Temple info -611 Liverpool Murugan temple லண்டன் முருகன் கோயில்
Temple info -611
கோயில் தகவல்-611
London_Liverpool_Wallasi Murugan temple
A temple on Church Road in East Ham, one of the oldest cities in the city of London. The temple was created by the British architect Terry Freeman and was painted by the Tamil sculptor Muthiah Sthapathi.
A special consecration ceremony was held for this temple in the year 2006. Five-tiered Rajagopuram .. At its top is a door with seven urns and hanging poles .. There is a glittering flagpole that can be crossed and entered.
If you go a few steps further from there, you will see the beautiful peacock, the vehicle of Lord Murugan. Opposite it is the sanctum sanctorum of the wonderful Tamil God. Inside the sanctum sanctorum, there is a spectacular view of Lord Murugan holding Valli-Deyvan as Sametara.
Temple_structure
To the right of the great sanctum sanctorum of Lord Kandaka, Lord Ganesha is blessing the devotees from the temple. This Ganesha is depicted in a seated posture with the title ‘Ananda Ganesha’. In front of Ganesha is his three-wheeled vehicle.
On all three sides of the Ganesha sanctum sanctorum, images of Pillaiyar, Lambodar and Sriganapathi are placed in a small and thought-provoking manner.
It is considered a very special organization. Similarly, on the left side of the sanctum sanctorum, there is a separate shrine to Lord Shiva. Lord Shiva blesses the devotees with the title ‘Bhuvaneshwar’. The deities Dakshinamoorthy, Linkodpavar and Brahma bless in the gosht of Shiva Sannidhi.
Chandikeswarar stands near the face of Koshtam in the sanctum sanctorum of Lord Shiva, reminding us that this is a Shiva temple. What if there is no Ambal in the place where Lord Shiva is? Ambalum Bhuvaneshwararum is located near the Bhuvaneswari Sannidhi.
The mother's face is seen with a smile. It is the belief of the devotees that for those who worship this hope, the sorrows of life will be removed and good will come.
Adhering to the wall in the perimeter of the temple, the Durga goddess facing north, the Agathiar sage who received Tamil from Murugan, and Arunagirinathar, who sang 'Muthai Tharu', are facing north.
Iyappan in the virgin corner of the prakaram as seen from the east, Venkateswarar with Lakshmi behind the source and Guruvayoorappan blessing from side to side. Anjaneya Swami, the son of Vayu, resides in the northwestern part of the country called Vayu Disai. It is considered unique.
In the northeastern part of the temple, known as the Isaniya place, the Navagrahas and the Kala Bhairav are facing west. The management committee of this temple consists of devotees from Tamil Nadu.
Sampath Kumar from Madurai is currently the Chairman, Dakshinamoorthy from Chennai is the Secretary and Anandsekar is the Manager. This sthalam is a temple that provides spiritual enlightenment to the Tamils of Tamil Nadu and to the Tamils living in London from Sri Lanka.
People from North India like Gujarat also visit this temple regularly. Even some Englishmen from London are proud to visit this temple from time to time due to their love for the Tamil God Murugan.
We are in a foreign land, browsing through the English language 'without the thought of being in Tamil Nadu, in such a way as to bring joy to the temple of Lord Murugan.
Festivals:
This temple is specially set up in London and hosts all the events like Ganesha Chaturthi, Karthika, Sashti and Pradosh. Since all the festivals of Hinduism are held in this special temple, it feels like we are in our motherland India.
It is noteworthy that this temple is dedicated to Lord Murugan. A special ceremony is held at the Sri Murugan Temple in London, which is built according to the rules of Agama.
The festival, which is held for 10 consecutive days, begins with Ganesha worship and flag hoisting. On the days of the festival and on the day of Krithika, flower offerings are made to the Lord.
As in Tamil Nadu, Lord Murugan roams the streets of London with Valli-Deyvanai in a small chariot called Sapparam. It is happening just like it is happening in Tamil Nadu, it is set to articulate our culture.
Many people from Tamil Nadu in the city of London will attend the Murugapperuman Tirukkalyanam which will culminate in the festival.
