Temple info -839 Kailasanathar Temple, Karaikkal கைலாசநாதர் கோயில், காரைக்கால்

 Temple info -839

கோயில் தகவல் -839














Kailasanathar Temple, Karaikal, Puducherry


Kailasanathar Temple is a Hindu temple dedicated to Lord Shiva located in Karaikkal Town in Union Territory of Puducherry, India.


 Kailasanathar Temple is one of the three most famous temples in Karaikal city. This temple is located opposite to the another most famous Karaikal temple, the Karaikal Ammaiyar Temple. Presiding Deity is called as Kailasanathar and Mother is called as Soundarambal.


History


The temple is believed to be constructed before 2000 years ago which makes it the oldest temple in Karaikal district. It was reconstructed by the Pallavas in the 8th century and again in the French rule.


The Temple


The temple is constructed in a large complex surrounding it making it the largest temple complex of the famous temples in Karaikal city. The main attraction of the temple be the four elaborate doorways in each directions of the temple complex. The street where the temple located is named after the temple as Kailasanathar Kovil street. The entrance of the shrine of Subramaniar faces the doorway to the west.


Presiding Deity is called as Kailasanathar and Mother is called as Soundarambal. Shrines of Nataraja, Dakshinamurthy, Vinayaga, Various Lingams, Two shrines for Lord Muruga along with Devasena and Valli, Saraswathi, Lakshmi,  Small statues of 63 Nayanmars, Durgai, Chandikeswara and Navagrahas can be found in the Temple.


Festivals


Mangani Festival:


The Mangani Festival is associated with both Kailasanathar Temple and Karaikal Ammaiyar Temple. The important figure of the Mangani festival, Lord Bikshatanamurthy is of the Kailasanathar Temple.

Float Festival in Chandra Theertham:


The temple tank Chandra Theertham is associated with the main three temples of Karaikal. The Float festivals in Karaikal with the idols of Lord Kailasanathar from this temple and Lord Nithyakalyana Perumal from the Perumal temple is an important festival celebrated here.


Chariot Festival:

The chariot of Karaikal is dedicated to Kailasanathar Temple. The Karaikal Chariot festival is celebrated once a year. The idol of Lord Kailasanathar is taken in the chariot through the important streets of Karaikal.


Connectivity


The Temple is located at Bharathiyar street at the heart of Karaikal town. The Temple is located at about 1 Km from Karaikal Bus Stand, 1.5 Kms from Karaikal Railway Station, 6 Kms from Thirunallar, 14 Kms from Nagore, 3 Kms from Dharmapuram, 21 Kms from Nagapattinam, 21 Kms from Thirukkadaiyur, 9 Kms from Nedungadu, 6 Kms from Neravy, 8 Kms from Tirumalai Rayan Pattinam, 4 Kms from Kottucherry, 13 Kms from Tharangambadi, 128 Kms from Puducherry, 143 Kms from Trichy and 284 Kms from Chennai. Nearest Airport is located at Trichy (148 Kms).


Credit - Ilamurugan'blog


காரைக்கால் நகரம் கைலாசநாதர் சிவன்கோயில் 


காரைக்காலில் பிரதான சாலையான பாரதியார் சாலையில் அமைந்துள்ள சிவாலயம் இதுவாகும். கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் இறைவன் கைலாசநாதர், அம்பாள் சுந்தராம்பாள் என்று அழைக்கப்படுகின்றனர். கோயிலின் மேற்கில் தீர்த்தம் குளம் சந்திரபுஷ்கரணி உள்ளது.  இதனை காரைக்கால் அம்மையார் குளம் என்றும் அழைக்கின்றனர். மிக நன்றாக பராமரிக்கிறது காரைக்கால் அரசு. 


கயிலையில் இருக்கும் இறைவனை பிரம்மனும், திருமால் இந்திராதி  தேவர்களும்  சந்தித்து உலகில் நிலவும் வறட்சியை  போக்க வேண்டுகின்றனர், இறைவனும் அவர்களுக்காக இரங்கி பார்வதி தேவியை அரிசொல் நதி கடலோடு  கலக்கும் காரைவனத்தில்  பிறக்குமாறும் கூறுகிறார். அவ்வண்ணமே பூலோகத்தில் பிறந்த தேவி சாகம்பரி எனும் பெயர்கொள்கிறார். பராசர முனிவரின் உதவியுடன் அரிசொல் நதிக்கு வடக்கில் தான் கொண்டு வந்த சம்புடத்தில் இருந்த லிங்கத்தையும், தனது இறைசக்தியையும் ஆவணி முதல் நாளில் பிரதிஷ்டை செய்து வழிபட இத்தலமெங்கும் மழைபெய்து  பூமி செழித்தது. கயிலையில் இருந்து வந்த ஈசன் என்பதால் கைலாசநாதர் என்றும்  அழகிய அம்பிகை என்பதால் சுந்தராம்பாள் எனும் பெயர் கொண்டனர்.  


செழிப்பான இப்பகுதிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குடியேறலாயினர். இரிச முனிவர் காளத்தியை விடுத்து இங்கு  வந்து தென்திசையில் காளத்திநாதரை பிரதிஷ்டை  செய்து வணங்கினார்.  திருவண்ணாமலையில் இருந்து கண்ணுவ முனிவர் அருணாசலேஸ்வரரை  இங்கு வந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரலானார். காஞ்சியில் இருந்து குசமா முனிவர் ஏகாம்பரேஸ்வரரை ஈசான்யத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வாயுமூலையில் அகத்தியர் பிதிஷ்டை செய்த லிங்கம் அகத்தீஸ்வரர் ஆனது. கயிலாயநாதர் கோயில் சோழர்களாலும் செம்பியன் மாதேவியாலும் திருப்பணிகள் செய்யப்பெற்றது. ஆனால் ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுக்காரர்களும் இந்தியாவை ஆக்கிரமித்த காலத்தில் காரைக்காலும் அவர்கள் கைக்கு சென்றது.


 பின்னர் பிரஞ்சுகாரர்கள் தங்கள் பாசறையாக பழம்பெரும் கயிலாயநாதர் கோயிலை பயன்படுத்திக்கொண்டு கயிலாயநாதர் கோயிலை வேறிடத்தில் கட்டிக்கொள்ளுமாறு கூறிவிட்டனர். அதனால் 1746-AD க்கு பிறகு இப்போது நாம் காணும் இடத்தில் கோயில் உருவானது. இதனை சுற்றி இருந்த காளத்திநாதர், ஏகாம்பரேஸ்வரர் அருணாச்சலேஸ்வரர், அகத்தீஸ்வரர் கோயில்கள் சிதைக்கப் பெற்றதால் அதில்  இருந்த லிங்கங்கள் இப்போது இக்கோயிலின்  மேற்கு பிரகாரத்தில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன


கைலாசநாதர் திருக்கோயில் இறைவன்  சிவனடியாராக வந்து அம்மையாரிடத்து மாங்கனித் திருவிளையாடல் நடத்திக் காட்டியவர்.  நான்கு புறமும் வாயில் கொண்ட பெரிய கோயிலாக திகழ்கிறது. பல்லவர்களால் திருப்பணி செய்யப்பட்டது என்பதால் இக்கோயில் இரண்டாயிரம் வருடம் பழமையானது என கூறலாம். மீண்டும் பிரெஞ்சு ஆட்சியின் போது இக்கோயில் திருப்பணி கண்டுள்ளது. 


மேற்கில் ஐந்து நிலை ராஜகோபுரம் பாரதியார் வீதியில் அணிசெய்கிறது.  கிழக்கில் கைலாசநாதர் கோயில் தெரு வழி கிழக்கில் உள் சென்றால் அலங்கார வாயில் ஒன்றுள்ளது, அதன்வழி சென்றவுடன் கொடிமரவிநாயகர், கொடிமரம், நந்தி என வழிபட்டு முகமண்டபம் அர்த்த மண்டபம் வழி உள்ளே சென்று இறைவன் கைலாசநாதரை  காணலாம். கருவறை வாயிலில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். கொடிமரத்தின் அருகில் உள்ள தெற்கு நோக்கிய கருவறையில் இறைவி சுந்தராம்பாள் அருள்பாலிக்கிறார். பிரகார தென்புறம் அறுபத்து மூவர்களும் அழகாக வரிசைக்கிரமமாக உள்ளனர்.  மேற்கு திருச்சுற்றில் விநாயகர் மற்றும் நாற்திசையில் இருந்து கொண்டு வரப்பட்ட லிங்கமூர்த்திகள் உள்ளனர். வடமேற்கில் மகாலட்சுமியும்  சரஸ்வதியும் உள்ளனர். வடக்கில் தலவிருட்சம் உள்ளது. கருவறை  கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர் பிரமன் துர்க்கை  உள்ளனர். நுழைவாயில் அருகில் மேற்கு நோக்கிய முருகன் உள்ளது சிறப்பு. 


காரைக்கால் அம்மையாருக்கு கயிலாயநாதர் கோயில் மேற்கில்  தனிக்கோயில் உள்ளது. 


கயிலாயநாதர் கோயில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஐக்கிய விழாவும்,  பிரம்மோற்சவ முடிவில்  தெப்ப திருவிழாவும்  நடைபெறுகிறது.


நன்றி கடம்பூர் விஜய்

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்