Temple info -679 Vaimoornathar temple,Thiruvaimur வாய்மூநாதர் கோயில், திருவாய்மூர். Padal Petra Sthalam No.241

 Temple info -679

கோயில் தகவல் -679



Vaimoornathar Temple, Tiruvaimur, Thiruvarur


Vaimoornathar Temple is a Hindu temple dedicated to Lord Shiva located in Tiruvaimur in Tiruvarur district of Tamilnadu. The presiding deity is called as Vaimoornathar. Mother is called as Paalinum Nanmozhi Ammai / Ksheeropavachani. This shrine is regarded as the 241st Devaram Paadal Petra Shiva Sthalam and 124th Sthalam on the south side of river Cauvery in Chozha Nadu. Appar and Tirugnanasambandar have sung hymns in praise of Lord Shiva of this temple. This Temple is one of the Saptha Vidangam (seven forms of dance of Siva) temples. The temple is famous for the dance pose Kamala Natanam – Dance like lotus that moves in a breeze- Nallavidangar.


Legends


Saptha Vidanga Sthalams:

Muchukunda Chakravarthy was a great and valorous Chola king. He was once approached by Indra for help during the war between Devas and Asuras. Muchukunda gladly agreed to help the lord of the Devas, and joined in the war. Finally, with Muchukunda’s aid, the Devas succeeded in routing the Asuras, and Indra was extremely grateful to the king. He offered the king a gift of his choice and Muchukunda asked for the Thyagarajar Moorthy worshipped by Indra. Indra was perplexed by this request as he did not want to part off with his precious moorthy, but the king wouldn’t accept anything else.

He finally decided on a deception, so he ordered to make six similar moorthis and asked Muchukunda to find out the one he wanted. Muchukunda was a smart king, and prayed to Shiva to identify the correct one and found the original moorthy. So Indra gave him all the seven moorthis to Muchukunda. Muchukunda kept those moorthis in seven temples which are called Saptha (seven) Vidanga temples. Muchukunda returned to earth with the seven Thyagarajar moorthis and installed them at various places in his kingdom.


 

The original one he kept at the temple at Thiruvarur, and the others at Thirunallar, Vedaranyam, Thiruvaimur, Tirukaravasal, Thirukkuvalai and Nagapattinam. These seven temples are collectively known as Saptha Vidanga Sthalams. Vidanga means something that has not been chiseled out. These seven Thyagarajar moorthy are believed to be divine – not made by chisels.

Appar and Sambandar got darshan of Shiva here:

When Appar was staying at Vedaranyam, Lord Siva appeared to him in his dream and prompted him to visit this temple. Appar followed the route as indicated in the dream by the Lord and was able to reach this temple, when he reached the temple he could not find the Siva Linga and Lord Ganesha led him to the correct place inside the temple. There is an idol of Ganesh with his trunk pointing to the direction of the Lord Siva. Sambandar who was also staying at Vedaranyam eventually followed Appar to this temple. Both Appar and Sambandar were blessed by Lord Shiva by revealing his resplendent divine form in this temple.

Surya worshipped Shiva here:


 

Surya is said to have worshipped Shiva here (the temple tank here is named Surya Theertham, and the sun’s rays strike the sanctum on the 12th and the 13th of Panguni month.

Leelaahaasyapuram:

Thiruvaimur is known as Leelaahaasyapuram in Sanskrit.

Sambandar got dance darshan of Shiva & Parvathi:

Sambandar got the dance Dharshan of Lord Shiva with Parvathi Devi in this temple.

Prachanda Maarutha Theertham:

Brahma and other Devas afraid of Taarakaasuran became birds, came to this holy place, took bath in the Prachanda Maarutha Theertham to ward off their sins, worshipped the Lord to be relieved from their sins.


