகரப்பேருந்துக்கள் செல்கின்றன.

மதுரையிலிருந்து இராமேச்சுரம் செல்லும் தொடர்வண்டிகள் திருப்பாச்சேத்தியில் நின்று செல்கின்றன.

சென்னையிலிருந்து இராமேச்சுரம் செல்லும் தொடர்வண்டியில் பயணம் செய்தால், மானாமதுரையில் இறங்கி திருப்பாச்சேத்திக்குத் தொடர்வண்டியில் அல்லது பேருந்தில் செல்லலாம்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்