Temple info -628 Agora Veerabhadra swamy temple, Hanumantapuram அகோர வீரபத்ர ஸ்வாமி கோயில், ஹனுமந்தபுரம்

 Temple info -628

கோயில் தகவல் -628

















Agora Veerabhadra Swamy Temple is located in Hanumanthapuram Village near Chengalpattu in Kanchipuram District of Tamilnadu. The village is located off the road going from Chengalpattu towards Thiruporur after Perunthandalam and Senneri villages. The road that leads to this village is not easily Motorable and is amidst the reserved forest zone. Main deity is called as Sri Agora Veerabhadra Swamy and Goddess is called as Sri Kaalikaambal. However, during the new moon days and full moon days, a lot of devotees throng to this temple. It is believed that mentally ill people get cured if they visit the deity of this temple. Hence, you can find many mentally challenged people in and around the temple.


Legends


Dakshan (son of Brahma and father of Parvathi) performed a Yagnya. He had invited all Devas and Gods for his Yagnya except Lord Shiva, as he always disliked him because Lord Shiva married his daughter Parvathi without his knowledge. But as per the rituals, he has to invite Lord Shiva, without which the Yagnya won’t be complete. But Dakshan ignored Lord Shiva and also was not willing to give due offerings to him in his Yagnya.


Knowing this Lord Shiva got furious and sent Lord Ganesha to stop Dakshan’s Yagnya, but Lord Ganesha couldn’t succeed, followed by Lord Muruga who again couldn’t defeat Dakshan to stop his Yagnya. Finally, he created a power from the droplets of his sweat and gave it a form and named him Veerabadhrar. Veerabadhrar, who was created from Lord Shiva’s sweat, was assigned to defeat Dakshan and stop his Yagnya.


Goddess Parvathi, who was also equally upset with Dakshan’s attitude, created a Shakthi called Kaali and made her accompany Veerabadhrar in his mission to defeat Dakshan. Sri Veerabadhrar went and chopped Dakshan’s head with ease. From then Dakshan didn’t have head at all. Later, with the prayers of Dakshan’s wife, Sri Veerabadhrar blessed him with the head of a goat and hence Dakshan is seen with the human body and goat’s head. It is believed that Dakshan was defeated by Sri Veerabadhrar in this place.


The Temple


The temple is big but doesn't have many deities. The main shrine has a huge idol of Agora Veerabhadra Swamy in the standing posture along with his 'vahana' goat. He is facing the north direction. Agora Veerabhadra Swamy stands more than seven feet tall holding many weapons. Goddess Kaali is present just outside the sanctum, facing east.


Kaali is believed to be more powerful here. This village also has a separate temple for Kaliyamman. Nandhi is seen facing south towards the Lord. This very unusual temple attracts lots of devotees during new moon days and full moon days. This place is said to cure people with mental illness.


Many mentally challenged people are brought here and prayers are offered to Sri Agora Veerabadhrar. It is believed that Sri Agora Veerabadhrar blesses them to recover from their mental illness. There is a beautiful temple pond in front of the temple, where many devotees take bath before visiting the temple. Also many bring mentally challenged people and bathe them here. Betel leafed garland is offered to the Lord here.


It is said that this place was once filled with betel leaf creepers. Betel leaf garland is considered auspicious for Sri Agora Veerabhadra Swamy here. The age of this temple is not known to many, even to the temple priests. There are no archeological evidences or whatsoever to date this temple. But the priests say that they have been serving this temple for 12 generations and the legend of this place is passed on to them word of mouth ancestrally.


Two idols of Ganesha and Shanmuga are also located in this temple. The temple has only one big prakara (corridor) surrounding the shrine. There is no temple tower (raja gopuram). A huge tank is located in front of the temple. This temple attracts huge crowds on Full moon and new moon days.


There is an old stone inscription in this temple, belonging to 1921 where one Chinnappa Nayakkar of Ayanpuram (Ayanavaram), Chennai has donated his shop sites to the temple to be used for performing atleast one time pooja every day. On Pournami days, Archanas are performed to Sri Veerabadhrar here throughout the night.


Prayers


This temple is famous to cure mentally ill people and there will be many such people wandering over. Many mentally challenged people are brought here and prayers are offered to Sri Agora Veerabadhrar. It is believed that Sri Agora Veerabadhrar blesses them to recover from their mental illness. 

The temple tank is considered very auspicious and lot of people takes a dip to get rid of their health problems. The temple priest provides a red thread to be worn around the hand which is considered offering the Lord's protection. Betel leaf garlands are offered to the Lord.

Connectivity

The temple can also be reached from Singaperumalkoil and is located at 10 kms east of Singaperumalkoil. The road to the temple is deserted with Government reserved forest area for a few kms. It is advised not to visit this temple during the nights.


Credit -Ilamurugan's blog


ஸ்ரீ வீரபத்திரர் சினம் தணிந்த திருத்தலம்


 காஷ்யபரின் மனைவியரில் ஒருவர் திதி, மற்றொருவர் அதிதி.  இவர்களுக்கு பிறந்த அசுரர்களும், தேவர்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.  ஒரு கட்டத்தில் தேவர்களின் பலம் அதிகரிக்க, அசுரர்கள் தங்களின் குலக் குருவான சுக்ராச்சாரியாரிடம் தங்களைக் காத்தருள வழி கூறுமாறு வேண்டினர்.  

