Temple info -1470. Perambur Subramanya swamy temple, Nagapattinam. பெரம்பூர் சுப்ரமணியசாமி கோயில், நாகபட்டினம்
Temple info -1470
கோயில் தகவல் -1470
Perambur(Nagapattinam) Subramanyaswamy Temple
Perambur Subramanyaswamy Temple (Nagapattinam District): Perambur or Pirambur is around 14 Kms from Mayiladuthurai on the Nagapattinam Road via Sankaranpandal. ( I have mentioned Nagapattinam District here to avoid confusion with Perambur, Chennai’s suburb). We are visiting the well known Subramanyaswamy temple in this village. The temple is open from 6.30 to 11.30 am and from 4.30 to 8.30 pm. The contact telephone numbers are 04364 253202 and 094866 31196. At the entrance is a five tier gopuram and the temple is having 2 prakarams.
Though we call it as Subramanyaswamy temple, it is actually a Shiva Temple of Shri Akilandeswari ( Anandavalli) sametha Shri Brahmapureeswarar ( Jambunathar/Jambukeswarar). It is one of the Vaipu sthalams in Appar Thevarams. Generally in Shiva temples, Shiva shrine is the main shrine with Subramanya in the northwest corner. However, as the prominence is for Subramanya, He occupies the central shrine and His parents are installed in the north west corner of the temple. This is a rarity not seen in other Shiva temples.
As per legends, after slaying Soorpadman, Subramanyan converted him into a cock and peacock, with the former in His flag and the latter as His mount/vehicle. After his destruction, Sooran wanted to get Gnana Upadesam ( teaching ) from Murugan and it was done here. Brahma was punished by Shiva for having participated in the Daksha yagnam. Later, He got relief from the Lord after installing Veerateswarar at Vazhuvur and prayed there. However, He felt that He was not sufficiently ingrained with Gnanam. Shiva advised Him to visit this place and pray. When He prayed here (hence the name of the Lingam is Brahmapureeswarar), He was directed to Subramanya.
The six headed Lord taught Gnanam to both Brahma and the peacock. Since Brahma got enlightened, this place came to be called Brahma Mangala Puram. The name underwent lot of changes resulting in the present name of Perambur/Pirambur. Another explanation is that since this place was once full of cane trees, it came to be called Pirambur (cane in Tamil is Pirambu).
Since Subramanya had taken the role of Guru for imparting Gnanam, the Dakshinamurthy and Chandikeswarar in this temple have the prefix Guha, which is associated with Murugan. (Readers may be knowing that the Mudra of Shri Muthuswamy Deekshitar in his krithis is Guruguha as he was a staunch Muruga devotee). The importance to Murugan is further emphasized by having Idumban, along with Ganesa, at the entrance. While Guha Dakshinamurthty ( Chandikeswarar is also called Guha Chandikeswarar here as He sits on the side of the main shrine where Guhan is present) and Durga are in the Koshta, the other deities are in the prakaram. Peacock is at the feet of Dakshinamurthy instead of Muyalagan, seen in other temples. Special prayers are offered to Durga on Sundays, especially in the Tamil month of Thai (Jan-Feb).
In the main shrine the six headed, 12 handed Subramanyar is present with Valli and Devasena. He sits on the peacock. Performing Shanmuka Archanai to Him yields good benefits to the devotee. Unlike other temples, here the head of the peacock is on the left side. Apart from being present with Subramanya, Valli and Devasena are also having separate shrines. The other shrines are in the prakaram. One Shri Milagu Chettiar (Milagu Siddhar) did lot of works in this temple. Hence his idol is kept near the Nandi. Note: Some of the inputs were collected from various websites.
Thanks
Saikrishnan
*பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்*
நாகப்பட்டனம் மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பழமையான முருகத் தலமாகும்.
பங்குனி உத்திர நாளில் இத்தலத்தை தரிசிக்கலாம். தலவரலாறு: தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மன மிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னு மிடத்தில் வீரட்டேஸ் வரர் என்னும பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப் பெற்றார். அத்துடன் இத்தலத்தின் அருகில் உள்ள பிரம்ம மங்கள புரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிர மணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார். தேவர் களையும், முனிவர் களையும் துன்புறுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அவனது உடலின் ஒரு பகுதி மயிலாக மாற்றப்பட்டது. அது இத்தலத்திற்கு வந்து ஞான உபதேசம் பெற்றது. ஞானகுரு: பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், இத்தல முருகன் ஞான குருவாக விளங்கு கிறார்.பெரும் பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பி யிருக்கும். ஆனால் இங்கு முருகனின் இடது பக்கம் திரும்பி யிருப்பது சிறப்பம்ச மாகும்.ஆறுமுகன்: முருகப் பெருமான் ஆறுமுகம், 12 திருக்கரங் களுடன், மயில் மீது அமர்ந்து வள்ளி தெய் வானையுடன் அருள்பாலிக் கிறார். பிரகாரத்தில் குக தட்சிணா மூர்த்தி, குக சண்டிகேஸ் வரர் அருளு கின்றனர். இது தேவார வைப்புத் தலமாக போற்றப் படுகிறது. தை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்குள்ள துர்க்கைக்கு விளக்கு பூஜை செய்யப் படுகிறது. பிரார்த்தனை: திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் வழிபாடு செய்கிறார் கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும் என்பது ஐதீகம். தந்தை ஸ்தானத்தில் மகன்: பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் தனி மூலஸ் தானத்தில் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருள் பாலிப்பார்கள். சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு சன்னதி இருக்கும். ஆனால் இங்கு முருகன் குருவாக விளங்கு வதால், அவரே மூலவராக கிழக்கு நோக்கியும், தெய்வானை தனி சன்னதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக் கின்றனர். முருகன் சன்னதியின் பின்புறம், குபேரலிங் கேஸ்வரர் கிழக்கு நோக்கியும், ஆனந்தவல்லி அம்மன் தெற்கு நோக்கியும் அருளு கின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படு கிறது. இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. கோயில் அமைப்பு: பிரகாரத்தில் ஆதி விநாயகர், மகாவிஷ்ணு, ஐயப்பன், துர்க்கை, சண்டிகேஸ் வரர், மகாலட்சுமி, பிரம்மா, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலை, 7 கலசத்துடன் கூடிய பிரமாண்ட கோபுரம், இரண்டு பிரகாரங்கள், அர்த்த மண்டபம், மகாமண்டபம் என கோயில் பெரியதாக அமைந் துள்ளது. கோயில் வாசலில் இடும்பன் சன்னதி உள்ளது. தல விருட்சமாக பிரம்பு மரமும், தீர்த்தமாக ஸ்ரீபுஷ்கரிணியும் அமைந் துள்ளது. மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை மயில் வாகனம் அருகில் வைக்கப்பட்டு, திருவாதிரை நட்சத்திர நாளில் அபிஷேகம் செய்யப் படுகிறது.
மயிலாடு துறையி லிருந்து சங்கரன் பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பஸ்களில் 15 கி.மீ., சென்றால் பெரம்பூரை அடையலாம்.
Comments
Post a Comment