Temple info -1469 Athmalingeswarar Temple, Punganur, Vellore ஆத்மலிங்கேஸ்வரர் கோயில், புங்கனூர் வேலூர்

 Temple info -1469










கோயில் தகவல் -1469


*Atmalingeswarar Temple Punganur*


 Arulmiku Atma Lingeswarar Temple

 Punganur, Vellore


 In this 800 year old temple, Uma Maheshwari Sametha Atma Lingeswarar resides.  When Kanchi Periyavar came to Punkanur 70 years ago, the devotees were told that there is an ancient Shiva temple in this town.  Everyone was surprised to when he said that they should visit it immediately.  When they tried to search, they found the temple of Atma Lingeswarar in a dilapidated state.  Kanji Periyava, who came to the temple, worshiped Lord Shiva and said that there may be many more Shivalingams in the area.


 Phunganur Shiva has arisen as Swayambu Murthy.  It is believed that the Lord rises as Swayambu Murthy at the place where the divine power manifests itself.  The Lord is the giver of spiritual knowledge.  Ambika's name is Uma Maheshwari.  Igabara Sau gives blessing to the life of the world.  If you perform abhishekam and worship here during Pradosha for Lord Shiva, the obstacles will be removed and the auspicious event will go well in the family.


*ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் புங்கனூர்*


அருள்மிகு ஆத்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில்

புங்கனூர், வேலூர்


800 ஆண்டு களுக்கும் பழமையான இந்தக் கோவிலில், உமா மகேஸ்வரி சமேத ஆத்ம லிங்கேஸ்வரர் வீற்றிருக் கிறார். காஞ்சிப் பெரியவர் 70 ஆண்டு களுக்கு முன் புங்கனூர் வந்தபோது பக்தர்களிடம், இந்த ஊரில் புராதன சிவன் கோயில் இருக்கிறது. அதை உடனே தரிசிக்க வேண்டும், என்று சொல்ல     அனைவரும் ஆச்சரியப் பட்டனர். அவர்கள் தேட முற்பட்டபோது, சிதிலமடைந்த நிலை யிலிருந்த ஆத்ம லிங்கேஸ்வரர் கோயிலைக் கண்டனர். கோயிலுக்கு வந்த காஞ்சிப் பெரியவர், சிவனை வழிபட்டதோடு,இன்னும் பல சிவலிங் கங்கள் இப்பகுதியில் இருக்கலாம், என்றும் கூறினார்.


புங்கனூர் சிவன், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி யிருக்கிறார். தெய்வீக சக்தி தானாக வெளிப்படும் இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக இறைவன் எழுந் தருள்வதாக ஐதீகம். இவர் ஆத்ம ஞானத்தை    வழங்கு பவராக இறைவன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம் உமா மகேஸ்வரி. உலக வாழ்வுக்கு இகபர சவு பாக்கியத்தை தந்தருள்கிறார். சிவனுக்குரிய பிரதோஷ வேளையில் இங்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்