 அசுரர்களில் பலசாலியான வீரமார்த்தாண்டனை அழைத்து, பிரம்மதேவனை நோக்கி தவம் செய்யுமாறு ஆலேசனை கூறினார் சுக்ராச்சாரியார்.  அதன்படி தவம் செய்த வீரமார்த்தாண்டனுக்கு எவராலும் வெல்ல முடியாத ஆற்றலையும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஆளும் வரத்தையும் அருளினார் பிரம்மதேவர்.  

 வரம் பெற்ற அகந்தை தலைக்கேற, அசுரர்கள், தேவர்களை மிகவும் துன்புறுத்தினர்.  அசுரர்களால் துன்புற்ற தேவர்கள், பிரம்ம தேவரை வணங்கி, தங்களின் நிலை குறித்து எடுத்துக் கூறி, தங்களுக்கு நல்வழி காட்ட வேண்டினர்.  

 அசுரர்களுக்கு வரம் அளித்த பிரம்மதேவர் தனது தவறை உணர்ந்து, தேவர்களை சிவபெருமானிடம் அழைத்துச் சென்று, தேவர்களின் குறைகளைத் தீர்த்தருளுமாறு வேண்டினார்.  

 தேவர்களின் குறையைக் களைய எண்ணிய சிவபெருமான், தனது அம்சமான வீரபத்ரரை அனுப்பி, வீரமார்த்தாண்டனையும் அவனோடு உள்ள மற்ற அசுரர்களையும் வதம் செய்யக் கட்டளையிட்டார்.  சிவபெருமானின் கட்டளையை ஏற்ற வீரபத்ரர், வீரமார்த்தாண்டனையும், அவனுடனிருந்த மற்ற அசுரர்களையும் வதம் செய்து திரும்பினார்.

 அதர்மத்தாலும், ஆணவத்தாலும் செயல்படுபவர்கள் எவராயினும் அவர்களை ஈசன் வதம் செய்து முடிப்பார் என்கின்ற தத்துவத்தை வெளிப்படுத்துகின்ற சிவபெருமானின் அம்சமே ஸ்ரீ அகோர வீரபத்ர மூர்த்தியாகும்.  

 வீரமூர்த்திகளாகப் பூஜிக்கப்படும் சிவபெருமானின் வடிவங்கள், ஸ்ரீ சரப மூர்த்தி, ஸ்ரீ வீரபத்ரர், ஸ்ரீ தட்சயக்ஞஹதமூர்த்தி, ஸ்ரீ கங்காளமூர்த்தி, ஸ்ரீ மத்ஸ்யாரி, ஸ்ரீ கச்சபேஸ்வரர், ஸ்ரீ வராஹாரி, ஸ்ரீ காமதகனமூர்த்தி ஆகிய சிவ வடிவங்களாகும்.  

 ஸ்ரீ வீரபத்ர சுவாமியை மூலவராகவும் தனி சந்நிதியிலும் வழிபடும் பல்வேறு திருத்தலங்கள் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளன.  இவற்றில், தட்சனை வதம் செய்த பின் வீரபத்ரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி சினம் தணிந்த இடம் அனுமந்தபும் என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.  

 பல்வேறு திருத்தலங்களில் மூலவராகவும் தனிச்சந்நிதிகளிலும் ஸ்ரீ வீரபத்ரர் அருள்பாலித்தாலும், அனுமந்தபுரம் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்குகிறது.  

 ருத்ர சக்தியின் அம்சமாகத் தோன்றிய ஸ்ரீ ஆஞ்சநேயர், வீரபத்ரரை உபாசனை செய்து ஞான உபதேசமும், வீர பராக்கிரமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே தான் அனுமந்தபுரம் திருத்தலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

 மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் அனுமந்தபுரம் திருத்தலத்தில் தங்கி வழிபட்டு, தங்கள் நோய் தீர்ந்து மகிழ்ச்சியுறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 நரம்புத் தளர்ச்சி, மனப் பதட்டம், மன இறுக்கும் மற்றும் மனச் சிதைவு உடையவர்கள் ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பௌர்ணமி நாட்களில் வெற்றிலைச் சுருள் மாலை சாத்தி  ஸ்ரீ வீரபத்திரரை வழிபட, அவர்கள் நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.  

 ஸ்ரீ வீரபத்ரரை வணங்குவதால் நம்மைச் சுற்றியுள்ள தீய சக்திகள் விலகும் என்பதுடன், ஏவல், பில்லி, சூன்யம், கண் திருஷ்டி அவர்களை நெருங்காது என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.  

 108 அல்லது 1008 வெற்றிலைச் சுருள் மாலை சாத்தி ஸ்ரீ வீரபத்ரரை வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.  

 அனுமந்தபுரம் திருத்தலத்தில் கருவறையில் வழிபாடு முடிந்தவுடன் பக்தர்களின் முகத்தில் புனித நீர் தெளிக்கப்படுகிறது.  இதனால் தங்களின் நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

 இத்திருத்தலத்தில் ஸ்ரீ வீரபத்ரர், ஸ்ரீ காளியம்மனுடன் அருள்பாலிக்கிறார்.  

 அனுமந்தபுரம் திருத்தலம் செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கபெருமாள்கோயிலிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  ஓம் நமசிவாய.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி