Temple info-266 Gokarneswarar-Brahadambal temple கோகர்ணேஸ்வரர்-பிரகதாம்பாள் கோயில், திருகோகர்ணம்

 Temple info -266

கோயில் தகவல்-266










Sri Kokarneswarar Brahadambal Temple, Thirukokarnam, Pudukottai


The rock-cut cave Temple of Sri Kokarneswarar Brahadambal at Thirukokarnam is of Mahendravarma Pallava period. Thirukokarnam is situated just about 5 kms from Pudukkottai. The presiding deity is Gokarneshwarar and his consort is Brahadambal. Lord of Kokarnam is main deity of Tondaiman kings. Locally, this temple is known as Brahadambal temple and it is also known as Arakasu Amman temple. Kokarneswarar Cave Temple is excavated on the southern slope of a low rising hill and faces east.


A sanctum is sunk into the back wall and has a monolithic Shiva linga inside. Right side has Ganesha while left is adorned with Shiva as Gangadhara. The mandapams in front of the main rock-out shrine are the work of the Cholas and Pandyas, between 11th & 13th century AD. There is an upper tier in this temple, where the shrines of Subrahmanya, Durga, Lakshmi, Saraswathi, Annapurani and Rudrakshalingam, Brahma, Jvarahareshwarar, Bhairava, Surya, the Shaivite saints. It is the tutelary deity of Thondaiman rulers of Pudukkottai.


Occupying an important place among the ancient classical monuments of Pudukkottai, the Thirugokarnam temple, popularly known as Brahadambal Temple, lies in the foot of a rock. This is one of the oldest temples in South India, with its history dating back to early 7th century AD and still in use.


Mythology

The deity is known as Gokarnesvara, and is associated with the Sthalapuranam of this temple. It goes on the following lines. The celestial Kamadhenu happened to arrive late one day at Indra’s court. She was banished from the heaven and condemned to live the life of an ordinary cow on earth until such time as she should have expiated her sins by worshipping the God Siva. On reaching earth, she sought the hermitage of the sage Kapila situated in the jungle at this place. Under his guidance she performed daily worship to the Siva lingam under the bakula (vakula) tree.


Every day she tramped to far away river Ganga and brought its sacred water in her ears for the God’s Abhishekam (ablution). Hence the god is called Gokarnesvara or the ‘Lord of the cow’s ear. In due course she had a she-calf, but stifling motherly instincts, she still performed her daily journey leaving her calf at the temple gate. But soon the time came for her salvation, and as she returned one day at nightfall with the sacred water in her ear, the God taking the shape of a tiger stood across her path at a place since called Thiruvengaivasal and threatened to devour her. On her remonstrating that it was time for the ablution of the God, she was allowed to go on condition that she returned immediately after the worship was over.


When the cow came back, according to her promise, the seeming tiger changed its shape, and Siva and Parvathi manifested themselves and carried the cow to heaven. According to a variation of the story the tarn on the top of the hill, was cut by the cow with her horn and stored with the Ganga water from her ear, and a cleft on the top of the lingam is said to be a hoof print that she left as she bathed the idol in the sacred water.

General Information

Locally the temple is better known as Brahadambal temple. A shrine for Brahadambal constructed later at the ground level. The goddess Brahadambal was the tutelary deity of the Pudukkottai Tondaiman rulers.

They proudly called themselves 'Brihadambadasa' or 'servant of Brahadambal'. They ruled the kingdom in the name of the goddess. The Tondaiman rulers even minted coins featuring the portrait of Brahadambal. The temple was, thus, intimately associated with the ruling families of the region.

There is also another presiding deity, Vakulavanesvara (‘God of vakula forest’) and is named after the sthala Vriksham (temple tree) of the temple, namely, Magizha Maram (the Bakula tree, Mimusops elengi).


The temple was constantly being renovated and additions made till the last century. Because of this continuous history over a very long time the temple acquired some special features.

The cave temple has more architectural technical features compared to other cave temples of this region. The relief sculpture of ‘Saptamatrika’ of this temple is important from the point of view of iconography. It contains about 30 inscriptions. Some of them are Grantha inscriptions of the 7th century AD. There are two main deities: Gokarnesvara and Vakulavanesvara. There is no shrine for Navagraha (‘the nine planets’)


The temple has five thers (temple cars), which is a large number comparatively, with marvellous craft work, architecture and of noteworthy features. Because of the benevolence of the royalty the temple was the centre of dance, music of great repute.

