Temple info -558 Thyagaraja Temple, Thiruvarur தியாகராஜர் கோயில்,திருவாரூர். Padal Petra Sthalam No.204

 Temple info -558

கோயில் தகவல் -558

















Thyagaraja Temple, Tiruvarur


Thyagaraja Temple is a Shiva temple, located in the town of Thiruvarur in Tamil Nadu, India. Shiva is worshiped as Puttridankondar, and is represented by the lingam. Daily poojas are offered to his idol referred to as Maragatha lingam. The main idol of worship is Lord Veedhi Vidangar (Thiyagarajar), depicted as a Somaskanda form.His consort Parvathi is depicted as Kondi. The presiding deity is revered in the 7th century Saiva canonical work, the Tevaram, written in Tamil by saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam.


Thiyagaraja swami Temple


Religion

Affiliation

Hinduism


District

Tiruvarur


Deity

Vanmeega Nathar(Shiva) (moolavar)

Veethividangar (Shiva) (Utsavar)


Location

Tiruvarur


State

Tamil Nadu


Country

India


Geographic coordinates

10°46′N 79°39′E


Architecture

Type

Tamil architecture


Creator

Cholas


The temple complex covers 30 acres, and is one of the largest in India. It houses nine gateway towers known as gopurams. The tallest is the eastern tower, with four stories and a height of 30 metres (98 ft). The temple has numerous shrines, with those of Veedhi Vidangar (Thiyagarajar) and Alliyankothai (Neelothbalambal) being the most prominent.


The temple has six daily rituals at various times from 5:30 a.m. to 10 p.m., and twelve yearly festivals on its calendar. The temple has the largest chariot in Asia and the annual Chariot festival is celebrated during the month of May.


The present masonry structure was built during the Chola dynasty in the 9th century, while later expansions are attributed to Vijayanagar rulers of the Sangama Dynasty (1336–1485 CE), the Saluva Dynasty and the Tuluva Dynasty (1491–1570 CE). The temple is maintained and administered by the Hindu Religious and Charitable Endowments Department of the Government of Tamil Nadu.


Etymology


Shrines of the temple

The historic name of Thiruvarur was Aaroor (Arur) and it finds mention in the 7th century saiva canonical work, Tevaram. The term Thiru is added to all temple cities that are mostly revered by the verses of Tevaram, which is the case of Arur becoming Thiruvarur. Another name of Thiruvarur is Kamalalayaksetra, meaning the "holy place that is an abode of lotuses"; the town is also referred so due to the presence of the Kamalalayam tank and the temple deity, Kamalambigai. During the British Raj, the town was termed Tiruvalur, Tiruvaloor, and Thiruvalur. As per the district and municipality websites, the district has the spelling "Tiruvarur", while the town has it as "Thiruvarur". As per Hindu legend, the temple is the place where Kamalaambika's penance to marry Thyagaraja remain unfulfilled.


History


Sundial to view stars

According to legend, a Chola king named Muchukunda obtained a boon from Indra(a celestial deity) and wished to receive an image of Thyagaraja Swamy(presiding deity, Shiva in the temple) reposing on the chest of reclining Lord Vishnu. Indra tried to misguide the king and had six other images made, but the king chose the right image at Tiruvarur.


The temple is believed to have been initiated with a large complex by the Pallavas during the 7th century. Contemporary history of the temple dates back to the time of the Medieval Cholas. An inscription dated in the 20th regnal year of Rajendra I(1012–1044) beginning with introduction "Tirumanni valara" is found on the north and west walls of the Thyagaraja shrine.It gives a list of gifts including a number of jewels and lamps to the god veedhividankar(Thyagarajar).It records that the temple was built in stone in the regnal years of the king by Anukkiyar Paravai Nangaiyar.Besides the same lady liberally endowed gold for plating and gilding parts of the vimana, the entrance and the four sides of the shrine.Copper was also donated for plating the doors, corbels of the pillars of the mandapa in front of the shrine.This inscription meticulously records the weight of the endowed gold and copper, besides listing the various ornaments gifted to the temple with description each of them.


The temple complex seems to have acted as the cultural model for the big Brahadeeswarar temple at Thanjavur of Rajaraja Chola I, wherein he enshrined a vitankar which shared with the Adavallan of Chidambaram the status of state cult. The last Chola monarch to play an important role in the affairs of the temple was Kulothunga Chola III in the early part of the 13th century A.D. It attracted saivas of all schools and was important centre of Golaki matha in the 13th and 14th century. It was also an important Jaina dwelling place, which was attacked by saivas, as is evident from Periya Puranam, account of life of Dandiyadigal Nayanar.


Architecture


The temple complex occupies an area of around 17 acres (6.9 ha) with the Kamalalayam tank to its west, which occupies the same area. The temple has nine gopurams, 80 vimanas, twelve temple walls, 13 halls, fifteen large temple water bodies, three gardens, and three large precincts. The major gopuram of the temple is seven-tiered and raises to a height of 118 ft (36 m). The two main shrines of the temple are for Vanmikinathar (Shiva) and Thyagarajar. Of the two, the former is the most ancient, and derives its name from tha anthill(putru), which takes the place of linga in the main shrine. Appar, the 7th-century poet saint, refers to the main deity in his hymn as puttritrukondan(one who resides in the ant hill). The Stala vriksham(temple tree) is patiri(trumpet flower tree). The principles and practises of tree-worship and ophilotary are ancient bases whereupon a later date linga worship seems to have been established.


As per folk legend, Thiruvarur is mentioned as the capital town of a legendary Chola king, Manu Needhi Cholan, who killed his own son to provide justice to a cow. The temple has a sculptural representation of a stone chariot, Manuneethi Chozan, the cow and the kid under the chariot in Vittavasal, against the northeast direction of the gopuram.


Here all the nine Navagrahas (planetary deities) are located towards south in straight line also located in northwest corner of 1st (prakaram). It is believed that all the planetary deities got relieved off their curse and hence worshiped Thyagaraja. This temple hold the record of having maximum number of shrines (called sannithis in Tamil) in India. The foot of Thyagaraja is shown twice a year and on other occasions it is covered with flowers. The right leg of the deity and left leg of the goddess named Kondi is displayed during "panguniuthram" festival and "thiruvathirai". Some of the major shrines in the temple are of Aananthiswarar, Neelothmbal, Asaleswarar, Adageswarar, Varuneswarar, Annamalieswarar and Kamalambal. The unique feature of the temple is the standing Nandi facing the presiding deity.


The temple has a lot of halls, with six of them being the most prominent. Bhaktha Katchi hall is located to the left of the image of Moosukuntha Nandi. The festival image of Thyagaraja arrives at this hall after the Panguni Uthiram festival. Oonjal hall is located opposite to the Kabatha Katchi hall. The festival images of Chandrasekarar and Sekari Amman arrive at this hall during the Thiruvadhirai festival. Thulapara hall is named after the legend in which king Mucundaka placed Thyagaraja image of Thiruvarur in one and all others in another plate he received from Indra (the king of celestial deities). Purana hall is located in the northern part of the temple. Rajanarayana hall is a public hall for localities of Thiruvaru. Rajendra Chola hall, also called Sababathi hall houses the museum of the temple. Similar architecture of halls (Mandapas) simulating a chariot drawn by elephant or horses is found in Sarangapani temple at Kumbakonam, Mela Kadambur Amirthakadeswarar Temple, Sikharagiriswara Temple, Kudumiyamalai, Nageswaraswamy Temple, Kumbakonam and Vriddhagiriswarar Temple, Vriddhachalam.


Chariot festival


Chariot festival with people drawing a chariot with ropes

The Thiruvarur chariot festival

Kulothunga Chola II (1133–50 CE) enlarged the temple ritual to have fifty six festivals, some of which are followed in modern times.[19][20] The annual chariot festival of the Thygarajaswamy temple is celebrated during April – May, correspondong to the Tamil month of Chitrai. The chariot is the largest of its kind in Asia and India weighing 300 tonne with a height of 96 ft (29 m). The chariot comes around the four main streets surrounding the temple during the festival. The event is attended by lakhs of people from all over Tamil Nadu. The chariot festival is followed by the "Theppam", meaning float festival. The memorial for Thiruvalluvar, Valluvar Kottam, is inspired from the design of the Thiruvarur chariot.


