Temple info -1289 Subrahmaniyar Swami Temple, Valliyur,Thirunelveli. சுப்பிரமணிய சாமி கோயில், வள்ளியூர், திருநெல்வேலி

 Temple info -1289

கோயில் தகவல்-1289










Subramaniyar Swami Temple, Valliyur, Thirunelveli

Subramaniyar Swami Temple is rock cut temple dedicated to Hindu God Murugan located at Valliyur near Nanguneri in Thirunelveli District of Tamilnadu. Valliyur is located on the Kasi-Kanyakumari highway. The Valliyur Murugan temple is located in close proximity to the Valliyur railway station. It has been revered in the Thirupugazh hymns of Arunagirinathar. People used to go round the hill as "Girivalam" during festival days.


Legends


Pandya discovered this Temple on a hunting expedition:

Legend has it that this temple was first discovered by a Pandya King who came here on a hunting expedition after visiting the Perumal temple at Thirukkurungudi and that the temple was expanded by his descendants.

People who worshipped Muruga here:

Legend has it that Indra and Agasthiar worshipped Subramanyar here.

Murugan created Saravanapoikai Tank:

Legend also has it that the Saravanapoikai tank was created when Murugan struck his spear to the ground, upon being requested by his consort.

Story behind the formation of Hills:

Village lore has it that Sage Agastya had cursed a merchant called Durlaban in Valliyur when he refused to part with a few morsels of rice saying that he can’t give anything in charity, even if it was for Sage Agastya. The sage cursed that all the rice that couldn’t be of use to someone like him, be as well converted to stone. This is how the hills were formed.

Mahendragiri Hill:

Mahendragiri Hill that finds mention in Sundara-Kandam is located to the west of Valliyur. This was the hill where Sage Parasurama did severe penance.

Valliyur, the place of Valli:

Lord Muruga came to Valliyur immediately after marrying Valli. References are indicated in the Kandapuranam. Valli was so much in love with Lord Muruga that she refused to allow Deivanai in her domain. Deivanai was almost in tears and it was only sage Agastya who consoled Deivanai and took her to Valli and explained to her that Deivanai be treated like her sister. As this place belonged to Valli who seems to have had a dominating nature, it is not surprising that women born in Valliyur are said to be extremely demanding wives after their marriage. They are also extra sensitive. Not a surprise - because it appears Lord Muruga simply pampered Valli


History

Valliyur was under the governance of Kulasekhara Pandyan of 13th century, who fortified the village. Between the years 1162-1173, Valliyur was the capital of Pandiya Kings. It is located fairly close to Sri Lanka. Invasion of Muslim rulers around B C 1310 appears to have destroyed many valuable historical records. In the year 1955, electricity connection was given to the temple. Though Valliyur is synonymous with Murugan temple, requests have been made for archaeological survey in the areas in and around Valliyur.


It is widely believed that Vallioor palace and fort were destroyed by invaders. Archaeological surveys in and around Valliyur have discovered hidden Shiva temples in and around the Nambi river as well as a few Sastha temples that were not maintained so well. Some of the idols that were found were supposedly 3000 years old.


The Temple


The presiding deity here is Subramaniyar and the sanctum enshrines an image of Murugan with that of his consort Valli. The temple has a rock cut sanctum - carved out of a hill and several Mandapams surrounding it. There are also shrines to Natarajar and Dakshinamurthy here. The Saravanapoikai tank is located adjacent to the hill. The diamond studded Vel held by Subramaniyar is of great beauty. In the entire Thirunelveli district, Valliyur has the rare distinction of having the one and only cave temple of Lord Muruga.


A rock named as Pooranagiri was excavated to build this temple. The temple shape is in the form of “Om”. Note that Lord Muruga has four arms and the idol is a replica of the one in Tiruchendur. On his right hand are flowers and his left hand is holding onto his thigh. Next to the sanctum sanctorum is located the Artha mandapam and then the maha mandapam. In the Artha mandapam, Lord Arumuga gives darshan along with Valli – Deivanai. To facilitate circumambulation of the Artha mandapam, the hill has been drilled to set up a cave path till the sanctum sanctorum of Lord Shiva.


In this temple, Lord Shiva as Jayandeeswarar facing West is in a separate shrine with Soundara Nayagi Amman. The Shiva ling faces the west in this temple which is considered very auspicious. Opposite Lord Muruga is placed the idol of peacock which is Lord Muruga’s vehicle (vahanam). The Artha mandapam also has the idols of Vinayaka, Veerabahu and Veera Mahendran. On the right side of the Artha mandapam is a cave. Alongside the entrance of the cave are Vinayaka, Sastha (Ayyappa) and Lord Shiva.


