Temple info -1288 Azhagiya Shantha Manavaalan temple, Vaithirappu,Virudunagar அழகிய சாந்த மணவாளன் கோயில், வத்திராப்பு,விருதுநகர்
Temple info -1288
கோயில் தகவல் -1288
Azhagiya Shantha Manavaalan Temple, Arjunapuram, Vathirairuppu (Watrap), Virudhunagar
Azhagiya Shantha Manavaalan Temple is dedicated to Hindu God Vishnu located at Arjunapuram Village 2 km far from Vathirairuppu (Watrap) town in Virudhunagar District of Tamilnadu. This Temple is almost 800 years Old and belongs to Tenkasi Pandyas. This Temple is located 11 Kms Northwest of Krishnan Kovil off the Madurai- Srivilliputhur highway. Presiding Deity is Lord Azhagiya Manavaalan is seen in a standing posture flanked by Sri and Bhoo Devi. The temple is open between 7am and 12noon and 4pm-6pm.
Legends
Story behind the name Arjunapuram:
Azhagiya Shantha Manavala Perumal Temple in Arjuna Puram near Vathirairuppu (Watrap), a temple whose legend dates back to the Mahabharata and one that is closely associated with Ninra Narayana Perumal Divya Desam in Thiruthangal. The story goes that on their way to Kerala (Malai Naatu Divya Desams), the Pandavas passed through this place. Arjuna brought relief to this drought-hit village by shooting his powerful arrow that pierced the earth, from where water gushed out. In memory of this event, this village is referred to as Arjuna Puram and the river Arjuna Poigai. As the Pandavas stayed here, the place has come to be referred to as Dharmaranya Kshetram.
Association with Thiruthangal Divya Desam:
A fight arose between the three Devis - Sri Devi, Bhoo Devi and Neela Devi - as to who was the senior most among them and also the favourite of the Lord. Sri Devi was guided by the Saptharishis here at Vathirairuppu to undertake penance at Thiru Thangal, around 30 kms from here. Pleased with her prayers, Lord Narayana appeared before her and acknowledged that she was indeed his favourite. The place where she was guided and shown the place to penance is called Vyaktra Puram which in course of time became Vathirairuppu.
The Temple
The handsome Azhagiya Manavaalan is seen in a standing posture flanked by Sri and Bhoo Devi. Presiding deity Lord Azhagiya Shanta Manavala Perumal graces facing east holding his discus and conch in the upper hands, the lower right assuring boons to devotees (Abhayahastha) and the left holding a club. There are two Garudas in the temple, one carrying the Lord and ready to fly and the other sitting in a worshipping form keeping two hands together.
Inscriptions at the temple, dating back to the rule of Tenkasi Pandyas, indicate the temple having artha mandapam, maha mandapam and mukha mandapam. There are several beautiful stone sculptures at the Vasantha Mandapam and Ekadesi Mandapam. There is a huge ancient well to the north of the temple complex. There are several beautiful stone sculptures in the Vasantha Mandapa and Ekadesi Mandapa.
Inscriptions
Inscriptions at the temple dating back to the rule of Tenkasi Pandyas indicate the temple having Artha Mandapa, Maha Mandapa and Mukha Mandapas. A 13th Century AD inscription on a Stone near the well refers to the rule of Kulasekara Pandya and names Nakkan Sokkan Villi as the digger of the well.
During the 15th Century AD, this place was referred to as Sendaneri. Consecration of the temple took place in the 2nd half of the 15th Century dating back to the rule of Venrumalayitta Vira Pandya Deva with a donation of 20ma of land being made towards rituals, repairs and renovation of the temple. Yet another inscription provides insights into the grant of a temple tank for pooja at noon and for daily food offering for the Lord.
Temple Opening Time
The temple is open from 6.00 a.m. to 10.00 a.m. and from 4.00 p.m. to 8.00 p.m.
Festivals
While Aadi Pooram in July - August is the main festival of the temple, presiding deity is taken in procession on Purattasi Saturdays in September - October.
Contact
Sri Azhagiya Shanta Manavala Perumal Temple,
Arjunapuram, Vathirairuppu – 626 132,
Virudhunagar District
Mobile: +91 – 96774 19184 / 94431 41884
Connectivity
The temple is in Arjunapuram 2 km far from Vathirairuppu. As there is no bus facility, only autos have to be hired. Arjuna Puram is just over 11 kms from Krishnan Kovil (Kalasalingam University) off the Madurai- Tenkasi Highway. Buses ply every half hour from Krishnan Kovil/Srivilliputhur to Watrap. From there, one can reach the temple by auto (2 kms).
The nearest railway station is Srivilliputtur. There are several passenger trains from Madurai to Srivilliputtur. The Pothigai Express is a daily train from Chennai Egmore to Senkottai that reaches Srivilliputtur at 6.13 in the morning. From Srivilliputtur you can take a local bus to Watrap.
Watrap Town is connected from NH 208 around 10 km (From Krishnan Kovil) and 17 km (from Alagapuri Village) and there are plenty of buses are operated to and from Madurai, Srivilliputhur, Virudhunagar, Kovilpatti, Sivakasi and Theni. The nearest Airport is Madurai (72 km) and there are plenty of Local Taxi Operators are operating the taxis to Madurai Airport for Pickup and Drop facility.
Credit
Ilamurugan's blog
அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில்
அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் பாண்டவர்களின் வனவாசத்தில் வழிகாட்டியருளிய கோயிலாக கருதப்படுகிறது.இத்திருக்கோயில் வத்திராயிருப்பில், மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில், மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கடும் வறட்சி நிலவிய காலகட்டத்தில் இங்கு வந்த பஞ்சபாண்டவர்களைக் கண்ட மக்கள் வறட்சியை நீக்க வேண்டினர், அர்ஜூனன் தமது காண்டீபத்தை பூமியில் செலுத்தி கங்கையையே இங்கு கொண்டு வந்தார். அதுவே அர்ஜூன நதி என்று இன்று போற்றப்படுகிறது.
அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்):
தர்மாரண்ய சேத்திரம், ஸ்ரீவக்த்ரபுரம்
அமைவிடம்
நாடு:
இந்தியா
மாநிலம்:
தமிழ்நாடு
மாவட்டம்:
விருதுநகர்
அமைவு:
வத்திராயிருப்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீஅழகிய சாந்த மணவாளப் பெருமாள்
சிறப்பு திருவிழாக்கள்:
ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமைகள்
உற்சவர்:
அழகிய சாந்த மணவாளப்பெருமாள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:
கி.பி.1464 ஆம் ஆண்டில் தென்காசிப் பாண்டிய மன்னன் கல்வெட்டு, பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டியன் கல்வெட்டு, ’இறங்காக்கிணறு’ வரலாறு கூறும் 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு , கோபுர வாயிலில் உள்ள கி.பி.16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு
வரலாறு
கட்டப்பட்ட நாள்:
புராதனக் கோவில்
வரலாறு
ஸ்ரீமகாலட்சுமி நாராயணரைத் தனிமையில் தியானித்து தவம் செய்ய ஏற்ற புனிதமான இடத்தை சப்தரிஷிகளிடம் கேட்க, அவர்கள் தேர்ந்தெடுத்து காட்டிய இடம் இது. இதனை ஸ்ரீதேவித் தாயார் முகம் மலர்ந்து ஏற்றதால், இந்த தலத்திற்கு ஸ்ரீவக்த்ரபுரம் (ஸ்ரீ - மகாலட்சுமி; வக்த்ரம்-திருமுகம் மலர்தல்) என்ற பெயர் வந்தது.
இங்கு தவம் இருந்த ஸ்ரீதேவித் தாயார் அதன் பலனாக பெருமாளைக் கைத்தலம் பற்றிய தலம் இங்கிருந்து 38கி.மீ தொலைவில் உள்ள திருத்தங்கல் என்ற திருத்தலம்.
பிரம்மாண்ட புராணத்தில் உள்ள திருத்தங்கல் மஹாத்மியத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
இறங்காக்கிணறு மற்றும் உறங்காப்புளி ஆகியவை இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
கல்வெட்டுகள்
கி.பி.1464 ஆம் ஆண்டில் தென்காசிப் பாண்டிய மன்னன் இந்த திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் நடத்தி வைத்ததைக் கல்வெட்டு கூறுகிறது.
பொன்னின் பெருமாள் பராக்ரம பாண்டியன் காலத்தில் ஏராளமான நன்கொடையும், நிலமும் திருப்பணிக்காக வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டு மூலம் தெரிய வருகின்றது.
கல்வெட்டுகளில் திருக்கோயில் பெயர் ’கண்ட நாட்டில் உள்ள செந்தனேரி தனிமால் அழகியர் கோயில்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
’இறங்காக்கிணறு’ எனும் கிணறு நக்கன், சொக்கன், சொக்கன் வில்லி என்ற பக்தர்களால் வெட்டப்பட்ட செய்தியை 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு தெரியப்படுத்துகிறது.
கோபுர வாயிலின் கல்வெட்டுகள் ரெங்கப்ப நாயக்கன் மண்டபம் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னரால் கட்டப்பட்டதைத் தெரியப்படுத்துகிறது.
சிதிலமடைந்த கோவில்
காலவெள்ளத்தில் இத்திருக்கோவில் சிதிலமடைந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள இந்தக் கோவிலை சீரமைக்க அத்துறைக்கு 2010 ஆம் ஆண்டில் குமுதம் ஜோதிடம் பத்திரிக்கை, பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் வைத்தது. வத்திராயிருப்பு பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தலவரலாற்றுத் தொடர்புடைய திருக்கோயில்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்
Comments
Post a Comment