Processional Dance


The Thyagarajar Temple at Tiruvarur is famous for the ajapa thanam(dance without chanting), that is executed by the deity itself. According to legend, a Chola king named Mucukunta obtained a boon from Indra(a celestial deity) and wished to receive an image of Thyagaraja Swamy(presiding deity, Shiva in the temple) reposing on the chest of reclining Lord Vishnu. Indra tried to misguide the king and had six other images made, but the king chose the right image at Tiruvarur. The other six images were installed in Thirukkuvalai, Nagapattinam, Tirukarayil, Tirukolili, Thirukkuvalai and Tirumaraikadu. All the seven places are villages situated in the river Cauvery delta. All seven Thyagaraja images are said to dance when taken in procession(it is the bearers of the processional deity who actually dance). The temples with dance styles are regarded as Saptha Vidangam(seven dance moves) and the related temples are as under:


Temple Vidangar Temple Dance pose Meaning

Tiruvarur Thyagarajar Temple Vidhividangar Ajabathaanam Dance without chanting, resembling the dance of Sri Thyagaraja resting on Lord Vishnu's chest

Dharbaranyeswarar Temple Nagaradangar Unmathanathaanam Dance of an intoxicated person

Kayarohanaswamy Temple Sundaravidangar Vilathithaanam Dancing like waves of sea

Kannayariamudayar Temple Adhividangar Kukunathaanam Dancing like a cock

Brahmapureeswarar Temple Avanividangar Brunganathaanam Dancing like a bee that hovers over a flower

Vaimoornaathar Temple Nallavidangar Kamalanaanathaanam Dance like lotus that moves in a breeze

Vedaranyeswarar Temple Bhuvanivividangar Hamsapthanathaanam Dancing with the gait of a swan


Worship and religious practises

 

The temple priests perform the puja (rituals) during festivals and on a daily basis. Like other Shiva temples of Tamil Nadu, the priests belong to the Shaiva community, a Brahmin sub-caste. The temple rituals are performed six times a day; Ushathkalam at 5:30 a.m., Kalasanthi at 8:00 a.m., Uchikalam at 10:00 a.m., Sayarakshai at 6:00 p.m., Irandamkalam at 7:00 p.m. and Ardha Jamam at 8:00 p.m. It is believed that during Sayarakshai all the 33 crore devas (celestial beings) are present to worship Lord Thiyagarajar. Further attending the Sayarakshai at Thiruvarur and then attending the Ardha Jamam pooja at Chidambaram is considered to be highly auspicious and beneficial.There are weekly rituals like somavaram (Monday) and sukravaram (Friday), fortnightly rituals like pradosham and monthly festivals like amavasai (new moon day), kiruthigai, pournami (full moon day) and sathurthi.


The idol of Thiyagarajar is covered with a piece of cloth and flowers, so that only his and amman's face is visible. His right foot and parvathy's right foot are revealed on Aarudhra Dharshan in the month of Margazhi, while his left foot and amman's left foot are revealed on Panguni Uthiram.


Music, dance and literature


Historically, Thiruvarur has been a centre of eminent people in religion, arts and science. Sundarar, an 8th-century Saivite saint, mentions "I am the slave of all those born in Thiruvarur" in his works in Tevaram.Two of the 63 nayanmars of Saivite tradition namely, Kalarsinga Nayanar and Tandiyadigal Nayanar were born in Thiruvarur. The Periyapuranam, a 12th-century Saiva canonical by Sekkizhar, dedicates a chapter to those born in Thiruvarur, including these two saints. The town was a traditional centre of music and dance – the inscriptions from Rajaraja Chola associate a large body of dancers associated with the temple. Thiruvarur is home to Trinity of Carnatic music, namely Thyagaraja (1767–1847 CE), Muthuswami Dikshitar (1775–1835 CE) and Shyama Shastri (1762–1827 CE). Muthuswami Dikshitar has sung eulogies of the temple deities of the Thyagarajaswami temple. Thyagaraja was named after the deity of this temple. There was large influx of the acumen of South Indian culture to the town during the 17th century CE due to the political unrest in Thanjavur and increased patronage of the Maratha kings to Thiruvarur, resulting in developments in music and dance. A unique musical instrument called panchamuga vadyam with each of its five ends ornamented differently is used in the temple. A type of nadaswaram (pipe instrument) called Barinayanam is also a unique instrument found only in Thiruvarur.


Mahasamprokshanam


The Mahasamprokshanam also known as Kumbhabhishekam of the temple was held on 8 November 2015 . The heavy rains blow in Tiruvarur at the time of mahasamprokshanam, the people came in lot.


Contact No.04366-242343


திருவாரூர் தியாகராஜர் கோயில்

தமிழகத்திலுள்ள இந்துக் கோயில்


திருவாரூர் தியாகராஜர் கோயில், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் மூலட்டானம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவத்திற்கு கோவில் தில்லை என்றால் இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் தான் பசு விற்கு நீதி வழங்கினார் மனு நீதி சோழன். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.


தேவாரம் பாடல் பெற்ற

திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்


பெயர்

புராண பெயர்(கள்):

க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம்


பெயர்:

திருவாரூர் (திருஆரூர்) தியாகராஜர் கோயில்

அமைவிடம்


ஊர்:

திருவாரூர்


மாவட்டம்:

திருவாரூர்


மாநிலம்:

தமிழ்நாடு


நாடு:

இந்தியா


கோயில் தகவல்கள்


மூலவர்:

வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி


உற்சவர்:

தியாகராஜர்


தாயார்:

அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்


உற்சவர் தாயார்:

கமலாம்பிகை


தல விருட்சம்:

பாதிரி


தீர்த்தம்:

கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்


சிறப்பு திருவிழாக்கள்:


திருவாதிரை, சித்திரை தேர் திருவிழா, மகா சிவராத்திரி


பாடல்


பாடல் வகை:

தேவாரம்


பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்


கட்டிடக்கலையும் பண்பாடும்


கட்டடக்கலை வடிவமைப்பு:

தமிழர் கட்டடக்கலை


வரலாறு

தொன்மை:

4000-5000 ஆண்டுகள்


நிறுவிய நாள்:

தெரியவில்லை

கட்டப்பட்ட நாள்:

தெரியவில்லை


அமைத்தவர்:

சோழர்கள்

தியாகராஜர் கோயில்

பெயர்


பெயர்:

அருள்மிகு வான்மீகிநாதர் திருக்கோயில்

அமைவிடம்


நாடு:

இந்தியா


மாநிலம்:

தமிழ்நாடு


அமைவு:

திருவாரூர்


கோயில் தகவல்கள்


உற்சவர்:

தியாகராஜர் (சிவன்)


கட்டிடக்கலையும் பண்பாடும்

கட்டடக்கலை வடிவமைப்பு:

தமிழர் கட்டடக்கலை

வரலாறு


அமைத்தவர்:

சோழர்கள்


இணையதளம்:

http://www.srithiyagarajatemple.org/


தல வரலாறு

 

ராஜகோபுரம்

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் (இருதய கமலத்தில்) வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும்.

தியாகேசரின் முந்நூறுக்கும் மேற்பட்ட லீலைகளை 'தியாகராஜ லீலை' என்ற நூல் விவரிக்கின்றது.

இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். ஆதலால் தியாகேசருக்கு திருவந்திக் காப்பழகர் என்று பெயர்.

கமலை என்னும் பராசத்தி தவம் செய்த கமலாலயப் பதி ஆகும்.

எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

தியாகேசரின் திருமேனி பகல் படா திருமேனி ஆகும். ஆதலால் தியாகராசர் உத்ஸவங்களுக்கு இரவு நேரங்களில் மட்டுமே புறப்பாடு கண்டருளுவார்.

தியாகேசர் யதா ஸ்தானத்தில் தத்புருஷ முகமாகவும்(கிழக்கு நோக்கி) தேருக்கு வரும் முன் இந்திர மண்டபத்தில் சத்யோதாஜ முகமாக(மேற்கு நோக்கி) நடனமாடியும் உத்திர பாத தரிசனத்தின் போது அகோர முகமாவும் (தெற்கு நோக்கி) ஞானமளிக்கும் பெருமானாக காட்சியளிப்பார்.

தல சிறப்புகள் தொகு

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவில் காமிகாகம முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாகமத்து வழிநின்று நயினார்கள் வன்மீகர் மற்றும் தியாகேசருக்கு தொண்டு புரிந்து வருகின்றனர்.ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் கோவில் தேர் ஆகும்.

திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. மேலும் இதற்கு சான்றாக அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனப் குறிப்பிட்டுள்ளார்.

நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.

எம சண்டிகேஸ்வர் அமைந்த திருத்தலம் .

சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.

நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .

பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.

இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.

24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.

இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். தியாகராஜர் யதாஸ்தானத்தில் தத்புருஷ முகமாக வீற்றிருக்கிறார். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது.

இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.

உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார். ஹம்ச மந்திர தத்துவத்தோடு இணைந்தவர் இப்பெருமான். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டியம்மை எனப் பெயர்.

தியாகராஜரின் தேவரும் காணா மேலான வலப்பாதம் (இடப்பாதம் என்றும் மூடப்பட்டிருக்கும்) ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா சமயங்களில் தியாகேசர் மற்றும் கொண்டி அம்மை தத்தம் வலது மற்றும் இடது பாதத்தை முறையே பக்தர்களுக்கு காட்டி அருளுவர்.

சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். ஆரூர் அரநெறி திருக்கோயில் நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. (திருவாரூர் திருவீதிகள் அடிமுடி தேடிய திருவீதிகள் என்ற பெயரைக் கொண்டவை) இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும்.

இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.

தர்சனாது அப்ரஸதசி ஸ்மரணாது அருணாசலம் காசியாந்த் மரணாம் முக்திஹி ஜனனாத் கமலாலயே!

தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.

இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேரை அப்பர் சுவாமிகள் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.

கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.

இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.

மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.

தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதாரத்" தலம்.

தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

தியாகேசர் சன்னதியின் இருபுறமிருக்கும் திருச்சாலகம் மிகச்சிறப்புடையவை. பழங்காலத்தில் தேவசாயரட்சையின் போது இச்சாலகத்தின் ஊடாக புல்லாங்குழலும் வீணையும் வாசிக்கப்படும்.

தியாகேசருக்குக்குரிய அங்கப்பொருள்கள்

1. ஆடுதண்டு - மாணிக்கத்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகட்யம் ஞானகட்யம் , 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - அயிராவணம், 8. மலை - அர்தன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் 17. தோழர்- நம்பி ஆரூரர் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாகும்.


தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.

 அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர்


உரிமையிற் றொழுவார் உத்திர பல்கணத்தார்


விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசுப தர்கபாலிகள்


தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.


4 - 20 - 3(அப்பர் தேவாரம்)  


"இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம்.

பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.

காஞ்சிபுரத்தில் இடக்கண் பெற்ற சுந்தரர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி தானிழந்த வலக்கண்ணைப் இப்பதியில் பெற்றார்.

சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.

இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.

தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக முதற்சுற்றில் மூலாதார கணபதிக்கு எதிரில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் ஞான சிவாச்சாரியாருக்கு மகளாக அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005).

திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.

கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.

சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

பரவை நாச்சியாருக்கு முக்தி அளித்த ஆகாச விநாயகர் சிறப்புடையவர்.

யஜூர் வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்தில் தியாகேசர் ரதோப்யகா (தேர் முதல்வன்) என்ற சப்தத்தால் குறிப்பிடப்படுகிறார் என்பது திருவாரூரின் தொன்மையை உணர்த்தும்.

மூலாதார கணபதி, ஒட்டுத் தியாகர், கைலாச தியாகர், வீணையில்லாத சரஸ்வதி, பஞ்ச முக கணபதி, யம சண்டீசர், கைலாச தியாகர் மேலும் பல அரிய சன்னதிகளை உடையது.

ஆரூரைப் போற்றும் தமிழ் இலக்கியங்கள். 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருவாரூர் மும்மணிக்கோவை 4 திருநாட்டுச் சிறப்பு.(பெரிய புராணம்) 5. திருவிசைப்பா திருப்பல்லாண்டு 6. கந்த புராணம் 7. தியாகேசர் தாலாட்டு 8. திருவாரூர் புராணம் மேலும் பல

ஆரூரைப் போற்றும் வடமொழி இலக்கியங்கள் 1.அஜபா ரகஸ்யம் 2. கமலாலய மகாத்மியம் 3.கமலாலய ஸ்துதி 4. தியாகராஜ முசுகுந்த சஹஸ்ர நாமாவளி 5. ஸ்காந்தம் மேலும் பல.

ஆரூர் தலம் இரண்டு பாடல் பெற்ற தலங்களையும் ஒரு வைப்பு தலத்தையும் கோயிலுக்குள்ளும், ஆரூர் பரவையுண் மண்டளி என்ற மற்றொரு தலத்தை கோவிலுக்கு அருகிலும் கொண்ட மேன்மை மிக்கது.

கோயில் அமைப்பு தொகு

33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

இந்திர மண்டபம், தட்டஞ்சுற்றி மண்டபம், தேவாசிரியன் மண்டபம், ராஐநாரயண மண்டபம், உத்திர பாத மண்டபம் முதலிய எண்ணற்ற மண்டபங்களை உடையது.


மன்னர்களின் அரும்பணி


இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.


வழிபாடு


காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி , பால் நிவேதனம்

காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்

காலை 8 மணி - முதற் கால பூஜை

மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்

பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை

பகல் 12.30 மணி - அன்னதானம்

மாலை 4 மணி -நடை திறப்பு

மாலை 6 மணி - சாயரட்சை பூஜை (மிகவும் சிறப்புடையது). நித்திய பிரதோஷம் என்று அறியப்படுகிறது.

இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்

இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை


அன்னை கமலாம்மாள் , நீலோத்பலாம்பாள் சந்நிதி


கமலாம்பிகை:


திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு திசையில் உள்ளது. சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அட்சர பீடம் உள்ளது.


அன்னையின் அருட்கோலத்தை 'தியாகேச குறவஞ்சி' கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது.


விளங்கு தென்னாரூர் வியன்பதி தழைக்க


உளங்கனிவாக யோகாசனத்தில்


அண்டருந் துதிக்க அரசிருந்தருள் பூ


மண்டலம் துதிக்க வளர் பராசக்தி.


முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.


நீலோத்பலாம்பாள் சந்நிதி


இத்திருக்கோவில், இரண்டாம் பிராகரத்தின் வடபுறம் கொடிமரத்தின் எதிரே அமைந்துள்ளது. தென்மொழியில் அல்லியங்கோதை என்னும் திருப்பெயரோடு விளங்குகிறாள். இரண்டு திருக்கைகளோடு, இடக்கை சேடிப்பெண் சமந்திருக்கும் முருகனின் சிரசை தீண்டிய வண்ணம் உள்ளது. இச்சந்நிதியின் முகமண்டபத்தில் தியாகேசர் சோமாசி யாகத்திற்கு செல்லுதல், மாணிக்க நாச்சியருக்கு அருள் புரிதல், மராத்திய மன்னர் வீதிவிடங்கனை வணங்குதல் போன்ற பல மராத்திய ஓவியங்கள் உள்ளன.


திருவாரூர் ஆழித்தேர்

 

திருவாரூர் தேரோட்டம்


"ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே" என்பது அப்பர் தம் வாக்கு. ஆசியாவிலயே மிகப் பெரிய தேர் திருவாரூர் ஆழித்தேர் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.