The Temple


This temple occupies an area of about 2 acres and it has two prakarams and a beautiful 3 tiered Rajagopuram facing east. The sun's rays illuminate the sanctum on the 12th & the 13th days of the Tamil month of Panguni. The original brick and mortar temple was reconstructed of stone during the reign of Vikrama Chola, just prior to 1130. Inscriptions from the period of Rajadhiraja II, Kulottunga III and Rajaraja III speaking of grants made to the temple are seen here.


The presiding deity is called as Vaimoornathar. Mother is called as Paalinum Nanmozhi Ammai / Ksheeropavachani. It is one of the Saptha Vidanga Sthalams. Thyagarajar here is called as Neela Vidangar and is believed to perform Kamala Natanam. ‘Vitanka Lingam’ is a very small sized Lingam like the ones sold. There is an idol of Ganesh with his trunk pointing to the direction of the Lord Siva. Sthala Vriksham is Jack Fruit Tree.


Another significant feature of this temple is that Navagrahas are lined up in a row as against the usual form of square layout. The Navagrahams are in a single line as in Tiruvarur. The Rishabha Dakshinamurthy shrine here is of significance as in Kaichinnam nearby. Dhakshinamoorthi on the Deva ghoshta is graceful. Lord Dhakshinamoorthi in the sanctum is seen seated on Rishabam.


The Vedaranyeswarar and Thyagarajar shrines are located to the North and to the south of the sanctum. The bronze image of Karaikkal Ammaiyar is of great workmanship. Also the Bhairavar worship here is a significant one; there is a separate Bhairavar temple inside the temple. There are seven forms of Bhairavar here; it is believed that 8 were in existence.


On the outer circle are the sanctum of Naalvar and Bhairavar and in the inner circle are Vinayaka, Subramanya with his Spouses Valli and Deivanai, and Mahalakshmi. There is the court of Lord Nataraja who appears in a beautiful icon. Theerthams of this temple are Soorya Theertham located on the west, Paapamega Prasanda maarutha Theertham located in the front; Indra Theertham and Harichandra Theeetham.


Temple Opening Time


The temple remains open from 6.00 am to 11.00 am and from 4.00 to 8.30 pm.


Festivals


Sivarathiri, Aippasi Annabishekam, Margali Thiruvathirai, and Vaikasi Brahmotsavam are the festivals celebrated in this temple with much fanfare. Pooja is offered to Lord Bhairavar in Ashtami. On the first day of the Aippasi month special abishekam is performed for Lord Thyagarajar. The 18 day Vasanthotsavam in the month of Vaikasi is of great significance here.


Processional Dance


The Thyagarajar Temple at Tiruvarur is famous for the Ajapa Thanam (dance without chanting), that is executed by the deity itself. According to legend, a Chola king named Mucukunta obtained a boon from Indra(a celestial deity) and wished to receive an image of Thyagaraja Swamy(presiding deity, Shiva in the temple) reposing on the chest of reclining Lord Vishnu. Indra tried to misguide the king and had six other images made, but the king chose the right image at Tiruvarur. The other six images were installed in Thiruvaimur, Thirukkuvalai, Nagapattinam, Tirukarayil, Thirunallar, and Tirumaraikadu. 

All the seven places are villages situated in the river Cauvery delta. All seven Thyagaraja images are said to dance when taken in procession (it is the bearers of the processional deity who actually dance). The temples with dance styles are regarded as Saptha Vidangam (seven dance moves) and the related temples are as under:

Temple

Vidangar Temple

Dance pose

Meaning

Thyagarajar Temple

Vidhividangar

Ajabathaanam

Dance without chanting, resembling the dance of Sri Thyagaraja resting on Lord Vishnu's chest

Dharbaranyeswarar Temple

Nagaradangar

Unmathanathaanam

Dance of an intoxicated person

Kayarohanaswamy Temple

Sundaravidangar

Vilathithaanam

Dancing like waves of sea

Kannayariamudayar Temple

Adhividangar

Kukunathaanam

Dancing like a cock

Brahmapureeswarar Temple

Avanividangar

Brunganathaanam

Dancing like a bee that hovers over a flower

Vaimoornaathar Temple

Nallavidangar

Kamalanaanathaanam

Dance like lotus that moves in a breeze

Vadaranyeswarar Temple

Bhuvanivividangar

Hamsapthanathaanam

Dancing with the gait of a swan


Singers


This is the 241st Devaram Paadal Petra Shiva Sthalam and 124th Sthalam on the south side of river Cauvery in Chozha nadu. Tirugnanasambandar and Appar have sung hymns in praise of Lord Shiva of this temple.


