Temple info -1417 Chidambaram Rathna Sabapathy சிதம்பரம் ரத்னசபாபதி

 Temple info -1417

கோயில் தகவல் -1417







*Secret of Chidambaram Ratna Sabapathy* 


 Chidambara Mahatmiyam Thala Purana gives information about this Ratnasabapati and how he came to Chidambaram.


 Once Brahma performed a great yaga at Andharvedi in the city of Kasi on the banks of the Ganges.


 At that time, Brahma  sought Chidambatam Dikshitars because he needed brahmins who had learned and understood the Vedas completely.


 He summoned the Chidambaram Dheekshitars for the yaga.


 They  reached Kashi on the order of their guru, Vyagra Badar.


 The yaga also ended well.


 It was mid-afternoon and then Brahma decided to have a big samaradhanai and entertain the dikshithas and have a feast called "Vaishva Devam".


 After every major yaga, it is a way of treating the antananars that help in performing the yaga.


 But Dikshithas have the habit of taking their food after having darshan of Nataraja in Chidambaram every day.


 There is no Nataraja in Kashi.  When they informed that they could not come without getting Nataraja darshan, Brahma sought the help of Lord Shiva.


 Chidambaram Dikshitars told Brahma that they are going back to Chidambaram.  Worried that the fruit of the sacrifice would be lost,  Brahma sought the help of shiva.


 A sudden flood of light and the sacrificial fire starter burning brightly.


 From fire Adi Shiva himself appeared in the form of Nataraja.


 Stunned, Dikshitar and others praised Nataraja and worshiped Nataraja by anointing him with sandalwood, honey and milk.


 That Lord Nataraja whom they worshiped became Rathna Sabapati.


 Brahma gave that Nataraja form to Dikshitrars.


 When Dikshitars came back to Chidambaram, they took that Nataraja with them.


Since that day, 2nd kala puja (at 10 am) is performed daily for Ratna Sabapati.


 This Nataraja also got the name Manikya Murthy.


 In the Kanakasabha, after the abhishekam for people like Ratna Sabapati, Spatika Lingam, Bhairava (they will perform abhishekam separately) and finally, when the camphor aarti is performed to Ratna Sabapati, the crowd of devotees goes crazy when the camphor light shines in front and behind.  


*சிதம்பரம் இரத்தின சபாபதி* *ரகசியம்*


இந்த ரத்னசபாபதியைப் பற்றியும் அவர் எவ்வாறு சிதம்பரம் வந்தார் என்பதும் கீழ்க்காணும் சிதம்பர மகாத்மியம் தல புராணத் தகவல் தெரிவிக் கிறது. 


ஒரு முறை பிரம்மா கங்கைக் கரையில் காசி நகரில் அந்தர்வேதி என்னும் இடத்தில் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்தார். 


அப்போது அவருக்கு வேதங்களை முற்றும் கற்று உணர்ந்த அந்தணர்கள் தேவைப் படவே சிதம்பரம் தீட்சிதர்களை நாடினார். 


அவர்களை வரவழைத் தார். 


அவர்களும் அவர்களின் குருவான வியாக்ர பாதரின் உத்தரவின் பேரில் காசியை வந்து அடைந்தனர். 


யாகமும் இனிதே முடிந்தது. 


நடு மதிய நேரம் ஆகவே பின் ஒரு பெரிய சமாராதனை செய்து தீட்சிதர்களை உபசரித்து "வைஸ்வ தேவம்" என்னும் விருந்து உபசாரம் செய்ய முடிவு செய்தார் பிரம்மா. 


ஒவ்வொரு பெரிய யாகத்துக்குப் பின்னும் யாகம் செய்ய உதவும் அந்தணர் களை உபசரிக்கும் முறை அது. 


ஆனால் தீட்சிதர்களோ தினமும் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்து விட்டே பின் தங்கள் உணவை ஏற்கும் பழக்கம் உள்ளவர்கள். 


காசியிலோ நடராஜர் இல்லை. நடராஜ தரிசனம் கிடைக்காமல் தாங்கள் வரமுடியாது என அவர்கள் தெரிவிக்க செய்வதறி யாத பிரம்மா சிவபெரு மானின் உதவியை நாடினார். 


சிதம்பரம் தீட்சிதர்களோ என்றால் நாங்கள் திரும்பச் சிதம்பரத்துகே போகிறோம். என்று கூறுகிறார்கள். யாகத்தின் பலனே இல்லாமல் போய்விடுமே என்று கலங்கிய பிரம்மாவின் உதவிக்கு அந்தப் பரம்பொருள் செவி சாய்க்காமல் இருப்பாரா? 


திடீரென ஒரு ஒளி வெள்ளம். 

யாகத் தீ குபுகுபுவென எரிந்து கொண் டிருந்தது. 


அதில் இருந்து அந்த ஆதி சிவனே நடராஜ ஸ்வரூபத்தில் தோன்றினார் . 


திகைத்துப் போன தீட்சிதர்களும் மற்றவர்களும் அந்த நடராஜரைத் துதி செய்து சந்தனம், தேன், பால் போன்ற வற்றால் அபிஷேஹ ஆராதனைகள் செய்து அந்த நடராஜரை வழிபட்டனர். 


அவர்கள் வழிபட்ட அந்த நடராஜர் அப்படியே ரத்தின சபாபதியாக மாறினார். 


தீட்சிதர்களுக்கே அந்த நடராஜ ஸ்வரூபத்தை அளித்தார் பிரம்மா. 


தீட்சிதர்கள் திரும்பிச் சிதம்பரம் வரும்போது அந்த நடராஜரையும் தங்களுடன் எடுத்து வந்தனர். 


அன்று முதல் ரத்தின சபாபதிக்கு தினமும் 2-ம் காலப் பூஜை (காலை 10 மணி அளவில்) செய்யப் படுகிறது. 


இந்த நடராஜர் மாணிக்ய மூர்த்தி என்ற பெயரையும் பெற்றார்.


கனகசபையில் ரத்தினசபாபதி, ஸ்படிக லிங்கம், பைரவர் (தனியாக அபிஷேகம் செய்வார்கள்) போன்ற வர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்துக் கடைசியாக ரத்தின சபாபதிக்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது முன்னும், பின்னும் காட்ட அந்த கற்பூர ஒளியில் ரத்தின சபாபதி ஜொலிக்கும்போது பக்தர்கள் கூட்டம் பித்துப் பிடித்தாற் போல் “தென்னாடுடைய சிவனே போற்றி!” “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” நடராஜா! திருச்சிற்றம் பலம்!” என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புவது சிலிர்க்க வைக்கும் அனுபவ மாகும்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்