1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைப்பெற்ற தேர்த்திருவிழா, 1927 ஆம் ஆண்டு ஆழித்தேரோட்டத்தின்போது தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. கமல வசந்த வீதிவிடங்கப் பெருமானை முத்துக் கொத்தனார் என்பவர் காப்பாற்றினார். நின்றுபோன தேர்த் திருவிழா, பிறகு 1930 ஆம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டு மீண்டும் தேரோட்டம் 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிறகு 1970 ஆம் ஆண்டு மு. கருணாநிதி மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியால் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது.[4] ஆழித்தேரின் உயரம் 96 அடி ஆகும். இது வீதிவிடங்கன் 96 தத்துவங்களைக் கடந்தவன் என்று குறிக்கிறது. தேரின் மேல் பகுதி கமலவடிவமாக காட்சி அளிக்கும்.


அமைவிடம்


மயிலாடுதுறை - திருவாரூர், தஞ்சாவூர் - நாகப்பட்டிணம் இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.


திருத்தலப் பாடல்கள்


இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம் மொத்தம் 21 சில


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த

மேனியான் தாள்தொ ழாதே

உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி

யுழிதந்தென் உள்ளம் விட்டுக்

கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ

மயிலாலும் ஆரூ ரரைக்

கையினாற் றொழா தொழிந்து

கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.


திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் மொத்தம்-5


சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்

பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை

மறவா தேத்துமின், துறவி யாகுமே.

துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்

நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.

உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்

கையி னாற்றொழ, நையும் வினைதானே.


சுந்தரர் பாடிய பதிகம் மொத்தம்-8


இறைகளோ டிசைந்த இன்பம்

இன்பத்தோ டிசைந்த வாழ்வு

பறைகிழித் தனைய போர்வை

பற்றியான் நோக்கி னேற்குத்

திறைகொணர்ந் தீண்டித் தேவர்

செம்பொனும் மணியும் தூவி

அறைகழல் இறைஞ்சும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.


திருவாசகத்தில் திருப்புலம்பல் என்ற பகுதி திருவாரூரில் பாடப்பெற்றதாகும். அது அன்றி ஆறு இடங்களில் திருவாரூர் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்புகழில் அருணகிரியார் தியாகேசரை 'அதிக நடராசர்' என்று பாடியுள்ளார்.


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

கூசாதே பார் ஏசாதே மால்
     கூறா நூல் கற்றுளம் வேறு

கோடாதே வேல் பாடாதே மால்
     கூர்கூதாளத் ...... தொடை தோளில்

வீசாதேபேர் பேசாதேசீர்
     வேதாதீதக் ...... கழல்மீதே

வீழாதேபோய் நாயேன் வாணாள்
     வீணே போகத் ...... தகுமோதான்

நேசா வானோர்ஈசா வாமா
     நீபா கானப் ...... புனமானை

நேர்வாய் ஆர்வாய் சூர்வாய் சார்வாய்
     நீள்கார் சூழ்கற்பக சாலத்

தேசாதீனா தீனார் ஈசா
     சீர்ஆரூரில் ...... பெருவாழ்வே

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

கூர்வாய் நாராய் வாராய் போனார்
     கூடாரே சற்றலஆவி

கோதானேன் மாதா மாறானாள்
     கோளே கேள் மற்றிள வாடை

ஈர்வாள் போலே மேலே வீசா
     ஏறா வேறிட்டது தீயின்

ஈயா வாழ்வோர் பேரே பாடா
     ஈடேறாரில் ...... கெடலாமோ

சூர் வாழாதே மாறாதே வாழ்
     சூழ் வானோர்கட்கருள் கூரும் 

தோலா வேலா வீறாரூர்வாழ்
     சோதீ பாகத்துமையூடே

சேர்வாய் நீதீ வானோர் வீரா
     சேரார் ஊரைச் ...... சுடுவார்தம் 

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.



குடமுழுக்கு


இக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்