Because of its exquisite architecture and noteworthy sculptural and artistic features, this is an excellent temple for study of temple architecture and iconography starting from early Pallava – Pandya (7th century) period till Nayak period (17th century).

Architecture

One enters the temple complex from the south. Beyond the customary Ganesa at the entrance, one passes through a long corridor leading to the shrines on the ground level. This corridor is exquisitely decorated with carved pillars and sculptures. These carvings exhibit unsurpassed piece of art and workmanship of the Nayak period. There are shrines for Kasi Visvanatha and a Vasantha mandapam on the left before reaching the Rajagopuram at the end of the corridor. The Rajagopuram is guarded by Dwarapalakas. On the right side a big Drum or Murasu is placed to beat in morning and evening, when Poojas are performed.


Leaving Rajagopuram, we enter into the Silpamandapam (Sculptural mandapam) also called Rasimandapam. The ceiling of this mandapam is adorned with sculptures of the Rasis. On the colonnades are found some exquisite portrayals of Rathi Manmatha, Durga, Karnan, Arjunan, Raman, Dasaratha and Kaikeyi, etc. On the left side of this is the Golumandapam, a large mandapam, which has seen very colourful Navarathri functions in the past. On the right side are the Oonjal mandapam (swing hall) and the kitchens.

Crossing a door we reach the Brahadambal shrine. The present structure of this shrine seems to be a very late structure, probably added within the last two centuries. The absence of any inscription on its wall bears out this conclusion. The large mandapam in front of the Amman shrine, like the corridor leading into the temple from the street belong to the Madurai Nayak style. On the pillars of this mandapam are figures in high relief of chiefs and nobles who have not yet been satisfactorily identified. During the Tondaiman period daily worship included dance and music recitals in this mandapam.

The east facing Brahadambal shrine consists of an ardhamandapam beyond which is the garbha griham. The statue of the Goddess of extraordinary beauty, adorns the sanctum.


The pradakshina (perambulation) starts with the 63 Nayanmars on the left and then the east facing shrines of Maha Ganapathi, Rishabha Rudra and Kasi lingam. Ahead of this is the beginning of the excavation of the original cave temple. There are a few minor deities like Kuzhanthai Vadivelan and Sapthalingam, in the niches on the left approachable through a flight of stairs.

On to the left of the entrance to the Gokarnesvara shrine on the rock face to the south of the cave are figures the Saptamatrika, Ganesa and another deity who may be identified as Veerabhadra.

In the rock cut garbha griham is Gokarnesvara in the form of a lingam. The ardhamandapam has two large relief sculptures, Ganesa on the south wall Gangadhara on the north wall. All these are typical 7th century Pallava-Pandya sculptures.

The maha-mandapam and the other mandapams in front of the central rock cut shrine belong to the Chozha and Pandya (11th to 13th century AD.) periods. Some beautiful bronzes, kept under lock, are found in the mahamandapam. Facing the shrine are the Bali pitham, dhvaja sthambham and nandi installed on a rock clearance. It is likely that the passage to enter the Gokarnesvara shrine must have passed through this.


To the north of the nandi is the exit to reach the shrines of the upper level. Immediately on the left is an inscription belonging to the Raja Raja III period (1226 AD). A short flight of steps takes one to the sunai (tarn) from which the suburban population took drinking water in the past. A view of the tarn and the rocky outcrop is a pleasing sight.

On the left to the exit, situated almost above the Gokarnesvara shrine, are the shrines for Subrahmanya, Durga, Lakshmi, Saraswathi, Annapurani and Rudrashalingam. And on the right to the exit are those of Brahma, Jvaraharesvara (‘destroyer of fever’), Bhairava, Surya, the four Saivaite saints, Appar, Sundarar, Gnanasambandar and Manikkavachakar, Chandra and Dhandayuthapani.

From this vantage point one can have a view of the surroundings: the Mangalakulam (tank) in the east and rocky out crops all around. From here one can see the Rajagopuram, which is not visible from elsewhere, the vimanam of the Brahadambal shrine and of Vakulavanesvara. Not to be missed is the grand old Mahizha tree, Mimusops elengi or Vakulam in Sanskrit), which is the sthala Vriksham, with its extensive crown. The trunk of the tree can be seen at the ground level.

Returning to the ground level, and continuing the pradakshina, we come to the mandapam, which houses bronzes of Nataraja, his Consort, and the four Saivaite saints. These idols are of exceptional beauty. Beyond this is the shrine for Mangalambikai, built in 13th century AD. It has an ardhamandapam (15th century AD.) also. To the west of this is the Sannidhi of Vakulavanesvara. He is worshiped in the form of a lingam. The shrine, in its present form, belongs to 18th century AD.

On the northern wall of this shrine are sculptures of Vinayaka and Dakshinamoorthy. One can see these sculptures from the outer corridor itself. A hexagon shaped Sukravarmantapam, dhvaja sthambham and Mahizha tree are seen within the premises in front of the Brahadambal shrine. At the base of the tree is a small idol of Sadhasiva Brahmendra. The reason for worshipping Sadhasiva Brahmendra in this temple is because he happened to be the guru of Tondaiman Rajas and the sage blessed the Raja with Dakshinamoorthy slogans and mantras.

Mangala Theertha Mandapam

The gate to the east of Sukravarmantapam leads to the Mangala Theertha mandapam and the Mangalakulam (tank). Now badly neglected tank has seen better days. The last Maharaja, Rajagopala Tondaiman was crowned on the steps of this tank. Two exquisitely carved pillars are found on both sides of the steps flying down to the tank. They look as if two horses are bearing the pillars and exhibit a fine piece of art. One Rasi Chakra is also seen on the ceiling of this mandapam. The northern part of this mandapam is built by late Pandyas (13th century) southern part by Tondaimans (17th century AD).

Temple's Speciality

This is a cave temple-Kudavarai temple. There is a shrine for Araikasu Amman. If anything is misplaced or lost, devotees place a little jaggery in the shrine praying for the recovery of the article lost. It is believed that the prayer does not fail.


Festivals

10 day Chithirai festival with flag hoisting in April-May, 11 day Aadi Poosam in July-August, 10 day Navarathri festival in Purattasi-September-October with Bow festival on the 10th day, Vinayaka Chathurthi, 10 day Thaipoosam in January-February, Skanda Sashi in October-November, Karthikai Lamp festival in November-December, Margazhi Tiruvadhirai Arudra Darshan in December-January, Fridays in Thai month (January February), Masi Magam in February-March, Panguni Uthiram in March-April are the festival grandly celebrated in the temples, besides monthly New Moon, Full Moon and Pradosha pujas drawing huge crowd.


Prayers

It is the staunch faith of the devotees that prayer to the Lord liberates them from sins and curses. They offer jaggery to Araikasu Amman in the temple to get back anything they have misplaced or lost. They get it back. Also those expecting to be married and seeking child boon pray in the temple.

Devotees perform abishek in Milk with sugar and also with Turmeric and cosmetic powders. The nivedhana offered to the deity are given as Prasad to the devotees. They also undertake mass feeding.


Temple Opening Time

The temple is open from 6.00 a.m. to 11.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m.


Contact

Sri Pragadambal Temple,

Tirukokarnam, Pudukkottai district

Phone: +91-4322-221084

Mobile: 9486185259


Connectivity

The temple is situated very near to the heart of Pudukottai town. Bus facilities are available conveniently. Nearest Railway Station is Pudukottai & Nearest Airport is Trichy.


Credit- Ilamurugans blog 


அருள்மிகு பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருக்கோவில்

திருக்கோவர்ணம், புதுக்கோட்டை மாவட்டம்


சுவாமி : அருள்மிகு கோகர்ணேசுவரர், அருள்மிகு மகிழவனேசர்.


அம்பாள் : அருள்மிகு பிரகதம்பாள், அருள்மிகு பெரியநாயகி, அருள்மிகு மங்கள நாயகி.


தீர்த்தம் : கங்கா தீர்த்தம் (சுனை), மங்கள தீர்த்தம் (மகிழவன நாதர் திரு முன்பு).


தலவிருட்சம் : மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).


தலச்சிறப்பு : இத்தலம் உருவான காலம் ஏழாம் நூற்றாண்டு(கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக்கிறார்கள்.  திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும்.  குடவரைக் கோயில்கள்  என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை  அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.  திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு முன்னால் உள்ள  மண்டபப் பகுதியில் இடப்புறச் சுவரில் விநாயகரும், வடப்புறச் சுவர்ப் பகுதியில்  கங்காதரமூர்த்தியும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்த மண்டபப் பகுதி முழுவதும் நான்கு  தூண்களின் மீது அமைந்துள்ளது போல் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.  சந்நிதியின்  இடப்புறம் உள்ள சுவரைக் கற்பனையால் விலக்கி விட்டுப் பார்த்தால் விநாயகர் திருமேனிக்குப்  பின்புறமாகவும் பாறைச் சரிவு நீண்டிருப்பதைக் காணலாம்.  இந்தப் பாறைச்சரிவின் அடிப்புறத்தில்,  தரையோடு ஒட்டியதுபோல் ஏழு பெண் தெய்வங்களின் திருவுருவங்கள் குடைவரைக் கலையாகச்  செதுக்கப் பட்டிருக்கின்றன.  இடப்புறம் வீரபத்திரர் திருமேனியும், வலப்புறக் கோடியில் விநாயகர்  திருமேனியும் விளங்க, இடையில் ஸப்த கன்னிமார்கள் அல்லது ஸப்த மாதாக்கள் என்னும்  திருநாமத்தோடு ஏழு பெண் தெய்வங்களின் திருமேனிகள் வடிக்கப்பட்டுள்ளன.  பைரவி, இந்திராணி, மாகேஸ்வரி, நாராயணி, வராஹி, கௌமாரி, பிடாரி - என்ற இந்த ஸப்த மாதர்களின் திருமேனிகள் வெகு நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. 


இந்தச் சிற்ப வடிவங்கள் ஏழாம் நூற்றாண்டுப் பல்லவர்களின் கலைப்பணிகளாக இருந்த போதிலும்  இந்தக் கருவறைகளை உள்ளடக்கிய மண்டபப் பகுதிகள் பதினோராம் நூற்றாண்டுச் சோழர்களின்  கலைப்பணி என நம்பப்படுகிறது.  கி.பி. 1012 இல் அரசுரிமையேற்ற பரகேசரி முதலாம் ராஜேந்திரச்  சோழன் காலத்தில் இந்த பிரகதாம்பாள் திருக்கோயில் எடுப்பிக்கப்பட்டிருக்கலாம் என  கருதப்படுகிறது.  


எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம்  திருக்கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம்  பெற்றுள்ளன.  இந்த மாடிப் பகுதியில் முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு ஒன்றும்  காணப்படுகிறது.  இந்த மாடியில் முருகன் வள்ளி தேவஸேனாவுடன் எழுந்தருளியுள்ள  திருக்கோவிலுக்குத் தென்புறம் உள்ள பாறைச் சரிவில் காணப்படுகிறது.  கட்டுமானங்கள்  இல்லாமல் பார்த்தால் கோகர்ணேசுவரர், சப்த கன்னிமார் திருமேனிகள் உருவாகக்கப்பட்டுள்ள  பாறையின் மேல் பகுதியில் இக்கல்வெட்டு அமையும்.  முருகன் கோயிலை ஒட்டி வடபுறச்  சுவருக்கு அப்பால் பாறை நீண்டு உயர்ந்திருக்கிறது.  மேற்குப் புறப்பாறைப் பிளவில் சுனை, வற்றாத  நீர்வளத்தோடு விளங்குகிறது.  


இந்த கோவில் நித்யோசவம் என்று சொல்லக்கூடிய மிக பெரிய சிறப்புடையதாக இருந்தது.  நித்யோசவம் என்றால்  தினந்தோறும் திருவிழா நடத்துவதாக ஐதீகம்.  சமீப காலத்தில் 12 மாதமும் திருவிழாக்கள் நடந்த கோவில் முந்தய காலத்தில் 20  நாட்களுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடும் 10 நாட்களுக்கு வெளியிலேயே திருவிழா என்று சொல்லப்படும்.  காலத்தினுடைய  நிர்பந்தத்தினால் இப்போது 12 மாத திருவிழாக்கள் எல்லாம் நின்று போய் 3 திருவிழாக்கள் தான் நடைபெறுகிறது. 


 இங்குள்ள கோகர்னேஸ்வரர் கோயிலின் மேல்மாடத்தில் ஒரே கல்லில் 1008 ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோவில் தெற்கு  வடக்காக 680 அடி நீளத்திலும் கிழக்கு மேற்காக 190 அடி அகலத்திலும் அமைந்துள்ளது.   இக்கோவில் தெற்கு  நோக்கியும், சந்நிதிகள் கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது. 


தல வரலாறு


 இத்திருத்தலதிற்கு புராணக்கதை ஒன்று உள்ளது.  அதன் அடிப்படையிலேயே திரு-கோ-கர்ணம் என்ற ஊர்ப் பெயரும் அமைந்தது.  ஒருமுறை அமரருலகில் தேவர்களின் தலைவனான  இந்திரனின் அவை கூடியிருந்த போது, எல்லாரும் குறித்த நேரத்தில் அவைக்கு வந்து விட்டார்கள்.   கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் இயல்புடைய தெய்வப் பசுவான காமதேனு மட்டும் சற்றுக்  காலம் கடந்து வந்ததால் தேவேந்திரனுக்குக் கடும்கோபம் உண்டாயிற்று.  இதனால் காமதேனுவை,  நீ பூமியில் போய் பசுவாகப் பிறப்பாயாக என்று சாபம் தந்து விட்டார்  தேவேந்திரன்.  காமதேனுப் பசு  பூமியில் வந்து சாதாரணமான பசுவாகப் பிறப்பெடுத்து அதை மாமுனிவர் வசிட்டர் அன்போடு  பேணிப் பாதுகாத்து வந்தார். பூமியில் வந்து பிறந்துவிட்ட போதிலும் தெய்வப் பசுவுக்கு  மனிதர்களோடு பேசும் ஆற்றல் இருந்திருக்கின்றது.  அத்துடன் தன் வினையையும்,  வினைப்பயனையும் உணர்ந்த நிலையிலும் இருந்தது.


ஒரு நாள் மாமுனி வசிட்டரை வணங்கிய பசு தன்னடைய சாப விமோசனத்துக்கு ஏதேனும்  வழியுண்டா என்று கூறி அருளுமாறு வேண்டி நின்றது.  மாமுனிவர் வழி சொன்னார், பாரதத்தின்  தென்பகுதியில் வகுளாரண்யம் என்ற பெயரில் மகிழ மரங்கள் அடர்ந்த காடு ஒன்று உள்ளது.   அங்கே கபிலர் என்னும் முனிவர் ஒருவர் தவம் இயற்றுகிறார், நீ அவரைச் சென்றடைந்தால் உன்  சாபம் நீங்கும், வடமொழியில் வகுளம் என்றால் மகிழமரம் என்று பொருள்.  வகுள ஆரண்யம்  என்பது மகிழமரக்காடு.  அவ்வாறே பசுவும் வகுளாரண்யத்தை அடைந்து கபில முனிவரிடம்  சென்று வணங்கித் தன்னுடைய வரலாற்றைச் சொன்னது. பசுவின் கதையைக் கேட்டு  மனமிரங்கிய கபில முனிவர் அந்த மகிழவனத்தில் ஒரு சிவாலயம் இருப்பதாகவும் அதில்  வகுளவனேசுவரர் என்கிற திருநாமத்தோடு மகாதேவர் அருள்பாலித்துக் கொண்டிருப்பதாகவும்  சொல்லி தினமும் நீ கங்கை நீரால் வகுளவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் உன் சாபம்  அகலும் என்று வழி காட்டினார்.


அவ்வாறே தினமும் கங்கை நீரைக் தன்னுடைய காதுகளில் ஏந்திக்கொண்டு மகிழவனக்  கடவுளுக்குப் புனித நீராட்டிக் கொணடிருந்தது பசு.  இந்நிலையில் அது ஒரு கன்றையும் ஈன்று  பாலூட்டிக் கொண்டிருந்தது.  வழக்கமான இறைவன் பணியில் காதுகளில் கங்கை நீரோடு ஒருநாள்  அது மகிழ வனத்துக்கு வரும் வழியில் ஒரு வேங்கைப்புலி வழிமறித்தது, உடனே அதைத் தனக்கு  இரையாக்கிக் கொள்ளவும் முயன்றது வேங்கை.  வேங்கையிடம் மன்றாடியது பசு, நான் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கை நீர் சுமந்து வந்து கொண்டிருக்கிறேன், என்னை இப்போது  விட்டுவிடு, அபிஷேகம் முடித்துவிட்டு என்னுடைய இளங்கன்றுக்கும் பாலூட்டிப் பசியாற்றிவிட்டுத்  தவறாமல் உனக்கு இரையாக வந்து விடுகிறேன், என்னை நம்பு.  நான் சொல் மாற மாட்டேன்....  தயவு செய்து என்னை மேலே செல்ல அனுமதித்து வழியை விடு, என்று வேண்டிக் கேட்டுக்  கொண்டது.