Then the traditional dress of Tamil Nadu will prevail there. When you see married women in silks, unmarried women in skirts, scarves, men dressed in shirts and shirts, it looks like London has become Tamil Nadu. Tirthwari takes place on the last day of the festival.
#லண்டன்_லீவர்பூல்_வால்லசியில்
#உள்ள_முருகன்_கோவில்.
மிகப்பழமை வாய்ந்த லண்டன் மாநகரில் கிழக்கு ஹாம் என்ற பகுதியில் சர்ச் சாலையில் ஒரு கோவில்.. அதுவும் தமிழக மரபுப் படியே அமைந்திருப்பது பெரும் வியப்பினை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. இங்குள்ள ஆன்மிக உணர்வாளர்களின் வெளிப்பாடாக எழுந்த இந்தக் கோவில், தமிழக சிற்பி முத்தையா ஸ்தபதியின் கை வண்ணத்தில், பிரிட்டிஸ் கட்டிட கலைஞர் டெர்ரி பிரீமேன் வடிவமைப்பில் உருவாகியது.
இந்த ஆலயத்திற்கு கடந்த 2006–ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம்.. அதன் உச்சியில் ஏழு கலசங்கள், தோரணங்கள் தொங்கும் வாசல்.. அதை கடந்து உள்ளே நுழைந்ததும் தகதகவென்று மின்னும் கொடிமரம் அமைந்திருக்கிறது.
அங்கிருந்து சில அடிகள் முன்னேறிச் சென்றால், முருகப்பெருமானின் வாகனமான அழகு மயில் வீற்றிருக்கிறது. அதன் எதிரே அற்புத தமிழ் கடவுளின் கருவறை அமைந்திருக்கிறது. கருவறையின் உள்ளே வள்ளி– தெய்வானை சமேதராக முருகப்பெருமான் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.
#கோவில்_அமைப்பு
கந்தக்கடவுளின் பெரிய கருவறைக்கு வலது புறம், விநாயகப்பெருமான் தனிக்கோவிலில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த விநாயகர், ‘ஆனந்த விநாயகர்’ என்ற திருநாமத்துடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமான மூஞ்சுறு வாகனம் உள்ளது.
விநாயகர் கருவறை கோஷ்டத்தின் மூன்று புறங்களிலும் பிள்ளையார், லம்போதரர், ஸ்ரீகணபதி ஆகிய உருவங்கள் சிறியதாக சிந்தையைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது ஒரு சிறப்பு மிக்க அமைப்பாக கருதப்படுகிறது. அதேபோல மூலவரான முருகப்பெருமான் கருவறையின் இடதுபுறம், சிவபெருமானுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. சிவபெருமான், ‘புவனேஷ்வர்’ என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா ஆகிய தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
சிவன் சன்னிதியில் உள்ள கோ முகத்தின் அருகில் சண்டிகேசுவரர் வீற்றிருந்து, இது சிவாலயம் என்பதை நினைவுபடுத்துகிறார். சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தில் அம்பாள் இல்லாமல் இருப்பாரா என்ன? புவனேஷ்வரர் சன்னிதியின் அருகிலேயே, அம்பாளும் புவனேஷ்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள்.
அன்னையின் முகம் இன்முகத்துடன் காணப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்குபவர்களுக்கு, வாழ்வின் துயரங்கள் நீங்கி நன்மை வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
கோவில் சுற்று பிரகாரத்தில் சுவரினை ஒட்டி, வடபுறம் நோக்கிய துர்க்கை அம்மன், முருகனிடம் தமிழ்பெற்ற அகத்திய முனிவர், ‘முத்தைத் தரு’ என்று திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆகியோர் வடக்கு பார்த்து தனித்தனியே இருக்கின்றனர்.
கிழக்கு பார்த்தபடி பிரகாரத்தின் கன்னி மூலையில் ஐயப்பன், மூலவருக்குப் பின்புறம் லட்சுமியுடன் வெங்கடேசுவரர், குருவாயூரப்பன் ஆகியோர் அருகருகே இருந்து அருள்பாலிக்கின்றனர். வாயு திசை என்றழைக்கப்படும் வடமேற்கு பகுதியில் வாயு புத்திரன் ஆஞ்சநேய சுவாமி வீற்றிருக்கிறார். இது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.
திருக்கோவிலின் ஈசானிய இடம் எனப்படும், வடகிழக்கு பகுதியில் நவக்கிரகங்கள், அதற்கு எதிரே மேற்கு நோக்கிய நிலையில் கால பைரவர் ஆகியோர் எழுந்தருளி இருக்கின்றனர். இந்தத் திருக்கோவில் நிர்வாகக் குழுவினராக தமிழகத்தைச் சேர்ந்த அன்பர்களே உள்ளனர்.
தற்போது மதுரையைச் சேர்ந்த சம்பத்குமார் தலைவராகவும், சென்னையைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி செயலாளராகவும், ஆனந்த்சேகர் மேலாளராகவும் தங்கள் கடமைகளை ஆற்றி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும், இலங்கையில் இருந்து லண்டனில் வசிக்கும் தமிழர்களுக்கும் ஆன்மிக அருள் ஒளியை வழங்கும் திருக்கோவிலாக, இத்தலம் விளங்குகிறது.
குஜராத் போன்ற வட இந்திய அன்பர்களும் இந்த ஆலயத்திற்கு வருவது வாடிக்கையாக இருக்கிறது. லண்டனைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் சிலரும் கூட, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவ்வப்போது, இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வது பெருமையாக கருதப்படுகிறது.
அந்நிய மண்ணில் இருக்கிறோம், ஆங்கில மொழிகளின் ஊடே உலவுகிறோம்’ என்ற எண்ணமே இல்லாது, தமிழகத்தில் இருப்பதைப் போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும் வகையில், இந்த முருகப்பெருமானின் திருக்கோவில் திகழ்கிறது.
#திருவிழாக்கள் :
லண்டனில் சிறப்புற அமைக் கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி, மாத கார்த்திகை, சஷ்டி, பிரதோஷம் போன்ற அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்து மதங் களில் அனைத்து விழாக்களும் சிறப்புற இந்த ஆலயத்தில் நடைபெற்று வருவதால், நாம் தாய்நாடான இந்தியாவில் இருப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது.
அத்தகைய உள்ள உணர்வைத் தரும் ஆலயமாக இந்த முருகப்பெருமான் ஆலயம் அமைந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ள லண்டன் ஸ்ரீ முருகன் திருக்கோவிலில், ஆடிக் கிருத்திகை விழா சிறப்புற நடைபெறுகிறது.
10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த விழாவானது, விநாயகர் பூஜை செய்யப்பட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கும். விழா நடைபெறும் தினங்களிலும், கிருத்திகை அன்றும் இறைவனுக்கு மலர் அர்ச்சனை நடைபெறுகிறது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ளது போல, சப்பரம் எனப்படும் சிறிய தேரில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி– தெய்வானையுடன் லண்டன் மாநகரின் வீதிகளில் உலா வருகிறார். இது தமிழகத்தில் நடைபெறுவது போலவே நடைபெறுவது, நம் பண்பாட்டை பறைசாற்றுவது போல் அமைந்துள்ளது.
விழாவில் உச்சகட்டமாக நடைபெறும் முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சியில், லண்டன் மாநகரில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள்.
அப்போது தமிழ்நாட்டு பாரம்பரிய உடைகளே அங்கு மேலோங்கி நிற்கும். திருமணம் முடிந்தப் பெண்கள் பட்டுப்புடவைகளிலும், திருமணமாகாத பெண்கள் பாவாடை, தாவணியிலும், ஆண்கள் வேட்டி, சட்டையிலும் கலந்துகொள்ளும் காட்சியைக் காணும்போது, லண்டன், தமிழ்நாடாக மாறியதுபோல் தோன்றும். விழாவின் கடைசி நாளில் தீர்த்தவாரி நடக்கிறது.
நன்றி -நெய்வேலி முரளி
Comments
Post a Comment