Prayers


The devotees pray to the Lord of this place to steer clear of the impediments for marriage, to be excellent in studies and to boost up wealth conditions. On fulfillment of prayers the devotees perform abishekam and offer new clothes to both the Lord and Ambal.


Contact


Vaaimoor Nathar Temple,

Tiruvaimur P.O.

Thirukkuvalai – 610 204,

Tiruvarur District

Mobile: +91 – 97862 44876


Connectivity


This temple is located at about 3 Kms from Ettukudi, 5 Kms from Thirukkuvalai, 20 Kms from Thirukollikadu, 16 Kms from Tirukaravasal, 10 Kms from Thalaignayiru, 30 Kms from Thiruvarur, 137 Kms from Trichy, 85 Kms from Thanjavur. This temple is located on the Thiruvarur – Thalaignayiru – Vedaranyam road. Thiruvarur to Vedaranyam bus passes through this village. Nearest Railway Station is located at Thiruvarur. Nearest Airport is located at Trichy.


Credit -Ilamurugan's blog


திருவாய்மூர்


புராணப்பெயர் 

லீலாஹாஸ்யபுரம்


மூலவர்

வாய்மூர்நாதர்


தாயார்

பாலின் நன்மொழியாள்


தலவிருட்சம் 

பலா


 தீர்த்தம் 

 சூரியதீர்த்தம்


 பாடல் வகை 

 தேவாரம்


 பாடியவர்கள் 

அப்பர், சம்பந்தர்


 தலவரலாறு


திருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்க பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது தான் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும் ஆனால் சம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக்கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோவில் கொண்டுள்ளேன் இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்ட பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். திருமறைக்காட்டில் அப்பரைக் காணாத சம்பந்தர் அவரைத் தேடிக் கொண்டு திருவாய்மூர் வந்து சேர்ந்தார். அப்பர் கவலையுடன் திருவருளை அறியாமல் திருக்கதவு திறக்கப் 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய எனக்கு காட்சி தராவிட்டாலும் ஒரு பாட்டிலேயே கதவு அடைக்கச் செய்த சம்பந்தருக்காவது தங்கள் திருக்கோலத்தை காட்டியருள வேண்டாமோ என்று கூறினார். இறைவனும் சம்பந்தருக்கு மட்டும் திருக்கோலம் காட்டி அருளினார்.சம்பந்தர் தான் கண்டு களித்த இறைவன் திருக்கோலத்தை அப்பருக்கும் காட்டினார்.


    சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவமாகும்.  

இந்திரன் ஒருமுறை சிவனின் விடங்க வடிவத்தை யாசித்தான். இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான்.

சிவபெருமான் அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். முசுகுந்த மன்னன்  பூவுலகை ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். எனவே அவர் வேட்டைக்குச் சென்றார். வடபகுதியில் வேட்டையை முடித்து விட்டு, காவிரிக்கரைக்கு அவர் வந்தார்.

ஒரு சிவராத்திரி இரவில், முசுகுந்தன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, சில முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய்யப்போவதாகக் கூறினர்.

சிவராத்திரியன்று மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. இதனால் வருந்திய அரசன், தன் ராஜ கோலத்தை கலைத்து விட்டு, ராஜரிஷி போல் வேடம் தரித்து, முனிவர்களுடன் சென்றான். தவறை உணர்ந்த அவனுக்கு சிவன் காட்சி கொடுத்தார்.


இந்திரனிடம் இருக்கும் சிவலிங் கத்தை எப்படியேனும் வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அச்சமயத்தில் இந்திரன் வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாக சொல்லியிருந்தான்.

வாலாசுரனைக் கொன்று அதை வாங்கி வரும்படி யோசனையும் சொன்னார். சமயோசிதமுள்ளவன் கடவுளையும் வெல்வான். முசுகுந்தன் சிவனிடம், “அப்படியே செய்கிறேன். ஆனால், அவன் விடங்கரைப் போலவே உள்ள வேறு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றி விடலாம். எனவே, விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும்" என்றான்.

சிவனும் அவ்வாறே செய்ய, அங்கு பெரும் ஒளிவெள்ளம் எழும்பியது. முசுகுந்தனுடன் வந்த முனிவர்கள் மட்டுமின்றி, தேவலோகமே அங்கு திரண்டு வந்து விட்டது.

உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், “ஐயனே! தாங்கள் இந்திர லோகத்திலும் இருங்கள். இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உனக்கு கோயில் எழுப்புகிறேன்" என்றான். மற்றவர்களும் வற்புறுத்தவே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இத்தலத்தில் தங்கியுள்ளார். 

     

 ஆலய அமைப்பு


சுமார் 2 ஏக்கர் பரப்பளவில்

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த ஆலயம். ராஜகோரத்தின் முன்னே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளது. கருவறையில் மூலவர் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 

மூலவர் சந்நிதி வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். 

மூலவருக்குத் தென்பால் தியாகராஜர் சன்னதி (நீலவிடங்கர்) சந்நிதியுள்ளது. வடபால் வேதாரண்யேஸ்வரர் தரிசனம் தருகிறார்.

கோஷ்டத்தில் உள்ள தஷிணாமூர்த்தி ரிஷபத்தின் மேலுள்ளார்.

பிரகாரத்தில்  விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. அம்பிகை தனி கோயிலில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் நடராசசபை உள்ளது.  இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன.

இத்தலத்தில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் இத்தலத்தில் அமைந்துள்ளனர். ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர் மற்றும் சுவர்ண பைரவர் ஆகிய 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால், இப்போது அகோர பைரவர், ஆனந்த பைரவர், இத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய 4 மூர்த்தங்கள்தான் இருக்கின்றன. மற்ற நான்கு மூர்த்தங்களுக்கு பதிலாக 4 தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன. தேய்பிறை அஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயிலுக்கு எதிரே தீர்த்த குளம் உள்ளது. குளக்கரையில் விநாயகர் உள்ளார்.

       

 அமைவிடம் 


நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி எட்டிக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.  பேருந்து நிறுத்தம் அருகிலேயே உள்ளது ஆலயம்.


 ஆலய முகவரி


அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில்,

திருவாய்மூர் அஞ்சல், திருக்குவளை வட்டம்,  நாகப்பட்டினம் மாவட்டம்,

 610 204. 


இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


 சிறப்பு


காசியில் உள்ளது போல், இக்கோயிலிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். 


பங்குனி 12, 13 ஆகிய இரு நாட்கள் சூரியக் கதிர்கள் சுவாமி, அம்மன் மீது விழுகிறது.


சப்தவிடத்தலங்களில் ஒன்று. (நீலவிடங்கர்)


நவக்கிரகங்கள் நேர் வரிசையில் உள்ளன.


நவக்கிரஹ தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய ஆலயம்.


அப்பர், சம்பந்தர் ஆகிய இருவருக்கும்  ஒரே நேரத்தில் இறைவன் அம்மையப்பனாக காட்சி அளித்த  திருத்தலம்.


திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக வழிபட வேண்டிய தலம்.


சூரியன், பிரம்மா, இந்திரன் மகன் ஜயந்தன் ஆகியோர் வழிபட்ட தலம்.


நன்றி வைத்யநாதன் வெங்கட்ராமன்

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி