Temple info -1140 Prasanna Vinayakar Temple, Udumalpet ,Coimbatore பிரசன்ன வினாயகர் கோயில், உடுமல்பேட்,கோயம்புத்தூர்
Temple info -1140
கோயில் தகவல் -1140
Prasanna Vinayakar Temple,Udumalpet
This place was earlier a forest with rocky projections with lot of Monitor Lizards ( Udumbu in Tamil ). Hence it was known as Udumbu Malai which later became Udumalpet. This is around 70 Kms from Coimbatore.
One of the ancient temples in this town is the Shri Prasanna Vinayakar temple in the heart of the town on a small rock. As the hill is of semi circular shape, this place is also called Chakrapuri. As per the local legends, Tipu Sultan occupied this territory during his regime. When he was attacked, he took shelter in the rock which also acts as a natural fortification. He was thus saved. In his dream, Vinayakar appeared and asked him for his contribution for having saved him. ( Hence the belief by the local people that like Tirupathi, here also the Lord demands Kanikkai! ) The Sultan thought for some time and finally decided to construct a temple on the rock by the side of a tank and thus this temple came into existence. It was later expanded and renovated and now it is relatively a large temple.
This temple is constructed exclusively in granite with lot of artistic work. This is mainly a temple for the majestic six feet Lord Ganesa who occupies the central shrine. His vehicle- mouse or moonjoru in Tamil- is also big in size. The main prasadam for the Lord is Payasam. The front mandapam is having lot of artistic work including the 12 zodiac signs.
Taking into consideration the sensitivities of all devotees, this temple is also made a Trimurthy Sthalam, installing Brhama, Vishnu and Shiva. The shrine of Shri Visalakshi sametha Shri Kasiviswanathar is in front of the main gopuram. The shrine of Adi Vinayaka ( the one installed by Tipu Sultan ) is behind the Kasi Viswanathar shrine below an Arasu tree. The shrine for Murugan is besides his parents. Brahma sits below the Vanni tree in the outer praharam. Shri Sowriraja Perumal graces with Kannapuranayaki Thayar on the northwest side of the temple with the shrine of Shri Hanuman by his side.
The next important temple is that of Shri Srinivasa Anjaneya temple. This is also in the heart of the town. As per the local legend, one of the Vishnu devotees remained childless for long. He prayed to Anjaneya to act as his messenger and carried his prayer to Shri Narayana. He got a dream in which Anjaneya advised him that there was a Swayambumurthy of the Lord in an ant hill nearby and by praying to Him, his desire will be fulfilled.
The next morning, the devotee located the ant hill and when it was cleared, he found the idol of Shri Srinivasa Perumal. The idol was installed in this temple. As Anjaneya had acted as the bridge, the devotee installed Him also in the main shrine and hence the name of the temple is Srinivasa Anjaneya Temple. This is perhaps a very unique temple where Hanuman appears with Perumal in the same main shrine. The devotee also installed the idols of Shri Madvacharya and Shri Ragavendra along with Perumal. ( It is likely the devotee was a Madhva Brahmin ).
The Perumal Murthy is relatively small and He faces north, the direction of Kubera. Hence praying here is believed to make one getting all material comforts. As the Perumal is having Thayar on his Chest, there is no separate shrine for Mahalakshmi. Like the typical Madhwa shrines, here also Manthrakshada ( rice mixed with turmeric powder ) is offered as the prasadam. Sanjeevi Theertham situated besides the shrine offers water for Pooja. There are shrines for Shri Vinayakar, Navagrahams and the Nagas with Rahu and Ketu in the praharam.
The third important temple is that of Shri Mariamman. This is a swayambu murthy. As per temple legend, once a devotee went into the forest without any kind of thought. He was not even conscious of his actions. After a long time, he became normal and found himself in a dense forest and an idol of Amman was nearby. He came back home and narrated the story. The village people went along with him to that spot and found the Murthy. They brought it to their place and installed and constructed this temple.
This temple is believed to be nearly 500 years old. Like the other Mariamman temples, here also the most important festival is the one celebrated in Tamil Months Panguni/Chithirai ( Apl ). The important pooja is the Mangalya Pooja performed on the Tiruvadhirai day in the Tamil month of Margazhi ( Dec-Jan ). At that time, 108 couples are asked to sit for the Pooja and the Mangalya saradu ( the thread used for tying the Thirumangalyam or Thali ) is offered as Amman’s prasadam. In addition to the main Amman shrine, there are shrines for Selva Vinayakar, Selva Muthukumaran and Ashtanagams.
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை
மூலவர்:பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்)
உற்சவர்:விநாயகர்
தல விருட்சம்: வன்னி , வில்வம், அரசு
தீர்த்தம்:கிணற்றுநீர்
பழமை:500 வருடங்களுக்கு முன்
ஊர்:உடுமலைப்பேட்டை.
முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, “உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.
திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.
இங்கு விநாயகர் அரச கோலத்துடன், ஏகதள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
அரைச் சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் “சக்கரபுரி‘ என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் “உடும்புமலை‘ என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்றழைக்கப்பட்டது.
அரச கோலம் : இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் அரச கோலத்தில் அமர்ந்துள்ளார். எலி வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூறையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம்,அரசு ஆகியன இங்குள்ளன.
கோயில் ராசகோபுரத்திற்கு நேரே காசிவிசுவநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுரநாயகி உடனாய சுவுரிராசப் பெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனியே சன்னதி கொண்டுள்ளனர். இவ்வாறு, இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் சிறப்பு
சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம்.
அனைத்து தோடங்கள் மற்றும் குடும்ப பிரச்னைகள் நீங்கவும், கல்வியில் சிறக்கவும் வேண்டிக் கொள்கின்றனர்.
Comments
Post a Comment