Temple info -909 Thiru Payatrunathar Temple, Nagappatinam திருப்பயற்றுநாதர் கோயில், திருபயத்தான்குடி, நாகப்பட்டினம். Padal Petra Sthalam No.195

 Temple info -909

கோயில் தகவல் -909












Thiru Payatrunathar Temple, Thiru Payathangudi, Nagapattinam


Thiru Payatrunathar Temple  is a Hindu Temple dedicated to Lord Shiva located in Thiru Payathangudi Village in Nagapattinam Taluk in Nagapattinam District of Tamil Nadu. Presiding Deity is called as Thiru Payatrunathar / Muktapureeswarar and Mother is called as Kaaviya Kanni / Nethrambigai. This Temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early medieval Thevaram hymns. This Temple is the 195th Devara Paadal Petra Shiva Sthalam and 78th sthalam on the south side of river Cauvery in Chozha Nadu.


Legends


Thiru Payatrunathar:


In ancient period, Nagapattinam was a centre of export and import trade. Horses were imported from Arabia and pepper was exported in exchange. Once, a trader brought pepper bags for export. He came to know about a duty levied on pepper export. Also, he found there was no duty levied on pulse export. The duty levied on pepper export would eat out the profit of the trader. He prayed to Lord Shiva saying that he would have to meet with heavy loss if he paid the duty and begged him to convert the bags of pepper to pulses till he passed the check post. 


He slept there at night. Pleased with his prayers, Lord Shiva converted the bags of pepper to pulses and informed him in his dream. The trader happily started his journey to Nagapattinam. The officials at the check post checked the bags and levied no duty as the bags contained pulses. The trader reached the port at Nagapattinam and sold his product for a profit. The trader spent his profit in renovating this temple. Pulse in English means Payaru in Tamil.  Thus, Lord Shiva came to be called as Thiru Payatrunathar and the place came to be called as Thirupayattrur.


Muktapureeswarar:


As per legend, it is believed that Lord Shiva of this temple provides salvation (Mukthi) to the devotees. He came to be called as Muktapureeswarar. Poyya Mozhi Siddhar also praised Lord Shiva of this temple in his hymn as “Patrirurai Muthakapureesa”.


Parihara Sthalam for Eye related problems:


As per legend, a person named Panchanathavaanan from this village was suffering from eye related ailment. He prayed to Lord Shiva of this temple for cure. Pleased with his prayers, Lord Shiva provided cure to his disease.


Bhairava Maharishi worshipped Shiva here:


It is believed that Bhairava Maharishi is said to have worshipped Lord Shiva of this temple.


History


The Temple is believed to be built in 6th century CE and was completely reconstructed in granite by Cholas. The temple was extensively renovated by Thanjavur Nayak Kings and Nattukottai Chettiyars. Inscriptions dated to Chola King Rajaraja Chola III can be found in this temple. His inscriptions records the gifts and grant of lands made to this temple. The last consecration ceremony was performed in 06th June 2011.


The Temple


This Temple is facing towards east with an entrance arch. Nandi, Balipeedam and Dhwaja Sthambam can be found immediately after the entrance arch in mukha mandapam, facing towards the sanctum. The sanctum sanctorum consists of sanctum, antarala, maha mandapam and mukha mandapam. The antrala and maha mandapam are designed to look like the forehead of a bat (Vovval Nethi Mandapam).


The mukha mandapam connects the maha mandapam with the entrance arch. Presiding Deity is called as Thiru Payatrunathar / Muktapureeswarar and is facing east. He is housed in the sanctum in the form of Lingam on a square Avudaiyar. Lord is a Swayambhu Moorthy (self-manifested). Only, Dakshinamoorthy can be seen in the koshta. Chandikeswarar shrine can be seen in his usual location.


Mother is called as Kaaviya Kanni / Nethrambigai. She is housed in a separate south facing shrine. Her shrine is situated in maha mandapam to the left side of the sanctum. She is four armed. She holds akshara mala and lotus flower in her upper hands and showing varada and uru hastha in her lower hands. There is a south facing for Nataraja in the maha mandapam. Somaskanda and Utsava idols can be seen in the maha mandapam.


There are shrines for Siddhi Vinayaka, Murugan with his consorts Valli & Deivanai, Veera Maha Kali, Dhandapani, Viswanatha with his consort Visalakshi, Gajalakshmi, Bhairava Maharshi, Bhairava, Surya, Chandra and Navagrahas in the temple premises. Sthala Vriksham is Silanthi Tree. Theertham associated with this temple is Karuna theertham and brahma theeetham.


Temple Opening Time


The temple remains open from 07.00 a.m. to 12.00 noon and from 04.00 p.m. to 8.30 p.m.


Festivals


Brahmotsavam will be held Visaka Nakshatra day in the month Vaikasi. Chitra Pournami (Apr-May), Aadi Pooram (Jul-Aug), Avani Vinayagar Chathurthi (Aug-Sep), Purattasi Navaratri (Sep-Oct), Aippasi Skanda Sashti & Annabishekam (Oct-Nov), Thiru Karthigai (Nov-Dec), Thai Pongal & Thaipoosam (Jan-Feb ) and Masi Maha Shivaratri (Feb-Mar) are the festivals celebrated here. Special poojas are conducted of Aadi Fridays for Ambal and Karthigai Somavaram to Lord Shiva. Monthly pradoshams are also observed here.


Literary Mention


This Temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early medieval Thevaram hymns. This Temple is the 195th Devara Paadal Petra Shiva Sthalam and 78th sthalam on the south side of river Cauvery in Chozha Nadu. Appar has sung hymns in praise of Lord Shiva of this temple. The Temple finds mention in Periya Puranam written by Sekkizhar. Vallalar also has sung hymns in praise of Lord Shiva of this temple.


Prayers


Devotees suffering from eye related ailments should take bath in Karuna Theertham and worship Thiru Payatrunathar and Nethrambigai for relief. Traders in the surrounding region worship Lord Shiva for the development in their trade and for good profit. Devotees pray to Lord Shiva for excellence in education. People also worship Gaja Lakshmi for wealth.


Contact


Thiru Payatrunathar Temple,

Thiru Payathangudi, Nagapattinam Taluk,

Nagapattinam District – 610 101


Phone: +91 4366 272 423


Mobile: +91 98658 44677 / 96264 76428


Connectivity


The Temple is located at about 2 Kms from Keezhavaippur Bus Stop, 7 Kms from Thirukkannapuram, 8 Kms from Virkudi Railway Station, 10 Kms from Thirumarugal, 14 Kms from Thiruvarur, 16 Kms from Thiruvarur Junction Railway Station, 25 Kms from Nagapattinam and 132 Kms from Trichy Airport. The Temple is situated on the Thiruvarur to Thirumarugal route.


Credit

Ilamurugan's blog


திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி - தல வரலாறு

 

மூலவர் : திருப்பயற்றுநாதர் (முத்கபுரீஸ்வரர்), முக்திபுரீஸ்வரர்


அம்மன்/தாயார் : காவியங்கண்ணி (நேத்ராம்பாள்), நேத்ராம்பிகை


தல விருட்சம் : சிலந்திமரம்


தீர்த்தம் : கருணாதீர்த்தம்


வழிபட்டோர் : பைரவ மகரிஷி, வணிகர்


தேவாரப் பாடல்கள் :- அப்பர்


"மூவகை மூவர்போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர் நாவகை நாவர்போலும் நான்மறை ஞானம் எல்லாம் ஆவகை யாவர்போலும் ஆதிரை நாளர்போலும் தேவர்கள் தேவர் போலும் திருப்பயற்றூரனாரே."


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 78வது தலம்.


இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 141 வது தேவாரத்தலம் ஆகும்.


எல்லா தேவ சக்திகளின் ஒரே இருப்பிடம் இந்த திருப்பயற்றுநாதர்.


கல்வியில் சிறப்புறத் தேற விரும்புவோரும், மறதி தொல்லையிலிருந்து விடுதலை வேண்டுவோரும் அண்டித் தொழவேண்டிய மூர்த்தி, திருப்பயற்றுநாதர்.


இவர், முக்தி தரும் ஈசன் என்பதினால் பொய்யாமொழி சித்தர், ‘‘பற்றிருறை முத்கபுரீசா” என்று விளம்ப, இவருக்கு அருள்மிகு முத்கபுரீஸ்வரர் என்பதாக பெயர் தோன்றிற்று.


தல வரலாறு:


முன்னைய காலத்தில் இத்திருத்தலத்தில் ஏற்றுமதி இறக்குமதி வாணிபம் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு மிளகு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும். பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை வணிகர்  ஒருவர், குருமிளகு மூட்டைகளை ஏற்றி வந்தார். மிளகு மூட்டைகளுக்கு சுங்கவரி கட்டினால் வணிகருக்கு வருமானம் ஏதும் கிடைக்காது. இதை உணர்ந்த வணிகர் மிகவும் வருந்தினார். பயறுக்கு வரிவிலக்கு உண்டு. எனவே வணிகன் முத்கபுரீஸ்வரனை வேண்டி வணிகர் இத்தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார்.


சிவ பக்தராகிய இவர் இத்தல சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி மறுநாள் காலை வணிகர் எழுந்து பார்த்த போது மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக் கண்டார்.  அதிகாரிகள் முன்னிலையில் மூட்டைகளை நிறுத்தினார். அதிகாரிகள் மூட்டைகளை சோதிக்க அவற்றில் பயறுகளே நிறைந்திருக்க, வணிகனை வரிவிதிப்பு ஏதுமின்றி விடுவித்தனர். எல்லை தாண்டியதும் பயறுகள் முன்போல் மிளகு மூட்டைகளாக மாறி அதிசயம் செய்தன. இதனைக் கண்ட வணிகர் ‘‘திருப்பயற்று நாதா” என மனமுருகி கூவ, அதுவே அத்தருணம் தொட்டு இறைவனுக்கு பெயராய் அமைந்தது. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்" எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்" எனவும் அழைக்கப்படுகிறார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகின்றது.


இத்தல கல்வெட்டு ஒன்றின்படி திருப்பயற்றூரில் வாழ்ந்து வந்த பஞ்சநதவாணன் என்பவன் கண் நோயால் வருந்திய போது, அவன் கண் நன்றாகும்படி இத்தல இறைவனை வேண்டிக் கொண்டு, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர். ஆகையால் யாருக்கேனும் கண் நோய் இருப்பின், இத்தலத்தினை அடைந்து கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது.


கோவில் அமைப்பு:

இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சோழர்கள் அமைத்த இவ்வாலயம் கிழக்கு நோக்கி நான்கு புறமும் மதில்சுவருடன் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு அமைந்துள்ளது. முகப்பு வாயில் மேற்புறம் சுதையால் ஆன சிற்பங்கள் நம்மை கவர்கின்றன. ஆவுடையார் நாற்கோண வடிவம் - பழமையான திருமேனி.


தலமரமாகிய சிலந்தி மரம் - இம்மரத்தின் மலர்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்தி பூச்சி வடிவில் இருக்கும். சித்திரை வைகாசியில் பூக்கும் - மணமுண்டு; இலை, புன்னையிலைபோல இருக்கும். எப்படிப்பட்ட கண் திருஷ்டி குடும்பத்திற்கு இருந்தாலும் இத்தல விருட்சத்தை தொழ, அவையெல்லாம் விலகும் என்பது சித்தர் காட்டும் நெறி.


கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. கோயில் சுற்றுப்பகுதியில் சித்திவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இங்கு துர்க்கை கிடையாது.


வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது நம்பிக்கை. இத்தலவிநாயகர் சித்திபுத்தி விநாயகர் எனப்படுகிறார்.


கார்த்திகைச் சோமவார நாட்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ மாலை, மற்றொரு வலக்கையில் தாமரை, இடக்கையைத் தொடையில் ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

 

இவ்வாலயத்திலுள்ள பெரிய மண்டபத்தில் உள்ள சோமாஸ்கந்தர் சந்நிதி மிகவும் சிறப்பாகவுள்ளது. பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார். இவருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.


சிறப்புக்கள் :

இப்பகுதி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க திருப்பயற்றுநாதரையும்,

கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மன் காவியங்கண்ணியையும் கருணா தீர்த்தத்தில் நீராடி வழிபடுகின்றனர்.


மகாலட்சுமியையும், கஜலட்சுமியையும் இத்திருத்தலத்தில் வெள்ளிக்கிழமையில் ஆராதிக்க குறைவற்ற சம்பத்துக்கள் கூடி இன்பமூட்டும்.


திருவிழா:

சித்ரா பவுர்ணமி, ஆடிவெள்ளி, தைவெள்ளி, மகா சிவராத்திரி.


போன்:  -

9789397028 , 98658 44677


அமைவிடம் மாநிலம் :


தமிழ் நாடு

திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர்ச் சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது


இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


எல்லா தேவ சக்திகளின் ஒரே இருப்பிடம் இந்த திருப்பயற்றுநாதர்.


இவர், முக்தி தரும் ஈசன்.

யாருக்கேனும் கண் நோய் இருப்பின், இத்தலத்தினை அடைந்து கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால் கண்நோய் நீங்கப் பெறுவர்.


வீரமாகாளி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும்.

பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்