The Murugan temple has 13th century stone carvings. The temple also has a specific sanctum sanctorum dedicate to Valli – consort of Lord Muruga. The maha mandapam has Kasi Vishwanathar, Visalakshi and Shani Bhagwan. There is also Dakshinamurthy (Guru Bhagavan) idol in the temple.  Sthala Vriksham is Vilvam Tree. The beautiful Temple, the temple tank and the Kuravan Malai (Western Ghats) give the town a beautiful look .


Pooja Timings

·        5.30 – 6.00 am – Vishwaroopam

·        6.30 – 7.00 am – Udhayamarthandam

·        7.30 – 8.00 am – Festival Pooja

·        8.30 – 9.00 am – Sirukalasanthi

·        11.00-11.30 am – Uchikala pooja

·        5.30 – 6.00 pm – Sayaratchai pooja


·        8.00 – 8.30 pm – Arthajamam pooja

Every day at 7:30 am in the morning, abishekams are performed for Lord Muruga. On special occasions like Sashti, Lord Muruga and his consorts are decorated with flowers and clothes and a procession is taken in silver peacock vehicles.


 Festivals

Giri Prathakshinam is considered to be of importance here as in Tiruvannamalai, Kunnakkudi and Palani. Seven worship services are carried out each day. Skanda Sashti is celebrated with great splendour here as are the float festival in the month of Karthikai and the annual festival in the month of   Chithirai. Kodai in Sudalai Madan Temple is celebrated on the first Friday of Adi month. During festive occasions, the Valliyur Murugan temple has its own charm and the entire village rallies around the temple to take part in the festivities.

The important festivals associated with this temple are listed below;

·        Chitra Vishu (April 14)

·        Chitra Pournami (May 6)

·        Vasantham (Spring) festival

·        Adi Amavasya

·        Pongal

·        Makara Sankaranthi



Singers

Well known poet-saint Arunagirinathar has written about Valliyur in Thirupugazh. Keezha Kallur Mu. Azhvarapillai (1839-1925) has sung about Valliyur in his verses. These verses were published by the temple authorities in the year 1942.


Prayers

No one has ever returned empty-handed from the Valliyur Murugan temple. Childless couples have visited Valliyur, prayed and have come back to pay their respects after their wish was fulfilled by Lord Muruga.


Contact

Subramanya Swamy Temple,

Valliyur, Radhapuram,

Thirunelveli District – 627 117

Phone: +91 – 4637 – 222888


Connectivity

Valliyur is located at about 12 Kms from Nanguneri, 43 Kms from Thirunelveli, 40 Kms from Nagercoil, 202 Kms from Madurai and 113 Kms from Thiruvananthapuram.  Valliyur is located on the NH 7 and has a railway station also. Most of the express trains stop at Valliyur. Nearest Airport is located at Madurai and Thiruvananthapuram. Thirukkurungudi Divya Desam is located at about 9 km from Valliyur


Credit

Ilamurugan's blog



முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் வள்ளியூர் முருகன் கோவில்



மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட தலம் இது. சுமார் 1500 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்பதை, கற்களும் கட்டுமானப் பணிகளும் தெரிவிக்கின்றன.

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்! வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. மிகப் புராதனமான, சாந்நித்தியம் நிறைந்த திருக்கோயில் என்று சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகி பல பாடல்கள் பாடி அருளியுள்ளார்.


வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரி மலைக்கு கிழக்கு புறமுள்ள மலைக்குன்றில் தனிக்குடித்தனம் நடத்தியதால் அந்த தலம் வள்ளியூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.