சிவபிரானுக்கு அபிஷேகப் பிரியர் என்கிற திருநாமம் உண்டு.  தனக்கு தினமும் கங்கை நீரால் திருமுழுக்காட்டி வரும் பசுவின் பக்தியில் மனம் பறிகொடுத்த சிவபெருமான் - வகுளவனேசுவரர்.   அதை மேலும் சோதித்து முக்தியளிப்பதற்காகவே வேங்கை வடிவெடுத்து வந்திருந்தார்,  வழிமறித்தார்.  பசுவின் விருப்பத்தை ஏற்று உடனே அதற்கு வழிவிட்டது வேங்கை.  சொன்ன  சொல் தவறாமல் இறைவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டுத் தன்னுடைய இளங்கன்றுக்கும்  பாலூட்டிவிட்டு வேங்கையின் முன்னால் இரையாக நின்றது பசு.  பசுவின் வாக்கு தவறாத பண்பால்  மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் ரிஷப ஆரூடராகத் தம் தேவியோடு காட்சியளித்து அந்தக்  காமதேனுப் பசுவுக்கு நற்கதி அருளினார்.


வேங்கையாக உருமாறி சிவபெருமான் பசுவை வழிமறித்த இடம் திருவேங்கை வாசல் என வழங்கப் படுகிறது, பசு(கோ) தன்னுடைய காதுகளில் (கர்ணம்) கங்கை நீரைக் கொண்டு வந்து ஈசனுக்கு திருமுழுக்காட்டிய தலம் திரு-கோ-கர்ணம் என்று வழங்கப்படுகிறது.  அபிஷேகம் செய்தது போக  எஞ்சிய கங்கை நீரை காமதேனுப்பசு பாறையைக் கொம்புகளால் கீறி அதில் வடித்துச் சேமித்தாம்.   அது கபில தீர்த்தம் என்கிற பெயருடன் இன்றைய திருகோகர்ணம் கோகர்ணேஸ்வரர் திருக்கோவில்  மலைச் சுனையாக, வற்றாத பெருங்கருணையாய் என்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது, இதை  கங்கா தீர்த்தம் எனவும் வழங்குவதுண்டு.


பாடியோர் : அப்பர் சாமிகள் அவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம்.


நடைதிறப்பு :


1. திருவனந்தல் : காலை 6.00 – 6.30 மணி.


2. உஷக்காலம் : காலை 6.30 – 7.00 மணி.


3. காலை சந்தி : காலை 8.30 – 9.00 மணி.


4. உச்சிக்காலம் : காலை 11.30 – 12.00 மணி.


5. சாயரட்சை : மாலை 5.30 – 6.30 மணி.


6. அர்த்தசாமம் : மாலை 7.30 – 8.30 மணி.


திருவிழாக்கள் :


சித்திரை : சித்திரை பெருந்திருவிழா,


வைகாசி : வசந்த விழா,


ஆனி : டோலோற்சவ விழா(ஊஞ்சல் திருவிழா)


ஆடி : ஆடிப் பெருந்திருவிழா,


ஆவணி : மூல நாளில் காமதேனுப் பசுவுக்கு மோட்சம் கொடுத்த விழா.


புரட்டாசி : நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் அம்பு போடும் விழா.


ஐப்பசி : கந்த சஷ்டி விழா, சுரசம்கார விழா, அன்னாபிசேகம், அன்னதானம் முதலியன நடைபெறும்.


கார்த்திகை : திருக்கார்த்திகை பெருவிழா,


மார்கழி : திருப்பள்ளி எழுச்சி விழா, திருவெம்பாவைத் திருவிழா, திருவாதிரைப் பெருவிழா.


தை : தைப்பூசத் திருவிழா, வெள்ளாற்றில் உள்ள பூசத்துறைக்கு ஏழு ஊர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் விழா,


மாசி : மகா சிவராத்திரி விழா.


பங்குனி : உத்திர திருவிழா.


அருகிலுள்ள நகரம் : திருக்கோகர்ணம்.


கோயில் முகவரி : அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோவில்,


திருக்கோவர்ணம் - 622 002, புதுக்கோட்டை மாவட்டம்.


தொலைபேசி  எண் :+(91)-4322-221084.


 வியப்பூட்டும் தகவல்  இக்கோவிலில் அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் "அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை' எனக்கூறி சிறிதுவெல்லத்தை எடுத்து வைத்துவிட்டு தேடினால் உடனே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.


 செல்லும் வழி பேருந்து இரயில் புதுகோட்டையில் மீசியம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடக்கும் தொலைவில் கோவில் உள்ளது.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி