Temple info -1292 Veyil Ugantha Vinayakar Temple, Uppur, Ramanathapuram வெயில் உகந்த வினாயகர் கோயில், உப்பூர், ராமனாதபுரம்

 Temple info -1292

கோயில் தகவல் -1292














Veyil Ugantha Vinayakar, Uppur, Ramanathapuram


Basic information about the temple


Moolavar: Veyil Ugantha Vinayakar


Deity: Vinayakar


Historical Name: Suryapuri, Tavasiddhipuri, Pavavimochana Puram, 


Timing: 6 To 11 am & 4 To 8 pm


City / Town: Uppur


District: Ramanathapuram


Current Location from Ramanathapuram (37 Km) Karaikudi (66 Km)

Pudukkottai (106 Km) Sivaganga (118 Km)


Sthala puranam 


At Daksha’s yagam, Sati immolated herself. In addition to this causing grief to Siva, was the fact that several of the celestials and gods attended the yagam, to which He was not invited. So Siva unleashed Veerabhadrar to punish all of them.


The greatest wrath of Veerabhadrar seemed to be reserved for Suryan who, among other punishments, had his teeth knocked out and his effulgence and brightness greatly weakened. Feeling truly penitent and remorseful, he went to various temples to expunge himself of the effects of the punishments meted out to him. In his wanderings, he reached this place, which was near Tirupunavayil, Devipuram (today’s Devipatnam) and the sea, which was also a forest of Vanni and Mandhra trees. Finding this to be the perfect place for his penance, he settled down here and began worshipping Vinayakar – since the son of Siva was the best to recommend his case to Siva.


Pleased with Suryan’s sincerity and devotion, Vinayakar blessed him and relieved him of his curses. As a mark of gratitude, Suryan requested Vinayakar to stay here forever, with the promise that his rays would shine on Vinayakar every day of the year – from the north during Uttarayanam, and from the south during the Dakshinayanam. Vinayakar is called Veyil Ugandha Vinayakar as He basks in the glory of the sun’s rays.


Later, in the time of the Ramayanam, Rama came down south in search of Sita. After being informed that She was in Lanka, Rama and Lakshmana decided to build a bridge from Rameswaram, to reach Lanka. As was (and is) custom, they decided to propitiate Vinayakar at this temple before beginning their campaign.


The original temple is said to be from the Pandya period, though very little (if any) evidence exists to support this claim. Much of the masonry temple today is believed to have been originally constructed about 400-500 years old, in the time of the earliest Sethupati kings (said to be a trail off from the Pandya dynasty, whose lineage continues to this day).


The various historical and mythological names of this place are all connected to the story of Suryan.


Suryapuri – as Suryan worshipped here; Tavasiddhapuri – since Suryan’s penance bore fruit here; Pavavimochana Puram – because Suryan’s sins were relieved here; Vannimandhara Vanam – as this was a forest of Vanni and Mandhara trees.


The Tamil name of Uppur today is also derived from the Sanskrit name of the place – Lavanapuram – which is mentioned in the puranas.


The temple is built almost entirely in the same design as a Siva temple, except that the moolavar is Vinayakar (and so is preceded by His vehicle, the mooshika). The other interesting iconographic aspect here is in the prakaram, where Vinayakar is depicted with his two consorts – Siddhi and Buddhi. (In typical south Indian tradition, Vinayakar is regarded as a bachelor.)


There is a welcome arch above an outer mandapam, following which one enters the main premises. There is a dhwajasthambam, followed by a bali peetham and the mooshikam, and then an elevated shrine for Vinayakar, in the maha mandapam. In the prakaram are a separate Vinayakar, a shrine for Siva as Viswanathar with Visalakshi Amman, Murugan with his consorts Valli and Deivanai, Bhairavar and Saneeswaran, as well as Suryan.


At the time of our visit in December 2021 (on the day of Tiruavdhirai), the temple was being renovated. 



உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்


ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில். சீதாவை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார்.

ராமாயணத்தின் பெரும்பகுதி நிகழ்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இங்கு ராமர் ஏற்படுத்திய நவக்கிரஹம் நவபாஷாணம் என அழைக்கப்பட்டு தேவிபட்டினத்தில் உள்ளது. கடலின் நடுவில் உள்ள நவபாஷாணத்தில் வழிபட்டால் நவக்கிரகதோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.ராமர் இலங்கைக்கு செல்லும்போது திருப்புல்லணை என்ற இடத்தில் தங்கி சென்றார் அதாவது இவர் தங்கியபோது தர்ப்பைபுல்லில் படுத்துறங்கினார் அதனால் திருப்புல்லணை எனப்பெயர் ஏற்ப்பட்டு காலப்போக்கில் திருப்புல்லாணி எனப்பெயர் மாறியது.இந்தக்கோவில் ராமவதாரத்துக்கு முந்தைய கோவில் தசரதசக்கரவர்த்தி இங்குள்ள ஆதிஜெகநாதரை வணங்கிய பாயாச நைவேத்யம் செய்தார்.


அதற்கு பிறகே ராமர் பிறந்தார்.அதனால் பிள்ளையில்லாதவர்கள் இங்கு உள்ள பத்மாசனித்தாயாரையும் ஜெகநாதபெருமாளையும் வணங்கினால் குழந்தைபிறக்கும் என்பது ஐதீகம்.சேதுக்கரையில் இருந்து ராமர் இலங்கைக்கு சென்றார் இங்கிருந்து செல்வதற்க்கு ஆஞ்சநேயர் பாலம் அமைக்க‌ உதவினார்.அதனால் சேதுக்கரையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது.இந்த சேதுக்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்யப்படுகிறது.மேலும் இலங்கை சென்று விட்டு சீதாப்பிராட்டியை மீட்டபிறகு ராமேஸ்வரம் வந்த ராமர் சிவலிங்கத்தை பூஜித்து வணங்கினார். அதுவே ராமேஸ்வரம் என இந்துக்களின் புனிதத்தலமாக போற்றப்படுகிறது.எந்த ஒரு செயலுக்கும் விநாயகர் வழிபாடு மிக முக்கியம்.முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே கோவில்களில் இருக்கும் அனைத்து கடவுளையும் வழிபடுகிறோம்.பிள்ளையார் சுழி போட்டே அனைத்து வேலைகளையும் தொடங்குகிறோம்.அப்படி ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில். இங்கு சீதாவை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார்.


ராமபிரானின் வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும் ஒரு முக்கிய காரணம் விழாக்காலங்களில் சித்திபுத்தி தேவிகளுடன் இந்த விநாயகர் காட்சி தருவது சிறப்பு.இதுகோவிலாக இருந்தாலும் இங்கு உள்ள விநாயகருக்கு மேற்கூரைஇல்லாமல் வெயில்படும்படி அமைத்திருப்பது சிறப்பு.கடுமையான நோய்களை இந்த விநாயகர் போக்குகிறார்.எந்த ஒரு பெரியகாரியத்திற்க்கும் இவரை வணங்கி அடுத்த காரியத்தை தொடங்கினால் வெற்றி நம் வசம்தான் ஏனென்றால் ராமருக்கே வெற்றியை கொடுத்தவர் இவர்.கேதுவால் அவஸ்தைக்குள்ளாவோர் இவரை வணங்கினால் விநாயகர் கேது தோஷத்தில் இருந்து விடுதலை கொடுப்பார்.


கர்ண பரம்பரையாக புராணங்கள் வேறுபட்டபோதிலும் இத்திருக்கோயிலை கட்டியவர் ராமநாதபுரம் மன்னரான பாஸ்கரசேதுபதி ஆவார். 1905ம் ஆண்டு இக்கோயில் கட்டியதாக கூறப்படுகிறது. மரத்தடியில் இருந்த இறைவன் ஓர் அர்ச்சகர் வடிவில் கனவில் வந்து எனக்கு எல்லா கோயில்களிலும் உள்ளது போல் கர்ப்பகிரகத்தில் அதாவது அர்த்த மண்டபத்தை மூடவிடாமல் எப்பொழுதும் என் மேல் வெயில்படும்படி கோயில் அமைத்தல் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணத்தால் இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.

பாண்டி நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியில் உள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். ஆதவனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் உடன் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வெய்யோன் வேண்டினார். மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது. :ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி,பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளில் சென்று தேவிபட்டினம் தாண்டி உப்பூர் என்ற ஊரில் இறங்கவேண்டும் அங்குதான் இந்த விநாயகர் கோவில் உள்ளது.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்