Temple info -1226 Dakshina Mookambika Temple,Paravur,Ernakulam தக்ஷிண மூகாம்பிகை கோயில், பரவூர், எர்ணாகுளம்

 Temple info -1226

கோயில் தகவல் -1226










Dakshina Mookambika Temple, Paravur, Ernakulam 


Religion

Affiliation Hinduism

Deity Saraswati


Location North Paravur, Ernakulam, Kerala, India


Geographic coordinates 10.146616°N 76.232001°E


Website

www.dakshinamookambika.org


The Dakshina Mookambika Temple is a famous Saraswati temple in the town of North Paravur in the Ernakulam district of Kerala. The presiding deity in this temple is Saraswati and sub-deities are Ganapathy, Subrahmanyan, Mahavishnu, Yakshi, Hanuman and Veerabhadran. A shrine devoted to Yakshi is at the southwest corner. The sanctum sanctorum is in the midst of a lotus pool.


According to legends, Thampuran (ruler) of Paravur was a great devotee of Goddess Mookambika. He used to visit the Kollur temple in Mangalore every year to pay homage to the goddess. When he became old, his health worsened and he could no longer undertake the long journey to Kollur. The goddess appeared to the sad devotee in a dream and ordered him to build her idol near his palace so that he can have daily darshan of her. Thampuran followed her instructions, built a temple at Paravur and installed the Goddess.


Festivals


The famous Navaratri festival is celebrated here with great fervor. Thousands of people participate in the Navaratri music festival. On Durgashtami, books are arranged before the image of Goddess Saraswathy and on Vijayadashami morning, Ezhuthinirithu or Vidyāraṃbhaṃ ceremony takes place at a special mandapam which goes from 4 am to 11 am. Thousands of little children are initiated into the world of letters by making them write the word harisree on rice, their tongues or sand with a golden ring.


Apart from the Navratri festival, the "ten-day annual festival" is celebrated in the month of Makaram (January–February). The music festival and Vidyāraṃbhaṃ ceremony are the main features of this festival.



தட்சிண மூகாம்பிகா கோயில், வடக்கு பராவூர்


கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் வடக்கு பராவூர் நகரில் உள்ள சரசுவதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கோயில் தட்சிண மூகம்பிகா கோயில் ஆகும். இந்த கோவிலில் தலைமை தெய்வம் சரசுவதி மற்றும் துணை தெய்வங்கள் கணபதி, சுப்ரமணியர், மகாவிஷ்ணு, யட்சி, அனுமன் மற்றும் வீரபத்ரன். யட்சி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சன்னதி தென்மேற்கு மூலையில் உள்ளது. கோவிலில் கருவறை தாமரைக் குளத்தின் நடுவே உள்ளது.


தட்சிண மூகம்பிகா கோயில், வடக்கு பராவூர்


அமைவிடம்

வடக்கு பராவூர்,


 எர்ணாகுளம், கேரளா, இந்தியா


ஆள்கூறுகள்:

10.146616°N 76.232001°E


இணையதளம்:

www.dakshinamookambika.org


புராணங்களின்படி, பராவூரைச் சேர்ந்த தம்புரன் (ஆட்சியாளர்) மூகாம்பிகா தேவியின் சிறந்த பக்தர். அவர் ஒவ்வொரு ஆண்டும் மங்களூர் அருகில் உள்ள கொல்லூர் கோயிலுக்கு சென்று தெய்வத்திற்கு மரியாதை செலுத்துவார். வயது முதிர்வின் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே, அவரால் கொல்லூருக்கு நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை. கொல்லூர் மூகாம்பிகை அரசரின் கனவில் தோன்றி அரண்மனைக்கு அருகில் தன்னுடைய சிலையை கட்டும்படி கட்டளையிட்டது. தம்புரன் தெய்வத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, பராவூரில் இக்கோவிலைக் நிறுவினார்.


பண்டிகைகள்


புகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் "நவராத்திரி இசை" விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காஷ்டமியில், சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விஜயதசமியன்று காலையில், ஏசுதிரினிருத்து அல்லது வித்யாரம்ப விழா அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்குகள் அல்லது மணல் ஆகியவற்றில் தங்க மோதிரத்துடன் "ஹரிஸ்ரீ" என்ற வார்த்தையை எழுதி தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள்.


நவராத்திரி பண்டிகை தவிர, "பத்து நாள் ஆண்டு விழா" மகரம் மாதத்தில் (ஜனவரி-பிப்ரவரி) கொண்டாடப்படுகிறது. இசை விழா மற்றும் வித்யராம்ப விழா ஆகியவை இந்தக் கோயிலின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்