 முன்னொரு காலத்தில் கிரவுஞ்ச அசுரன் மலை உருவில் இருந்தான். அகத்தியரின் சாபம் காரணமாக முருகப்பெருமானின் வேல் பட்டு அந்த மலை 3 துண்டுகளாக சிதறியது. அந்த அசுரனின் தலைப்பாகம் தான் வள்ளியூர் குன்று என்றும் புராணத்தகவலில் கூறப்பட்டுள்ளது. அந்த குன்றில் முருகப்பெருமான் வசித்ததால் அது பூரணகிரி என்று அழைக்கப்பட்டது. முருகப்பெருமான் வள்ளியுடன் பூரணகிரியில் இருப்பதை அறிந்த அகத்தியர் அங்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார். முருகனும் அகத்தியருக்கு குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று நான்மறை பொருளுரைத்தார். அகத்தியரும் மேற்கு முகமாக மாணவன் ஸ்தானத்தில் நின்று நான்மறை பொருளை உபதேசம் பெற்று பூரணகிரியை வலம் வந்தார். அப்போது குகையின் தெற்கு புறத்தில் தெய்வானை சோகத்துடன் நிற்பதை கண்டு அகத்தியர் திடுக்கிட்டார். முருகப்பெருமானை காணவந்த தன்னை வள்ளி அனுமதிக்காததால் வெளியே நிற்பதாக கூறி மனம் வருந்தினாள் தெய்வானை.


அகத்தியரும் தெய்வானையை வள்ளியிடம் அழைத்துச்சென்று வள்ளிதெய்வானை ஆகிய இருவரின் முந்தைய பிறவியை எடுத்துக்கூறினார். அதன்படி இருவரும் சகோதரிகள் என்பதை அறிந்ததும் அவர்கள் சண்டைபோடுவதை நிறுத்திக்கொண்டு முருகப்பெருமானின் இருபுறமும் நின்று அகத்தியருக்கு அருள்பாலித்தனர். இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட வள்ளியூர் தலம் நெல்லை மாவட்டத்தில் பெரிய குகைக்கோயிலாக கருதப்படுகிறது. பிற கோயில்களில் முருகன் குன்றின் மேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனால் இங்கு குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது விசேஷம்.


கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருக்கிறார். தேவரூபமாயிருந்து முருகனை பிம்பரூபமாக இருக்க தேவேந்திரன் வேண்டினார். முருகனும் பிம்பரூபமாக தன் இருதேவியருடன் காட்சி தந்தார். தேவேந்திரனும் பிம்ப பிரதிஷ்டையை ஆகம முறையில் செய்து முருகனை வணங்கினார். அப்போது முருகப்பெருமான் வள்ளியுடன் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று தெப்பத்தில் காட்சி கொடுத்தார். அதுவே இன்றும் தெப்பத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல வள்ளியின் வேண்டுகோளின்படி முருகப்பெருமான் தன் கைவேலை ஊன்றி புனித தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே சரவணப்பொய்கை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும் தாங்கள் செய்த பாவத்தால் நாயாய் பிறந்தனர். அவர்கள் இருவரும் இந்த சரவணப்பொய்கையில் மூழ்கி முக்தி பெற்றார்கள் என்று கூறுகிறது தலப்புராணம்.


 இங்குள்ள குமரனையும் வள்ளிதெய்வானை தேவியரையும் வணங்குவோர் நல்லறிவும் ஞானமும் பெற்று சர்வ நலமுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.

வள்ளியூரை ஆண்டு வந்த அற்பகன் என்ற அரசன் தனது மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரியில் குழந்தை வேண்டி தவம் செய்தான். அங்குவந்த பரசுராமர் வல்லிக்கொடி ஒன்றை அந்த அரசனிடம் கொடுத்தார். அந்த கொடி பெண் குழந்தையாக மாற அந்த குழந்தையை கொண்டு வந்து வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். பெண் குழந்தை பருவமடைந்த பின்னர் அரச முறைப்படி முருகன் வள்ளியின் அம்சமாகிய வல்லியை மணம் செய்தார். இந்நகரை வல்லி ஆண்டதால் வல்லி மாநகரம் என்றும் அழைத்தார்கள்.இப்படி சிறப்பு பெற்ற வள்ளியூர் தலத்தில் சித்திரை மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். 9வது நாளில் தேரோட்டம் நடைபெறும். வைகாசி விசாகத்தின் வசந்தம் திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறும். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வள்ளியூர் அமைந்துள்ளது. வள்ளியூரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் வள்ளியூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்தின் மிக அருகில் இந்த கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தய்ய தானன ...... தனதான

அல்லில் நேரு(ம்) ......மினதுதானும்
அல்லதாகிய ...... உடல்மாயை
கல்லினேர அவ்வழிதோறும் 
கையும் நானும் ......உலையலாமோ
சொல்லி நேர்படு ...... முதுசூரர்
தொய்ய ஊர்கெட ...... விடும்வேலா
வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர்உறை ...... பெருமாளே.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்